உடனே பதறிப் போய் அவளது கன்னத்தில் தட்டி,”அழகிம்மா!”என்று தன்னவளைக் கண் விழிக்க வைக்க முயற்சி செய்தான் மகிழம்பூவன்.
இதைக் கேட்டு அறைக்குள் இருந்த ரமணனும், கஸ்தூரியும் வெளியே வந்து தங்களது மகளின் நிலையைக் கண்டுப் பதறி,”சஹாவுக்கு என்னாச்சு மாப்பிள்ளை? ஏன் மயக்கம் போட்டு இருக்கிறா?”என்று அவனிடம் பதைபதைப்புடன் வினவினார்கள்.
“இவ நீங்க ரெண்டு பேரும் பேசின விஷயத்தைக் கேட்டுட்டாள். அதான், மயக்கம் போட்டுட்டாள்”என்று அவர்களிடம் பரிதவிப்பாக கூறினான் மகிழம்பூவன்.
“அச்சோ! அதைக் கேட்டுட்டாளா?”என்று தாங்கள் இருவரும் அதிர்ச்சி அடைந்து போயினர் ரமணன் மற்றும் கஸ்தூரி.
“ம்ஹ்ம்”என்றவனோ, அவளைத் தூக்கிச் சென்று அறை மெத்தையில் கிடத்தினான்.
அந்தச் சத்தத்தைக் கேட்டு விட்டு மற்றக் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அங்கே வந்து ஆஜராகி விட்டிருந்தார்கள்.
அவர்களும் சஹஸ்ராவின் நிலையைக் கண்டு,”அழகிக்கு என்னாச்சு?”என்று பதட்டத்துடன் வினவினர்.
“அதை அப்பறமாகச் சொல்றேன். முதல்ல இவளுக்குக் குடிக்கத் தண்ணீர் கொண்டு வாங்க. காத்தாடியைப் போட்டு விடுங்க”எனக் கூறி விட்டுத் தன்னவளின் கையைப் பிடித்துக் கொண்டு அவளது அருகிலேயே அமர்ந்து கொண்டான் மகிழம்பூவன்.
சஹஸ்ராவின் அடுத்தப் பக்கத்தில் வருத்தத்துடன் உட்கார்ந்து கொண்டார்கள் ரமணன் மற்றும் கஸ்தூரி.
உடனே தன்னிடமிருந்த மகனைக் கணவனிடம் ஒப்படைத்து விட்டுத் துரிதமாகச் செயல்பட்டுக் காற்றாடியைச் சுழல விட்டு, விட்டுச் சமையலறைக்குச் சென்று தண்ணீர் முகர்ந்து கொண்டு வந்து தம்பியுடன் கொடுத்தாள் வண்ணமதி.
அதை வாங்கித் தன்னவளின் மயக்கத்தைத் தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினான் மகிழம்பூவன்.
அவளது கன்னத்தைத் தட்டி, முகத்தில் தண்ணீரை மெல்ல, மெல்லத் தெளித்து,”அழகிம்மா! கண்ணைத் திறம்மா!”என்று தழுதழுத்தக் குரலில் அவளை எழுப்பும் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து கொண்டே இருந்தான் மகிழம்பூவன்.
அப்படியும் அவள் கண் விழிக்காமல் இருப்பதைக் கண்டுப் பயந்து போனார்கள் மற்றவர்கள்.
“நீ பேசாமல் மருமகளைத் தூக்கு! நாம ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போய்க் காட்டலாம்!”என்று தன் மகனுக்கு அறிவுறுத்தினார் பால்ராஜ்.
“சரிப்பா”என்றதுமே,
பூபாலனோ,“நான் போய் வண்டியைத் தயார்படுத்தி வைக்கிறேன்”என்ற போதோ, இவ்வளவு நேரமாகத் தனது மயக்க நிலையால் அவர்கள் அனைவரையும் பதற வைத்துக் கொண்டிருந்த சஹஸ்ராவோ தனது இமைக்குடைகளை மெல்லத் திறந்தாள்.
அதைக் கண்டதுமே,”அழகிக் கண்ணு முழிச்சிட்டா! எல்லாரும் கொஞ்சம் விலகுங்க! இவளுக்குக் காத்து வரட்டும்”என்று அனைவருக்கும் வலியுறுத்தினான் மகிழம்பூவன்.
“நான் இவளுக்கு எலுமிச்சம்பழம் ஜூஸ் போட்டு எடுத்துட்டு வர்றேன்”என்றுரைத்து விட்டுச் சமையலறைக்குச் சென்று விட்டார் முல்லைக்கொடி.
