ஆனால் கண்டிப்பாக தங்களுக்கு அப்படியொரு வரவேற்பு இருக்காது என்பது மகிழம்பூவனுக்கு நிச்சயமாக தெரியும்!
ஏனென்றால், ரமணன் மற்றும் கஸ்தூரிக்கு மட்டும் தான் தங்களைப் பிடிக்கும். தங்கள் மீது பாசம் இருக்கிறது. ஆனால் அவர்களின் செல்வப் புத்திரியான சஹஸ்ராவிற்குத் தங்களைக் கொஞ்சம் கூடப் பிடிக்காது!
அதனால் தான், தந்தையிடம் அவ்வாறு கூறினான் மகிழம்பூவன்.
சிறுவயதிலிருந்தே சஹஸ்ராவிற்குத் தன்னையும், தனது தமக்கையையும் பிடிக்காமல் போயிற்று.
அதற்குக் காரணம், அவளது தந்தை ரமணன் ஆவார்.
அவருக்கும், கஸ்தூரிக்கும் மகள் சஹஸ்ரா பிறந்த நேரத்தில், அவரது தொழிலில் முதல் போடுவதற்குப் பணம் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில் தான் சேர்த்து வைத்திருந்த நகைகளையும், தன் கணவனிடம் இருந்த பணத்தையும் அவருக்குக் கொடுத்து உதவினார் அவரது தங்கை மல்லிகா.
அந்த நகைகள் மற்றும் பணத்தை வைத்து முதலீடு செய்து பால் பொருட்கள் விற்பனை செய்யும் கம்பெனியைச் சொந்தமாக நிறுவினார் ரமணன்.
தன்னுடைய தொழிலில் வருமானம் வரத் தொடங்கியதும் தனது தங்கை கொடுத்தவற்றை அவருக்குத் திருப்பிக் கொடுக்க நினைக்க,
அதை மறுத்த மல்லிகாவோ,”எனக்கு அதெல்லாம் வேண்டாம்ண்ணா. எனக்கு ஒரு ஆசை! உன் பொண்ணை என் பையன் மகிழுக்குக் கட்டி வைப்பியா?”என்று அவரிடம் ஆசையாக வினவினார்.
அதைக் கேட்டுப் புன்னகையுடன்,”அதுக்கு என்னம்மா? அவங்க வளந்ததும் கண்டிப்பாக கல்யாணம் செஞ்சி வச்சிடலாம்! உன் பையனுக்குத் தான் என் பொண்ணுன்னு நான் உனக்கு வாக்குத் தர்றேன்!”என்றதைக் கேட்டு அவரும், அவரது கணவர் பால்ராஜூம் மிகவும் சந்தோஷப்பட்டனர்.
அதே சமயம், தங்கை தனக்குச் செய்த உதவிக்கு நன்றி உணர்வை வெளிப்படுத்தும் விதமாக, ரமணனும், கஸ்தூரியும் அவர் மீதும், அவரது குடும்பத்தின் மீதும் மிகுந்த மரியாதையும், பாசமும் வைத்திருந்தனர்.
ஆனால் அதுவே அவர்களது மகளான சஹஸ்ராவிற்குத் தன் அத்தைப் பிள்ளைகளை வெறுப்பதற்கு அடித்தளமாக அமைந்து விட்டிருந்தது.
தன் தந்தை தன்னை விடத் தனது தங்கையின் பிள்ளைகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்ற எண்ணம் சஹஸ்ராவின் மனதில் சிறு வயதிலேயே ஆழமாகப் பதிந்து விட்டிருந்தது.
அதனாலேயே வளர, வளர மகிழம்பூவனையும், வண்ணமதியையும் தனது பரம எதிரிகளாக எண்ண ஆரம்பித்து விட்டாள்.
அவர்கள் தன்னிடம் பேச முயற்சி செய்தாலும்,”எனக்கு உங்களைப் பார்த்தாலே பிடிக்கலை! இதில் நான் உங்க கூடப் பேசுவேன்னு வேற நினைக்கிறீங்களா? என் முன்னாடி நிற்காமல் இங்கிருந்து போங்க!”என்று அவர்களிடம் வெறுப்பை உமிழ்வாள் சஹஸ்ரா.
அதே போல், அவர்கள் தனது பொருட்கள் எதையாவது தொட்டு விட்டால் உடனே வீடு அதிரும்படிக் கத்திக் கூப்பாடு போட்டு விடுவாள்.
