ஹார்ட் பீட் திருடன் – 21

Advertisement

daya

Member
Member
WhatsApp Image 2026-02-21.jpeg

ஹார்ட் பீட் திருடன் – 21

அவளால் நிலை கொள்ளவே முடியவில்லை நயோமிக்கு தன்னைப் பிடிக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டாள்.எப்படிதான் தங்களது தளத்திற்கு வந்தாயோ தெரியவில்லை, அறையினுள் நுழைவழுக்கோ அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை வெடித்து அழுத்தம் அழுதழுதே தூங்கிப் போனாள்.

எமிக்கும் இதனை ஜோகித்திடம் சொல்வதா ? வேண்டாமா ? எனும் நிலை அப்படியே ஒவ்வொரு மனநிலையில் ஒவ்வொருவரும் இருக்க தனது வேலைகளை முடித்துக் கொண்டு அறைக்குள் வர அறை எங்கிலும் இருள்.

இவ எங்க போனா என யோசனையுடன் "சுவிட்ச் ஆன் தி லைட்ஸ்" என அவன் சொன்னதும் அனைத்து மின்குமிழ்களும் ஒளிர்ந்தன். மகியோ கட்டிலில் ஒரு ஓரமாய் சுருண்டு படுத்திருந்தாள். அவனுக்கோ அவளைப் பார்த்ததும் ஏதோ போல் ஆனது " மகி" என அழைக்க அவள் எழவில்லை அவள் கண்ணத்தில் கை வைத்து "மகி என அழைக்க அவளோ கண்விழித்தது எழுந்தவள் அவனைப் பார்க்க அவள் பார்வையில் தான் எத்தனை பாவம் காதல் ஏமாற்றம் வலி என " என்னாச்சு மா" அவளோ அவனை பார்த்திருந்தாளோ தவிர எதுவும் பேசவில்லை.

அவளது ஓய்ந்த தோற்றம் அவனை சிந்திக்க வைத்தது. " சாப்பிட்டியா " எனக் கேட்க அவள் கண்களோ கலங்கிப் போனது அன்றைக்கே உணவை வரவழைத்திருத்திருந்தான். " ஃப்ரெஷ்ஷாகிடு வா சாப்பிடலாம் " என்றான்.அவளும் எழுந்து குளியலறை நுழைந்து கொண்டாள்.

ஷவரின் கீழ் நின்றவளுக்கோ அழுகை தான் வந்தது. நேரம் செல்ல அந்த வைராக்கியமாய் மாறியது. அவளது குணம் அதுவல்லவே நான் தப்புப் செய்யாது ஏன் பயப்படனும் என தனக்காள் திடமானவள் குளியலறை விட்டு வெளியே வந்தவள் குளியலறையோடு ஒட்டிய தான் உடைமாற்றும் அறையில் உலர் ஆடையை அணிந்து வெளியே வந்தவள் ஈரமான கூந்தலை உலர்த்திக் கொண்டிருந்தாள் அப்போது ஜோவும் குளித்து வந்தவன் ஈரமான அவளது கூந்தலை கண்டவன் " இந்த நேரத்துல ஏன் தலைக்கு குளிச்ச மகி "என அவளைக் கடிந்து கொண்டவன், ஹேயார் ரையரினால் அவள் முடிகளை உலர்த்திக் தொடங்கினான்.

அவனை கண்ணாடியோடு பார்த்தவாளுக்கோ அவன் தன் மேல் கொண்ட காதல் தான் முதலில் தெரிந்தது. அவனும் கண்ணாடியினூடாக அவளைப் பார்த்தவன் " என்ன எனும் விதமாக புருவத்தை உயர்த்த ஒன்னுமில்லை என்றாள்.



முடியை இருகைகளாலும் தொட்டுப் பார்த்தவன் " இப்ப ஓகே வா சாப்பிடலாம் என அழைத்து வந்தவன் அங்கு சாப்பிட என போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.உணவை இருவருக்கும் அவனே பரிமாரியவன் “சாப்பிடு” என்றான்.

