அவள் காதில் " பேபி" என கிசுகிசுப்பாய் அழைக்க படீர் என கண் திறந்தவள் தான் இருக்கும் நிலை அறிந்து "ஜோ" என சிணுங்கியபடி மீண்டும் அவனை அனைத்துக் கொண்டாள்.கொஞ்சலும் சீண்டலுமாக நீந்தியவர்கள் அன்றைய பொழுதை மகிழ்ச்சியுடன் கழித்தனர்.
ஜோவோடு இருக்கும் போது மகிழ்ச்சியாக உணர்ந்தவள் அவன் சென்றதும் தனிமையில் பல சிந்தனைகளும் சிக்கித் தவித்தாள்.
இவ்வாறே நாட்கள் செல்ல அன்று எமியுடன் பாலஸில் உள்ள தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தாள். படமும் முடிய இருவரும் அருகில் உள்ள மியூசியத்தினுள் நுழைந்தனர்." அப்போது அழகிய பெண்சிலையும் அதற்கு பச்சை மரகதக் கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணமும் அணிவிக்கப்பட்டிருந்தது. அதை வருடிப் பார்த்தவள் கண்ணில் விழுந்தது ஜோ வெயிட்டர் போல் ஆட்டையப் போட்ட நகை.
சில நாட்களுக்கு முதல் ஜோவுடன் பெருத்த வாக்குவாதம் ஏற்பட்டது. அவளும் "ஜோ க்யூன் ஆஃப் ஏசியா எப்படி இங்க" "அது எல்ஷன் தான் வாங்கினான் என்றான். அவளோ அவனை முறைக்க "உனக்கென்ன பிரச்சினை மகி எப்போ பார்த்தாலும் மூச்ச தூக்கி வச்சிட்டு இருக்க வெர்க் எல்லாம் முடிச்சிட்டு வார நேரம் நீயும் இப்படி இருந்தா எப்படி என அவன் சத்தமிட அவளும் கோபத்தில் " இந்த சிறைல இப்படி உயிரோடவாவது நடமாடுறன்னு சந்தோசப்படுங்க, வெளிய போனாலே உங்க அம்மா திருடி திருடினு சொல்றாங்க" என அவளும் சத்தமிட அவளது ஒற்றைக் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது.
அவனுக்கோ அதிர்ச்சி "என்னடி சொல்ற " அவனை முறைத்தாலே ஒழிய ஒன்றும் பேசவில்லை அவள்.
" மகி இப்போ சொல்லப் போறியா இல்லையா" என ஆக்ரோசமாக கேட்க அவன் ஆக்ரோசத்தில் ஓர் அடி பின்னே வைத்தவள் " எதச் சொல்லப் சொல்றீங்க என்ன அநாதை அநாதை என்று சொல்றதையா? இல்ல திருடினு சொல்றதையா? இல்ல உங்கள விட்டு போகச் சொல்லி டீல் பேசினாங்க அதையா? என அழுகையில் சொல்லி முடித்தாள். ஜோகித்தால் தாயா இப்படி மனம் போகப் பேசுவது என்பதை நம்ப முடியவில்லை " அவளையே பார்க்க, அவன் பார்வையில் விரக்தியாய் சிரித்தவள் " சந்தேகம் என்னடா எமிட கேளுங்க " என்றாள்.
" ஹேய் அப்படி இல்லடி" என அவள் கையைப் பிடிக்க அவள் கையை தள்ளி விட்டவள் பால்கனிக்கு சென்று நின்று கொண்டாள். அவனுக்கோ குற்றவுணர்வாகிப் போனது அவளது சந்தோசத்தை கெடுத்து விட்டோமோ என்று.
அவள் சொன்னவை பாதி தான் சிந்தையில் ஆழ்ந்தவன் மனதில் சில முடிவுகளை எடுத்துக் கொண்டான்.
