Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான் இமையாக நீ--23

Advertisement

TNWContestWriter080

Well-known member
Member
அத்தியாயம் - 23

தொலைபேசி மறு முனையில், அழைத்தது அவனது கல்லூரி காலத்து நண்பன் தான். அவன் தான், இது நாள் வரையில், அவனுக்கு அனைத்து , செயல்பாடுகளுக்கும் உடன் இருந்து வரும், உற்ற தோழன் மனோகரன்.

" என்னது, இந்த இடத்தை டிரேஸ் பண்ணிட்டாங்களா. எப்படி அது சாத்தியம்? நான் வெண்ணிலா போனை வந்த அன்னிக்கே சுவிட்ச் ஆப் பண்ணிட்டேனே." என்றான் வாசு.

" அதைப் பத்தித் தெரியலை .ஆனா, இந்த லொகேஷன்ல இருந்து, வெண்ணிலா வீட்டுக்கு கால் போயிருக்கு . அதை வச்சித் தான் டிரேஸ் பண்ணி இருக்காங்க. அது யாரு செல்லுன்னு முதல்ல கண்டுபிடி.அப்புறம் உடனே அங்கே இருந்து வெண்ணிலாவை வேற எங்கேயாவது கூட்டிட்டுப் போயிடு. சீக்கிரம் செய். அவங்க உன் இடத்துக்கு வந்துட்டே இருக்காங்க. ம், கோ அஹெட் ஃபாஸ்ட். இல்லைன்னா
நீ் நினைப்பது நடக்காமல் போகலாம் " என்று சொன்னான்.

வாசு உடனே செயலில் இறங்கினான். " அம்மா, அம்மா வா இங்கே. உன் போனை வெண்ணிலா கிட்ட கொடுத்தியா? " என்று கேட்டான்.

" இல்லையேடா " என்று சொன்னாள் சாரதா, சற்று பயந்த குரலில். அவளது குரலில் இருந்தே அவள் சொல்வது பொய் தான் என்பதை அறிந்து கொண்ட வாசு, " ம், என் கிட்டயே பொய் சொல்றே இல்லை " என்று சொல்லி விட்டு, சற்றும் தாமதிக்காமல் வெண்ணிலாவையும் தரதரவென்று இழுத்துக் கொண்டு, அங்கிருந்து ஓடத் தொடங்கினான்.

சாரதா, " டேய் வாசு, எங்கேடா அவளைக் கூட்டிட்டுப் போறே? அவளை விட்டுடுடா. பாவம்டா அந்தப் பொண்ணு " என்று அவன் பின்னே ஓடத் தொடங்கினாள்.

" அம்மா, நீ வராதே, போ, போய் சுஷ்மியைக் கவனி . போம்மா " என்று சொல்லியபடியே முன்னே சென்றவன், வீட்டின் பின் புறத்தில் இருந்த, பிளாட்ஃபார்மை நோக்கிச் சென்றான்.

அங்கே , ஓரிடத்தில் சிறிதான கதவு போன்ற அமைப்பு தென்பட்டது .அதற்கு உள்ளே , தான் முதலில் இறங்கினான். அதன் பின் வெண்ணிலாவையும், அதன் வழியே கீழே இறக்கி விட முயன்றான்.


வெண்ணிலா , " ஏய் வாசு என்னடா பண்றே? என்னை எங்கே கூட்டிட்டுப் போறே. எதுக்காக நீ இப்படி பண்ணிட்டு இருக்கே? விடுடா வாசு " என்று
கத்தினாள்.

தன்னிச்சையாக இறங்கி வர மறுத்த வெண்ணிலாவை, வாசு தூக்கிக் கொண்டே கீழே இறங்கினான். அவனது வலுவான கரங்களில் அவளது உடல் மொத்தமும் சிறைபட்டு இருந்தது.