ஆனால் இதையெல்லாம் கேட்டும் எந்த எதிர்வினையும் செய்ய முடியாமல் துவண்டுப் போயிருந்த சஹஸ்ராவோ, தனது விழிகளைச் சுழற்றித் தன்னைச் சுற்றி இருந்தவர்களைப் பார்வையிட்டாள்.
தனது கரம் யாருடைய கரத்துடனோ பிணைக்கப்பட்டு இருப்பதை உணர்ந்து அதற்குச் சொந்தக்காரனை ஏறிட்டுப் பார்த்தாள் சஹஸ்ரா.
தனது வருங்கால மணாளன் தான் கண்களில் தவிப்புடன் தன்னைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்பதை அறிந்ததும்,
அவனது கரத்தை இன்னும் அழுத்தமாகப் பற்றிக் கொண்டு அவனுடன் ஒண்டிக் கொண்டாள் சஹஸ்ரா.
அதைப் பரிதவிப்பாகப் பார்த்து விட்டு,”நீ ஏன்டா மயக்கம் போட்டு விழுந்த? நாங்கப் பேசின எல்லாத்தையும் கேட்டுட்டியா?”என்று தங்கள் மகளிடம் வருத்தமாக வினவினார் ரமணன்.
உடனே அவரைக் கசந்தப் புன்னகையுடன் பார்த்து,”ம்ஹ்ம். நான் நீங்கப் பேசின எல்லாத்தையும் கேட்டுட்டேன்!”என்றுரைத்து இருந்தாள் சஹஸ்ரா.
அதைக் கேட்டதும் அவளது பெற்றோருக்கு மிகவும் மனம் விட்டுப் போயிற்று எனலாம்!
ஏனென்றால் எந்த உண்மையைக் கடைசி வரைக்கும் தங்களது மகளுக்குத் தெரியப்படுத்தக் கூடாது என்ற முடிவில் உறுதியாக இருந்தார்களோ! அந்த உண்மை அவளுக்கு இப்போது தெரிந்து விட்டது என்பதை அறிந்த சஹஸ்ராவின் பெற்றோரால் தங்களது பதைபதைப்பை அடக்க முடியவில்லை.
அதே சமயம்,“நீங்க என்னப் பேசிட்டு இருக்கீங்க? அப்படி நீங்கப் பேசின எதைக் கேட்டு இவ மயங்கி விருந்தாள்? இங்கே என்ன நடக்குது?”என்று அவர்கள் பேசிக் கொள்வது புரியாமல் ஒருசேரக் குரல் எழுப்பி இருந்தார்கள் ஆறுமுகம், பூபாலன் மற்றும் வண்ணமதி.
அப்போது அங்கே தனது கையில் பழச்சாறுக் குவளையுடன் வந்து சேர்ந்த முல்லைக்கொடியோ,
“அவ முதல்ல இதைக் குடிக்கட்டும். அதுக்கப்புறம் உங்க விசாரணையை வச்சுக்கோங்க”என அவர்களுக்கு அறிவுறுத்தி விட்டுச் சஹஸ்ராவிடம் குவளையைக் கொடுத்து அதிலிருந்த பானத்தைக் குடிக்க வைத்தார்.
அதைப் பருகியதும் தான் தனது உடல் கொஞ்சமாகப் புத்துணர்ச்சி அடைந்ததை உணர்ந்து தன் திருவாயைத் திறந்து,”நானும், பூவனும் எங்களோட எல்லா மனக்குறையையும் பேசித் தீர்த்துக்கிட்டுச், சேர்ந்துட்டோம்ன்ற விஷயத்தை முதல்ல எங்கப்பா, அம்மா கிட்ட சொல்லலாம்னு அவங்களைத் தேடி ரூமுக்கு வந்தேன்! ஆனால் அவங்க அப்போ ஒரு விஷயத்தைப் பத்திப் பேசிட்டு இருந்ததைக் கேட்டேன்”என்றவளோ, சற்று முன்னர் நடந்ததை அவர்களுக்கு விளக்கமாக கூறத் தொடங்கினாள் சஹஸ்ரா.
தனது தாய் மற்றும் தந்தையின் அறைக் கதவின் முன் வந்து நின்று அதை தட்டும் நோக்கத்துடன் தனது கையை உயர்த்தியவளுக்கு அவர்களது பேச்சுக் குரல்கள் கேட்டது.