அதே மீண்டும் அறைக்குள் வந்த மகியோ " ஜோ" என்ன சென்னைல விடுறீங்களா?" எனக் கேட்க, அவளின் மனநிலை அவனுக்குத் தெளிவாகத் புரிந்தது."பேபி கொஞ்ச நாள் பொருத்துக்க எல்லாத்தையும் சரி பன்ரன்" என்றான்.
அவளோ விரக்தியாக சிரித்தவள் அவனோடு பேசுவதையும் குறைத்துக் கொண்டாள். பேசினால் பிரச்சினையும் மனக் கஷ்டமும் தானே மிச்சம்.
அதே வேளை மியூசியத்தில் இருந்தவளும் அதனை சுற்றிப் பார்க்க , அதே வேளை அங்கு வந்த நயோமியும் அவள் பார்த்த மரகதக் கல் பதித்த மாலையைக் கண்டவர் மனதில் ஒரு எண்ணம் பிறக்க , அவளை நக்கலாகப் பார்த்தபடி எமியும் பேசிக் விட்டு அங்கிருந்து அகன்றார்.
ஜோகித்தும் எல்ஷனும் அவர்களது இராணுவ முகாமிற்கு சென்றிருந்தனர். அதே வேளை மதிய உணவு வேளையில் எலிசபெத் பாட்டியும், மர்தாவும் , நயோமியும் ,பெட்றிக் , மற்றும் எலிஷாவும் உணவுண்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு பரபரப்புடன் வந்து சேர்ந்தார். மியூசியத்திற்குப் பொறுப்பதிகாரி , அனைவரும் உணவுண்பதைப் பார்த்தவர் தயக்கத்துடன் தள்ளி நின்று கொண்டார்.
அனைவரும் உணவுண்டு எழுந்தனர் ஜோகித் இருந்தால் மாத்திரமே மகி அனைவரோடும் உணவுண்ண வருவாள் இல்லையேல் வரமாட்டாள். நயோமியின் குத்தல் பேச்சால். சில வேளைகளில் எலிசபெத் பாட்டி அழைப்பார் அப்போது வருவதும் உண்டு. இன்றும் அவர் அழைக்க "சாரி பாட்டி ஆன்லைன்ல வேலை செய்துட்டு இருக்கேன் இன்னும் முடியல" என்றாள் தயக்கமாக அவரும் " சரிடாமா" என்றார்.
அங்கு பரபரப்புடன் டென்ஷனாக இருந்த மியூசியப் பொறுப்பதிகாரியைக் கண்ட பெட்றிக் " என்ன ரோகான் எனிதிங் ப்ராப்ளம்?" " எஸ் சார் என்றவன் தயக்கத்துடன் மியூசியத்துல இருந்த மரகத மாலையக் காணல சார் " " வாட் எப்படி காணமப் போச்சி " என சத்தமிட்டார். ரோகானோ தலை குனிந்தபடி "தெரியல சார்" அதோட அந்த ஜுவல் போட்டிருந்த சிலையும் டேமேஜ்ஜாகியிருக்கு " என்றான் உள்ளே போன குரலில் பெட்றிக்கின் சத்தத்தில் அனைவரும் அங்கு ஒன்று கூடி விட்டனர்.
அனைவருக்கும் இச் செய்தி ஆச்சரியமே "யாரு அங்க வந்தது" அவரோ எமியை பார்த்தவர் " எமிஷா மேடமும், மகிஷா, மேடமும் என்றான்.
எமியும் "ஆமா ஆங்கிள் நாங்க அங்க போனம். அவர் சொல்ற ஜுவஸ்ஸையும் பார்த்தோம் " என்றாள். அவள் குரலில் பயமோ எதுவுமில்லை அப் நகையை எடுக்க வேண்டிய தேவையும் இல்லையே அவள் கேட்டாள் அதை விட பல மடங்கு விலையுயர்ந்த பொருளை அவள் தந்தை வாங்கிக் கொடுப்பார்.
