ஹார்ட் பீட் திருடன் – 26

Advertisement

daya

Member
Member
WhatsApp Image 2026-02-21 at 09.23.27.jpeg

ஹார்ட் பீட் திருடன் – 26



"ஹலோ ஈடன் ஸ்பிக்கிங்" மறுபுறம் ஒரு நிமிட மௌனத்தின் பின் " யா சொல்லுங்க சார்” “நேர்ல மீட் பண்ணலாமா" " சோர் சார்" என்றான் அர்ஜுன்.

இருவரும் ஒரு ஐந்து. நட்சத்திர ஹோட்டலில் சந்தித்துக் கொண்டனர்." நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல,ரெண்டு பேரும வல் பண்ணுறீங்கனு எமி சொன்னா" அர்ஜுனுக்கோ எமி மேல் கோபம் தான் வந்தது. அவனுக்கோ அவளை விட்டு கொடுத்து பேசினால் அதனால் அவள் பாதிக்கப்படுவாள் அதே வேளை ஈடன் என்ன நினைத்தார் எதுவும் புரியவில்லை.

" எனக்கு அவ சந்தோசம் தான் முக்கியம், எப்போ வெடிங் வச்சுக்காலாம்” என்றார். ஈடனின் அணுகுமுறை அர்ஜுனுக்கு பிடித்துப் போகவே “வீட்ட முறையாக பேசுவோம் சார்” என்றான்

தன்னை துரத்தித் துரத்தி காதலித்தால் யாருக்கு தான் பிடிக்காது. அர்ஜுனும் ஏற்றுக் கொண்டான்.

அதைத் தொடர்ந்து ஒரு மாதத்தில் எமி அர்ஜுன் திருமணம் கோயிலிலும் சர்ச்சிலும் வெகு விமர்சையாக நடைபெற்றது. நண்பனின் திருமணத்தில் கலந்து கொண்டாலும் ஜோவின் பார்வையில் உயிர்ப்பே இல்லை. ஜோவை நயோமி எவ்வளவு நெருங்க முயற்ச்சிதுதும் அவரை எட்டவே நிறுத்தினான். எலிசபெத்தோ முதுமையின் பிடியில் தளர்ந்து போனார்.தனது பேரனின் வாழ்வினை எண்ணி கவலை கொண்டார்.தனது வாழ்நாளில் நயோமியை தெரிவு செய்ததை பெரும் தவறாக எண்ணியவர் அதன் பின் நயோமியை தவிர்க்கத் தொடங்கினார்.

எமி சென்னைக்கு கிளம்பும் முன் ஜோகித்தை சந்தித்தாள். “அத்தான் அம்மாட மகிய பற்றி கேட்டுப் பாருங்க , அவங்களுக்கு சில வேளை தெரிஞ்சிக்க வாய்ப்பிருக்கு கொஞ்ச நாளா அம்மாட ஒட்டிகிட்டா” என்றவள் அர்ஜுனோடு புகுந்த வீட்டிற்க்குப் புறப்பட்டாள். அவளுக்கு அர்ஜுனோடு கோபம் இருந்தாலும் அதை விட காதல் அதிகமாக இருந்தது..

மர்தாக்கோ மகளைப் பிரிவு ,வலி ,இருந்தும் அவளது வருங்காலம் காத்திருக்க ,அவளை அனைத்து வழியனுப்பி வைத்தார்.

" அத்த உங்க கூட பேசனும்" என்றான். கண்களைத் துடைத்த மர்தாவும் " சோர் ஜோ , ஈவினிங் வெளிய போவோம்” என்றார். அதன் படி அன்று மாலை மர்தாவை அழைத்துக் கொண்டு ஒரு காஃபி ஷாப்பிற்கு போனான்.

