ஹார்ட் பீட் திருடன் – 19

Advertisement

daya

Member
Member



ஹார்ட் பீட் திருடன் – 19


WhatsApp Image 2026-02-21 at 09.23.27.jpeg


அதே வேளை ஏசிபி சத்தியனும் ஆக்ராவில் நடந்த திருட்டுச் சம்பவத்தில் மும்முரமாக இருந்தான்.

பல மணிநேரம் வானில் பறந்த விமானம் தரையிறங்கும் வேளையில் தான் கண்விழித்தாள் மகி. "ஜோ..ஜோ"என அவள் அழைக்க கதவை திறந்து கொண்டு வந்தான்.

" பேபி எந்திரிச்சிட்டியா"அவளும் ஏதோ கனவில் மிதப்பது போல் மிதந்து.அவளும் குளித்து ஜீன்ஸ் ஷர்டில் தயாராகி மிதமான ஒப்படையோடு வெளியே வந்தாள்.

அதே வேளை ஜோகித்தும் குளித்து கோட் சூட்டில் தயாராகி இருந்தான். விமானமும் தரையிரங்கும் அறிவித்தலோடு தரையிரங்கியது.

இருவரும் வெளியே வர அவர்கள் முன் வந்து நின்றது அதி சொகுசுக் கார்.ஜோவும் கதவைத் திறக்க அவளும் ஏறியமர்தாள் அவனும் காரைச் சுற்றி வந்து காரில் ஏறியவன் டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை எடுத்தான்.

“இது எந்த இடம்” அவனும் மென்மையாக புன்னகைத்தபடி "லவுடேடாலி" என்றான்.அவளோ புரியாமல் அவனைப் பார்க்க அவளது ஒவ்வொரு செயற்பாட்டையும் ரசிக்கத் தொடங்கினான்.

காரும் மிதமான வேகத்தில் முன்னேறியது சிறிது நேரப் பயணத்தில் கார் வந்து நின்ற இடத்தை மகிஷா விழிவிரித்துப் பார்க்க காரும் போர்டிங் கோவில் வழுக்கிக் கொண்டு அந்த வெண்ணிற மாளிகையின் முன் நின்றது.

" மகி இறங்கிக்கோ" என்றவன் காரில் இருந்து இறங்கி அவள் இறங்க சுற்றி வந்து கார்க் கதவைத் திறந்து விட அவளும் இறங்கிக் கொண்டிடாள்.

இருவரும் ஒன்றாக உள்நுழைய எலிசபெத் பாட்டி,நயோமி, மர்தா மற்றும் எமி அவர்களை வரவேற்றனர்.நயோமியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

வெலகம் டூ கிரேஸ் ஃபேமிலி " என அன்பாக அனைத்துக் கொண்டார். நயோமியோ வா என்றும் இல்லை இல்லை என்றும் இல்லை மர்தாவும் ஒரு புன்னகையுடன் வெல்கம்" என இடைநிறுத்த மகியோ " மகிஷா" என்றாள்.அதில் மர்தாவின் இதழ்கள் மேலும் விரிவடைய அவரோ மீண்டும் " வெல்கம் மகிஷா என்றாள்.

எலிசபெத் நயோமியைப் பார்க்க அவரும் கடுப்புடன் பக்கவாட்டாகத் திரும்ப பணியாளரொருவர் பூங்கொத்தொன்றைக் கொடுக்க அதனைப் பெற்றவர் மகிஷாவிடம் கொடுத்தவர் "வெல்கம்" என்றார். மதியும் தயக்கத்துடன் வாங்கிக் கொண்டாள். நயோமியோ அத்தோடு தனது வேலை முடிந்ததென விறுவிறுவென அங்கிருந்து வெளியேறினார்

அவரின் செய்கையில் முகம் இறுகிப்போனான் ஜோகித். எலிசபெத் பாட்டிக்கும் மருமகளின் நடவடிக்கை அதிருப்தியை தந்தது. மகியும் ஜோகித்தும் உள்ளே நுழைந்தனர். மகிக்கோ தன் கண்களை தன்னாலே நம்பமுடியத நிலை " மகிய ரூமுக்கு அழைச்சிட்டு போ ட்ராவல் பண்ண டயர்டா இருக்கும் ஜோ" என்றார் எலிசபெத்.

