ஹார்ட் பீட் திருடன் – 27
“ஜோ யாரு இந்த பாட்டி " ஜோவும் டிடெக்டிவ் கொடுத்த தகவலை வைத்து மகி இவங்க கூட தான் தங்கியிருக்காள்" என்றான்.
நள்ளிரவு ஒன்று முப்பது மணியளவில் மழையோ அடித்துப் பெய்தது.சோவென பெரும் சத்தம் எங்கிலும்.
மாலை போல் பக்கத்து வீட்டிற்கு சென்று டவுனுக்கு போனவர்கள் பற்றி மகி கெட்க பாதை மூடப்பட்டிருப்தாக கூறினர். பாட்டியும் தகவல் சொல்லி அனுப்பியதால் அவளும் சற்று நிம்மதியுடன் தான் இரவுணவை உண்டு விட்டு மகனுடன் தூங்கினாள்.
மழையின் சத்தத்தில் கண்விழித்த மகி கட்டிலில் இருந்து நிலத்தில் காலை வைக்க காலோ சில் என்று குளிர் ஏறியது மகனை தூக்கித தோளில் போட்டபடி கதவைத் திறந்தவளுக்கோ பேரும் அதிர்ச்சி ஆங்காங்கு மலைச் சரிவுகள் விழுந்து கொண்டிருந்தன.
காலையில் கண்விழித்த ஜோவுக்கோ மனமெல்லாம் ஒரு வித சோர்வு ஹார்ட் பீட் வேறு தாறுமாறாக துடித்தது. மனதிலும் ஒருவித படபடப்பு அப்படியே எழுந்து குளித்து தயாராகும் போது கதவு படபட என கட்டப்பட்டது. பாட்டி வந்திருக்காங்க போல என்றவன் ஷர்டை போட்டுக் கொண்டு கதவைத் திறக்க " கண்ணு அங்க மண்ணுசரிஞ்சு போயிருக்காம தெரசா வா போகலாம் என அவசரப்பட்டுத்தினார். ஜோவுக்கோ மூச்சே நின்றது போலானது. 'தனக்கான சோதனை இன்னும் முடியலப் போல' அர்ஜுனும் பதறி வர மூவரும் காரில் புறப்பட்டனர்.
நேற்று மண்சரிந்த பாதை வாகனம் போகுமளவுக்கு சரி செய்யப்பட்டிருந்தது. காரும் ஒரு எல்லைக்கப்பால் நிறுத்திவிட்டு மூவரும் இக்ஷஙக்இ பாட்டியின் வீட்டை நோக்கி ஓடினர். வீடு இருந்தால் தானே " ஐயோ ஏன் கண்ணு" என வாய்விட்டுக் கத்தினார் பாட்டி ஏனெனில் பசுமையாக காட்சியளித்த மலைப்பகுதி ஒரு பெரிய காமத்தைப் போல செம்மண் குவியலாக காட்சியளித்தது. வீடுகள் இருந்த இடமே இல்லை
களிமண்ணும் பாறைகளும் மூடியிருந்தன. எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாக சிதைந்த பொருட்களும் மரங்களும் சிதறிக் கிடந்தன கண்ணுக்கெட்டிய தூரம் அவரை குடியிருப்புக்களே தெரியவில்லை அக்கம் பக்கத்து மக்களும் அங்கு கூடினர். தொடர் மழையால் பாதைகள் மூடப்பட்டதால் மீட்புப் படையினர் செல்வ பல மணிநேரம் எடுத்தது.
பாட்டி வீடு இருந்த இடத்தை கையால் தோண்ட ஜோகித்திற்கோ மண்ணில் கைகளை குற்றி மகி என கத்தினான். அவன் இதயத்துடிப்பு நேரம் செல்லச் செல்ல அதிகரித்து அவனேக்கோ மூச்சு வாங்கியது. அவன் கத்திய சத்தம் அவளுக்கு கேட்டது போலும் அவளது இதயத்துடிப்பும் மீள ஆரம்பித்தது.