“அவங்களும் நம்மக் குடும்பத்து ஆள் தானேம்மா? உன்னோட அத்தைப் பிள்ளைங்க. அப்படியிருக்கும் போது, அவங்களை நீ இப்படி பேசுறது தப்பும்மா”என்று அவளுக்கு அறிவுரை வழங்குவார் அவளது தந்தை ரமணன்.
அதையெல்லாம் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல்,”நான் தானே உங்கப் பொண்ணு? அப்போ என்கிட்டே மட்டும் தானே நீங்க நல்லா நடந்துக்கனும்? ஆனால் நீங்க இவங்களைத் தான் நல்லா நடந்துக்கிறீங்க! அது எனக்குப் பிடிக்கவே இல்லை!”என்று அவரிடம் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாள் சஹஸ்ரா.
அதில் மனம் கேளாமல்,”இனிமேல் உங்கப்பா உங்கிட்ட மட்டும் தான் நல்லா நடந்துக்குவார்! சரியா?”என்று கூறி அவளை அமைதிப்படுத்தினார் பால்ராஜ்.
அதில் சங்கடத்துடன் அவரை ஏறிட்ட ரமணனைத் தனியாக அழைத்து,”அவ குழந்தை தானே? வளர்ந்தால் சரி ஆகிடுவா. அது வரைக்கும் நீ கொஞ்சம் பார்த்து நடந்துக்கோ ப்பா”என்றுரைத்து விட்டுத்,
தனது பிள்ளைகளிடமும்,”நீங்க இனிமேல் சஹஸ்ரா முன்னாடி அவ அப்பா கிட்டே பேசக் கூடாது! சரியா?”என்று தீர்க்கமாக அறிவுறுத்தவும்,
“சரிப்பா”எனத்,‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்ற பழமொழியைப் பின்பற்றி அவரது வார்த்தைகளுக்கு மதிப்பு அளித்தும், சஹஸ்ராவின் வெண்மை நிறத்தையும், தன்னுடைய கருமை நிறத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தான். அதையும் எண்ணிப் பார்த்து விட்டுத் தந்தையின் வேண்டுகோளுக்குத் தலை வணங்கினான் மகிழம்பூவன்.
ஆனால் அவரது கூற்றில் கோபமும், எரிச்சலும் அடைந்து,”ஏன் அவளுக்காக நாங்க ஏன் மாமா கூடப் பேசாமல் இருக்கனும் ப்பா? அவ என்ன மகாராணியா? அவளுக்குப் பிடிக்காததை நாங்க செய்யக் கூடாதுன்னு எதுக்குச் சொல்றீங்க? அவ பண்றது தான் தப்பு! அதுக்கு அவளை முதல்ல கண்டிச்சு வைங்க ப்பா. எங்களை எதுக்கு ஏசுறீங்க ப்பா?”என்று அவரிடம் பொரிந்து தள்ளினாள் வண்ணமதி.
அவளை அடக்கிய மல்லிகாவோ,”அப்பா சொன்னதைக் கேட்டு நட மதி! அவர் கூட எதிர் வாதம் பண்ணாதே! நீ இனிமேல் சஹஸ்ராவுக்குக் கோபம் வர்ற மாதிரி நடந்துக்கக் கூடாது!”என்று அதட்டிக் கூறவும்,
அதைக் கேட்டுக் கோபமாக அவர்களிடம் இருந்து அகன்று சென்று விட, அவளைச் சமாதானம் செய்வதற்காக அவள் பின்னாலேயே சென்றான் மகிழம்பூவன்.
“என்னம்மா அந்தப் பொண்ணு சஹஸ்ரா இப்போவோ நம்மப் பிள்ளைங்களை இப்படி வெறுக்குறாளே, வளந்ததுக்கு அப்பறம் எப்படி நம்மப் பையனைக் கல்யாணம் செஞ்சிக்க ஒத்துக்கும்?”எனத் தன் மனைவியிடம் ஏமாற்றத்துடன் கேட்டார் பால்ராஜ்.
அதை எண்ணித் தனக்கும் சஞ்சலம் தோன்றினாலும், தன் தமையனின் மீதான நம்பிக்கையில்,”அதெல்லாம் பெரியவளானதும் எல்லாம் அவளோட கோபம், வெறுப்பு எல்லாம் அடங்கிடும்ங்க”என்று அவருக்குச் சமாதானம் உரைத்தார் மல்லிகா.
