Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Intro

Advertisement

TNWContestWriter009

New member
Member
சும்மா ஒரு INTRO:

ஒரு காலத்துல காதல் என்ற வார்த்தையே வரமா பாக்க பட்டுட்டு இருந்தது.. பெண்ணுக்கோ, ஆணுக்கோ காதல் வந்துவிட்டால், அதை திருவிழா போல கருதி, ஆனந்தமாய் கொண்டாடிய சமூகம் தான் நம் தமிழ் சமூகம்.

அவைகளின் சுவடுகள் ஈடுகளில் மிஞ்சி போன மிச்சங்களாய், சாட்சி பொருட்களாய் மட்டுமே தங்கி போக, மாற துவங்கியது காலம்.

பின் வந்த மக்களும், அவர்களின் வாழ்வியலும் மாறி போக, காதலின் தன்மையும் மாறி போனது.

காதலிப்பதே பாவம் என்ற நிலை வந்து, பின் காதலித்தாலும் பயன் இல்லை என்ற நிலை கடந்து, இன்று காதல் சிலர் வாழ்வில் நாடகமாகவும், வலியாகவும், இன்பமான வாழ்க்கையாகி போயுள்ளது.

ஒரு சமயத்தில் காதல் வந்தாலே பெரிது என்று எண்ணிய எண்ணம் மாறி, தான் கொண்ட காதலை அந்த ஆணிடமோ , பெண்ணிடமோ சொல்வதேயே சாதனை என்ற நிலையையும் கண்டான் காலன்.

அடுத்த ஒரு சமயத்தில், இரு மனம் ஏற்ற காதலை, பெற்றோர் ஏற்பதும், அதனின் போராட்டமும் என அதையும் கண்டான் காலன்.

இன்றோ, விதிகள் பல மாறி, மதியால் உலகை வெல்ல மனிதன் துணியும் போது, இந்த பாழாய் போன காலன் முழித்து கொண்டு,

காதல் மனங்கள், அவர்களை வாழ்த்த தயாராக இருக்கும் உறவினர் என அனைவரின் ஆசி பெற்றாலும், தன் லீலையை செய்து, காதலை பொறிப்பதையே பணியாக்கி கொண்டு விட்டான் அவன்.

ஆம், அப்படி இருமனம் சேர்ந்து, உறவுகள் சேர்ந்த, திருமணத்தில் கைகள் சேரும் போது, காலன் அதை தடுத்தால்!!! இல்லை நகையாடி தன் திருவிளையாடலை காட்டினால்!!!! அந்த பயணத்தின் பிம்பமே இந்த காதல் கதை.

இதனை மட்டுமே முன்னுரையாக கொண்டு, நான் எழுத போகும் கதை தான் "*விண்ணிலே வண்ணநிலவென நீ!*".
 
Top