ஜோகித்தும் மகிஷாவின் கையைப் பற்றியவன் அவளை தனது தளத்திற்கு அழைத்துச் சென்றான்.

அவன் இழுத்த இழுப்பிற்குச் சென்றவளேக்கோ ஆயிரம் கேள்விகள் தலைக்குள்.

லிஃப்ட்டின் மூலம் தனது தளத்திற்கு வந்தவன் " என்னோட ரூமுக்கு என்னத் தவிர யாராலையும் உள்ள வர முடியாது என்றவன் தனது கைவிரல்களை கதவின் பிடியில் வைத்தவன் கதவின் குமிழைத் திறக்க கதவு தானாக திறந்து கொண்டது.

"வெல்கம் டூ மை வேள்ட்" என்றான்.அவளோ அவனை உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்தவள்."ஜோகித் நீங்க யாரு?" இது என்ன இடம் ? எனக் கேட்க,அவளோ அவளின் பேச்சில் இருந்த விலகலைக் கண்டவனுக்கோ முகம் இறுகிப் போனது. " நீ ரெஸ்ட் எடு பேபி" என்றவன். விலக " அவனையே பார்த்திருந்தவள் அவன் எதுவும் சொல்லமாட்டான் எனப் புரிய தலையைப் பற்றியபடி கட்டிலில் அமர்ந்து விட்டாள்.

அதில் பதறியவன் "மகி " என அழைக்க அவள் கண்களிலோ ஒரு ஏமாற்றம். அவளுக்குத் தேவையானதை அறைக்கே வரவழைத்தான்.

இதற்கிடையே ஜோகித்தின் திருமணத்தை அறிந்து கொண்ட ஒலிவியா கத்தி ஆர்ப்பாட்டம் செய்து விட்டாள்.ஒலிவியாவை மருமளாக்கிக் கொள்ள நயோமி தயாராகவே இருந்தாள். தங்கையின் இவ் நடவடிக்கையால் ஜோதிடத்தின் மேல் கோபத்தை தந்தது

"அல்வி அவள நான் பார்க்கனும்" " ஒலிவியா லிசின் எப்படியும் பாலஸ்ல அவன் வெட்டிக் அறிவிக்க பார்ட்டி ஏற்பாடு செய்வாங்க ,அப்போ பார்க்கலாம் இப்போ அமைதியா இரு " என கடிந்து கொண்டான்.

லிடியாவோ என்ன செய்வதென்றே தெரியவில்லை அப்போது அவளது அலைபேசி தன் இருப்பைக் காட்ட நயோமி தான் அழைத்திருந்தார். "லியா லஞ் அரேஞ் பண்ணிருக்கு மாப்பிள்ளையக் கூட்டிட்டு பாலஸுக்கு வா" என்றார்.

"அம்மா ,அண்ணா ....""நேர்ல பேசிக்கலாம் வா" " உன் அண்ணண் பார்த்த வேலையால கிரேஸ் ஃபேமிலில முகத்தக் காட்டவே முடியல" என்றவர். ஒலிவியாவையும் கூட்டிட்டு வா " என அழைப்பைத் துண்டித்தார்.

தஙக்ளது அறைக்கு வந்த அல்வினோ லிடியாவை அனைத்தவன்."லியா ஆன்டி கால் பண்ணாங்க லஞ்சுக்கு இன்வைட் பண்ணாங்க" ஒலிவியாவையும் இன்வைட் பண்ணாங்க போல,என்ன பண்ண்ப் போறாளோ தெரியல " என்றான் தங்கையின் குணமறிந்து.

அதே வேளை ஜோகித் மகிஷாவின் வருகையின் பொருட்டு விருந்தும் தடல்புடலாக தயாராகிக் கொண்டிருந்தது.

ஜோவின் அறையில் தலையைப் பற்றிக் கொண்டு அமர்ந்திருந்த மகிஷாவை ஜோகித் தொந்தரவு செய்யாது மற்றொரு பக்கம் இருந்த அறையினுள் நுழைந்து கொண்டான்.