ஆனால், நல்லவர்களைக் கடவுள் விரைவாகத் தன்னுடன் அழைத்துக் கொள்வார் என்று சிலர் சொல்வார்களே? அந்தக் கூற்றை நிஜமாக்கும் படியாக, வண்ணமதி பத்தாம் வகுப்பும், மகிழம்பூவன் எட்டாம் வகுப்பும் படித்துக் கொண்டிருந்த சமயத்தில், தங்களது மாட்டுக் கொட்டகையில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கும் போது பாம்பு கடித்து இறந்து போய் விட்டார் மல்லிகா.
அதில் பால்ராஜூம், அவரது பிள்ளைகளும் மிகவும் உடைந்து போய் விட்டனர்.
அதேபோல் தனது தங்கையின் இறப்பை ரமணனாலும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
தனது அன்னை கஸ்தூரியின் அருகில் உட்கார்ந்து கொண்டுத் தனது தாயின் உயிரற்ற உடலைக் கண்டு அழுது கொண்டிருந்த வண்ணமதி மற்றும் மகிழம்பூவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது சஹஸ்ராவிற்கு.
அப்போது அவள் ஏழாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தாள்.
தன் மல்லிகா அத்தையின் மறைவுக்குப் பிறகு, அவளுக்கு இவர்களிடம் இருந்த வெறுப்பு மறைந்து விட்டது.
ஆனால் தனது தந்தை அவர்களிடம் பாசமாக இரண்டொரு வார்த்தைகள் பேசி விட்டால் மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறி விட்டதைப் போல் அவர்கள் மீது கோபத்தைக் காட்டுவாள் சஹஸ்ரா.
தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காக நகரத்திற்குத் தனது ஜாகையை மாற்றிக் கொண்டுக் குடும்பத்தோடு சென்று அங்கே நிரந்தரமாகத் தங்கி விட்டார் ரமணன்.
தனது மகளையும் அங்கேயிருந்த பிரபலமானப் பள்ளியில் சேர்த்தார்.
தனது தங்கையின் கணவர் மற்றும் பிள்ளைகளையும் தங்களுடன் வந்து இருக்குமாறு கோரிக்கை விட,”அது சரியாக வராது மாப்பிள்ளை. எங்களோட பூர்வீகமே இந்த ஊர் தானே? அதுவும் இல்லாமல் இங்கே தான் மல்லிகாவோட நினைவுகள் எல்லாம் நிறைஞ்சு இருக்கு! அதனால் நாங்க இந்த ஊரை விட்டு வர விரும்பலை”என்று அவரிடம் மென்மையாக மறுத்து விட்டார் பால்ராஜ்.
அதற்குப் பிறகு அவரைக் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் அவரது பிள்ளைகளான வண்ணமதி மற்றும் மகிழம்பூவனின் படிப்புச் செலவை ஏற்றுக் கொண்டு அவர்களை நன்றாகப் படிக்க வைத்தார் ரமணன்.
தனக்குப் பிடித்தப் புவியியல் படிப்பைத் தேர்வு செய்து அதில் இளங்கலை முடித்திருந்த வண்ணமதியின் சம்மதத்தின் பேரில் அவளுக்கு அந்த ஊரிலேயே மாப்பிள்ளைப் பார்த்து திருமண செய்து வைத்து விட்டார் பால்ராஜ்.
அந்த திருமண செலவில் தங்களது பங்கும் இருக்க வேண்டும் என்று தன் செலவில் அவளுக்கு நகை வாங்கிப் போட்டனர் ரமணன் மற்றும் கஸ்தூரி.
அதற்குப் பிறகு வண்ணமதியின் கர்ப்ப காலம், அவளது வளைகாப்பு, குழந்தைப் பிறந்த பின், அவனுக்குப் பேர் வைக்கும் விழா என்று அவனுக்கு ஒரு வயது வரை ஆகும் செலவுகள் அனைத்தையும் வண்ணமதிக்குத் தாய் வீட்டு முறையாகத் தாங்களே செய்தார்கள்.
இப்போது அந்தக் குழந்தை செந்திலுக்கு இரண்டு வயதாகி விட்டிருந்தது.
அந்த நிகழ்வுகள் அனைத்திலும் நல்ல பிள்ளையாகவே கலந்து கொண்டாள் சஹஸ்ரா.
அவளிடம்,”அவங்க ரெண்டு பேரும் தாயில்லாத பிள்ளைங்கம்மா. அவங்களுக்கு நாம தானே செய்யனும்!”என்று சொல்லி அவளைச் சமாதானம் செய்து விட்டார்கள் அவளது பெற்றோர்.