அர்ஜுனும் இடர் பற்றி அறிவிக்க பல இடங்களில்,நாடுகளில் இருந்தும் மீட்புக குழுவினர் வருகை தந்தனர். பாட்டி கதருவதைக் கண்டு மீட்புப் படையினர் சிலர் வீட்டின் மேல் மூடப்பட்டிருந்த மண்ணை அகற்ற அகற்ற வீட்டில் இருந்த பொருட்கள் வெளியே வந்தன. மகியும் மகனும் அனைத்தபடி இருக்கும் ஃப்ரேம் செய்யப்பட்ட பெரிய புகைப்படமொன்று வெளியே வந்தது.
அதை நெஞ்சோடு அனைத்துக் கத்தியவனின் அழுகை கல் மனதையும் கரைத்து விடும்
இதுக்கு மேல மண் எடுக்க ஏலாது என்றனர்.ஆம் மண்ணின் ஆழம் அதிகமாக இருப்பதால் புதையுண்டவர்களை மீட்பது பெரும் சவாலாக உள்ளது.
மண்சரிவில் இருந்து மீண்டவர்கள் மருத்துவ முகாம்களுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர். அதே வேளை கை,கால்களை குறுக்கிக் கொண்டு மருத்துவ முகாமில் அழுது கொண்டிராந்தான் இரண்டே வயதான ஆதவ்.
" ஜோ" என அவனின் முதுகில் கை வைத்தான் அர்ஜுன். ஜோகித்தோ பித்துப் பிடித்தவன் போல் இருந்தான். அவனை உலுக்கிய அர்ஜுன் ஜோ மெடிகல் கேம்ப்பில பார்க்கலாம் வா" அவனை இழுத்துச் சென்றான்.
அழுதழுது கண்ணீர் வற்றியே விட்டிருந்தது ஜோவிற்கு .இத்தனை வருடம் கழித்து அவள் சிதைந்த உடலையா காண வேண்டும் அங்கும் இங்கும் திரிந்த பாட்டியோட ஆதவ்வை கண்டு கொண்டவர் " ராசா" என அவனை அனைத்து அழுதவர் " அம்மா எங்க கண்ணா " குழந்தையும் பாட்டியைக் கண்டு அழுத் தொடங்கியது. " ம்மா ம்மா " என்றதே தவிர எதுவும் சொல்லவில்லை.
பாட்டியை அடைந்த ஜோ ஆதவ்வை கண்டதும் அவனால் நிலை கொள்ளவே முடியவில்லை அவன் பிஞ்சுக் கை கால்களில் எல்லாம் சிராய்ப்புக் காயங்கள்.. "ராசா மகிஷா பொண்ணு பார்த்துடு வாரன்"
என ஆதவ்வை அவன் கைகளில் கொடுத்து விட்டு தூறல் மழையிலும் வெளியேற அவனுக்கோ மகி ஆதவ் மேல் அவர் கொண்ட அன்பு புரிந்தது.
அர்ஜுனும் அவருடன் செல்ல ஜோகித்தின் கழுத்தைக் கட்டிய ஆதவ்வும் அழுதபடி இருந்தான் தாயைத் தேடி ஜோவுக்கும் மதியின் எண்ணம் தான். ஆதவ்வின் சிராய்ப்புக் காயத்திற்கு மருந்திட்ட ஜோ குழந்தையும் சிணுங்கிச் சிணுங்கி அழுதபடி இருந்தது. போலும் சிலர் மெடிகல் கேம்ப்பில் இருந்தவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் கொடுத்தனர். ஜோவும் பிஸ்கட் பாக்கெடை வாங்கியவன் மகனிற்கு கொடுக்க அந்தப் பிஞ்சும் அதைக் கொறித்தபடி அவன் மடியிலேயே இருந்தது. ஆதவ்வின் கண்களிலோ மிதமிஞ்சிய பயம் ஜோவினை இன்னும் ஒட்டி அமர்ந்த ஆதவ் " ப்பா" என்றான். ஜோவினால் அக் கனத்தை தாங்கவே முடியவில்லை " அப்பா தான்டா உன் அப்பா தான் " என அவனை அனைத்து முத்தமிட்டான்.
