ஹார்ட் பீட் திருடன் – 18

Advertisement

daya

Member
Member
WhatsApp Image 2026-02-21 at 09.23.27.jpeg

ஹார்ட் பீட் திருடன் – 18

நீண்ட நேரம் தூங்கிய மகி கண்விழித்ததென்னவோ மாலை மங்கும் வேளையில் தான்.சோம்பல் முறித்தபடி எழுந்தமர்ந்தவள் நேரத்தை பார்க்க மாலை ஐந்து முப்பது எனக் காட்டியது. எழுந்து குளித்து தயாரானவள் ஜோகித்திற்கு,அவனும் "பேபி" என்றான் " ஜோ " கரணும் நானும் வாரம்" என்றாள் " பேபி பத்து நிமிஷத்துல வாரன் வெளியே வா" என்றான் அவளும் வெளியே வர காரும் ஜோகித்தின் வீட்டிற்கு புறப்பட்டது.

இருவரும் ஜோடியாக வருவதைக் கண்டு அர்ஜுனுக்கோ நீண்ட பெருமூச்சொன்று

கரனும் வந்து சேர சிறிது நேரத்தில் அலுவலக அறையில் அனைவரும் அமர்ந்தனர் பெரிய சாக்லேட் பாக்ஸை எடுத்த ஜோகித் தனதை சிறிய துண்டுகளாக உடைந்தவன் உள்ளிருந்து ப்ளூ சபையரை எடாத்தான் அதனை நீரில் சுத்தப்படுத்தி வெல்வெட் துணியால் துடைத்தவன் அர்ஜுனிடமும் கரணிடமும் காட்டினான்.

அர்ஜுனோ ப்ர்பெக்ட் பெக் மச்சி" ஜோகித்தோ நாளைக்கு நைட் இத கைமாற்றலாம் என்றான்.சிறிது நேரத்தில் மகியும் கரணும் எழுந்து கொண்டவர்கள் "ஓகே நாங்க கிளம்புறோம்" என்றனர்.

ஜோகித்தோ அவளை முறக்க அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

சரி சரி நாங்க கிளம்புறோம் என அர்ஜுனும் கரனும் அங்கிருந்து வெளியேறினர்.

அவள் கை பிடித்து இழுக்க அவளும் அவன் மடியில் விழ அவளை இடையோடு அழுத்திப் பிடித்தவன். " பேபி போகப்போறியா, நிற்கலாமே என்றவன். அவளும் " ம்ம் என்றதும் எப்போது அவளை கொள்ளையிட்டான் என்றே தெரியவில்லை இதுவே தொடர் கதையானது.

ப்ளூ பேப்பரை அதற்கான டீலரிடம் கொடுத்து பெருந்தொகை பணத்தை பெற்ற ஜோகித் தான் சொன்னபடி மகிஷாவுக்கான பங்கை கொடுத்தான். அவளும் தனது பங்கில் கரனிற்குக் கொடுத்தாள்.

" ஜோ,இல்லத்துக்கு மாதம் மாதம் வருமானம் வாரபோல ஏதாவது செய்தா நல்லம் ஒவ்வொரு மாதமும் அதன் மூலம் இல்லத்துச் செலவுகள செய்யக் கூடியதா இருக்கும்" என்றாள் யோசனையாக ஜோகித்தும் "பார்த்துக்காலாம் என்றான்".

நாட்களும் அதன் போக்கில் செல்ல அன்று அலுவலகத்தில் கரன் வேலையில் மூழ்கியிருக்க அவனது தொலைபேசி தன் இருப்பை காட்டியது.அவனது பாட்டி தான் அழைத்திருந்தார்.அவனும் அழைப்பை ஏற்க " எப்படி இருக்கீங்க ? நான் நல்லா இருக்கன், நீங்க தாத்தா எல்லாரும் எப்படி இருக்கீங்க ,நாங்களும் நல்லா இருக்கிறம் ராசா, நம்ம சுந்தரம் பொண்ணக் கேட்டு வந்தாங்கப்பா, நல்ல பொண்ணு உனக்கு பொருத்தமா இருப்பா என்னப்பா சொல்ற" சிறு மௌனத்தின் பின் சரி பாட்டி தாத்தாக்கு உனக்கும் புடிச்சா எனக்கும் புடிச்ச போலான் பாட்டி." சரி ராசா என்றவர் கணவனிடம் சத்தமாக கரனுக்கு கல்யணத்துக்கு சரி சொல்லிட்டான் என்றார். அவர்களது சந்தோசமே அவனுக்கு போதுமானதாக இருந்தது.

மகியும் தனது குவாட்டர்ஸை காலி செய்து கொண்டு ஜோகித்துடன் தங்கிக் கொண்டாள்.அவர்களது வாழ்க்கையும் தெளிந்த நீரோடையாக சென்று கொண்டிருந்தது.

அன்பு இல்லத்திற்கு ஜோகித்தும் கார்மெண்ட் திறக்க தேவி அம்மாவிற்கு ஆலோசனை வழங்க அவரோ "தம்பி அதுக்கு ரொம்ப செலவாகுமேபா" என்றார். ஆனால் ஜோவின் திட்டம் நடைமுறைக்கு ஏற்புடையதாக இருந்தது. அவரும் சம்மதம் தெரிவிக்க அப்பகுதியில் கணவனை இழந்த, வசதியற்ற பெண்கள் அந்த கார்மெண்டில் வேலைக்கு இணைத்துக் கொண்டனர் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் இல்லத்திற்கு போதுமானதாகவே இருந்தது

ஜோகித் இதில் நேரடியாக தலையிடாது அவ் ஏரியா கவுன்சிலர் மூலம் இதை தெரிவித்தான்.

மாதங்கள் வருடங்களாகச் செல்ல ஜோகித் மகியின் வாழ்க்கையில் காதல் காதல் காதல் காதல் மட்டுமே

விடிந்தாள் கரணின் திருமணம் ஜோவும் மகியும் கரனின் கிராமத்திற்கு புறப்பட்டனர்.

ஒருவரைப் பிரிந்து ஒருவர் இருக்க முடியாது இருவரும் காதலில் ஒன்றிப் போகினர்.

காலையில் ஆரம்பித்த அவர்களது நீண்ட பயணம் மாலையில் தான் கரனின் கிராமத்தை அடைந்தனர்.

எங்கிலும் பச்சைப் பசேலென வயல்வெளிகளும் வயலில் கொக்கும் நாரையும் பார்ப்பதே கொள்ளை அழகு " ஜோ செமயா இருக்கு வாழ்ந்தா இப்படி ஒரு வாழ்க்கை வாழனும் ஜோ பீஸ்புல்லான லைஃப்" என்றாள்.

அவனும் மென்மையாக புன்னகைத்தபடி காரையோட்டி வந்தவன் கரனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

இருக்கோ இருவரையும் கண்டதில் அப்படியொரு சந்தோசம் இருவரையும் வரவேற்றார் அவர்களுக்கு தங்குவதற்கு வசதி செய்து கொடுத்தான்." டேய் கரன் நீ போய் கல்யாண வேலையைப் பாரு" என மதியும் அவனை விரட்டவே அவனும் அகன்றான்.

சில மாதங்களுக்கு முன் மகியும் ஜோகித்தும் நண்பர்கள் தலைமையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.கரன்.மகிக்கு சாட்சிக் கையெழுத்து வைக்க,அர்ஜுன் ஜோகித்திற்கு சாட்சிக் கையெழுத்திட்டான். ஜோகித்தும் அர்ஜுனை பார்வையால் அமைதியாக்கினான் .

கரனின் வீடோ பழங்கால ஓட்டு வீடு சுற்றி அறைகளும் நடுவில் திறந்த வெளியும் அதற்கு மத்தியில் துளசிமாடமும் வீட்டுக்குப் பின்புறம் தோட்டமும் என அவ் வீடே அவ்வளோ அழகாக இருந்தது.

மறுநாள் காலை மகி சேலையில் தயாராக அவளை பின்னிருந்து அனைத்தவன் "பேபி பேபி சேலைல செமயா இருக்க " என்றவனின் கைகள் அவள் இடையில் ஊற அவளுக்கோ இனிய இம்சையாகிப் போனது நேரமும் செல்ல அவனின் கைகள் முன்னேறி அவளது நாபிப் பள்ளத்தில் இறங்க அவளுக்கோ மூச்சு விட. சிரமமானது அவன் கைமேல் கை வைத்தவள்ஸ" ஜோ ப்ளீஸ் " என்றாள். அதுவோ வெறும் காற்றுத் தான் வந்தது.அவளை திரும்பியவர் அவள் இதழ்களை முற்றுகையிட்டுக் கொண்டான். அவள் மூச்சுக்குத் தவிக்கவே அவளை விட்டான். அவள் இடையோ அவன் கைகாட்டி சிவந்து போனது. அவனை முறைத்தபடி என்ன பண்ணி வச்சிருக்கீங்க ஜோ என கசங்கிய சேலையை நீவி விட்டுக் கொள்ள வெயிட் பேபி என்றவன் தானே கசங்கிய ப்ளீட்டை சரியாக எடுத்து விட்டவன்."இப்ப ஓகேவா" ம்ம் " என்றவள். "ஜோ ரெடியாகுங்க நேரமாகுது "என்றாள்.

அவனும் வேஷ்டி சட்டையில் தயாராகி வர இருவரும் வெளியேறி வந்தனர். அவனின் கம்பீரமான தோற்றத்திற்கு வேஷ்டி சட்டை பக்காவாகப் பொருந்தியது.

இன்னும் வேஷ்டி சட்டையில் தயாராகி இருந்தான்.தாத்தாவும் பாட்டியும் நேரத்தோடு கோயிலுக்குச் சென்றிருந்தனர். பின் மூவரும் கோயிலுக்கு கிளம்பினர்.

கோயில் தான் திருமணம் ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக இருக்க கரனும் யாகத்தின் முன் அமர்ந்தான் சிறிது நேரத்தில் மணப் பெண் மலர்விழியும் பதுமையென நடந்து வந்து அவனருகில் அமர ஐயரும் மந்திரங்களை ஓத, மங்கள வாத்தியங்கள் ஒலிக்க மலர்விழியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன் சரிபாதியாக்கிக் கொண்டான்.

தனது உயிர்தோழன் திருமண பந்தத்தில் இணைந்ததில் மட்டற்றமகிழ்ச்சி.அவன் காதல் தோல்வியால் எப்படி இருந்தான் எனத் தெரியும் தானே தன் நண்பனின் நல் வாழ்வுக்காக கடவுளைப் பிராத்தித்தும் கொண்டாள்.

மலர்விழி அமைதியான அழகான பெண் கரனுக்கேற்ற பெண்

கரனின் வீட்டில் இருந்து தடல்புடலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மகியும் ஜோகித்தும் விருந்தில் கலந்து கொண்டவர்கள் மலர்விழியையும் கரனையும் வாழ்த்தி பரிசும் கொடுத்தனர்.கரனோ "என்ன மகி இது" " எஞ்ஜாய்" என்றான் ஜோகித்.

அன்று இரவு கரன் வீட்டிலேயே தங்கியவர்கள் மறுநாள் காலை பேக்குடன் வெளியே வர தாத்தா பாட்டி மற்றும் கரனிடம் விடைபெற்றனர். " மகி ரெண்டு நாள் தங்கிப் சுத்திப் பாத்துப் , போலாமேமா " என பாட்டி கேட்க அவளோ ஜோகித்தைப் பார்க்க அவனோ ஆபிஸ்ல இருந்து கால் வந்துச்சி பாட்டியமா போயாகனும் எங்களுக்கும் இந்த இடம் ரொம்ப பிடிச்சிருங்கு அடுத்த வாட்டி வரும் போது பெரிய லீவ்ல வாரம்" என்றான். பாட்டியும் சுமங்கலிப் பொருட்களைக் கொடுத்து வழியனுப்பினார்.

ஜோ காரை ஓட்ட ஜோவின் அருகில் மகி அமர்ந்திருந்தாள் காரும் மிதமான வேகத்தில் கிராமத்தை விட்டு வெளியேறியது. ஜோவின் முகம் சற்று இறுக்கமாகவே இருந்தது.

" ஜோ என்னாச்சு " மகி ஊருக்குப் போகனும் என்றான். " ஏனேனில் அவள் முன்பு அவன் குடும்பம் பற்றிக் கேட்க அவனும் அவர்களால வர முடியாத நிலை" என்றான் ரிஜிஸ்டர் வைக்கும் போது.

மகியும் அதன் பின் அமைதியாகி விட்டாள் வரும் போது இருந்த சந்தோசம் இப்போது இல்லை

கரனின் திருமணத்தன்று எலிசபெத் பாட்டியிடமிருந்து அழைப்பு வந்தது "பேத்திய கூட்டிட்டு பேலசிக்கு வா என்றார் அழுத்தமாக" பின் ஏதும் பேசாது அழைப்பை துண்டித்தார்.

" ஜோ" "சொல்லு மகி" "உங்க வீட்டு என்ன ஏத்துப்பாங்களா?" எனக் கேட்க ஜோவிற்கோ தாய் ஏற்றுக்கொள்வார் என நம்பினான் ஆனால் அவன் நம்பிக்கையில் அவர் மண்ணள்ளிப்போட உள்ளதை அறியாது

"ஏத்துப்பாங்க உனக்கு நல்லதொரு குடும்பத்தை தருவேன்" என்றான்

பின்நாளில் தன் வார்த்தையைக் காப்பாற்ற முடியாமல் போவதை அறியாது." ஜோ பொள்ளாச்சி ரூட்டிலயா போக" ஆமா மகி அப்போ அன்பு இல்லத்திற்கு போயிட்டு போவோமா? எனக் கேட்க அவனும் " ம்ம்" என்றான்.