அவளும் உணவுத் தட்டை எடுத்ததும் சாப்பிடத் தொடங்கினாள்.அவள் அமைதி தான் ஆனால் அதில் ஒரு துடுக்குத் தனம் மகிழ்ச்சி எல்லாமே ஜோகித்திடம் தான் வெளிப்படும் அங்கு வந்த புதிதில் தன்னோடு ஒட்டாமல் தான் இருந்தாள் இரண்டு நாட்களில் ஓரளவு அவனோடு இயல்பாகத் தான் இருந்தாள்.ஆனால் இன்று அவளிடம் ஒரு மாற்றம் ,அமைதியாக உண்வுண்டு முடித்த இருவரும் பால்கனிக்கு வந்தனர்.அங்கிருந்த கூடை ஊஞ்சலில் அவள் அமர அவனோ சாய்வு நாற்காலியில் அமர்ந்தான்.

வானில் முழு நிலவு பவணி வர அதனை சுற்றி தீபங்களாய் ஒளிர்ந்தன ஆயிரக்கணக்கான குட்டிக் குட்டி நட்சத்திரங்கள் அதனை இருவரும் பார்த்திருக்க " ஜோ நான் சென்னைக்கு போகட்டா" என்று கேட்டாள் அவனோ அவளை ஆராய்ச்சியாளர் பார்த்தவன் "மகி என்னாச்சு ஏதாவது ப்ர்ப்ளமா? எனக் கேட்க ஒரு நிமிடம் தயங்கியபடி அவனைப் பார்த்தாள் அவளுக்கு இங்கிருக்கும் பிடிக்கவில்லை என்பது அவனுக்குப் புரிந்தது.

“நாளன்னைக்கு வெடிங் அது முடிய, கொஞ்ச நாள் கழிய போகலாம் என்றான்.அவனுக்கும் முடிக்க வேண்டிய வேலைகள் பல இருந்தன. அவளோ எதுவுமே பேசவில்லை.

மறு நாள் காலை சூரியன் தன் பொற்கரங்களைப் பரப்பி பூமியை அனைத்துக் கொள்ள அழகாய் புலர்ந்தது மறுநாள் திருமணம் என்பதால் வேலைகள் தடல்புடலாக நடந்தது.

" ஹலோ மகி அண்ணி ரெஸ்ட் அளவு எடுக்கனும் வாங்க" என்றாள் எலிஷா மகியும் அறையில் இருந்து வெளியே வந்தாள்.ஹாலில் பாட்டி ,நயோமி ஒலிவியா,பர்தா என அனைவரும் இருந்தனர்.

பெஸ்ட் டிசைனர் அங்கு வந்திருந்தார்.அதே வேளை ஒருபுறம் இக் கால நவநாகரீக ஆடைகள் தொடக்கம் சேலைகள் வரை குவிந்து கிடந்தன. அனைத்தையும் மலைப்பாய் பார்த்தபடி அவளும் அமர்ந்து நயோமியோ மகிமை துச்சமாய் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

அவர்களின் வழக்கப்படி வெண்ணிற ப்ராக்கை தெரிவு செய்தார் எலிசபெத். முத்துக்களும் வைரக் கற்களும் பதிக்கப்பட்டு அது இருந்தது. " மகிஷாமா உனக்கு பிடிச்ச ரெஸ்ஸ எடுத்துக்கமா என்றார். அவளோ எதுவும் சொல்லாது எமியின் அருகில் அமர்ந்து கொண்டாள்.

மகிஷாவைப் பார்த்த எலிசபெத் அவள் ஆடைகள் அதெயிவு செய்யாததையடுத்து. " எமி மகிகக்உ பொருத்தமான ரெஸ்ட் எடு என்றார். அவளும் எடுத்துக் கொடுக்க அதுவே குட்டி மலையாக இருந்தது.

மகியும் அனைத்தையும் பார்த்தவள் அவர்களின் செல்வ நிலை புரிந்தது. எலிசபெத் பாட்டியோ பழக இலகுவாக இருந்தார்.நயோமி தான் பிரச்சினைகள் உரியவராக இருந்தார்.

" அண்ணி இன்னைக்கு மியூசியம் பார்க்கலாம் வாங்க " என லிஃப்டின் உதவியோடு மகிமை அழைத்துச் சென்றாள் மியூசியத்தை அடைந்தவர்கள் முன்னிருந்த பாதுகாவலரோ எளிமையும் மகியையும் கண்டதும் கதவைத் திறக்க இருவரும் உள்நுழைந்தனர்.

உள்நுழைந்த மகிக்கோ விழிகள் வெளியே தெறித்து விடும் அளவிற்கு ஆச்சரியமாகவும் அதியமாகவும் இருந்தது அவ்வறை.

அங்கிருந்த பழங்கால ஓவியங்களையும் ப்ளாக் அன்ட் வைட் புகைப்படங்களையும் பார்த்தபடி வந்தவள் ஒரு புகைப்படத்தைக் காட்டி" இலுமினாட்டி" எனக் கேட்க எமியும் " ம்ம் ஆளும் பரம்பரை என்றாள்.

அப்புகைப்படத்தில் பிரமிட்டில் கண் ஒன்று இருந்தது அதன் முன் இருவருர் நின்றிருந்தனர்.

அவளும் ஆச்சரியமாக ஒவ்வொரு பொருளாக பார்த்து வந்தவள் கண்டதென்னவோ ஆசியாவின் ராணியைத் தான் எமியோ 'எல்ஷன் கொண்டு வந்தான் எவ்வளோ அழகு " என்றாள்.

"ஒலிவியா, இவ தான் கிரேஸ் குடும்பத்தோட மூத்த மருமகள்,உன்னப் போல் அநாதை,அன்னக் காவடிகெல்லாம் இங்க இடமில்லை”,என்றார் இகழ்ச்சியாக ,அதே வேளை வெளிய அர்ஜுனை பின் வந்த எமி மகிமை மறந்தவளாக அவனை நோக்கிச் சென்றாள்.

ஒலிவியாவும் மகியை நக்கலாய் பார்த்தபடி சிரித்தாள் .மகிக்கோ அவர்களின் பேச்சில் சுருசுருவெற கோபம் எழுந்தது. அதே வேளை நாளை திருமணம் என்று இருக்கும் போது நயோமி இப்படிப் பேசுவது அதிர்ச்சியாய் இருந்தது. எதனையும் முகத்தில் காட்டாது அவரை உறுத்து விழித்தாள் " உங்க மகனுக்கு எவ்ளோ விலை சொல்றயல்" எனக் கேட்க,

நயோமிக்கோ அவள் இப்படி கேட்பாள் என எதிர் பார்க்காத வர் ஜோகித்திற்கு விலை நிர்ணயிக்கவா முடியும்.

மகி எதிர்த்துப் பேசிய கோபத்தில் " நீ இங்க எப்படி இருக்கனு நானும் பார்க்கிறேன்" என நேரடியாகவே அவளிடம் சொன்னார்.

மியூசியத்தை சுற்றி பார்வையை சுழல விட்ட நயோமி விலைமதிப்பற்ற பொருள்கள் தான் இருக்கு பதிலையும் வனகைவச்சி உன் புத்தியக் காட்டியாக " என அவளுக்கு கருத்தலாய் பேசியவர் அங்கிருந்து ஒலிவியாவுடன் வெளியேறினார்.

" ஆன்டி எப்படி பேசுறானு பாரத்தீங்களா?" " ம்ம் பணத்துக்காக ஜோ பின்னாடி திரிரவள் இங்க வசதி வாய்ப்பப் பார்த்ததும செடில்லாக முடிவு பண்ணிடா போல" என இருவரும் மகியை விமர்சித்தபடி சென்றனர்.

மகியால் சில நிமிடம் மூச்செடுக்கவே முடியவில்லை அப்போ இத அடிச்சி ஜோ எல்சன்ட கொடுத்திருக்கான் . அவளால் நிலை கொள்ளவே முடியவில்லை.

தலையைப் பற்றியபடி அவள் நிற்க " என்னாச்சி அண்ணி தலை வலிக்குதா" இங்க உட்காருங்க என அவளை அங்கு ஒருபுறம் போடப்பட்டிருந்த சோஃபா வில் அமர வைத்தாள்.