அதே வேளை இராணுவத்தினரின் தீவிரமான மீட்புப் பணியில் ஈடுபட்டனர் மகனை அனைத்த ஜோவின் பார்வையில் விழுந்தது என்னவோ இராணுவத்தினர் தூக்கி வந்த மகியின் உடல் .
ஜோவோ மூச்சுப் பேச்சின்றி மகி என்றபடி மகனைத் தூக்கிக் கொண்டு அவள் உடலருகே வர சார் அவங்ளுக்கு ஒன்னுமில்ல பல்ஸ் இருக்கு என அவனை விலக்கிவிட்டு மருத்துவ முகாமில் அவளை சேர்த்தனர். அவளும் இரு நாட்கள் கழித்தே உணர்விற்கு வந்தாள்.ஆனால் உடல் முழுக்க காயமும் சேருமா இருந்தாள் பாட்டியும் ஜோகித்தும் அங்கு வந்து சேர்ந்தனர்.
அர்ஜுனுக்கோ ஜோவை எப்படி ஆறுதல் கொடுப்பதென்றே தெரியாது
மூவரும் குழந்தையுடன் மருத்துவ முகாமிலேயே இருந்தனர். அங்கு கொடுக்கும் உணவை உண்டு இரு நாட்களாக அங்கே இருந்தனர்.மீட்புப் படையினரும் தங்களது பணிகளை செவ்வனே செய்தனர்...
பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
மழையும் படிப்படியாக குறைந்து கொண்டிருந்தது. பாட்டியே ஆதவ்வை பார்த்துக் கொண்டார்.
மகிமை தன்னிடமுள்ள பணபலம் மூலம் சிறந்த மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல முடியும் ஆனால் இப்போது அவள் இருப்பதோ ஆபத்தான நிலை இந்த நேரத்தில் அவளை அழைத்து வேறு மருத்துவமனை செல்வதென்பது நடக்காத காரியம்.
இரு நாட்கள் அனைவரையும் பயம் காட்டி விட்டு மெதுவாக கண் விழித்தவள் உணர்விற்கு வந்தாள். அவள் உடல் முழுக்க காயம் அனைத்திற்கும் மருந்திட்டு கட்டுப் போட்டிருந்தனர்.
கண்விழித்தவள் "பாட்டி ஆதவ்" என முனகலாகக் கேட்க அவரோ எதுவும் சொல்லாமல் அழ அவளுக்கோ பயத்தில் அவளும் அழுகையில் கரைய அப்போது கதவைத் தள்ளியபடி மகனுடன் வந்தான் ஜோகித் அவளோ அதிர்ச்சியாய் அவனை ஏறிட்டவளின் பார்வையைத் தாங்கி நின்றான். அதில் காதல் , மன்னிப்பு, குற்றவுணர்ச்சி என அனைத்து உணர்வுகளும் " “ம்மா” என்றபடி குழந்தையும் அவளிடம் தாவா அவளும் சேலன் போடப்பட்ட கைகளால் மகனை அனைத்துக் கொண்டாள்.
குழந்தையும் மழழை மொழியில். தன் கை கால்களில் காயத்தை காட்டியடி உதட்டைப் பிதுங்கி அழுகைக்குத் தயாராக அவளோ மகனைக் கொஞ்சிய படி அவனின் அழுகையை போக்கினாள். ஜோகித்தும் பாட்டியும் இருவரையும் கண்கள் பணிக்க பார்த்துக் கொண்டிருந்தனர்.
ரம்புக் கல என்ற ஐம்பது குடும்பத்தைக் கொண்ட கிராமம் இருந்ததற்கான அடையாளமே இல்லை " அழகு ஆபத்தானது என்பதற்கு ரய்புக் கலவே சிறந்த உதாரணம். ஜோதிடத்தின் தலையீட்டாள் புதிய பாலங்கள் தற்காலிகமாக போடப்பட்டு போகமுடிமால் இருந்த ஊர்களுக்கு எல்லாம் மீட்புப் பணிக்கும் ,நிவாரணப் பணிக்கும் படையினர் செல்ல வழி வகை ஏற்படுத்தப்பட்டது.