நீண்ட நாளைக்குப் பிறகு மர்தா வெளிச் சூழலை உணர்ந்தார். இருவருக்கும் காஃபியை ஆடர் செய்த ஜோ " அத்த மகி எங்கயிருக்கா?" எனக் கேட்க அவரும் அவள் பட்ட கஷ்டத்தை நேரில் பார்த்தவராகிட்டே “ஜோ மகி இங்க சாப்பிடவே பயந்தா" அவ மூனு வேளை சாப்பாடே ஃப்ரூட்ஸ் தான். மனசே ஆறல்ல தாய்க்கு உதவிய பணியாளர்கள் இன்று பிச்சையெடுக்கும் நிலையில் உள்ளனர்.ஆனால் தாய் ? “ஜோ எனக்கு உன்லான் செம கோபம் அவள எப்படி இந்தளவுக்கு கவனிக்காம விட்ட நீ"

மூன்று மணித்தியாலங்கள் காத்திருந்தது இலங்கைக்கு வந்து சேர்ந்தாள் மகி. மன அமைதியை வேண்டி மத்திய மலைநாட்டில் வந்ததவள் ரம்புக் கலவில் சிறிய வீடொன்றில் வாடகைக்கு தங்கிக் கொண்டாள்.அந்த வீட்டில் ஒரு வயதான அம்மா மட்டுமே அவரும் தேயிலைக் கொழுந்து பறித்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தன் வாழ்க்கையை நடத்தினார். மகி வீடு வாடகைக்கு தேடி அலையவே அவளது மேடிட்ட வயிற்றையும் பார்த்தவர் தன் வீட்டை வாடகைக்கு கொடுத்து அவளைப் பார்த்துக் கொண்டார்.

அவரும் மகிமை நன்றாகவே பார்த்துக் கொண்டார். " உன் புருஷன் எங்கம்மா?" " மகியோ தன் வேதனையை அடக்கியவள் “அவர் வெளிநாட்டுல பாட்டி சரிமா" என என்றாள் இரு அறைகளைக் கொண்ட அவ் வீடு அவர்களுக்கு மோதுமானதாகவே இருந்தது. மகியும் ஆன்லைனில் வேலை செய்வதால் கனிசமான தொகை கையிருப்பில் இருந்தது..

நாட்கள் மாதங்களாகச் செல்ல அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள் மகி குழந்தைக்கு " ஆதவ்" என பெயர் சூட்டியவளுக்கோ குழந்தையே எல்லாமாகிப் போனது.

ஜோவின் ஞாபகம் வரும் போதெல்லாம் கண்ணீரில் கரைவாள் " என்னம்மா புள்ளையும் பொறந்துட்டு இவன் அப்பன் இன்னும் வரல " லீவு கிடைக்கல பாட்டி என்பாள். அவள் ஜோவின் புகைப்படத்தை அவன் முன்னர் பேசிய காணொளிகளை பாட்டிக்கு காட்டினாள் அதனால் அவரும் அதன் பின் ஜோ பற்றிக் கேட்கவில்லை.

அவளைத் தேடி அவன் பயணம் தொடர்ந்தது எலிசபெத்தும் மருமகளின் மறுமுகம் தெரிந்ததால் நயோமியும் அடங்கி ஒடுங்கிப் போனாள்.

அனைவரிடமும் ஒதுக்கம் தனிமை, அவரை தன் பிழைகளை நெற்றிப் பொட்டில் அடித்தது.

மகியும் வேறு கம்பனியில் வேலையைத் தொடர்ந்தாள். நாட்களும் செல்ல ஜோகித்தின் தேடலுக்கு ஒருவாறு பலன் கிடைத்தது. அவள் வேலை செய்யும் புதிய கம்பனியின் தகவல் கிடைக்கவே அவனோ விரக்தியாக சிரித்துக் கொண்டான்.அது அவனது சாஃப்ட் வேர் கம்பனியில் தான் அவள் ஆன்லைன் வேலை செய்து கொண்டிருந்தாள் ஊர் உலகமெல்லாம் தேடியவன் சொந்தக் கம்பனியை பார்க்க வில்லை. அவனும் தனது பயணத்தை இலங்கையை நோக்கி தொடர்ந்தான். “ஹலோ அர்ஜுன் நாளைக்கு இலங்கைக்கு போறன்டா " என்றான். நண்பனின் கவலை தோய்ந்த குரலில் அவனது மனநிலை அறிந்த அர்ஜுன் “மச்சி இலங்கைல கண்டுபிடிச்சிடலாம்” என்றான்.