வெளியேறி வந்தவன் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.' அவன் மனதிலோ தன்னைப் பற்றி மகிஷாவிடம் எப்படி சொல்லிப் புரியவைப்பதென்று தெரியவில்லை.அதே வேளை தந்தை ரிட்டேராகிவிட்ட செய்தி கிடைத்தது. பொறுப்புகக்ளும் தன்னை வந்து சேர உள்ளது" என எண்ணியபடி இருந்தான்.

குளித்து இலகுவான உடையணிந்து வெளியே வந்தான்.அவன் வெளி வரவே மகிஷா தன்னிலை அடைந்தாள்.

அவளருகில் அமர்ந்தவன் அவள் கைகளை தன் கைக்குள் வைத்தபடி " பேபி இது கிரேஸ் ஃபேமிலி,உலக நடப்புக்கள் அனைத்தும் கிரேஸ் ஃபேமிலிட கட்டுப்பாட்டுல இருக்கும்.

என்னோட அப்பா அன்ரூட், அம்மா நயோமி ஒரு தங்கச்சி லிடியா,லிடியா வெட்டிங் பண்ணிடா,அடுத்தது பாட்டி எலிசபெத் அவங்களுக்குத் தான் இங்க எல்லோரும் பயப்படுவாங்க ,என தனது குடும்பம் பற்றி சொன்னான்.

அவளோ அவனை உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்திருந்தாள். ஏனெனில் அவள் எத்தனை வாட்டி அவனது ஃபேமிலி பற்றிக் கேட்டிருப்பாள்.கேட்குப் போதெல்லாம் நேர்ல பார்த்துக்க பார்த்துக்க என்று சொன்னதெல்லாம் இதற்கு தானா " என அவள் பார்வை கேள்வி கேட்டது.

"அப்பா ரிட்டேராகிட்டார் அந்தப் பொறுப்பும் பார்க்கனும், உன்கிட்ட மறச்சத்ததுக்கு சாரி" என்றான். இத் விட்டு நார்மல் லைஃப் வாழனும்னு தான் இங்க இருந்து வந்தன். உன்னப் பார்த்தன் லவ் பண்ணி கட்டிகிட்டன்.

அவள் மனதில் ஓடுவது ஒரே எண்ணம் தான் இவ்வளவு சொத்திருந்தும் திருடக் காரணம் உண்மையில் த்திர்லிங்கிற்குத் தானா" அது அவள் முகத்தில் தென்படவே மெலிதாக புன்னகைத்தவன்." எல்லாம் ஹாபி, த்ரில்லிங்குக்குத் தான் என்றான்.

அவன் காதல் அவளுக்குத் தெரியுமல்லவா ? இருப்பினும் அவளுள் ஒரு ஏமாற்றம் " சில விசயங்களை ஏற்றுக் கொள்ள டைம் வேணும்" என்றாள் எங்கோ பார்த்தபடி அவள் கோபம் புரிந்தாலும் டேக் யூவ ஓன் டைம் பேபி" என்றவன்.குளிச்சிட்டு வா பேபி நமக்காக லஞ்ச் ஏற்பாடு நடக்குது " என்றான். அவளும் ஒரு கதவைத் திறக்க அதுவோ மற்றொரு அறை அவ்வரை பூராக ஜோகித்தின் உடைகள் , வியப்பில் அவ்வறையை மூடிவிட்டு " ஜோ" குளிக்கனும் என்றாள்.

" பேபி இங்க வா" என்றவன் அவள் திறந்த கதவைத் திறந்து உள்ளே வந்தவன் பக்கவாட்டில் இருந்த கண்ணாடிக் கதவைத் திறந்து விட்டவன் " குளிச்சிட்டு வா பேபி" என்றவன் வெளியேறிய இருந்தான்.

குளியலறையோ கண்ணாடியினால் இருந்தது.பாத்டப்பில் வேறு நறுமணம் கமழும் நீர் நிறைந்திருந்தது.தரை கூட முகம் தெரியுமளவிற்கு சொர சொரப்பான கற்கள் பதிக்கப்பட்டிருந்தது.

அனைத்தையும் பார்வையால் அளந்தவள் சவரில் குளித்து அங்கேயே உடையை மாற்றிக் கொண்டு வெளியே வர ,கறுப்பு நிற கோட் சூட்டில் தயாராகி இருந்தான் ஜோகித் அவன் நிறத்திற்கு அக் கோர்ட் சூட் அழகாக அவன் உடலுக்கு கம்பீரமாக இருந்தது.

அவளோ அவனில் பார்வையை பதித்தபடி நின்றாள்.அவளின் பிரத்தியேக ஃப்ர்பியூம் வாசத்தில் கிறங்கித் தான் போனாள்." பேபி " எனும் அவனின் சத்தத்தில் தன்னிலை மீண்டார்.

ஒழுங்காக உடலைத் துவட்டாததால் அவள் உடலில் உள்ள நீர் அவளின் உடலில் ஒட்டிக் கொண்டிருந்தது.மேலியுந்து கீழாக அவளை விழுங்கும் பார்வை பார்த்தவன்.

" பேபி டிரஸ் ஈரமா இருக்கு ,இந்த டிரஸ்ஸ போட்டுக்க" என ஒரு பையை நீட்டினான். அவளும் அவன் பார்வையில் தடுமாறியவள் அதனை பெற்றுக் கொண்டாள்.

அவளும் எதுவும் சொல்லாது மீண்டும். குளியலறை நுழைய முட்பட பேபி ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா வெளிய வெயிட் பண்றேன்" என்றவன் அவ்வறையில் இருந்து வெளியேறினான்.

அவன் செல்வதைக் பார்த்தவனள் ஒரீ பெருமூச்சுடன் அவன் தந்த பையைப் பிரிக்க அவன் உடைக்குப் பொருத்தமான கவுன் அதில் இருந்தது.

அவளும் தயாராகி வெளியே வர அவளுக்கோ அவ்வுடை கச்சிதமாக பொருந்தி இருந்தது.அவளைப் பார்வையால் அளவிட்டவன் அவள் கையில் கை கோர்த்து டி வெளியேறினான்.

கீழே டைனிங் டேபிளிற்கு வர அனைவரின் பார்வையும் அவளில் தான் ஒரு வித படபடப்புடன் அவள் டேபிளை நெருங்க குதிரையை இழுத்து அவளை அமர வைத்துவிட்டு அவனும் தனக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

பணியாளர்களும் அனைவருக்கும் உணவைப் பரிமாறத் தொடங்கினர்.நயோமியோ மகனைத் தான் முளைத்த படி அமர்ந்திருந்தார்.ஒலிவியாவோ அல்வினோவின் அருகில் அமர்நத்வளுக்கோ தன்னை விட எதில் உசத்தி அவளைக் காணக் காத்திராந்தாள் மகி வந்தது முதல் அவளைத் தான் பார்த்திருந்தாள். மதியின் அழகோ எளிமையான அழகு இன்று பூராக பார்த்திருக்கலாம். அப்படியொரா அமைதியான அழகு அவளைப் பார்த்தவள் தலையை உலுக்கி தன்னிலை மீண்டவள் மகிமை முறைத்துப் பார்த்தாள்.

அன்ரூட்டோ " வெல்கம்" என்றார். அவறிற்கோ மகன் அவனிற்கு பிடித்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்திருக்கிறான். இதில் நாம் சொல்ல முடியும்.இருப்பினும் தாங்க்ஸ் அல்லாது திருமணத்தௌ பதிவு செய்தது கவலையே எலிசபெத் பாட்டிக்கும் அதே நிலை தான்.

உணவு வேளை அமைதியைக் குலைக்கும் பொருட்டு எலிசபெத் பாட்டி பேசத் தொடங்கினார். " ஜோ வெட்டிங் எல்லாரும் எதிர்பார்க்கிறதொன்று அன்ரூட்டும் ரிட்டேர் ஆகிடான். சோ கிரேஸ் க்ரூப் எல்லாருக்கும் இது ரெண்டு விடயத்தை தெரிவிகக்னும். அதனால் நம்ம பேலஸ்லயே வெட்டிங்க நடத்துவோம்” என்றார்.

அவரின் முடிவிற்கு பதில் சொல்ல இங்க யாரால் முடியும் அரசியல் தந்திரங்களை கரைத்துக் குடித்தவர் அவர். “அன்ரூ நீ என்னப்பா சொல்ற" " சரிமா அப்படியே ரெண்டையும் ஒன்றாகவே செய்வோம்" என்றார்.​
 

Advertisement

Advertisement

Back
Top