ஹார்ட் பீட் திருடன் – 10

Advertisement

daya

Member
Member
ஹார்ட் பீட் திருடன் – 10



இருவரும் உணவுண்டு முடித்ததும் மீண்டும் அவர்களது பயணம் தொடர்ந்தது. ஜோகித் இயல்பாக ,சினிமா அரசியல் என ஒவ்வொரு விடயமாகப் பேச மகிஷாவும் தனது கூட்டை விட்டு பேசினாள். அதனைத் தொடர்ந்து இருவரும் ஐடி துறை என்பதால் இருவருக்கும் பேச நிறைய விஷயங்கள் இருந்தன.

அப்படியே அவர்களின் பேச்சு டார்க் வெப்பில் வந்து நின்றது.ஜோகித்தோ காரை ஒட்டியபடி "அதுல தான் அந்த டைமண்ட் நகை பற்றி போட்டிருந்தாங்க” என்றான். அவளும் ஆமோதிப்பாக தலையாட்ட “உன்னோட சேலரி போதாதா மகி" என அவள் கேட்க

அவளோ ஆழ்ந்த மூச்சை விட்டவள். "என்னோட சேலரில ஒரு பங்கு கொடுக்கிறேன், ஆனா அங்க இருபது பிள்ளையல் இருக்காங்க ,தேவியம்மா தான் பார்த்துகிட்டாங்க, காலேஜ் அது இது பெரிய பிள்ளைங்களுக்கு செலவாவே இருக்கும். அவங்களுக்கு தேவையான உணவு, மருந்து எல்லாமே பார்த்துக்கிட்டாங்க. டொனேஷன் கிடைக்கல கடன் வாங்கி பார்த்து விட்டாங்க , அத் கொடுக்க முடியாம போய் கொஞ்சம் பிரச்சினை நான் அனுப்பும் பணம் போதாது.முதல் போல டொனேஷன் வாரல” என்றாள்.

ஜோகித்திற்கும் அவள் எதனால் திருட வந்தாள் என புரிந்தது. சில மணி நேரத்தில் " அன்பு இல்லத்தை அடைந்தனர் இருவரும் காரை விட்டு இறங்கி பிள்ளைகள் சிலர் அவளை சூழ்ந்து கொண்டனர்.புன்சிரிப்புடன் அவளும் அவர்களுக்கு பதிலளித்தாள்." ஓகே நீங்க விளையாடுங்க நான் தேவியம்மாவ பார்த்துடு வாரன்" என ஜோகித்துடன் தேவியம்மாவின் அலுவலக அறையை நோக்கிச் சென்றாள்.

ஜோகித்திற்கும் அந்தக் கட்டடத்தை பார்த்த நொடி அவர்களின் பொருளாதார நிலை புரிந்தது. தேவியம்மாவின் அறைக்குள் இருவரும் அனுமதி பெற்று உள்நுழைநத்னர் அவரோ தனது மூக்குக் கண்ணாடியை சரி செய்தபடி சார்ததமான முகத்துடன் புன்னகையுடன் இருவரையும் வரவேற்றார்.

“மதியும் உட்காருங்க” என்றாள் ஜோகித்தும் அமர அவன் அருகே அவளும் அமர்ந்து கொண்டாள். " ஹெல்த் இப்போ எப்படிமா?" அவர் நலன் பற்றி மகி விசாரிக்க அவரும் இப்போ “நல்லா இருக்கன்மா" என்றார்.

" ம்மா நான் சொன்னது இவர் தான் ஜோகித் என அவனை அறிமுகப்படுத்த அவரும் "வணக்கம் தம்பி" என்றார். அவனும் “வணக்கம்” என்றான். மகி கொண்டு வந்த பெட்டியை அவரிடம் கொடுத்தான் அவரும் அதை வாகிங்யவர் “ரொம்ப நன்றி தம்பி"என்றார்.

ஜோகித்துள் “இந்தக் கட்டடங்கள ரினோவேஷன் செய்யனும்னா எவ்ளோ முடியும் " எனக் கேட்க " அகம் அமகிழந்த தேவியம்மா அது எப்படியும் பத்து , பதினைந்து இலட்சம் வேணும்" என்றார்.

