வேனில் கால மாம்பழம்

Advertisement

Vanjulavalli

New member
Member
தமிழ் நாட்டின் தெருக்களில் பலாப்பழம், மாம்பழம் என கோடை காலத்தில் மஞ்சள் நிறத்தின் ஆதிக்கம்.நாட்டின் பல இடங்களில் வளர்ந்தாலும்
தமிழர்கள் மாம்பழத்தை முக்கனிகளில் ஒன்றாகவே
கருதுகின்றன.
‌இலக்கியங்களில் மாம்பழம்;
‌இலக்கியங்களில் மாமரத்தை பற்றிய குறிப்புகள் நிறைய உள்ளன.சங்க இலக்கியங்களில் கொத்துக் கொத்தாக மாம்பூக்களுடன் மாந்தளிர் துளிர் விடுவதை இளவேனில் கால வருகை குறியீடாக கருதப்படுகிறது.
வேனில் காலத்தில் மாந்தளிர்கள் காற்றில் ஆடுவதை கண்டு ரசிக்கலாம்.
கோடை காலத்தின் ஆரம்பத்தில் துளிர் விடும்.பளபளக்கும் அழகிய வண்ணம் கொண்ட மாந்தளிர்கள் நம் கண்களுக்கு விருந்தாக அமையும்.இந்த மாந்தளிர்களை நம் இலக்கியங்களில் பெண்களின் சருமத்திற்கு‌ உவமையாக வர்ணிக்கிறார்கள்."மாந்தளிர் மேனி" என்னும்‌சொல்லால் வர்ணிக்கிறார்கள்.
வடுமாங்காய்:
மாங்காய் என்றால் ஊறுகாய் தான் பல ஆயிரம் காலங்கள் முன்பே தமிழர்களின் உணவுப் பழக்கத்தில் இருந்தது.ஊறுகாய்
ஊறுகாய் " காடி" என்னும் பழந்தமிழ் இலக்கியங்கள் குறிக்கின்றன.காடி என்ற சொல்லுக்கு புளிப்பு என்று பொருள்.
ஊர் ஊராக சென்று உப்பு விற்கும் உமணர்கள் தங்களுடன் ஊறுகாயை ஜாடியில் வைத்து துணியால் மேல் வாயை கட்டி தங்கள் பயணத்தில் எடுத்துச் சென்ற காட்சியை விவரிக்கிறது.வடுமாங்காய் ஊறுகாய் பரிமாறப்பட்டது பற்றிய‌குறிப்பும் பெரும்பாணற்றுப்படையில் காணலாம்.
மாம்பழத்தின் இனிப்புச் சுவையை எடுத்துரைக்கும். வண்ணம் மாம்பழத்தை " தேமா" என்னும் சொல்லால் தமிழ் இலக்கியங்கள் குறிக்கின்றன.சாறுள்ள பழத்தின் சுவை நம்மை விட்டு விலகாது.
மாங்காய் வடிவத்தை நாம் பல இடங்களில் காணலாம். நாம் போடும் அணிகலனில் மாங்காய் மாலை,மாங்காய் தோடு நாம் கட்டும் சேலைகளில் மாங்காய் வடிவத்தைப் பார்க்கலாம்.
மாங்கனித் திருவிழா:
மாம்பழத் திருவிழா தமிழ்நாட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.ஆனிமாதம் காரைக்காலில் புகழ்பெற்ற மாங்கனி திருவிழா நடக்கும்.ஐந்தாம் நூற்றாண்டு வாழ்ந்த காரைக்கால் அம்மையார் பெரிய சிவபக்தர் அவர் வீட்டிற்கு ஒருநாள் ஒரு சிவனடியார் உணவு உண்ண வந்தார். தன் கணவர் தன்னிடம் கொடுத்த மாம்பழங்களில் ஒன்றை சிவனடியார்க்கு கொடுத்தார்.உணவு உண்ண வரும் கணவர் ஒரு மாம்பழத்தை சுவைத்த பின் இன்னொரு பழத்தை கேட்க அம்மையார் சிவபெருமானிடம் வேண்டுகிறார்.சிவபெருமானும் அம்மையாருக்கு ஒரு மாம்பழத்தை தந்து அருள்கிறார்.தெய்வீக மாம்பழத்தை காரைக்கால் அம்மையார் பெற்றதை நினைவு கூறும் வண்ணம் இன்றும் மாங்கனி திருவிழா கொண்டாடப்படுகிறது.
" மாதா ஊட்டாத அன்னம்
மாங்காய் ஊட்டும்"
முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை பிடிக்காதவர்களே இருந்திட முடியாது.வைட்டமின் ஏ சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.பழத்தில் நார்ச்சத்து உள்ளது. ஆனால் விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் தான் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
அளவோடு பழங்களை உட் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.
முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை அளவோடு ருசித்து வளமோடு வாழ்வோம்.
வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்
மழையை பெறுவோம்!
 
👏👏👏👏👏👏👏🙌🙌💝💝
 
Advertisement

Advertisement

Back
Top