நாட்கள் செல்லச் செல்ல மலையகம் வழமை நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் முப்பது வீத பகுதிகளை மண்சரிவு அபாய வலயமாக அடையாளப்படுத்தியது. இயற்கையின் இந்தச் சீற்றம் மலையகப் பகுதிகளில் முறையற்ற கட்டுமானங்களைத் தவிர்க்க வேண்டிய அவசியத்தை மீண்டும் ஒருமுறை வலியுடன் உணர்த்தியுள்ளது.
ஜோவும் மகியோடும் மகனோடும் பாட்டியையும் அழைத்துக் கொண்டு கண்டிக்கு வந்தான். மகியை சிறந்த மருத்துவமனையில் சேர்த்தான். அவளது உடன் காயங்களும் படிப்படியாக ஆறத் தொடங்கியது.
மகி ஜோவோடு தேவைக்கு மட்டுமே பேசிக் கொள்வாள் எப்போதும் மகனை அனைத்த படி இருப்பாள்.
கஷ்டத்தில் தோள் கொடுப்பவனே உற்ற நண்பன் அர்ஜுனும் அவ்வாறே. நண்பனை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தான் ஜோ.
கண்டியில் ஒரு தேயிலைத் தோட்டத்தோடு கூடிய எஸ்டேட்டை வாங்கிய ஜோ அங்கு மனைவி மகனுடன் மாறிக் கொண்டான். ஆதவ் எப்படியோ அப்படித் தான் ஜோவுக்கு அலமேல் பாட்டியும் தன்னலமில்லா அவர் அன்பும் பாசமும் அவரை தங்களொடு கூட்டுக் கொண்டு வந்துவிட்டான் ஜோ.
ஜோ அருகில் நெருங்கும் போதெல்லாம் மகியின் இதயத்துடிப்பு அதிகரிக்க தொடங்கியது.
அவளது இதயத்தில் கொத்தோடு பிடுங்கியே திருடன் அல்லவா அவன். இருவரும் அளவோடு பேசினாலும் இன்னும் இருவரும் மனசு விட்டு பேசவில்லை ஹாஸ்பிடல், வீடு மாறியது,எஸ்டேட் என நாட்கள் செல்ல ஜோவால் பேசக்கூட முடியாத நிலை.
அதோடு அவளோ எப்போதும் மௌனமாக இருக்கவே பழகிக் கொண்டாள் அவள் உலகில் அவளும் குழந்தையும் மட்டுமே குழந்தையோடு அவள் கொஞ்சும் போது குழந்தை அவளோடு பேசும் போதும் ஏக்கத்தோடு இருவரையும் பார்த்துக் கொள்வான். தன்னோடு அவர்கள் இப்படி இருக்க மாட்டார்களா என மனசுக்குள் ஏங்க தொடங்கினான்.
மகியும் இப்போது கொஞ்சம் கொஞ்சம் நடக்கக்கூடியதாக இருந்தது அன்று மழையில் வெளியே கதவை திறந்தவள் கண்டது என்னவோ மண் சரிவுகளை தான் மழையை பொருட்படுத்தாத வெறும் காலில் ரோட்டை நோக்கி ஓடியவள் கால் சேற்றில் புதையே மேலே கையை நீட்டியவரிடம் ஆதவ்வைக் கொடுத்தவள் நீரில் அடித்துச் செல்லப்பட்டவள் மரகுற்றியொன்றில் மோதிப்பட்டுக் கிடந்தாள். அதில் கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது.