தந்தை என்றில்லை பெட்றிக்கும் வாங்கிக் கொடுப்பார் அதே வேளை அல்வினோவும் லிடியாவும் ,ஒலிவியாவும் அங்கு வந்து சேர்ந்தனர். அனைவரும் ஒன்றாய் இருப்பதைக் கண்டவள் எலிஷாவிடம் " என்ன" என சைகையில் கேட்க அவளோ விடயத்தை சொல்ல அருகில் நின்ற ஒலிவியாவோ " ஆண்டி நீங்க மகிஷா திருடினு சொன்னப்போ நம்பிக்கை குறைவு ஆனா இவ இப்படி பண்ணுவானு நினைக்கவேயில்லை என்றார்.
அவளின் புறம் பார்வையைத் திரும்பிய எலிசபெத் " வாட் டிட் யூ சே ஒலிவியா? " யா க்ரேன்மா மகி ஒரு திருடி, என்ன ஆண்டி க்ரேன்மாட்ட சொல்லையா?” என்றாள். அல்வினோவோ தங்கையை அடக்க முயன்று தோற்றான்.
அதே வேளை மகியோ சமீப நாளாக தலை சுற்றலும் உணவில் விராப்பமில்லாமலும் இருக்க தலை வேறு பாரமாக இருக்கும் லாப்டாப்பை மூடியவள் இருக்கையில் சாய்ந்து கொண்டாள். படீரென கண்ணைத் திறந்தாள் அலைபேசியில் காலண்டரை எடுத்து பார்த்தவள் யோசனையோடு இருந்தாள்.
அப்போது அவ்வறையில் இன்டர்காம் அழைக்க அழைப்பை ஏற்க பாட்டி தான் அழைத்திருந்தார் " அவர் என்ன சொனனாரோ இதோ வாரன் பாட்டி” என்றவள் அவர்கள் நின்ற இடம் நோக்கிச் சென்றாள்.
எல்லாரும் அங்கு நிற்பதைக் கண்டவள் யோசனையோடு வர " மரகத மாலை எங்க " என்றார் நயோமி அவளோ நயோமியை புரியாமல் பார்த்தபடி பாட்டியைப் பார்க்க அவரோ "நயோமி கொஞ்சம் பேசாம இரு" என மருமகளை அடக்கியவர்.
மகியிடம் எப்படி இதைக் கேட்பது என தவித்துப் போனார் அதே வேளை பேரனின் கோபம் அறிந்தவரால் எப்படி அவனிடம் சொல்வது என அவ் வயோதிபப் பெண்மணி இதனை மனதில் அசைபோட இது எதுவும் எனக்கு இல்லை என்பது போல் " அத்த என்ன தயக்கம் ,இது நம்ம கிரேஸ் ஃபேமிலி பக்கம் போனா குடும்ப மானம் தான் போகும் வார கிழமை மியூசியத்த ஃப்ரீயா திறக்கம் என்றார்.
" எமியோ அண்ணி மியூசியத்தில இருந்த மரகத மாலையக் காணல என்றாள். மகிக்கோ ஒருநிமிடம் ஒன்றும் புரியவில்லை " அப்படினா தன்ன சந்தேகப்பட்டா பாட்டி கூப்பிட்டாங்க ? அதே வேளை நயோமியோ தராதரம் தெரியாமல் கட்டிக்கிட்டான் திருடின நகை எங்க என வார்த்தையால் நஞ்சைக் கக்கினார். இதெல்லாம் "அவளுக்கு புதிஷா என்ன" எனக் கேட்க பாட்டியோட ஒலிவியாவை முறைக்க
கிழவி முறைக்குது என ஜெர்க்கானவள் அதன் பிறகு ஒன்றும் பேசவில்லை.
