Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான்; இமையாக நீ;-- 19

Advertisement

TNWContestWriter080

Well-known member
Member
அத்தியாயம் 19

மிருதுளாவிடம் கை அசைத்து விட்டுக் , காரைக் கிளப்பிய ரவியின் முகம், வாசு காட்டிய வீடியோவில் தெளிவாகப் படமாக்கப் பட்டிருந்தது. அதனைக் கண்டு ஒரு கணம், அதிர்ச்சி அடைந்த வெண்ணிலா, பின் சுதாரித்துக் கொண்டாள்.

ஆனால், அவளது முக மாற்றத்தைக் கவனித்த வாசு, " என்ன, மிஸ் வெண்ணிலா. இந்த வீடியோவைப் பார்த்ததும் ரொம்பவே ஷாக் ஆயிட்டீங்க போலத் தெரியுது " என்று கிண்டல் தொனியில் கேட்டான்.

அதற்கு அவள் " அந்த வீடியோல இருக்கிறது யாரு தெரியுமா? என் தங்கை மிருதுளா. நீ தான் என்னை இப்படி கடத்திட்டு வந்து ஒளிச்சு வச்சுட்டியே. என் குடும்பத்த ரவி பார்த்துக்கரார் அதான் அவர் அவளைப் பத்திரமா காலேஜீக்குக் கொண்டு போய் விட்டுட்டு வந்திருப்பாரு. இதைப் போய் வீடியோ எடுத்துட்டு வந்து, என் கிட்ட காட்டிட்டு இருக்கே நீ . " என சற்று நக்கலாக கேட்டவள் பின் சுதாரித்து " வாசு தயவு செய்து என்னோட போனை கொடு. நான் எங்க அம்மா கிட்ட பேசணும். குடு வாசு பிளீஸ் " என்று கெஞ்சினாள் வெண்ணிலா.

அவளது, பேச்சில், ரவியின் மீதான ஆழ்ந்த நம்பிக்கை புலப்பட்டது.

" ம்ம், தர்றேன், தர்றேன். ஆனா நீ இன்னும் என்னை சரியாப் புரிஞ்சுக்கலை. உன்னைக் கடத்திக் கூட்டிட்டு வந்த நான் , உன் கூட வாழணும்கிற ஆசையில தான் இன்னும் உன்னை இங்கயே ஒளிச்சு வச்சுட்டு இருக்கேன்கிறது இன்னுமா உனக்குப் புரியலை " என்று கேட்டான்.

" உனக்குத் தான் ஒன்னும் புரியலை. வாழ்க்கைங்கறது, ரெண்டு பேரு சம்பந்தப்பட்டது. நீ மட்டும் ஒரு முடிவு எடுத்துட்டு அதை மத்தவங்க மேல என்னிக்குமே சுமத்த முடியாது வாசு. பிளீஸ் என் மொபைலை என் கிட்ட கொடுத்துடு. இல்லைன்னா, நான் எங்க அம்மா நம்பர் சொல்றேன். அந்த நம்பருக்கு உன் போன்ல இருந்து டயல் பண்ணிக் கொடு. நான் அவங்க கிட்ட பேசணும் " என்று மீண்டும் கெஞ்சத் தொடங்கினாள்.

அவள், கெஞ்சும் ஓசை கேட்டு எழுந்து கொண்ட சாரதா தன் மகனைக் கடிந்து கொண்டாள்.

" டேய் வாசு என்னடா இது. அவங்க அம்மா கிட்ட தானே பேசணும்னு சொல்றா. அவ போனைக் கொடுத்துடுடா " என்று சொன்னாள்.

" அம்மா, எல்லாம் எனக்குத் தெரியும். நீ எழுந்திரு போ, சமைக்க ஆரம்பி. உன் வேலையை முடிச்சிட்டு வா முதல்ல. அப்புறம் நாம பேசிக்கலாம் " என்று சொன்னான் வாசு.

அரை மனதுடன் எழுந்து கொண்ட சாரதா, " நீ வா வெளியே, பாப்பா இங்கேயே தூங்கட்டும். அவளை நிலா பார்த்துப்பா " என்று சொல்லி விட்டு, வாசு அறையை விட்டு வெளியே வந்ததும், அறைக் கதவைப் பூட்டி விட்டுத் தானும் வெளியேறினாள்.

அவள் மனத்திற்குள், ' இந்தப் பய எங்கேயாவது போகட்டும். அதுக்கப்புறம் நம்ப போனை இந்தப் பிள்ளை கிட்ட கொடுத்து, அவங்க அம்மா கிட்ட பேசச் சொல்லலாம் ' என்று தனக்குள் எண்ணிக் கொண்டவாறே சமையலறை நோக்கி விரைந்து சென்றாள்.

**************(*********************************(
தீபக், கொடுத்த வெண்ணிலாவின் அலைபேசி எண்கள், வாசுவின் கைகளின் மூலம் தங்களை உயிர்ப்பித்துக் கொண்டன.