அவள் தட்டுத் தடுமாறியவளை தாங்கிப் பிடித்தவன் அவளை அருகில் இந்த இருக்கையில் அமர வைத்தவன் "பேபி என்றான் பல வருடங்களின் பின்னான அவனது அழைப்பு அவளை சிலிர்க்க வைத்தது. அவளும் கண்கள் பணிக்க அவனை நோக்க "சாரி" எல்லாத்தையும் விட்டுட்டு நமக்காக வந்திருக்கன் என்றான். காதல் கொண்ட நெஞ்சம் மனசு முழுக்க காதலை வைத்துக் கொண்டு அவனோடு கோபத்தை எத்தனை நாட்கள் பிடித்து வைத்துக் கொள்வது அவன் தாய் செய்தவற்றை அவள் மறுபடியும் நினைக்கக் கூட விரும்பவில்லை அவளுக்கு இருந்த கோபமே தனக்கு முக்கியத்துவம் கொடுக்காது தனது பேச்சை நம்பாது அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் ஜோ எடுக்காதது தான் தனக்காக வந்தவனை எப்படி அவளால் அவிட முடியும் அவனை அரவனைத்துக் கொண்டாள்.
அவளும் அவனிடம் கடந்து வந்த கஷ்டத்தை பற்றி பேசவில்லை அவன் நெற்றியில் அவள் முத்தமிட அவனின் கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் அவள் கட்டுப்பாட்டிலுள்ள கையின் மீது இருந்த கையில் விழுந்தது அவனும் கண்களை துடைத்தபடி அவள் இதழ்களில் இதழ் பொருத்திக்கொண்டான் நீண்ட நாட்களின் பின்னான முத்தம் அவள் இதழ்களில் இருந்து தன்னிதழை நீக்கியவன் அவளை அணைத்துக் கொண்டான்.
வெளியே ஆதவ் அலமுப் பாட்டியின் சிரிப்பொலி கேட்டது.. அர்ஜுனும் எமியும் தங்களது தேனிலவை கொண்டாட கண்டிக்கு வருகை தந்தனர் "அர்ஜுன் செம பிளேஸ்ல ப்பா எப்படி இருக்கு பாரு” என கைகளை தேய்த்து கன்னத்தில் வைத்துக் கொண்டாள்.
"அழகு எப்பவும் ஆபத்துதான்" என்றான் உணர்ந்து அர்ஜுன்.
“அத்தான் இவன அப்படியே உங்களப் போலான் என்றாள் எமி ஆதவ்வின் கன்னத்தை கிள்ளியபடி ஜோவும் " ம்ம்" என்றான் சிரித்தபடி. ஆதவ் குட்டியை தூக்கிப் போட்டு பிடிக்க அவனோ கிலுங்கி சிரித்தபடி ஜோவை கட்டிக் கொண்டான். அப்போது மகியோ " ஜோ" என சத்தம் போட குழந்தையை அர்ஜுனிடம் கொடுத்துவிட்டு மகியிடம் செல்ல அவ்ளோ “என்ன பண்ணி வச்சிருக்கீங்க இங்க பாருங்க” என கழுத்தைக் காட்ட அதுவோ சிவந்து தடித்து இருந்தது. தனது கழுத்தை வருடியபடி மறுகையினால் அவள் கழுத்தை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தவன்
"லவ் பைட்ஸ் பேபி ஸ்கூல்" என்றவன்..
அவள் இதழ்களை முற்றுகையிட்டுக் கொண்டான் "ஜோ" என்ற வார்த்தை அவள் உதடுகளுக்குள் சென்று மறைந்தது. சாலை கழுத்தை சுற்றி போட்டு வெளியே வர ஜோவும் கண் சிமிட்டியபடி வெளியேறினான். எமி அர்ஜுன், ஜோ, மகி, எமி, ஆதவ், அலமுபாட்டி அனைவரும் பேராதனைப் பூங்காவிற்கு செல்கின்றனர். அவர்கள் சென்று திரும்பட்டும், அவர்களது வாழ்வும் மகிழ்ச்சியாக செல்ல நாமும் வாழ்த்தி விடைபெறுவோம்.
சத்தமில்லாமல் வந்து
என் நெஞ்சறைக்குள் அமர்ந்தாய்,
என் ஹார்ட் பீட்
திருடிய கள்வனே,
ஆயுள் கைதியாய் அங்கேயே
இருந்துவிடு!
என் நெஞ்சறைக்குள் அமர்ந்தாய்,
என் ஹார்ட் பீட்
திருடிய கள்வனே,
ஆயுள் கைதியாய் அங்கேயே
இருந்துவிடு!
***நன்றி***