தனக்கு வேளாண்மைத் துறையில் ஆர்வம் இருந்ததால் அதில் இளங்கலைப் பட்டப் படிப்பை வாங்கியதும் தனக்குச் சொந்தமாகப் பால் பண்ணை வைக்க ஆசைப்பட்டத் தனது மருமகனுக்குத் தன்னுடைய சொந்த செலவிலேயே இடத்தை வாங்கி அவனது பெயரிலேயே பத்திரம் பதிவு செய்து விட்டு சில மாடுகளையும் வாங்கிக் கொடுத்து அவனுக்குத் தொழில் அமைத்து தந்தார் ரமணன்.
அதேபோல் தனது படிப்பில் கவனம் செலுத்த தொடங்கி விட்டிருந்ததால் இவர்களைப் பற்றிய நினைவே இல்லாமல் இருந்தாள் சஹஸ்ரா.
அவளது தாயும், தந்தையும் அவர்களைப் பற்றி அவ்வப்போது தங்களுக்குள் பேசிக் கொள்வதை அறிந்து இருந்தாலும் கூட அதில் கவனம் வைக்க மாட்டாள்.
ஆனால், இப்போதோ கண்டும் காணாமல், தனது பெற்றோரின் உரையாடலைக் கேட்டிருந்ததில், தன் மாமா பால்ராஜூடன், அவரது மகனும், மகளும் நிச்சயமாக இங்கு வருவார்கள் என்று புரிந்து கொண்டு,
“அந்த மகிழம்பூவனைக் கூடப் போனால் போகுதுன்னு விட்ருவேன். ஆனால் அந்த வண்ணமதியை மட்டும் விடவே மாட்டேன்! அவ தான் என்னை எப்போ பார்த்தாலும் சீண்டிக்கிட்டே இருப்பாள்! இங்கே வரட்டும். அவளுக்கு நான் யாருன்னுக் காட்றேன்!”எனத் தனக்குள் கருவிக் கொண்டாள் சஹஸ்ரா.
இதே சமயத்தில்,”ஏற்கனவே அந்த சஹஸ்ராவுக்கும், எங்களுக்கும் வாய்க்கால் தகராறு மாதிரி அடிக்கடி சண்டை வந்துட்டு இருக்கும். நாங்க என்னமோ அவளோட ஜென்ம எதிரி மாதிரி எங்களை முறைப்பாள்! அந்தத் திமிர் பிடிச்சவ வீட்டுக்குப் போகப் போறதாக அப்பாவும், மகிழும் சொல்லி இருக்காங்க! நானும் அவங்க கூடப் போயிட்டு வரலாம்னு நினைக்கிறேன்ங்க. நீங்க என்ன சொல்றீங்க?”என்று தன் கணவன் பூபாலனிடம் வினவினாள் வண்ணமதி.
அதற்கு,”அந்தப் பொண்ணுக்குத் தான் உங்களைப் பிடிக்காதுல்ல? மாமாவும், மகிழுமே ஏன் போறாங்கன்னுப் பேசிட்டு, இப்போ நீயும் அவங்க கூடப் போறேன்னு சொல்றியே? அதுக்கு என்னக் காரணம் மதி?”எனக் கேட்க,
“அதுவா…? அவ என் அப்பாவையும், தம்பியையும் கண்டிப்பாக நல்லா நடத்த மாட்டாள். அதான், நான் போனால் அவங்களுக்கு ஒரு தைரியமாக இருக்கும்ல? அதான்!”என்றவளைப் புன்னகையுடன் ஏறிட்டு,
“அப்போ செந்திலையும் கூட்டிட்டுப் போறியா?”என்றான் பூபாலன்.
“இல்லங்க. அவன் தான் பால் குடியை மறந்துட்டானே? அதனால் அத்தைப் பார்த்துப்பாங்க. நான் மட்டும் அவங்க கூடப் போயிட்டு வரவா?”என்று அவனிடம் அனுமதி கேட்டாள் வண்ணமதி.
“உனக்குப் போகனும்னு தோனினால் போயிட்டு வா ம்மா”என்றுரைத்து விடத்,
தன் மாமனார் ஆறுமுகம் மற்றும் மாமியார் முல்லைக்கொடியிடமும் தகவல் தெரிவிக்க அவர்களும் மருமகளுக்கு அனுமதி அளித்து விட்டனர்.
- தொடரும்