உடனே அதைக் கேட்பது அநாகரீகமான செயல் என்பதை உணர்ந்து அங்கிருந்து விலகிச் செல்லப் பார்க்கவும்,
ஆனால் அவர்கள் பேசிக் கொண்டது அவளது மல்லிகா அத்தையைப் பற்றியது என்பதை அறிந்ததுமே அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்ததால் அந்த அறைக் கதவைத் தட்டும் எண்ணத்தில் இருக்க,
ஆனால்,”மல்லிகா மட்டும் சரியான நேரத்தில் நமக்கு அவளோட நகையைக் கொடுத்து உதவலைன்னா நாம இப்போ இந்தளவுக்கு நல்ல நிலைமையில் இருக்க மாட்டோம்ங்க! ஏன்னா, தனக்கும் பொண்ணும், பையனும் இருக்காங்க, அவங்களுக்குச் சேர்த்து வைக்கனும்னு அவ நினைச்சு இருந்திருந்தால் நமக்கு இப்படி சரியான நேரத்தில் உதவிக் கிடைச்சு இருக்காது! அவளோட அந்தச் சுயநலமற்றச் செயலால் தான் நாம இப்போ இவ்வளவு வசதியாக வாழ்ந்துட்டு இருக்கோம்! அதுவும் இல்லாமல் அவ அதுக்குப் பிரதி உபகாரமாகன்னு இல்லாமல் ஆசையாக நம்மகிட்டே கேட்டுக்கிட்டது ஒன்னே ஒன்னு தான்! அது என்னன்னு உங்களுக்குத் தெரியும் தானே?”என்று கணவனிடம் கேட்டார் கஸ்தூரி.
“ம்ஹ்ம். நல்லாவே ஞாபகம் இருக்கு! அவளுக்கு நம்மச் சஹஸ்ரான்னா அவ்வளவு பிடிக்கும்! அதனால் தான், நம்மப் பொண்ணை அவளோட மருமகளாக்கிக்க ஆசைப்பட்டு நம்மகிட்டே கேட்டாள்! நான் கூட அவ செஞ்ச உதவிக்குப் பிரதி உபகாரமாக கேட்கிறாளோன்னு நினைச்சேன்! ஆனால் அவ அப்படி நினைக்காமல் ஆசையாக, உரிமையாக கேட்டாள்! அதனால் தான் நாம அதுக்கு ஒத்துக்கிட்டோம்! இல்லைன்னா நமக்கு மனசுக்குள்ளே ஒரு உறுத்தல் இருந்துக்கிட்டே இருந்து இருக்கும்! அதுக்கப்புறம் அவ எதிர்பாராத விதமாக இறந்துப் போனதுக்கு அப்பறம் நாளாக, நாளாகப், பிள்ளைங்க நாலு பேரும் வளர, வளர நம்மப் பொண்ணுக்கு மகிழையும், மதியையும் பிடிக்காமல் போயிடுச்சு! அதைப் பார்த்து நமக்கு ரொம்பவே பயமாக இருந்துச்சு! ஆனால் நம்ம மல்லிகாவோட ஆசீர்வாதத்தால் இப்போ எல்லாமே கூடி வந்து சஹாவுக்கும், மகிழுக்கும் கல்யாணம் நடக்கப் போகுதுன்றதை நினைக்கும் போது எனக்கு ரொம்பவே மனசுக்கு நிறைவாக இருக்கும்மா!”என்று தனது மனக்கிடங்கில் இருந்தவற்றை எல்லாம் தனது வாக்குமூலமாக ஒப்புவித்து இருந்தார் ரமணன்.
அதைக் கேட்டதற்குப் பிறகுத் தான் அந்த உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாமலும், தங்களது இந்த வளமான வாழ்விற்கு அடித்தளம் போட்டுக் கொடுத்த மல்லிகா அத்தையின் அருமை தெரியாமல் அவரது மகன் மற்றும் மகளையே தன்னால் முடிந்த அளவிற்கு அவமானப்படுத்திச், சண்டைப் போட்டுக் கொண்டு இருந்து இருக்கிறோம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமலும் தான் அதிர்ச்சியின் உச்சிக்கே போய் விட்டவளுக்குக் கண்களை இருட்டிக் கொண்டு மயக்கம் வந்து விட்டிருந்தது.
அவளது பின்னாலேயே வந்திருந்த மகிழம்பூவனும் கூடத் தனது அத்தை, மாமாவின் மொத்த உரையாடலையும் அச்சுப், பிசகாமல் கேட்டு விட்டிருந்தான்.
ஆனால், அதற்கு எதிர்வினை ஆற்றுவதற்கு வாய்ப்புக் கிடைக்காமல் மயங்கிச் சரிந்திருந்த தன்னவளின் மீது கவனத்தைப் பதித்து அவளை எழுப்ப முயன்றிருந்தான் மகிழம்பூவன்.
இதையெல்லாம் தனது வாய்மொழியாக அனைவரிடமும் தெரிவித்து விட்டுக் குற்ற உணர்வுடன் தலையைக் குனிந்து கொண்டாள் சஹஸ்ரா.
