தூங்கி எழுந்த மகியோ சற்றுப் புத்துணர்வாய் உணர்ந்தவள் குளித்து தயாராகி ஜோகித்துக்கு அழைத்தாள் அவனும் அழைப்பை ஏற்க " ஜோ நான் ரெடி" மறுபுறம் ஜோகித்தோ" ஓகே பேபி பேக் எல்லாம் எடுத்துட்டு வெளிய வா" என்றான்.
சாவியை ரிசப்ஷனில் கொடுத்து விட்டு புறப்பட்டனர், ஆசியாவின் ராணியை அடையும் பொருட்டு
மறுநாள் காலை இரத்திணபுரியை வந்தடைந்த இருவரும் அங்கே எக்ஸிபிஷன் நடைபெறும் இரத்தினபுரி நகரிலேயே ஒரு பிரபல்யமான ஹோட்டலில் தங்கி இருந்து தயாராகினர்.அவர்களின் திட்டத்தின் படி மகிஷாவும் அழகான ஒரு கருப்பு நிற பார்ட்டி வேர் உடையில் தயாராகி வெளியே வர,அதே வேளை ஜோகித்தும் அவள் உடைக்குப் பொருத்தமான ஹோர்ட் சூட்டில் தயாராகினான்." மகிஷாவைக் கண்டவனுக்கோ அவள் அழகில் மெய் மறந்து நின்றான். " பேபி யூ ஆர் சோ பியூட்டிஃபுல்" என்றவன் "வா போலாம்" என கைப்பிடித்து வெளியே அழைத்து வந்தான்.
வெளியே அவர்களுக்காக கார் காத்திருந்தது இருவரும் அதில் ஏறியதும் காரும் எக்சிபிஷன் நடக்கும் இடத்திற்கு விரைந்தது.
காரில் இருந்து இருவரும் இறங்கியவர்கள் எக்சிபிஷன் நடக்கும் இடத்தை பார்த்ததும் அப்படி ஒரு வியப்பு கண்களில்
ஆம் அந்த புகழ்பெற்ற அருங்காட்சியகம் அன்று இராணுவக் கோட்டை போலக் காட்சியளித்தது. ஆசியாவின் ராணியும் இருக்கிறார். உள்நுழைய அவர்களை முற்றாக பரிசேதித்தே உள்ளே அனுமதித்தனர்.
புகைப்படங்களைக் கூட எடுக்க தடை விதித்தனர் " ஜோ ஏசீபி சத்யன் நிற்கார் என முனுமுனுக்க" அவனும் ஏசிபியை அழுத்தமாகப் பார்த்தவன் அந்த மண்டபத்தில் தனது பார்வையைச் செலுத்தினான்.
கண்ணைப் பறிக்கும் வகையில் இரத்தினக்கல் அனைத்தையும் பார்வையிட்டவர்கள் கண் ஒரு இடத்தில் நிலைபெற்றது ஆசியாவின் ராணி கம்பீரமாக கண்ணாடிப் பெட்டியில் உட்கார்ந்திருந்தார்.
அவரை நெருங்க அங்கு பார்வையாளர்களுக்கு கற்கள் பற்றி கூறவெனவே சிலர் நின்றிருந்தனர். அவர்களில் ஒருவன் ஜோகித்தையும் மகிஷாவையும் , நெருங்கியவர் " ஹலோ சார்,ஹலோ மேடம்" என்றார்.
". இது க்யூன் ஆஃப் ஏசியன் ப்ளு சபையர் சார் ,விவசாயியொருவர் கிணறு தோன்டுறப்போ தான் இந்த க்குயின் கிடைச்சா ,முதல் அந்த விவசாயிட வீட்ல தான் இருந்தது.இப்போ கவர்மெண்ட் டேக்ஆவர் பண்ணியிருக்காங்க","மகிஷாவோ இதுட பெறுமதி எவளோ" எனக் கேட்க ," இது சர்வதேச சந்தையில் நூறு மில்லியன் டாலர் வரை போகும் ,ஆனா இப்போதைக்கு இது விற்பனைக்கு இல்ல" என்றவர் அதோ ஏசீபியோட பேசிட்டு இருக்காரே அவர் தான் இலங்கை இரத்தினக் கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் உரிமையாளர் அவர் தான் இந்த நிகழ்வ ஏற்பாடு செய்திருக்கார் என்றார். " ஓஓ தாங்க்ஸ் " என கைக்குலுக்கி இருவரும் மற்றொரு பக்கம் சென்றனர் அங்கோ இரத்தினக் கற்களை வெட்டி ஆபரணம் செய்து கொண்டிருந்தனர்.
"பேபி இந்த கலர் உனக்கு ப்ரொஃபெக்டா இருக்கும்" என அழகிய வெளிர் பழுப்பு சிவப்பு நிற கல் பதிக்கப்பட்ட தங்கச் செயினை காட்டிக் கேட்டவன் அதனை வாங்கிவன் கழுத்தில் அணிவித்தான். அவனின் நெருக்கம் அவளை ஏதோ செய்ய " ஜோ ப்ளீஸ் " என்றாள். அதன் விலையோ பல இலட்சங்களைத் தொட்டது.
இருவரும் அனைத்து இடமும் சுற்றி பார்த்து விட்டு அருங்காட்சியத்தை விட்டு வெளியினர். மூன்று நாட்கள் இந்த நிகழ்வு நடக்கவிருப்பதால் அன்று இரவு ஏசிபி சத்தியன் தலைமையில் அருங்காட்சியகத்தில்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது அதே வேளை ஜோவும் மகியும் பாதுகாப்பு அதிகாரிகள் போல் அருங்காட்சியத்தினுள் நுழைந்தனர்.
இருவரும் சுற்றும் முற்றும் பார்த்தபடி யாருக்கும் சந்தேகம் வராதது போல் நடந்து கொண்டனர். திடீரென அங்கிருந்து விழக்குக்கள் அனைத்தும் அணைந்தன அனைத்து பாதுகாப்பு அதிகாரிகளும் வாயிலை நோக்கி ஓட மகி தன் கையில் இருந்த லேசர் கட்டரை எடுக்க போக அதற்கு முன்பு அவரது கையை பற்றிய ஜோகித் "மகி அவசரப்படாத இங்க அலாரம் இருக்கு இந்தப் பெட்டிய திறந்த நொடி அலாரம் அடிக்கும் என அவள் காதில் கிசுகிசுத்தான்." ஜோ கைய விட்டு என திமிறினாள் " சத்தம் போடாத இப்போதைக்கு இங்க இருந்து தப்பிக்கிறது தான் முக்கியம் போலீஸ் வந்துடாங்க என்றவன்." அர்ஜுன் லைட்ஸ் ஆன் " என ப்ளூடூத் இணைப்பு மூலம் அர்ஜுனுக்கு கட்டளை பிறப்பித்தான். அவனும் லைட்டை ஆன் செய்ய பாதுகாவலர்கள் மூலை முடுக்கெல்லாம் தேடியும் புதிதாக யாரையும் காணவில்லை. பாதுகாவலர் ஓடு பாதுகாவலராக ஜோவும் மகியும் திருடனை தேடிக் கொண்டிருந்தனரல்லவா!!
பாதுகாவலர் ட்டேன் மாறும் போது ஒருவர் பின் ஒருவராக யாருக்கும் சந்தேகம் வராதவாறு அங்கிருந்து வெளியேறினர்.
அருஙாகாட்சியக வாஸ் ரூமிலேயே உடையை மாற்றூக் கொண்டு ஹோட்டலுக்குப் புறப்பட்டனர்.
அருங்காட்சியத்தை முற்றாக அலசியவர்கள் ஏதோ மின் பிரச்சினை என முடிவுக்கு வந்தனர். அப்போது அங்கு வந்த இரத்திணக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் உரிமையாளர் ஆசிய ராணி சேஃப்பா தானே இருக்கா என்றார் பேசிய உள்ள இருக்கா" அவரோடு வந்த ஏசிபீ சத்தியன் "வாட் யூ மீன்” " ரியல் க்குயின் ஆஃப் ஏசியா உள்ள இருக்கா இது ஃபேக் ,அதுட ரிப்லெக்ஷன் தான் இது" என்றார்.
ஏசிபிகோ அப்போ இந்த உண்மை தெரியாம இங்க வந்து திருடன் போயிருக்கான் என ஊகித்துக் கொண்டான்.
"சார் மீடியால நியூஸ் ஒன்னு கொடுப்போம்" என ஏசிபி சத்யம் தனது திட்டத்தை சொல்ல இலங்கைப் போலீசும் அவருக்கு உதவ முன் வந்தனர். அதன்படி இரத்தினக்கல் முகாமையாளர் திருட வந்தவன் ஏமாந்து போனதை கேலியாகச் சொல்ல ஏசிபி சத்தியன் அவர்களின் பாதுகாப்பை புகழ்ந்து பேசினான் இச் செய்தி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.
அர்ஜுன் ஹோட்டலுக்கு வந்து சேர ஜோகித்தோ ஒருவித ஆத்திரத்தில் இருந்தான்.இத்தோடு நான்காவது சிகரட்டை பற்ற வைத்தான்
ஹோட்டலில் அர்ஜுனை அழுத்தமா பார்த்த ஜோகித் "அர்ஜுன் எப்படி இது மிஸ்ஸாச்சு " ஸ்ரீலங்காவின் இப் பலத்த பாதுகாப்பு அதிர்ச்சியே "ஜோ விடியினத்துக்குள்ள ஃபுல் டீடைல்ஸ் தரேன்" என்ற அர்ஜுன் வெளியேறினான்.
மகிஷாவோ " என்ன பிரச்சனை ஜோ" "மகி அங்கே இருந்தது ப்ளூ சபயர் இல்ல, லேசர் கதிர்,ப்ளு சபையர எங்கயோ மறைச்சு வச்சிருக்காங்க" என்றான்.அவன் அணிந்திருந்த கூலரினால் லேசர் கதிர்களை பார்க்க முடிந்தது.
அவனால் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை " சரி ஜோ கூல் நெக்ஸ் அட்டம்ல பக்காவா செய்வோம்" என்றார்
ஜோவினால் எப்படி கூலாக இருக்க முடியும் அதே வேளை மகிக்கு அழைத்த கரன் "மகி என்னாச்சு நியூஸ் பாத்தியா?" "இல்லடா" நியூஸ்ல என்ன? "அதப் பாரு முதல்ல என்றான். அவன் அனுப்பிய லிங்கை கிளிக் செய்ய ஏசிபி சத்தியம் மற்றும் அருங்காட்சியக உரிமையாளர் பேசியது ஓடியது அதைக் கேட்ட ஜோகித்திற்கோ கோபத்தில் கண்கள் சிவந்து போனது.
"மகி நீ தூங்கு என்றவன் அலைபேசியுடன் பால்கனிக்கு சென்றான். யாருக்கோ அழைப்பெடுத்தவன் சில நிமிடம் பேசிவிட்டு அறைக்கு வர 'இந்த திருடனுக்கேத்த போலீஸ் தான்' சிரித்துக் கொண்டவன் மகியோ தூங்கியிருக்க அவளை சில நிமிடம் பார்த்தவன் முன் இருந்த சோபாவில் படுத்துக்கொண்டான்.
அடுத்த நாளும் மெல்ல புலர கண்விழித்த மகி ஜோகித்தை தேட அந்த சிறிய சோஃபாவில் உடலைக் குறுக்கிக் கொண்டு படுத்திருந்தான்.அதே வேளை அறையின் அழைப்புமணி சத்தமிட சத்தத்தில் கண்விழித்து பார்த்தது என்னவோ மகியின் மதி முகத்தை தான் "குட்மார்னிங் பேபி" என்றான் அவளும் "குட் மார்னிங் நான் பார்கிறன் . என்றான் மகியோ குளியலறை நுழைந்து கொண்டாள்.
அழைப்பு மணிச சத்ததில் ஜோ கதவைத் திறக்க அர்ஜுன் தான் நின்றிருந்தான். தன்னிடமிருந்த யாப்பை ஜோகித்திடம் கொடுத்தான்.
சிவந்த அர்ஜுனனின் கண்கள் அவன் இரவு முழுவதும் தூங்காதை சொல்லியது "அர்ஜுன் நீ ரெஸ்ட் எடு நான் பாத்துக்குறேன்" என்றான் ஜோ. இரவு கோபத்தில் இருந்தவனா இவன் என அர்ஜுன் தனக்குள் எண்ணியவன் தனக்கான அறைக்குள் நுழைந்து கொண்டான். உடையக் கூட மாற்றாது படுக்கையில் சரிந்தான்.
டாப்பை மேசையில் எடுத்து அர்ஜுன் திரட்டிய தகவல்களை பார்த்தவன் அன்று மதியம் இரண்டு மணியளவில் மகிஷாவும் ஜோகித்தும் அருங்காட்சியகத்தினுள் நூழைந்தனர்.
இருவரும் அங்கு பார்வையிட வருபவர்கள் போல் அனைத்தையும் பார்வையிட்டபடி க்குயின் ஆஃப் ஏசியா இருக்கும் இடத்திற்க்கு வந்தனர். " அர்ஜுன் சிசிடிவிய ஆஃப் பண்ணு" என்றதும் அர்ஜுனனும் அனைத்தையும் நிறுத்தியிருந்தான்.
மகியும் ஜோவும் ஆசியாவின் ராணி வைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு எதிரே இருந்த சுவரைக் தள்ள அது உள்நோக்கிச் சென்று திறந்தது கொண்டது இருவரும் உள்ளே நுழைய அது ஒரு ரகசிய அறை " மகி எதுலயும் கை வைக்காம வா" என்றவன் முன்னே செல்ல அங்கு ஆசியாவின் ராணி கம்பீரமா ஒரு ஸ்டாண்டில் வீற்றிருந்தாள் ஜோகித் தன் கண்ணாடியை அணிந்து ப்ளூ சபையரைப் பார்க்க அப்படியே அந்தி நேரத்தின் ஆகாயத்தையும் ஒரு சின்ன கல்லுக்குள் அடச்சி வச்ச மாதிரி ஒரு அடர் நீலம் அது இராத்திரியோடு ஆரம்பமும் கடலோடு ஆழமும் கலந்த ஒரு மர்மமான அழகு.
எந்த ஒரு கதிர் பாதுகாப்பும் அங்கு இல்லை ஆனால் அவ் ப்ளூ சபையர் வைக்கப்பட்டிருந்த ஸ்டாண்டிலிருந்து ப்ளூ சபையரை எடுத்தால் ஒருவித ஒலி எழுப்பும் என்பது புரிந்தது.
அவ் இரகசிய அறையில் எதிரெதிரே இரண்டு கதவுகள் இருந்தன. ஒரு கதவு அவர்கள் வந்த கதவு மற்றையது எமிர்ஜென்சிக் கதவு தனக்குள் சில கணக்குகளை போட்டவன் அப்படியே மெல்ல "மகி இந்த டோர நான் ஓபன் பண்றேன் எவ்ளோ பாஸ்ட்டா ப்ளூ சபையர எடுக்க முடியுமோ எடுத்துட்டு வந்துடு என்றவன் தாங்கள் வந்த கதவை திறக்காது உள்ளே கூடியவன் தப்பிக்க மற்றைய கதவைத் திறக்க ஆயத்தமானான.
மகி அதை எடுத்த நொடி அவ்வறை முழுவதும் ஒருவித சத்தம் அவனும் மற்றைய கதையைத் திறந்தான் மதியும் அ ப்ளூ சபையரை தனது பேக்கில் வைத்தபடி இருவரும் வெளியே ஓடினர் அதேவேளை காட்சும் எமர்ஜென்சி சத்தத்தினால் எமர்ஜென்சி கதவினால் உள்ளே செல்ல ப்ளூ சபையர் அங்கு இல்லை உடனே அனைவருக்கும் தகவல் பறந்தது.
கட்டிடத்தின் ஒரு பகுதியில் ஓடிய இருவரும் மியூசியத்தின் மேல் தளத்திற்கு வந்தனர் மகியின் கையை பிடித்தவன் மகி குதி என்றான் அவளோ பயத்தில் அவனை ஏரிட "என்னை நம்பு ஜம் பண்ணு என்றான் இருவரும் பாய்ந்ததென்ன ஓடுமாற்றில் தான்.
ஆற்றில் நீந்தி இருவரும் வெளியே வர மகியோ இருமியபடி இருந்தாள் அவள் உடலில் ஒரு நடுக்கம். அன்று நீர் அவ்வளவு குளிர்ச்சியாக இருந்தது. அங்கிருந்து வெளியேறிய இருவரும் "அர்ஜுன் பின்னாடி ஆற்றுப் பக்கம் வா " என்றான்.அவனும் காரில் வர இருவரும் ஏறிக் கொள்ள காரும் சீறிப்பாய்ந்து .
போலீசும் காரை விடாது விரட்டினர் முன்னெச்சரிக்கையாக ஹோட்டலில் இருந்து தங்களது பொருட்களை எடுத்து கொண்டனர்.
அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலை சோதனையிட பிரபா, தர்ஷன் எனும் பெயரில் அவர்களது தகவல்கள் கிடைத்தன. தங்களது உண்மையான முகம் தெரியாதபடி அவர்களது கெட்டப்பை மாற்றி இருந்தனர்.மீடியா ஒரு புறம் போலீஸ் ஒரு புறம் என விரட்ட போலீசார் பிடிக்க முடியாது போனது. அவர்களது அடுத்தடுத்த ஊர் எல்லைகளை கடந்து வந்து தப்பினர்.