" ம்ம் " என்றான். மகியும் எதுவும் பேசவில்லை . ஜோகித்தோ தன் மனதினுள் பல கணக்குகளைப் போட்டிருந்தான்.

அன்றைய மதிய உணவை பிள்ளைகளுடனேயே இருவரும் உண்டனர். ஜோகித்திற்கோ எல்லாமே புது அனுபவம். பிறந்தது முதல் கோல்டன் ஸ்பூனில் உண்டவனுக்கோ இது புதிதாக இருந்தது.பிள்ளைகள் மேல் மகி காட்டும் அன்பு, அவர்களுக்காக அவள் தன் உயிரைப் பணயம் வைத்து எடுக்கும் ரிஸ்க் அனைத்தையும் பார்த்ததும் அவள் மேல் காதல் கரை புரண்டோடியது.

அன்று மாலை தான் இல்லத்துப் பிள்ளைகளிடம் இருந்து விடைபெற்று இருவரும் கிளம்பினர். போகும் போது இருவருக்குள்ளும் ஒரு வித அமைதி சிறிது தூரம் சென்றதும் " மகி “அவளும் பக்கவாட்டாக அவனை பார்க்க "என்ன முடிவு பண்ணிருக்க" அவளோ எதுவும் பேசாது பார்வையை முன்னே திருப்பினாள்.

மகியோ ரேடியோவை ஆன் செய்ய அதிலோ " பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்" எனும் பாடல் ஒலிக்க “சிச்சுவேஷன் சாங் " என்றான் புன்னகையுடன்.

மகிக்கும் மனதில் ஒரு வித இதம் இந்த பயணம் நீளாதா எனும் ஏக்கம் தான் அவளுக்கு, வழியிலேயே இரவுணவை முடித்துக் கொண்டனர்.

பயணமும் தொடர்ந்தது. மகியோ உண்ட மயக்கத்தில் தூக்கம் கண்களைச் சுழற்ற ஜோகித்தின் தோளில் சரிந்தாள். அவனும் அவள் தூங்குவதைப் பார்த்தவன் காரின் வேகத்தை குறைத்தான். குழந்தை போல் தூங்கும் அவளை இன்று முற்றாகப் பார்க்கலாம் போல் இருந்தது.

குவார்ட்ஸை அடைந்தததும் " மகி " என மென்மையாய் அழைக்க அவளும் கண்ணை கசக்கியபடி அவன் தோளில் இருந்து எழுநத்வளுக்கோ ஒரு வித சங்கடம் " சாரி" என்றவள் அவனிற்கு நன்றி கூட சொல்லாது விடைபெற்றாள்.

" நாட்கள் அதன் போக்கில் செல்ல மதியும் ஓரளவு அலுவலகத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டாள்.அவளின் வேலை நேர்த்தி , அங்குள்ள சூழலிற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டது என அனைத்தும் அவளின் மேல் அலுவலகத்தில் நன்மதிப்பையே தத்தது.

அன்று மதிய உணவு இடைவேளையில் கரணும் மகிஷாவும் உணவுண்டு கொண்டிருந்தனர்." கரண் சமீப நாளாக ஃபோனும் கையுமாக திரிவதைக் கண்டவள் என்னவெனக் கேட்க,அவனோ சொல்லவில்லை. "ஒன்னுமில்ல மகி" என்றான்.

அவன் நடவடிக்கை வித்யாசமாக இருக்கவே " கரண்” அவனும் அவளை நிமிர்ந்து பார்க்க "என்னாச்சி ஏதும் ப்ராப்ளமா? ஊருக்கு போய் வந்ததும் இருந்து ஒரு மாதிரி இருக்க" எனக் கேட்க.

அவனுக்கும் மகியிடம் சொன்னால் ஓரளவு மன அழுத்தம் குறையும் என எண்ணியவன் "ஊருக்கு போனப்போ தாத்தாக்கு காணி எல்லாம் எடுத்துக் கொடுத்துடன், தாத்தாவால முன்னப் போல வேலை செய்ய முடியல, ஆள் வச்சி தான் விவசாயம் பண்றார்” என்றவன் "பாட்டி கல்யாணம் பத்தி பேச்செடுத்தாங்க என்பவனின் முகம் ஒரு நொடி வேதனையைக் காட்டியது.