அதே வேளை அர்ஜுனும் ஜோகித்தும் இலங்கை வந்து சேர்ந்து இரண்டு நாட்களாகின அவள் புகைப்படம் மற்றும் அவள் பற்றிய தகவலைக் டிடெக்டிவ்விடம் கொடுத்து விசாரிக்க அவர்களும் அவள் இலங்கையில் ஃப்ளைட் மாறி வந்தது முதல் அவள் தற்போது இருக்கும் இடம் அவரை தகவல் வழங்கினர்.



இருளாக இருந்த ஜோகித்திற்கு ஒளி வெளிச்சக்கீற்றாய் அவை இருந்தன டிடெக்டிவ் கொடுத்த தகவலின் படி அவள் இலங்கையில் ரம்புக் கல எனும் இடத்திற்கு பயணமாகினர்.

அன்றைய காலைப் பொழுது தூறல் மழையுடன் இனிதே புலர்ந்தது. நேரம் ஆக ஆக மழையும் வலுக்கத் தொடங்கியது காரில் இருந்த ஜோவும் அர்ஜுனும் ஓர் இடத்தில் காரை நிறுத்தினர்.

" மச்சி செம் ப்ளேஸ்டா " என்றான். ஜோவும் " ம்ம்” என்றான் மகியைக் கானும் பரவசத்துடன். அடிக்கடி டிடெக்டிவ் கொடுத்த மகியினதும் அவனது குழந்தையினதும் புகைப்படத்தை பார்த்துக் கொண்டான்.

"மழை தான் விடுதில்ல ரோட் கூட தெரியல " என்றான் அர்ஜுன் “மழை விடட்டும் போவோம்” என்றான் ஜோ.

சற்றுத் தள்ளி ஒரு ரோட்டோர பெட்டிக் கடையில் சோளன் அவித்துக் கொண்டிருந்தனர்.கையில் குடையுடன் காரில் இருந்து இறங்கிய ஜோ அவித்த சோளனை வாங்கிக் கொண்டு தான் வந்தான்.

இரத்தினபுரியில் அவனும் மகியும் சுடச்சுட சோளன் சாப்பிட்ட ஞாபகம் அவனுள்....

மகியோ மனதில் ஒருவித படபடப்புடன் தான் இருந்தாள் ஏன் இப்படி இதயம் துடிக்கிறதென்று அவளுக்கும் தெரியவில்லை...

மகினை தோளில் தட்டி தூங்க வைத்தவள் சோவெனப் பெய்யும் மழையைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“மகிஷாமா நாளைக்கு டவுனுக்கு போகனும் நிவாரணத்துக்கு பதியுராங்களாம், பக்கத்து பாக்கியம் புள்ள போறா நானும் நாளைக்கு போயிட்டு வாரன்" என்றார். "சரி பாட்டிமா "என்றாள்.

மகி அவருக்கு பணமாய் உதவி செய்தாலும் தனக்கென எதையும் வைக்காது உதவியென கேட்பவருக்கு கொடுத்து விட்டு சென்றுவிடுவார் அவர்.

மழை குறைந்ததும் ஜோகித்தும் அர்ஜுனும் அங்கு நகரிலேயே அறை எடுத்துத் தங்கிக் கொண்டனர்.

மறு நாள் காலை எட்டு மணி இருக்கும் மழையும் விடாமல் பெய்து கொண்டிருந்தது. இக்குளிருக்குப் பழக்கப்படாத இருவரும் போர்வையில் பதுங்கியிருந்தனர் கொஞ்சமாக ஜன்னலால் வெளிச்சக் கீற்று வரவே ஜோகித் சோம்பல் முறித்தபடி எழுந்தமர்ந்தவன் அர்ஜுனையும் எழுப்பினான்

ஜோகித் குளிக்கச் செல்ல அர்ஜுன் எமியுடன் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான். மழை அதிகமாகப் பெய்வதால் அவர்களால் வெளியே செல்ல முடியாத நிலை.

வெளியே பரந்து விரிந்த இடமெல்லாம் பச்சைப் புல்வெளிகள் அதில் மழைத்துளிகளைக் காண்பது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது தூரத்தே மலைகள் கூட புகை விடுவது போல் தோண்றியது மேகம் கடந்து செல்லும் காட்சி.