சில மணி நேர பயணத்தின் பின் ஹோட்டல் காலை உணவை உண்டவர்கள் அங்கிருந்து அன்பு இல்லத்திற்கு புறப்பட்டனர் மேலும் சில மணி நேர பயணத்தின் பின்பு அன்பு இல்லத்தில் வந்தடைந்தவர்கள் காரிலிருந்து இறங்கிக் கொண்டனர்.

பிள்ளைகள் பாடசாலைக்கு சென்றிருப்பதால் யாரும் அங்கு இல்லை ஒருபுறம் கார்மெண்ட் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அனைத்தையும் பார்த்தபடி இருவரும் தேவி அம்மாவின் அலுவலக அறைக்கு சென்றனர்.

இருவரையும் கண்ட தேவியம்மா புன்னகையுடன் வரவேற்றார்.

"வாங்க என்றார் இருவரும் அவர் முன்னிருந்த இருக்கையில் அமரந்தனர்." எப்படிமா இருக்கீங்க? " " நாங்க நல்லா இருக்கோம் நீங்க எப்படி?" "நல்லா இருக்கம்மா வேலையெல்லாம் எப்படி போகுது?" என்ன ஜோகித் கேட்க "ஐம்பது பேர்ட வேலை செய்றாங்க, வாங்க பார்க்கலாம்" என்றார்.

உள்ளே பார்வையிட்டனர்.திடீருனு கவுன்சிலர் வந்து இப்படி ஒரு கவர்மெண்ட் வசதி வந்திருக்குன்னு சொல்னார். ப

பிறகு அவரே எல்லாத்தையும் முன் நின்று செஞ்சாரு தம்பி என்றார். ஜோகித்தும் மகியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அவர்களது பயணம் மீண்டும் தொடங்கியது பொள்ளாச்சியை விட்டு நீண்ட தூரம் வந்த கார் கார் தடைசெய்யப்பட்ட ஏரியாயாவினுள் செல்ல " இது ரெஸ்ரிக் ஏரியா இங்க ஏன் போக என பதட்டமா கேட்டவளுக்கு ஏதும் பிரச்சினைகள் வந்துவிடும் என்னும் எண்ணம் தான்.

" ரிலாக்ஸ் பேபி" என்றவன் காரை ஓட்டிக்கொண்டு ஓரிடத்தில் நிறுத்தினான் அதுவோ தனியார் விமான ஓடுபாதை

காரிலிருந்து இறங்கிய இருவரும் விஐபிகளுக்கான வழியினால் சென்று விமானத்தில் ஏறினர்.

அவளுக்கோ ஆச்சரியம் அது ஒரு தனியார் விமான உள்ளே சோபாக்கள் போடப்பட்டிருந்தது. அவளும் விழி விரிப்போடு உள்ளே வர அவளை தன்னறுகில் அமர்த்திக் கொண்டான்.

அவளுக்கு இங்கு என்ன நடக்கிறது எனும் வியப்பு தான். விமானமும் மெல்ல மெல்ல ஓடு பாதையில் முன்னேறி மேலே பறந்தது.

தனது சீட் பெல்ட்டை கழற்றிய வன் அவளது சீற் பெல்ட்டையும் கழற்றியவன் சோபாபில் சாய்ந்து கொண்டான்.

"ஜோ நாம எங்கு போறோம்?" "வீட்டுக்கு பேபி" அவளுக்கு ஒரு மாதிரியாக இருக்க தலையைப் பற்றிக் கொண்டாள் .

அவளை எழுப்பி விமானத்தின் பின் பகுதிக்கு அழைத்துச் செல்ல அதுவோ ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு இணையாக இருந்தது

அவ்வறையில் மூன்று நான்கு பேர் தூங்கக்கூடிய மெத்தையோடு டிவி, குளியலறை வசதியோடும் இருந்தது.

மகிக்கோ தலைக்குள் பல சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தது

."எதையும் யோசிக்காமல் ரெஸ்ட் எடு பேபி" என்றவன் அவள் தூங்கும் வரை அவளுடனே இருந்தவன் அவள் கண்ணயர்ந்ததும் தான் வெளியே வந்தான்.

வெளியே வந்து சோஃபாவில் அமர்ந்தவன் அர்ஜுனுக்கு அழைப்ப்பெடுத்தான்.

"அர்ஜுன்" "ஓ ஜோ" "நாங்க வந்துட்டு இருக்கோம் எனி ப்ரோப்ளம்" "பிரச்சனை இல்ல ஆனா நயோமி மேடம் தான் கோவமா இருக்காங்க என்றான்.​
 

Advertisement

Advertisement

Back
Top