"கொஞ்ச நாள் போகட்டும் பாட்டி" என்றான். அவனுக்குத் தான் தெரியும் அவன் மனதிற்கிணியவளை " ஆம் கரணும் அதே ஆஃபிஸில் பணிபுரியும் அதே வேளை அவனது டீமில் உள்ள திவ்யாவை பிடித்தது.

அவளுக்கும் அவனைப் மிகவும் பிடிக்கும் இருவரும் முதலில் பேசிக் கொள்ளவில்லை ,பார்வை மூலமே தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

ஆரம்பத்தில் மகிஷாவையும் கரனையும் காதலர்கள் என திவ்யா நினைத்திருந்தாள்.

பின்னர் தான் அவர்கள் நண்பர்கள் என தெரிந்து இருப்பினும் மகிஸாவின் மேல் சிறு பொறாமை கூட எழும் திவ்யாவிற்கு, இப்படியே சென்ற வாழ்க்கையில் கரண் காதலைச் அப்போ சொல்வான்,இப்போ சொல்வான் என எண்ணி ஏமாந்த திவ்யா அதிரடியாக அன்று ஆஃபிஸ் முடியும் தருவாயில் கர்ணனிடம் வந்தவள். " கொஞ்சம் நில்லுங்க,என்றாள் அவனும் நிற்க ,அவனிடம் ஒரு பேப்பரைக் கொடுத்து விட்டுச் சென்றாள்.

"உன்னிடம் பேசத் துடிக்கும் ஆயிரம் வார்த்தைகள்,

உன் முன்னே வரும்போது மௌனமாகிப் போகிறது...

காரணம், என் கண்கள் உன் அழகில்

தொலைந்து போவதாலோ?

என் உலகமே நீதான் என்று சொல்லத் துடிக்கிறேன்...

உனக்கும் என்னைப் பிடிக்குமா?"

என டைப் செய்து இருந்தது. கரணுக்கோ அப்படியொரு பரவசம் அவனும் காதலிக்கிறான் அல்லவா அதன் பின் இருவரும் அலுவலகத்தில் தங்களது காதலை வளர்த்துக் கொண்டனர்.

" பாட்டி திருமணத்திற்கு கேட்ட பின் அவனுள் யோசனை தாத்தா பாட்டியோடு ஒத்துப் போவாளா? திவ்யாவால கிராமத்துல இருக்க முடியுமா?? என் எண்ணியவன் அன்று திவ்யாவை சந்தித்த போது தான் நினைத்ததை க் கேட்க

" ஆர் யூ கிரேஸி கரண் எப்படி அந்த வில்லேஜ்ல இருக்கிறது. உன்னோட வேலை என்னோட வேலை எல்லாமே சென்னைலான்,சோ அங்க போக வேண்டிய அவசியமே இல்லை, உன் தாத்தா பாட்டியக் சென்னைக்கு கூட்டி வா "என்றாள்.

கரணிற்கோ அவள் இப்படி பேசியது பிடிக்கவே இல்லை அவனும் வேலை கிடைத்த புதிதில் தாத்தா பாட்டியை சென்னைக்கு அழைக்க அவர்கள் மறுத்து விட்டனர் அவர்களது " இவளோ காலமும் தன்னைப் பார்த்துக் கொண்டவர்களை தனியே விடலாமா? நாளுக்கு நாள் கரணிற்கும் திவ்யாவிற்கும் இடையை பிரச்சனை தான் அதிகரித்தது. " மற்றொரு நாள் திவ்யாவோ கோபத்தில் ஓ......மகிஷா கூப்பிட்டா மட்டும் ஓடத் தெரிது,அப்படி என்ன தான் செய்து மயக்கி வச்சிருக்காளோ தெரியல" என திவ்யா வார்த்தையை விட கரணும் கையை ஓங்கி விட்டான்.