அதே வேளை வெளியே வந்த எமி கண்டதென்னவோ அர்ஜுனைத் தான்.அவளும் அவனைத் தொடர அதே வேளை அங்கு வந்து சேர்ந்தார் நயோமி அவருக்கு ஒட்டுப்புல்லாய் வந்து சேர்ந்தாள் ஒலிவியா.மகிஷாவைக்ண்டவருக்கோ வெறுப்புத் தான் தோன்றியது "மகிஷா என்றவர் அவள் முன் கால் மேல் கால் போட்டு அமர்ந்தார்.அவர் தோரனையே ஒரு விதமாக இருந்தது. அவளும் அவரை நிமிர்ந்து பார்க்க" ஜோகித்த விட்டு விலகிக்க,நாளைக்கு வெடிங்குக்கு நீ வரக்கூடாது, ஜோவ விட்டு விலக உனக்கு எவ்வளோ என்றாலும் செட்டில்மென்ட் பண்றன் " என்றார். அவளோ அவனை புரியாத ஒரு பார்வை பார்த்தாள்.

மகியோ முற்றும் உடைந்து போனாள். இந்நிலை எல்லாம் ஜோகித்தால் தானே அவளும் சிறிது நேரம் அங்கிருந்தவள் வெளியேறி தங்களது அறைக்கு சென்றாள்.

அதேவேளை அர்ஜின் வழியை மறைத்தபடி வந்து நின்றாள் எமி அர்ஜுன் அவளை நிமிர்ந்து பார்த்தவன் என்ன எனும் விதமாக அவளை பார்க்க "அஜி ரொம்ப மெலிஞ்சிட்ட" என்றாள் அவனோ அவளை முறைக்க " என்னோட நம்பர அனபிளாக் பண்ணுங்க " என்றாள். அவனோ அப்போதும் எதுவும் பேசாமல் கைக்கடிகாரத்தை பார்த்தவன் "பேசியச்சா டைமாகுது" என்றான். அவனது உதாசினம் அவளை வலிக்கவே செய்தது. அவளின் கண்கள் கூட கலங்கி போனது. அவளின் கலங்கிய கண்களை கண்டவனுக்கும் ஒரு மாதிரியாகிவிட்டது.

" இங்க பாருங்க, இந்த லவ் எல்லாம் சரிவராது ஆல்ரெடி எனக்கு ப்ரொபோஸ் பண்ணி இருக்கு இப்படி மறுபடி பேசுறதெல்லாம் வச்சுக்காதீங்க" என்றான். அவ்ளோ அவனை வெறித்துப் பார்த்தவள் அப்படியே அங்கிருந்து தனது அறைக்குச் சென்றாள்.அர்ஜுனும் கலங்கிய மனதுடன் அங்கிருந்து அகன்றான். அப்போது. மியூசித்தில் விட்ட மகியைக் கூட அப்போது மறந்துவிட்டாள்.

இப்படியே மறுநாளும் அழகாக புலர்ந்தது மகியை ஒப்பனை கலைஞர்களுக்கு யார் செய்தனர்.

நயோமியின் பேச்சினால் அவளுக்கு மனதில் வலி எதுவும் பேசவில்லை அவள் ஏதாவது செய்து கொள்ள என அமர்ந்து விட்டாள் இயற்கையாகவே அழகி அவள் இப்போது பேரழகியாக தெரிந்தாள்.

அவளும் தயாராகி சர்ச்சிற்கு காரில் எலிசபெத்துடன் புறப்பட்டாள்.

சர்சில் இரு குழந்தைகள் மலர் தூவ அவள் ஜோவை நோக்கி வந்தாள் அவளைக் கண்ட ஜோகித்திற்கோ கண்களை விலக்க முடியவில்லை அவளது ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் மனதில் பாரம் ஏறியது.



சுற்றி பலர் இருந்தனர் ஆனால் ஜோ குடும்ப உறுப்பினரைத் தவிர யாரையும் அவளுக்குத் தெரியவில்லை.ஜோவை அடைந்ததும் அவளது கை பற்றி அவ் மேடையில் ஏற்றினான்.

ஆராதனை நிகழ்வு முடித்தும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் இருவரும் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து எல்ஷா ஒரு ட்ரேயில் மோதிரமொன்றை வைத்து நீட்ட ஜோ அவள் விழிகளைப் பார்த்தவாறு மென்மையாக அவள் வகைகளைப் பற்றி அணிவித்தான். அனைவரும் கைதட்டி உட்சாகமூட்டினர். அதனைத் தொடர்ந்து எமில்டாவும் மோதிரமொன்றை மகியிடம் நீட்ட அவளும் சிறு புன்னகையுடன் ஜோகித்தின் கரம் பற்றி அணிவித்தாள்.

