6.நின்னோடு தமியனாய்

Advertisement

Kalpana saravanan

Well-known member
Member
எழுத்துக்குப் பின்னே… ✍️

“காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி...” என்ற பாடலுடன், இரண்டு பக்கமும் ஜிகினா பேப்பர் கட்டிய தனியார் பஸ் வந்து நின்றது.

“இல்லை... இல்லை... நான் தலைகீழாகத்தான் குதிப்பேன்!” என சொல்லி உடன் பணியாற்றும் தோழிகளை ஏற்றிவிட்டு, மஞ்சள் நிற வெற்றிப் பயணத்திற்காகக் காத்திருந்தேன்.

அடுத்த நிமிடமே பஸ் வந்தது... ஜன்னலோர இருக்கையும் கிடைத்தது. இயற்கை அழகை ரசித்தபடியே பயணம் தொடர்ந்தது.

திடீரென “டிஸ்...” என ஒரு சத்தம்!

ஒரு நிமிடம் பயணிகள் அனைவரும் பயந்துவிட்டோம். பிறகுதான் பின்பக்க டயர் வெடித்துப் பஞ்சர் ஆனது என தெரிந்தது. அதைக் கேட்டதும், “அப்பாடா!” என்றிருந்தது.

வண்டி சரியாக இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என கண்டக்டர் தரப்பில் சொல்லப்பட்டதால், கீழே இறங்கி அடுத்த வண்டிக்காகக் காத்திருந்தோம்.

சுமார் அரைமணி நேரத்திற்குப் பிறகு...
“கட்ட வண்டி... கட்ட வண்டி... காப்பாத்த வந்த வண்டி...” என ஒரு பிங்க் நிற டவுன் பஸ் வந்து காப்பாற்றியது!

ஆனால் அதில் ஒரே கூட்டம்... இரைச்சல்... அதிலும் நடுநடுவே கண்டக்டரின் “சீட்டு... சீட்டு...” என்ற நச்சரிப்பு!

வழக்கமாக ஆறு மணிக்கு வந்து சேரும் நான், ஒரு மணி நேரத் தாமதமாக ஏழு மணிக்குத்தான் வந்து சேர்ந்தேன்.

இந்த எபியையும் முன்பே எழுதி முடித்துவிட்டதால், அங்கங்கே அழித்தல், திருத்தல், ஒட்டல், கழித்தல் உடன் இதோ உங்கள் பார்வைக்கு...

படித்துவிட்டு உங்கள் கருத்துகளைத் தாருங்கள்! 😍

 

Advertisement

Advertisement

Back
Top