அத்துடன், தனது இருப்பிடத்தையும் அவை காட்டுவதற்குத் தயார் நிலையில் இருந்த போது , மீண்டும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டதாகக் காட்டின.
அதனைக் கண்ட, அலைபேசி, களப் பணியாளர்கள், " ச்சே , இன்னும் ஒரு நிமிஷம், ஆன்ல இருந்திருந்தா கூட, லொகேஷனைக் கரெக்டா கண்டு பிடிச்சு இருக்கலாம். இப்ப திரும்பவும் சுவிட்ச் ஆப்னு காட்டுதே " என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

அதனைத் தீபக்கிடம் தெரிவிக்கவும் செய்தனர். " சார், நீங்க கொடுத்த மொபைல் நம்பர் ஓ.எம். ஆர் ரோட்டைத் தான் காட்டுது. ஆனா இன்னும் சரியா லொகேட் பண்ண முடியலை. திரும்பவும் சுவிட்ச் ஆப் ஆயிடுச்சு சார் " என்றனர்.

" ம்ம், சரி , சரி இன்னும் கண்டினியூ பண்ணுங்க. கவனமா இருங்க " என்று சொல்லி விட்டுத் தனது அலைபேசியைக் கிடத்தினான் தீபக்.

அப்போது, மருத்துவர் ஷீபாவின் அறைக்குள் பிருந்தாவினால் மறைத்து வைக்கப்பட்டு இருந்த, மைக்ரோ சிப், தன்னிடம் ஏதோ சங்கதி மறைந்து இருப்பதாக அவனிடம் சமிக்ஞையில் உணர்த்தியது. உடனே தனது அலைபேசியை, அதனுடன் தொடர்பு படுத்திக் கொண்டான் தீபக்.

" உங்களுக்கு என் பிரச்சினை இன்னுமா புரியலை சார். நான் உங்க மனைவிக்காக ஃபிக்ஸ் பண்ணி வச்சிருந்த வாடகைத் தாய், என்னோட ஹாஸ்பிட்டல், நர்ஸ் தான். ஆனா அவ இன்னிக்கு வரலை. நான் அவ லீவுன்னு தான் நெனச்சேன், ஆனா அவளைக் காணோமாம். விஷயம் போலீஸ் வரைக்கும் போயிடுச்சு. அதனால, இப்போதைக்கு என்னால உங்களுக்கு எந்த உதவியும் பண்ண முடியாது சார். ஒரு ஆறு மாசமாவது போகட்டும் , அதுக்கு அப்புறம் தான், நான் இந்த விஷயத்தைப் பத்தியே யோசிக்க முடியும். அது வரைக்கும், பிளீஸ் லீவ் இட். நீங்க, எங்கேயாவது டூர் போங்க,
சந்தோஷமாக இருங்க . மனசைத் தைரியமா வச்சிக்குங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும் சார். " என்று மருத்துவர் ஷீபாவின் குரல், மறு முனையில் தனது அலைபேசியை எட்டிய குரலிடம் பதில் சொல்லிக் கொண்டிருந்தது.

மறு, முனை அவளிடம், " என்ன டாக்டரம்மா நீங்க? நீங்க தான்,எங்களை மாதிரி குழந்தை சுமக்க முடியாத, நிலைமையில இருக்கறவங்களுக்கு எல்லாம், கொஞ்சம் சீக்கிரமா, ஒரு வாரிசை உருவாக்கிக் கொடுத்து , வேலையை முடிச்சிக் கொடுத்துடுவீங்கன்னு கேள்விப் பட்டுத் தான், நாங்க உங்க ஆஸ்பத்திரிக்கு
டிரீட்மெண்ட்டுக்காக வந்தோம். நீங்களே இப்படி சொன்னா எப்படி? " என்று கேட்டது.

அந்தக் கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை. " சார், எதுவா இருந்தாலும் நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணித் தான் ஆகணும். நான் போனை வக்கிறேன் " என்றாள்.

ஷீபாவிற்கு பிரீத்தா மீது தான், மிகுந்த கோபம் எழுந்தது. ' ம் ம் நீ பண்ணி வச்சிருக்கிற வேலையால இப்படி நான் தான் எல்லார் கிட்டயும் பதில் சொல்ல வேண்டியிருக்குது. எப்படி இருந்தாலும், அடுத்த ஒன்னாந் தேதி நீ என்னைத் தானே தேடி வந்தாகணும். அப்பப் பார்த்துக்கறேன் ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள், ரிசப்ஷனில், பணியில் இருந்த பிருந்தாவைத் தனது அறைக்கு வருமாறு அழைத்தாள்.

அறைக்குள் நுழைந்த பிருந்தாவிடம், " பிருந்தா சிஸ்டர் , நீங்க பிரீத்தா சிஸ்டரோட நம்பருக்குக் கால் பண்ணுங்க " என்று ஆணை இட்டாள்.

" ம்ம், ஓ.கே டாக்டர் " என்று சொல்லி விட்டு, மருத்துவமனை ரிஜிஸ்டரில் இருந்த பிரீத்தாவின் எண்களைத் தேடி, மருத்துவமனை தொலைபேசியில், இருந்து, அந்த எண்களைத் தட்டினாள்.
மறு முனை பீப், பீப் என்றது. பின் தான், உயிர்ப்பில் இல்லை என்பதைச் சொல்வது போல, சற்று நேரத்தில் இயக்கமின்றி போனது.

பிருந்தா மீண்டும் அந்த எண்களுக்கு அழைத்தாள். அப்போதும் மறு முனை பதில் அளிக்கவில்லை.

எதிரில் அமர்ந்து இருந்த ஷீபாவிடம், " மேம், லைன் கிடைக்கலை. போன் நாட் ரீச்சபிள் " என்று சொன்னாள்.

ஷீபா மிகுந்த கோபத்துடன் , " ம், போன் நம்பரும் மாத்திட்டாளா அவ. அவ மனசுல என்ன தான் நெனச்சுட்டு இருக்கான்னு தெரியலியே. " என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

பின், " ஓ.கே சிஸ்டர். நீங்க போகலாம். நான் பார்த்துக்கறேன் " என்று சொன்னாள்.

' போனை எடுக்க மாட்டேங்கிறான்னா, அவ வேற ஏதாவது பிளான்ல இருக்காளா, என்னன்னு தெரியலியே. சரி, எதுவானாலும் நாம கொஞ்சம் ஆறப் போடுவோம் . அதான் நல்லது ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் .
பின் அறையை விட்டுத் தனது ஸ்கேனிங் அறைக்குள் நுழைந்தாள் ஷீபா.

****(((*******************************************
தனது இணைப்பைத் துண்டித்துக் கொண்ட, தீபக்கிற்கு ஒன்று மட்டும் உறுதியாகப் புரிந்தது. வெண்ணிலா காணாமல் போனதற்கும், ஷீபாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை , என்பது தான் அது .

' அப்படின்னா வெண்ணிலா கடத்தப்பட்டதுக்கு வேற என்ன காரணமா இருக்கும்? ரவி கார்ல இருந்து இறங்கின உடனே, அவ காணாமப் போயிருக்கான்னா
ஒருவேளை அந்தப் பொண்ணுக்கு வேற ஏதாவது, இஷ்யூஸ் இருக்குமோ ' என்று தனக்குள் கேட்டுக் கொண்டான் அவன்.

' ம் இப்ப ஒன்னும் வேலை இல்லை .சோ நாம வெண்ணிலா வீட்டுக்கே போய் அவங்க அம்மா, அப்பா கிட்டயே கேட்டுப் பார்த்துடுவோம் ' என்று எண்ணியவன் , அதனைச் செயல் படுத்திட எண்ணித் தனது இருக்கையை விட்டு எழுந்து கொண்டான்.

அவனது பைக், போரூரைத் தாண்டி, மாங்காடு செல்லும் சாலையில் பயணிக்கத் தொடங்கியது.

வெண்ணிலாவின் வீட்டை, அடைவதற்கு அவனுக்கு எந்த சிரமமும் எழவில்லை .
அவளது வீடு, மாங்காடு பேருந்து, நிலையத்திற்கு மிக அருகிலேயே இருந்தது .தீபக் கேட்டதன் பெயரில் ரவி அனுப்பிய அவளது வீட்டிற்கான இருப்பிடத்தின் பதிவு அதைத் தான் காட்டியது.

பைக்கை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு , உள்ளே சென்றான் தீபக்.

வெண்ணிலாவின் தந்தை ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டு, டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.

வெண்ணிலாவின் அம்மாவை அங்கு காணவில்லை. கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்த தீபக்கைக் கண்டதும், சபாபதி எழுந்து வணக்கம் தெரிவித்துக் கொண்டார் .

" சார், நான் தீபக். வெண்ணிலா காணாமல் போனதைப் பத்தி என் கிட்ட தான் உங்க கம்பிளைண்ட் வந்தது. ஐ மீன், ரவி என் கிட்ட தான் கம்பிளைண்ட் பண்ணினான் . இப்ப நான் உங்க கிட்ட சில முக்கியமான கேள்விகள் கேக்கணும். கொஞ்சம் லேட்டா ஆனாலும் பரவாயில்லை சார். ஆனா , நல்லா யோசிச்சுப் பதிலைச் சொல்லுங்க " என்றான் தீபக்.

அவன் சொல்லி முடிப்பதற்கும் உள்ளறையில் இருந்த மேனகா வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.

" ஏங்க, இங்கே பாருங்க. வெண்ணிலா பேசறா. இதுல பேசறா பாருங்க. லைன்ல இருக்கா. இந்தாங்க, நீங்களும் பேசுங்க " என்று சபாபதியிடம் தனது அலைபேசியை நீட்டினாள் மேனகா!

" என்னது, வெண்ணிலா பேசறாங்களா? மேம் நீங்க ஸ்பீக்கர்ல போடுங்க . உங்க போனைக் கொடுங்க. அதுல வர்றது யாரோட நம்பர்? " என்று பரபரப்புடன் கேட்டான் தீபக்.

( வரும்)





















 
டாக்டர் ப்ரீத்தா திரும்ப இங்க வருவான்னு எப்படி நம்புது... இந்தம்மாக்கு பின்னாடி யார் இருக்கா.. ரொம்ப பயந்த மாதிரி தெரியலையே ?
 
Top