அவள் உதடுகள் புன்னகைத்தாலும் அப் புன்னகை அவள் கண்களை எட்டவில்லை அதை ஜோ கண்டு கொண்டான்.

அதனைத் தொடர்ந்து ஜோவின் நண்பர்கள் மகிகக்கு முத்தமிட்டச் சொல்லி சத்தமிட மகியோ ஒருவித படபடப்பும் பயத்துடன் அவனைப் பார்க்க அவனும் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

அவளுக்கோ கூச்சம் ஒருபுறம் சங்கடம் ஒருபுறம் அனைவரும் வாழ்த்துக்களையும் பெற்றவள் தனது கையில் இருந்த பூங்கொத்தை வீச அது சரியாக எமியிடம் விழுந்தது அவளும் அதனைப் பிடித்தவள் பார்வை அர்ஜுனிடமே....

நயோமிக்கோ எதிலும் கலந்து கொள்ளவில்லை.

ஜோவும மகியும் காரில் புறப்பட்டனர்.

மகிக்கோ அச்சூழல மூச்சு முட்டுவதைப் போல் இருந்தது. விருந்தும் தடல்புடலாக பாலஸில் நடந்தது.

விருந்து பார்ட்டி என சில நாட்கள் சென்றன.ஜோகித்தும் மகியின் ஒதுக்கப் புரிந்தாலும் வேலைப் பளுவால் அவளிடம் சரியாக பேசக் கூட முடியவில்லை நயோமியைத் தவிர அனைவரும் மகிமை ஏற்றுக் கொண்டனர்.நயோமியோ மகிமை கானும் போதெல்லாம் முறைத்தபடியும் குத்தல் பேச்சுடனும திரிந்தார்.ஜோவும் அவரோடு பேசுவதில்லை ஆதலால் அவரது. அனைத்து கோபமும் மகியின் புறம் திரும்பியது

மகியோ எது பற்றியும் ஜோவிடம் சொல்லவில்லை நயோமியும் மகிமை திட்டத்தை யாரும் அறியாது பார்த்துக் கொண்டார். " ஹலோ ஒலிவியா லிசின் ஜோ உனக்கு வேணாமா? எத்தனை நாளைக்கு இங்க வராம இருக்கப் போற,அந்தப் பிச்சக்காரிய நான் விட்டத் தான் போறேன். ஜெசீனாக்கும் ஜோ மேல விருப்பம் அவ அப்பா கூட முன்ன அவளுக்கு ஜோவக் கேட்டார் அப்போ நான் அங்க பேசிக்கிறன்” என அமைப்பைத் துண்டித்தார்.

ஜெசீனா யாரும் இல்ல ஒலிவியா வின் தோழி தான். ஒலிவியா நயோமியின் பேச்சில் திகைதத்வள் மறு நிமிடமே பாலஸில் நயோமி முன் நின்றாள்.

நயோமியை அனைத்து அழுதாள் நயோமியும் தன்னில் இருந்து அவளை விலங்கியல் இப்படியே அழாம அவள் துரத்துர வழியப் பார்ப்போம் என்றார்.

அன்று ஜோதிடத்தின் பதவியேற்பு நாள் உலகின் எங்கெங்கு கிரேஸ் குடும்பம் இருக்கிறதோ அனைவரும் ஜோதிடத்தின் பதவியேற்பிற்கு பாலஸிற்கு வருகை தந்திருந்தனர்.

தந்தையின் இழிச் செயலிற்குப் பிறகு பாலஸில் இருந்து வெளியேறியவன் மீண்டும் எலிசபெத்தின் பேச்சுக்கிணங்க இதோ இன்று பதவியேற்கிறார்.

கறுப்பு நிற கோர்ட் சூட் அணிந்து தயாராகி அதே வேளை மகியும் தயாராகும் வ்னையே வெறித்தபடி இருந்தாள்.

அவள் மனமோ வேதனையில் உழன்றது. அன்பால் கட்டுவதும் அதிகாரத்தால் கட்டுவதும் வெறு வேறு அல்லவா,அன்பு எனும் பெயரில் அதிகாரத்தால் அல்லவா மகி கட்டுண்டு இருக்கிறாள்.
 

Advertisement

Advertisement

Back
Top