அதைக் கேட்டதுமே அவளது தாய், தந்தை மட்டுமின்றி அங்கேயிருந்த மற்றவர்களுக்கும் அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை.
ஏனெனில், சஹஸ்ராவைப் போலவே, ரமணன் மற்றும் கஸ்தூரிக்கு அவர்களது தொழிலிற்குத் தேவையான முதலீட்டுப் பணத்திற்காகத் தனது நகைகளைக் கொடுத்து உதவியது மல்லிகா தான் என்ற உண்மையை அவர்களுடன் சேர்த்துப் பால்ராஜ்ஜைத் தவிர்த்து அங்கேயிருந்த மற்றவர்கள் யாருக்கும் கூடத் தெரியாது!
ஆனால் இப்போது அந்த உண்மையை அறிந்து கொண்ட அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் மல்லிகாவின் மீதான மரியாதையும், மதிப்பும் தற்போது மலையளவிற்குக் கூடி விட்டிருந்தது எனலாம்!
தங்களது அன்னையின் சுயநலமற்ற உதவும் குணத்தை எண்ணி நெகிழ்ந்து போயினர் மகிழம்பூவன் மற்றும் வண்ணமதி.
அதில் அவர்களோ தங்களது தாயை நினைத்துப் பெருமையில் தங்களது கண்களில் இருந்து கண்ணீரைக் கசிய விட்டிருந்தனர்.
“நான் எதையுமே புரிஞ்சிக்காமல் உங்களை ரொம்பவே அவமானப்படுத்திக், கஷ்டப்படுத்தி இருக்கேன்! அதுக்கு என்னை மன்னிச்சிருங்க!”என்று அந்த அக்கா, தம்பியிடம் கையெடுத்துக் கும்பிட்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள் சஹஸ்ரா.
அதைப் பார்த்துப் பதறிப் போய்,”ஹேய் அழகி! என்னப் பண்ற நீ? அடி வேணுமா உனக்கு?”என அவளை உரிமையாக அதட்டினர் மகிழம்பூவன் மற்றும் வண்ணமதி.
“பரவாயில்லைம்மா! நாங்க இவகிட்டே இந்தக் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்பறமாக இந்த உண்மையைச் சொல்லிடலாம்னு நினைச்சிட்டுத் தான் இருந்தோம்! ஆனால் அதுக்கு முன்னாடியே இவளுக்கு இந்த உண்மைத் தெரிஞ்சதும் நல்ல விஷயம் தான்! இனிமேல் யாருக்கும், எந்த மனக்குழப்பமும் இல்லாமல் இந்தக் கல்யாணம் நடக்கும் தானே? அது போதும்!”என்றுரைத்து விட்டார் கஸ்தூரி.
ஆனாலும்,”சஹாம்மா! நீ யார்கிட்டேயும், எதுக்காகவும் தலைக் குனிஞ்சு மன்னிப்புக் கேட்கனும்னு அவசியம் இல்லைடா! ஏன்னா, நீயும் இந்த வீட்டுப் பொண்ணு தான்! நாம எல்லாரும் ஒரே குடும்பம்! அப்படி இருக்கும் போது நம்மளோட குடும்பத்து மனுஷங்களுக்கு ஒரு தேவை இருக்கும் போது அதுக்கு நாமளே உதவிப் பண்ணலைன்னா அது நியாயமே கிடையாதுன்னு யோசிச்சதால் தான் உன்னோட மல்லிகா அத்தை அவங்க நகையைக் கொடுத்து உங்கப்பா தொழிலுக்கு அஸ்திவாரம் போட்டுக் கொடுத்தாள்! அவ அண்ணனுக்கு உதவித் தேவைப்பட்ட அப்போ உதவிப் பண்ணினாள்! அவ்வளவு தான்! ஆனால் அதுக்கப்புறம் உங்கப்பா தான் உங்கத் தொழிலை எடுத்து நடத்தி இந்தளவுக்கு அதில் வெற்றி அடைஞ்சி இருக்காருன்றதையும் நீ மறக்கக் கூடாது! சரியா?”எனத் தன்னுடைய வருங்கால மருமகளுக்கு விளக்கிக் கூறினார் பால்ராஜ்.
அதைக் கேட்டுச் சிறிது தெளிவடைந்து,”நான் பூவன் கிட்டே கொஞ்சம் தனியாகப் பேசனும்”என்றிருந்தாள் சஹஸ்ரா.
உடனே அதைப் புரிந்து கொண்டு அவர்கள் இருவருக்கும் தனிமைக் கொடுத்து விட்டு அறையிலிருந்து வெளியேறி விட்டனர் அவர்களது மற்றக் குடும்ப உறுப்பினர்கள்.
- தொடரும்