நயோமியின் பேச்சில் உடைந்து போனவள் ஒலிவியாவின் பேச்சில் கண்கள் கலங்க நின்றாள்.சில விநாடியில் இருட்டில் கொண்டு வர அப்படியே சோஃபாவைப் பற்றி தடுமாற விடியாவோ அவளைப் பிடித்துக் கொள்ள அப்படியே மயங்கி விட்டாள் " அண்ணி அண்ணி எனப் பதறி மகியின் கன்னத்தைத் தட்ட ,அவள் எழவில்லை.
பாட்டி கூட பதறிவிட்டார். ஆனால் ஈவிரக்கமற்ற நயோமியோ " மாட்டிகிடோம்னு படிக்கிறாள்." என்றார். மர்தாவே நயோமியை அற்பமாகப் பார்த்தவர் டாக்டரை வரவழைக்க அவரும் சிறிது நேரத்தில் வந்தவர் மகியை பரிசோதித்தவர் " மேடம் கிரேஸ் ஃபேமிலிக்கு நியூ மெம்பர் வரப் போறாங்க " என்றார். எலிசபெத் பாட்டிக்கோ மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
மேடம் ரொம்ப வீக்கா இருக்காங்க இந்த மெடிசின்ன கொடுங்க என்றவர் அதனை நயோமியிடம் கொடுத்து விட்டு வெளியேளினார்.
ஒலிவியாவிற்கோ தாங்கவே முடியவில்லை அவளும் அங்கிருந்து வெளியேறி விட்டாள்.நயோமிக்கோ முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
அதே வேளை சிறிது நேரத்தில் மகியும் கண்விழிக்க " வாழ்த்துக்கள் அண்ணி " என எமியும் எல்ஷாவும் வாழ்த்தினர்
பாட்டியும் " கவனம்டா ரொம்ப வீக்கா இருக்க" என்றவர் அவளை அனைத்து விடுவித்தார்.
மர்தா லிடியா கூட அவளுக்கு வாழ்த்தை தெரிவித்தனர் நயோமியோ மீண்டும் மரகத மாலையைப் பற்றித் தொடங்க " நயோமி சட்அப் நான் இந்தப் பார்த்துக்கிறேன் " என்றார். எலிசபெத்தின் கோபம் பற்றித் தொரிந்ததால் அவர் அங்கிருந்து அகன்றார். எஞ்சியிருந்த து மர்தாவும் எலிசபெத்தும் தான்.
பெட்றிக்கும் மியூசியப் பொருப்பாளருடன் சென்றிருந்தார்.
" பாட்டி " என கலக்கமாய் அழைத்தவள் " நான் எதையும் திருடல பாட்டி ,என்ன நம்புங்க நானும் எமியும் போனம் சுற்றிப் பார்த்துடு லைப்ரரிக்குப் போயிட்டம்" என்றாள். அவரும் " சரிவிடுமா" என்றவர் எப்படி உடலை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றிப் பேசினார்.
அவளும் சோர்வாய் எழுந்தவள் லிஃப்ட்டின் மூலம் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
" அம்மா மகிட கண்ல பொய் இல்ல, ஆனா நயோமி அண்ணி சொல்றதும் முரணா இருக்கு என்றாள். " எலிசபெத் பாட்டியும் " ம்ம் பார்ப்போம்" என்றார்.
மியூசிய அதிகாரியுடன் வந்த பெட்றிக் " ரோகான் சிசிடிவி புட்டேஜ் எல்லாம் பார்ப்போம் என்றபடி சிசிடிவி கட்டுப்பாட்டு அறையினுள் நுழைந்தார்.
அனைத்தையும் செக் பண்ண மகியும் எமியும் உள்ளே செல்வதும் சிறிது நேரத்தில் வெளியேறுவதும் இருந்தது . அவரும் யோசனையுடன் பார்ப்போம் " என்றார்.
அதே வேளை எமியும் ஜோகித்திற்கு அழைத்துச் சொல்லியிருந்தாள். அவனும் முகம் இறுக இராணுவ முகாமில் இருந்து வெளியேறியிருந்தான்.
Last edited:
