வான் தழுவிடிலோ வெண்ணிலவே ஓர் அறிமுகம்

Advertisement

M&V

Well-known member
Member
வான் தழுவிடிலோ வெண்ணிலவே ஒரு அறிமுகம்.​

வணக்கம் மக்களே.

நாங்கள் M and V. (மது ஹனி மற்றும் வத்சலா ராகவன்).

“வான் தழுவிடிலோ வெண்ணிலவே” நாங்கள் இருவரும் சேர்ந்து எழுதும் இரண்டாவது கதை.

நாங்கள் இருவரும் சேர்ந்து எழுதிய முதல் கதையை நீங்கள் படித்திருக்கக் கூடும். படிக்கவில்லை என்றால் இதோ அந்தக் கதைக்கான சுட்டி.


விழாக் காணுமே வானம்

'வான் தழுவிடிலோ வெண்ணிலவே' , ‘விழாக் காணுமே வானம்’ கதையில் வரும் விக்ரம் மற்றும் ஆராதனா அவர்களுக்கான தனிக் கதை.

அந்தக் கதையை இதுவரை படிக்கவில்லை என்றாலும் ஒன்றும் கவலை இல்லை மக்களே. தனியாக படித்தாலுமே 'வான் தழுவிடிலோ வெண்ணிலவே' கதை நன்றாகவே புரியும்.

அந்தக் கதையில்தான் விக்ரமிற்கு அவனது காதல் கைகூடவில்லை. இந்தக் கதையில் கை கூடி விடுமா?

‘பிடிச்சதை நமக்கு பிடிச்சவங்களுக்காக விட்டுக் கொடுக்குறதை விட வேறே சந்தோஷம் எதுவும் இந்த உலகத்திலே இருக்கா என்ன?’

இந்த வரிதான் ‘விழாக் காணுமே வானம்' கதையின் அடிபப்டையாக இருந்தது.

அதன் அடிப்படையிலேயே விக்ரம் தனது காதலான ஆராதனாவை வேறே யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முயன்றால்?

அதைத் தெரிந்து கொள்ள வாசித்துப் பாருங்கள் “வான் தழுவிடிலோ வெண்ணிலவே’

கதாநாயகன் விக்ரம் மற்றும் நாயகி ஆராதனா இருவரின் பார்வையிலும் கதை நகரும்.

முதல் சில அத்தியாயங்கள் விக்ரமின் பார்வையில் கதை நகரும். அடுத்து விக்ரம் ஆராதனா இருவரும் மாற்றி மாற்றி தங்களது உணர்வுகளை சொல்வார்கள்.

கதையை எழுதி முடித்து விட்டோம் என்பதால் அனேகமாக தினமும் அத்தியாயங்கள் வரும். நீங்கள் அனைவரும் படித்து விட்டு தங்களது கருத்துக்களை சொன்னால் மிக்க மகிழ்ச்சி நட்புக்களே.

ப்ரியங்களுடன்

M and V
 
Last edited:
விழாக் காணுமே வானம் 🤧😭படிக்கவில்லை...

வான் தழுவிடிலோ வெண்ணிலவே....
வாழ்த்துக்கள் மா 👏🏻👏🏻💐🤩

விக்ரம் ❤️ ஆராதனா...
வந்து விட்டேன் படிக்க...
 
  • Love
Reactions: M&V
பிடிச்சிருக்கு.....
பிடித்தவர்களுக்காக
பிடித்ததை விட்டுக் கொடுப்பதில்
பெருமை காணும் இதயம்
பாசத்தின் பேரொளி....
 
  • Love
Reactions: M&V
விழாக் காணுமே வானம் 🤧😭படிக்கவில்லை...

வான் தழுவிடிலோ வெண்ணிலவே....
வாழ்த்துக்கள் மா 👏🏻👏🏻💐🤩

விக்ரம் ❤️ ஆராதனா...
வந்து விட்டேன் படிக்க...
வாவ் வாவ் நீங்க வந்தது அத்தனை சந்தோஷமும் நிறைவும்.
 
பிடிச்சிருக்கு.....
பிடித்தவர்களுக்காக
பிடித்ததை விட்டுக் கொடுப்பதில்
பெருமை காணும் இதயம்
பாசத்தின் பேரொளி....
அழகு கவிதை. நன்றிகள் பல
 

Advertisement

Advertisement

Back
Top