அன்று பூராக மழை பெய்து மாலை வேளையில் தான் சற்று இடைவெளி கொடுத்தது. அப்போதும் தூறல் போட்டபடி தான் இருந்தது.

வெளியே வேடிக்கை பார்த்தபடி நின்ற ஜோவின் கண்ணில் விழுந்தது அக் காட்சி.

வயதான பாட்டியொருவர் தன்னால் தூக்க முடியாமல் ஒரு பையைத் தூக்கிச் செல்லும் காட்சி தான்.

என்ன தோன்றியதோ அவரருகில் சென்ற ஜோ "பாட்டிமா நான் உதவி செய்ரன் பையத் தாங்க" என்றான்.அவரிடமிருந்து பையை வாங்கியவன் பஸ் ஸ்டாண்டில் கொண்டு வைத்தான்.

தம்பி " உன்ன எங்கயோ பார்த்திருக்கன்,அவனோ சிரித்தபடி எதுவும் பேசவில்லை அவன் திருப்பும் போது " நீ மகிஷா பொண்ணுட புருஷன் தானே" அவனுக்கோ மகிஷா என்ற வார்த்தையை கேடட்தும் உடம்பெல்லாம் புல்லரித்தது போல் இருந்தது.

அவனோ ஆச்சரியமாக " ஆமா பாட்டி " “ஓஓஓ அவ சொன்னா வெளிநாட்டுல இருக்கனு , அப்படியே வெள்ளக் காரத்துர தொர போலான் இருக்க"

அவனோ மென் புன்னகையுடன் அட்ரஸ் தேடித் தான் வந்தேன் இருங்க வாரன் என்னோட ப்ரணடும் வந்திருக்கான சாப்பிடுறான் கூட்டித்து வாரன் மூனு பேரும் போவோம்" என்றான். அவரும் "சரி ராசா" என்றார்.

அவனுக்கோ அப்படி ஒரு சந்தோசம். "அர்ஜுன் மகி இருக்கிற இடம் தெரிஞ்சிட்டு " என்றான். அர்ஜுனை அழைத்துக் கொண்டு பாட்டியையும் காரில் ஏற்றிக் கொண்டு ஜோகித் மனங் கவர்ந்த திருடியைத் தேடிப் புறப்பட்டான்.

அதே வேளை மகிஷாவோ தூங்கும் மகனின் தலையை வருடியபடி யோசனையில் இருந்தாள். சில நாட்களாக அவளுக்கு இதயத் துடிப்பு அதிகரிப்பது போல் இருந்தது. அப்போதெல்லாம் ஜோகித்தின் ஞாபகம் அழையாமல் வந்து கொள்ளும். ‘என்ன பாட்டிய இன்னும் காணல’ என யோசனையுடன் பக்கத்து வீட்டிற்கு சென்றாள் கேட்கும் பொருட்டு.

" கண்ணு உன் பையன் அப்படியே உன்னப் போலான்" ஜோகித்திற்கோ உடல் சிலிர்த்து அடங்கியது. அவர்கள் செல்லும் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் வாகனம் செல்ல முடியாத நிலை ஜோவும் அர்ஜுனும் கீழே இறங்கி விசாரிக்க நாளை தான் பாதை சரியாகும் என்றனர். ஜோவிற்கோ இப்போதே அங்கு செல்ல மனம் பரபரத்தது.

“கண்ணு என்னாச்சு” “மண் சரிஞ்சிருக்காம் பாட்டி, ஓஓஓ அதான் பஸ் கூட வரல போல. இங்கண தான் தங்கணும் “ அவனும் ஏமாற்றத்துடன் மீண்டும் அவர்கள் தங்கிய ஹோட்டலிற்கு வந்தனர். பாட்டியும் அவர்களுடன் வந்தவர் " கண்ணு நான் அங்க தங்குரன் என சற்றுத் தள்ளி இருநத் வீட்டைக் காட்டியவர் "வெள்ளன வாரன்'' என்றபடி அங்கிருந்து அகன்றார்.​
 

Advertisement

Advertisement

Back
Top