எழுத்துக்குப் பின்னே… 
"தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்..." என்று ஒருவழியாக மழைக்கு நடுவில் கார்த்திகை தீபம் முடிந்தது.
சரி, இனி என்ன செய்வது என்று இன்ஸ்டா பக்கம் போனால், அங்கே ஒரு வாசகம் கண்ணில் பட்டது.
“உன் வாழ்க்கையை அழகாக ரசித்து வாழ்!அழகான புகைப்படங்கள் எடு, உன் வாழ்க்கையின் கதாநாயகி நீதான் என்று உணர், மெழுகுவர்த்தி ஏற்று, புத்தகங்கள் படி, நடைப்பயிற்சி செல், பிடித்த பாடலுக்கு நடனமாடு, உனக்குப் பிடித்த பரிசுகளை நீயே வாங்கிக்கொள். உனக்குப் பிடித்ததைச் செய், மகிழ்ச்சியாக இரு. இது உன் வாழ்க்கை; அதை யாருக்காகவும் இழந்துவிடாதே!"
இப்படியாக நிறைய அறிவுரைகள்!
அதில் 'புத்தகங்கள் படி' என்று வந்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது ,நம்முடைய "நின்னோடு தமியனாய்" நாவலின் 10-வது அத்தியாயம்!
அதற்கான தலைப்பை மட்டும் போட்டு வைத்துவிட்டு, எழுத வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஒரு வழியாக இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று அத்தியாயத்தை எழுதி முடித்திருக்கிறேன்.
படித்துவிட்டு உங்களது கருத்துகளைத் தாருங்கள்!