" ஏய், விடு வாசு. ஏன் இப்படி இவ்வளவு சீப்பா நடந்துக்கறே? ஐயோ, கடவுளே! எதுக்காக என்னை இப்படி சோதிக்கறே ? இப்படி தினம், தினம் செத்து செத்துப் பிழைக்கறதுக்கு ஒரேயடியா என்னைக் கொன்னு போட்டுடு வாசு " என்று கதறி அழத் தொடங்கினாள்.


ஆனால் வாசுவோ, எதுவும் பேசவில்லை. தனது காரியத்திலேயே கண்ணாக இருந்தான்.ஒரு வழியாக இருவரது கால்களும் தரையில் இறங்கின. ஆனால் வாசுவின் கரங்கள் அவளை இன்னமும் விடுவிக்கவில்லை.

அறையில் இருட்டுக்கு
பயந்த வெண்ணிலாவுக்கும், அவனது அரவணைப்பு மிகவும், ஆறுதல் தருவதாக இருந்தது.எந்த இடத்தில், நிற்கிறோம் என்பதே புரிபடாத பயத்தில், அவனை இன்னமும் இறுகக் கட்டிக் கொண்டாள் அவள். ஒரு, வழியாக அந்த அறையில் இருந்த, மின் விளக்குகளை உயிர்ப்பித்தான் வாசு.

அப்போதும், கண்களைத் திறந்து பார்க்காமல், அவனைக் கட்டிக் கொண்டபடி நின்று கொண்டிருந்த வெண்ணிலாவிடம், " ஏய் நிலா. என்னை விடறதுக்கு இன்னும் உனக்கு மனசு வரலியா? கொஞ்சம் கண்ணைத் திறந்து பாரு, " என்று கிண்டல் தொனியில் கேட்டான்.

மெதுவாகத் தனது கண்களைத் திறந்த நிலாவுக்கு முதலில் தெரிந்தது, தனது நெற்றியை , அழுத்திக் கொண்டிருந்த, வாசுவின் மீசையே!உடனே சரேலென விலகி நின்று கொண்ட வெண்ணிலா, அழத் தொடங்கினாள்.

" பாவி, நீயெல்லாம் உருப்படவே மாட்டேடா. எதுக்காக நீ இப்படி எல்லாம் பண்றே ? உனக்கு என்னைப் பிடிச்சிருந்தா, எங்க அப்பா கிட்ட வந்து பேச வேண்டியது தானே; என்னை இப்படி கடத்திட்டு வந்து வச்சிட்டு தான், உன் காதலை என் கிட்ட காட்டணுமா " என்று கேட்டாள்.

" அட இதைத் தான் நான் எதிர்பார்த்தேன். அப்ப நான் உன்னை விரும்பறேன்னு நீ மனப்பூர்வமா ஒத்துக்கிறியா ? " என்று கேட்டான் வாசு.

வெண்ணிலா அவனது கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்துப் போனாள்.

" ம், சொல்லு நிலா. சொல்லு. எனக்கு விவரம் தெரிஞ்ச நாளில இருந்து நான், உன்னைத் தான்டி என் மனசு பூராவும், சுமந்துக்கிட்டு இருக்கேன். வேற எத்தனை அழகிங்க என் முன்னாடி வந்து நின்னாலும் நான் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன். ஆனா, எதிர்பாராத விதமா, இப்படி எல்லாம் நடந்துடுச்சி. சாரிடி. கொஞ்சம் பொறுத்துக்க, நான் முடிக்க வேண்டிய வேலை ஒன்னு இருக்குது. அதை முடிச்சுட்டு தான் நான் உங்க அப்பா முன்னாடி வந்து நிக்க முடியும் " என்று சொன்னான்.

வெண்ணிலாவின், இதயத்தில் அவள் அது நாள் வரை மறந்து விட்டதாக, எண்ணிய நினைவுகள் யாவும், சரசரவென மேல் எழும்பி வந்தன.

ஒரு கணம் அவளது மனத்திற்குள் தன்னால் ஏன் ரவியுடனான முதல் சந்திப்பு நிகழ்வதற்கு முன்பு இவனைச் சந்திக்க முடியவில்லை ? என்ற கேள்வி தான் எழுந்தது. ஏனென்றால் இப்போது, அவளுக்குத் தெரிந்தது , மனத்தில் பதிந்தது இவை எல்லாமே , வாசுவுடைய முகம் மட்டுமே என்று ஆகிவிட்டது . ரவியின் முகம் எங்கோ தேய்ந்து , தேய்ந்து தொலைந்து போனது போன்ற உணர்வு எழுந்ததும் அவள் மனம் மிகவும் பதைத்துப் போனது.


' இது தானா ,இவ்வளவு தானா?.இது தான் என் மனம் கட்டிய காதல் கோட்டையா? இனி , என்னால் ரவியை எப்படி நேருக்கு நேராகப் பார்க்க முடியும்? அவரோட மனைவியா நின்னு உறவாட முடியும் . வேணாம் நான் யாரையும் பார்க்கவும் வேணாம். எந்தப் பழியையும், என் மீது யாரும் சுமத்தவும் வேணாம். நான் இப்படியே, இங்கேயே வாழ்ந்து முடிச்சுடறேன் . என் சுவாசம் மொத்தமும் இங்கேயே காணாமப் போகட்டும். இது தான் கடவுள் போட்ட கணக்கா இருந்தா, அதுவே ஜெயிச்சுட்டுப் போகட்டும் ' என்றெல்லாம் தோன்றியது.

" டேய் வாசு, எதுவும் வேண்டாம்டா. நாம ரெண்டு பேரும் இப்படியே இருந்துடுவோம். இந்த உலகத்துக்கும் என் வீட்டுக்கும் நான் காணாமப், போனவளாகவே இருந்துட்டுப் போறேன். நான் உன் கூடவே இருந்துடறேன் வாசு . என்னை விட்டுடாதேடா. "என்று தன்னை மறந்து அழத் தொடங்கினாள்.

காதல் என்ற ஒற்றைப் பூ அழகாக மலர்ந்திடும் வேளையில் , அங்கே மற்ற உண்மைகளுக்கும், உணர்வுகளுக்கும் வேலை இல்லாமல் போய் விடுகிறதே.

ரவியின் பார்வை தன் மீது படர்ந்த நிமிடத்தில், அவளுக்குள் எழுந்தது , அந்த வயதிற்கு உரிய ஒரு உயிரியல் தேவை தான் என்பது தான் உண்மையோ? என்று தன்னையே கேட்டுக் கொண்டாள் வெண்ணிலா.வெண்ணிலா, வாசுவை இறுக அணைத்துக் கொண்டு அவனது மார்பில் சாய்ந்து அழத் தொடங்கினாள்.

" ஸ்ஸ் அழாதேடி வெண்ணிலா. உன் கண்ணீரைத் தாங்கிக்கற சக்தி என் மனசுக்கு இல்லை. இங்கே பாரு, நம்ப இடத்தை போலீஸ் மோப்பம் பிடிச்சுட்டு, வந்துட்டு இருக்காங்களாம்.அதுக்காகத் தான் உன்னை இங்கே கூட்டிட்டு வந்தேன். நீ, இங்கேயே இரு. இது தான், இப்போதைக்கு உனக்குப் பத்திரமான இடம் . நான் சீக்கிரமா வந்து உன்னைப் பார்க்கறேன் ." என்று சொல்லி விட்டு மீண்டும் உயரே செல்லும் படிக்கட்டில் ஏறத் தொடங்கினான்.

நிலா, அங்கேயே சரிந்து அமர்ந்து கொண்டு அழத் தொடங்கினாள் .

ஆனால், வெண்ணிலாவும் தன்னை விரும்புகிறாள் என்பதைத் தெரிந்து கொண்ட வாசுவுக்கோ , அது நாள் வரையில், தன் மனத்தில் எழுந்திடாத புதிதான தைரியம் மேல் எழுந்து வந்தது போல உணர்ந்தான் .

' இது போதும்டி எனக்கு! இனிமே அந்த இமய மலை போல, பெரிசா ஒரு எதிர்ப்பு என்னை நோக்கி வந்தாலும், நான் பயப்படவே மாட்டேன் ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

அதே கணத்தில் தீபக்கின் வண்டி அவனது வீட்டு வளாகத்திற்குள் நுழைந்து விட்டிருந்தது.வீட்டிற்குள் நுழைந்த வாசு சாரதாவை, சமையலறைக்கு அனுப்பி விட்டு, சுஷ்மியைத் தான் தூக்கிக் கொண்டான்.

" அம்மா, பிளீஸ் , இப்ப யாரு வந்து கேட்டாலும் வெண்ணிலா இங்கே இருக்கான்னு மட்டும் சொல்லிடாதே. உனக்கு என் மேலே நம்பிக்கை இருக்கு இல்லையா ? நான் உன் பிள்ளைம்மா. நான், என்னிக்கும் தப்பான காரியம் எதையும் செய்ய மாட்டேன். என்னை நம்பு " என்று சொல்லி முடிக்கும் முன்பே, தீபக் , போர்ட்டிகோவை நெருங்கி விட்டிருந்தான்.

முன் கதவைத் தட்டிய அவன், " ஹலோ, வீட்டில யாரு இருக்கா? " என்று கேட்டான்.

அவனை நோக்கி வந்த வாசு, " எஸ், யார் நீங்க என்ன வேணும் உங்களுக்கு? " என்று கேட்டான்.

சுஷ்மியும் அவனிடம், " யார் நீங்க? " என்று வாசுவின் தொனியில் கேட்க, வாசு அவளை இறக்கி விட்டு, " போம்மா , பாட்டி கிட்ட போ " என்று அனுப்பி வைத்தான்.

அதற்குள் தீபக்கின் கண்கள் இரண்டும் அந்த இடத்தை முழுமையாகத் துழாவிக் கொண்டிருந்தன.தானாகவே, உள்ளே நுழைந்த அவன் , " நீங்க தான் வாசுவா? இந்த மொபைல் நம்பர் உங்களோடது தானே " என்று தனது அலைபேசியில் இருந்த எண்களைக் காட்டினான். அது வாசு எதிர்பார்த்தது போல, அவனது அம்மாவின் எண்களே!

" ஆமாம், இது என்னோட நம்பர் தான். ஆனா நான் இதை நான் இப்ப உபயோகிக்கறது இல்லையே " என்று சொன்னான் வாசு.

" அப்படி தெரியலியே; இந்த நம்பர்ல இருந்து, ஒரு மிஸ்ஸிங் லேடியோட வீட்டுக்குக் கால் போயிருக்கு. அதுக்கான ஆதாரமும் என் கிட்ட இருக்குது. நான், கேட்கற கேள்விக்கு நீங்க, உண்மையை மட்டும் சொல்லணும். சொல்லுங்க , எங்க அந்தப் பொண்ணு? என் கிட்ட சொல்லிட்டீங்கன்னா எந்தப் பிரச்சினையும் உங்களுக்கு வராது. இல்லைன்னா நான், என்னோட வேலையைக் காட்ட வேண்டியது இருக்கும் " என்று மிரட்டும் தொனியில் கேட்டான் தீபக்.

அவனிடம் பேசிக் கொண்டே, தேடலில், தனக்கு செய்தி கொடுத்த அலைபேசி எண்ணுக்குத் தனது அலைபேசியில் இருந்து அழைப்பு விடுத்தான். மறு முனையில் பீப் பீப் என்ற சத்தம் மட்டுமே, தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டு இருந்தது .ஆம், வாசு தான் அந்த சிம் கார்டைக் கழற்றித் தூர எறிந்து விட்டானே !அதன் பின் வாசு தனது அடையாள அட்டையை எடுத்து தீபக்கிடம் காட்டினான்.

" சார், நான் ஒரு ரிஜிஸ்டர்டு அனஸ்தஸிஸ்ட். என் வீட்டுக்கு நீங்க எப்படி, நீங்க முன்னறிவிப்பு இல்லாம வரலாம். இதுக்காக நான் உங்க மேல, கேஸ் புக் பண்ணலாம் . செய்யட்டுமா?" என்று கேட்க , தீபக் வேறு வழி இல்லாமல் அங்கிருந்து வெளியேற வேண்டி இருந்தது.

" சரி, நான் இப்பப் போறேன். ஆனா, என் கிட்ட நீங்க உண்மையை மறைக்க முடியாது . குற்றவாளி நீங்க தான்னு , உறுதியாத் தெரிய வந்தா நடக்கறதே வேற. பி கேர்ஃபுல் " என்று எச்சரித்து விட்டு அங்கிருந்து கிளம்பினான் தீபக்.

அவன் வெளியே சென்று விட்டதை உறுதிப்படுத்திக் கொண்ட வாசு, வாயிற் கதவைத் தாழிட்டு விட்டு உள்ளே வந்தான்.

" டேய் தம்பி, இவரு போலீஸ்காரரா? வெண்ணிலாவைத் தேடிட்டு தான் இங்கே வந்தாரா? எப்படிடா? " என்று கேட்டாள் சாரதா.

அவளது குரலில் மிகுந்த பயம் தெரிந்தது. " அம்மா, இனி கொஞ்ச நாளைக்கு, உனக்கு போன் வேண்டாம். ஏதாவது முக்கியமானவங்க கிட்ட பேசணும்னா என் போன்ல இருந்து கூப்பிட்டுப் பேசு " என்று சொன்னான் வாசு.

பின், அவன் சுஷ்மியைத் தூக்கிக் கொண்டு, தனது அறைக்குள் நுழைந்து கொண்டான்.

" மாமா, அத்தை எங்கே காணோம்? நான் அவங்க கூட விளையாடணும் மாமா " என்று சுஷ்மி மழலை குரலில் கேட்க, " ஓ, விளையாடலாம் பாப்பா. அத்தை நாளைக்கு இங்கே வந்துடுவாங்க " என்று சொன்னான்.
?
?
?
?
?
?
?
?
?
?
?
?


' நான் ஒரு ரிஜிஸ்டர்டு அனஸ்தஸிஸ்ட் ' என்று வாசு சொன்னதைக் கேட்ட தீபக் சிறிது அதிர்ச்சி அடைந்து விட்டிருந்தான். ' அப்படின்னா, இது தப்பான , ஐடென்டிபிகேஷனா . இவனைப் பார்த்தா, ஆள் கடத்தறவன் மாதிரியும் தெரியலையே . ஒரு குழந்தை வேற இருக்கு ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

' அப்படின்னா வெண்ணிலாவைக் கடத்தினது யாரு?' என்று எண்ணியவனுக்கு ' ஒரு வேளை இப்படியும் இருக்கலாமோ, ஏன்னா வெண்ணிலா ஒரு நர்ஸ். இவன் ஒரு டாக்டர் . அப்படி தான் தொடர்பு படுத்திக்கணுமோ, இந்த கேஸில ' என்று எண்ணியவன் , ' யாரையாவது இந்த வீட்டைக் கண்காணிக்க சொல்லி அனுப்பணும். அது தான் இப்போதைக்கு சரியா இருக்கும் ' என்ற முடிவுக்கு வநதவனாய், அங்கிருந்து தனது வண்டியைக் கிளப்பித் தன் வழியில் செல்லத் தொடங்கினான்.
( வரும்)

ஹாய், ஃபிரெண்ட்ஸ் கண்டிப்பா படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க பிளீஸ்.
 
Top