திவ்யாவோ சுற்றி பார்வையை சூழல் விட்டவளுக்கு கரணின் செய்கை கோபத்தையை தந்தது. " என்னையே அடிக்க கையை ஓங்கிட்டல்ல " என கோபமாய் பேசியவள் அழுகையில் முடித்தாள். இருவரும் இருப்பதென்னவோ பார்க்கில் ஆங்காங்கு சிலர் இருவரையும் பார்க்க , கரணுக்கும் தன் தவறு புரிந்தது." திவ்யா என அழைக்க அவன் கையை தட்டி விட்டவள் விறுவிறு என வெளியேறினாள்.

எவ்வளவு பேசியும் மன்னிப்புக் கேட்டும் அவள் மணமிரங்கவில்லை " ஊரில் வேறு பாட்டி திருமணம் பற்றிப் பேச இறுதியாக திவ்யாவிடம் பேச அவளோ கோபத்தில் "ஏன் மகிஷாவ வெடிங் பண்ணி,தாத்தா பாட்டி கூட வச்சிக்க" என்றாள்.

தன் காதலி, தன்னை தனது உயிர்த் தோழியுடன் இனைத்துப் பேசுவது பிடிக்காது அன்றிலிருந்து அவனும் திவ்யாவிடம் இருந்து விலகி விட்டான்.

"அனைத்தையும் அவன் மகிஷாவிடம் சொல்ல அவளுக்கோ எப்படி தனது தோழரை தேற்றுவதென்றே தெரியவில்லை, ஆனால் ஒன்று மட்டும் அவளுக்கு புரிந்தது கரணுக்கு திவ்யா மேல் அளப் பெரிய காதல் ,தனது நட்புக் கூட அவனுக்கு இடைஞ்சலாக இருப்பதை உணர்ந்தவள் " நான் வேணா திவ்யாட பேசிப் பார்க்கவா?" எனக் கேட்க கரணோ "இல்லை" எனத் தலையாட்டினான்.

உணவு வேளையும் முடிய இருவரையும் வேலை உள்ளிழுத்துக் கொண்டது. நாட்களும் செல்ல திவ்யாவை பைக்கில் ஒருவனுடன் செல்வதைக் கண்ட கரணிற்கோ நெஞ்சில் ஒரு வலி,தனது முதல் காதல் தன்னை விட்டுச் சென்றதால் ஒரு மாதத்தில் அவனோ பொலிவிழந்து போனான்.

இதற்கிடையில் ஜோகித் மற்றும் மகிஷாவும் இடையே சந்தித்து கொண்டனர். ஜோகித் தன் காதலை வெளிப்படுத்தினாலும் மகிஷா தன் காதலை மனதிற்குள் பூட்டி வைத்தாள்.

கரணிற்கும் ஜோகித் மகிஷாவின் காதல் விடயம் தெரியும் அவனும் பல முறை தெரிவித்து விட்டான்." மகி ஜோகித் உன்ன நல்லா பார்த்துப்பான் அவன் காதல்ல பொய்யில்ல ,ஏன் அவனுக்கு பிடி கொடுக்காம இருக்க" அவளோ மௌனமாக இருந்தாலே தவிர கரணிற்கு பதிலளிக்கவில்லை.

இதற்கிடையில் ஜோகித்தும் பெரிய தொகை ஒன்றை அன்பு இல்லத்திற்கு கொடுத்திருந்தான்." அன்பு இல்லமும் புதுப்பிக்கும் வேலையும் ஆரம்பித்திருந்தது.

" ஹலோ மகிஷா"

" சொல்லுங்கம்மா? நலவிசாரிப்பின் பின் மகிஷா இப்போ இல்லத்துக்கு டோனேஷன் எல்லாம் வருது, நீயும் இனி உன் வாழ்க்கைய பாரும்மா ,நீ நிறையவே செய்திருக்க இனி சேமிச்சுக்கமா உன் எதிர்காலத்திற்கு தேவைப்படும்” என சில நிமிடம் அவளுடன் பேசினார் தேவியம்மா.

மகிஷாவிற்கும் நிரந்தரமாக வருமானம் வருவது போல் அன்பு இல்லத்திற்கு ஏதாவது செய்யனும் என எண்ணிக் கொண்டாள்.
 

Advertisement

Advertisement

Back
Top