Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - பகுதி 1 - பின்னுரை (Epilogue)

Advertisement

mee aaga apo atha sagar kooda thaan motha poraangala poli patti thaan antha sagar thalaivana ?? ennamo ponga enaku manyagni engaku romba pidichiruku.. intha scene thaane neenga teaser la kudutheenga ???

enakoru doubt ?? ovvoru vaatiyum ovvoru manaiviyoda varuvaara vikramathiyan apo devi jodi illaiya ??? oru ponnu retha vellathula paduthiruntha mathiri kaamicheengale antha mothiram thodum bothu paahhh evlo iruku ??????

????கேள்வியின் நாயகியே...????

ஆமாம், சகர்கள் கூடத்தான் மோதப் போறாங்க... போலிப் பட்டிதான் சகர்களின் தலைவன்... பின்னுரைல வந்த காட்சியின் ஒரு பகுதிதான் முன்னுரையிலும் காட்டப்பட்டது (அதனால் முன்னுரையில் காட்டிவிட்டப் பகுதியைப் பின்னுரையில் மீண்டும் விவரிக்கவில்லை!)

அந்தக் கால அரசர்களுக்குப் பல மனைவியர் இருந்தார்கள், இதில் பெரும்பான்மையானவை அரசியல் திருமணம்...

(இராசராச சோழர்க்கு அறுபது மனைவிகள்! தொலைதூரத்தில் ஒரு இடத்தைப் போரிட்டுப் பிடித்துவிட்டு அதை எப்படித் தன் ஆட்சிக்குள்ளேயே தக்கவைத்துக்கொள்ள இயலும்? நிரந்தரமாகப் படையை அங்கே நிறுத்த இயலுமா? எனவே, தோற்கடித்த அரசரின் மகளையோ தங்கையையோ திருமணம் செய்துகொண்டுவிடுவார்... பின் அந்த மன்னரையே தனது பிரதிநிதியாக மீண்டும் அங்கேயே ஆட்சியில் வைத்துவிடுவார் (அவர் போரில் இறக்காமல் இருந்தால்!) அவர் இவருக்குக் ‘கப்பம்’ கட்ட வேண்டும்! பின்னாளில் இவரின் வாரிசே அங்கே அரசாள அனுப்பவும்படும்! இதுதான் அரசியல் தந்திரம்!)

விக்ரமாதித்யர் தனது ’காடாறு மாத’ பயணங்களில் பல வீரதீர சாகசங்களைப் புரிந்துள்ளார் (கதைப்படி!) பெரும்பாலானவற்றில் பல பெண்களை (குறிப்பாகப் பல அரசகுமாரிகளை!) காப்பாற்றியுள்ளார், பின் அவர்களையே மணந்துகொண்டும் உள்ளார்... இதில் அரசியல் பாதி, காதல் பாதி!

அதற்காக, ஒவ்வொரு முறையும் அவர் காடாறு மாதம் செல்லும்போது ஒரு புது மனைவியுடன் வருவார் என்று பொருளல்ல... அது அந்தப் பதுமை எள்ளலாக அப்படிக் கூறியது!

என் கதைப்படி விக்ரமரின் ஆஸ்தான நாயகி, பட்ட மகிஷி, தலைமை அரசி மதனமாலை என்பவர் (இதுவும் என் கற்பனையே, விக்ரமர் கதையில் அவ்வாறு பட்டத்து ராணியாக யாரும் குறிக்கப்படவில்லை!)

விக்ரமருக்காக உயிர்விட்டு உடல்வெட்டுப்பட்டு குருதிவெள்ளத்தில் கிடந்தவளும் (நம் கதைப்படி!) அவளே...

ஆனால்... அவள்தான் இன்று தேவியா? ?‍♂️?‍♂️?‍♂️ பொ.இ.பா...

:giggle::giggle:???

இந்த மாதிரி நிறைய கேள்வி கேட்டுட்டே இரு, இதைலாம் நான் நோட் பண்ணிக்குறேன், அப்பதான் எனக்கும் எதையாச்சு விட்டுட்டோமா இல்லையானு தெரியும்... :giggle:(y)(y):love::love::)
 
Top