Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal romeo 3

Advertisement

Ruxshana

Member
Member
என் காதல் ரோமியோ 3

இதயத்தினுள் உன்னை தேடி பார்க்கிறேன்,
நீ இல்லை
ஏன்என்றால் என் இதயமே நீ தானடா .

என் காதல் ரோமியோ​

" ஹேய் பொண்ணு , என்னை என்ன சொல்லி கூப்பிட்ட " கோபத்துடன் கேட்டான்
ஷாஹித் .

" ரோமியோனு சொன்னேன் , அது மட்டும் இல்லை நீ ரோடு சைடு ரோமியோ, மனசுல பெரிய மன்மதன் என்று நினைப்பு , கூப்பிட்டுகிட்டே இருக்கன், நீ போய் கிட்டே இறுக "எரிச்சலுடன் கேட்டாள் சனா .

" நிக்க புடிக்கலை அதான் போறேன்" என்று கடுப்புடன் கூறினான்.

"என்ன பிடிக்கலை , நின்னு தான் ஆகணும்"

" ஏன் நிக்கணும் "

"நீ பேசும் போது எதுவும் சொல்லாமல் இருந்தேன்_ல இப்போ நான் சொல்லுற வரைக்கும் நீயும் நிக்க தான் செய்யணும்“ என்று சனா கண்டிப்புடன் கூறினாள் .

அவன் மேல் கட்டுக்கடங்காத கோவம் இருந்தது , இருந்தாலும் சூழ்நிலையை உணர்த்த வேண்டும் என்று கண்களை இறுக மூடி சாந்தமடைந்தவள் . ஒரு பெருமூச்சை இழுத்து விட்டு பேச ஆரம்பித்தாள் .

" அந்த பூ கவிதை எல்லாம் ரெடி பண்ணி கொடுத்தது நான் தான் "

மட்டுபட்டு இருந்த கோவம் மீண்டும் எழுந்தது , ' இத வச்சி தான திட்டு வாங்குனா இப்பவும் இதையே சொல்லுறா, முழிய பாரு முட்டைக்கண்ணி உருட்டி உருட்டி மொறைச்சு பார்க்கிறாள்' என்று ஷாஹித் கோவப்படுகிறானா இல்லை கொஞ்சுகிறானா என்பது அவனுக்கே வெளிச்சம் .

" பட் திஸ் இஸ் நாட் மை ப்ரபோசல் ( இது என்னுடைய திட்டம் இல்லை), இதை எல்லாம் செய்ய சொன்னது என்னோட நண்பி " அவள் சொல்லி முடித்த உடன் ஷாஹித் அவள் கண்களை பார்க்க , அதில் உண்மை இருந்தது , அவள் முழுவதையும் பேசி முடித்துவிடட்டும் என்று அமைதியாக இருந்தான்.

" அவள் இந்த காலேஜ்யில் படிக்கலை, என்னோட சொந்த ஊர் தூத்தூக்குடி அங்கே படிக்கிறாள் . என்கிட்டே நம்பர் கூட இருக்கு என்னை நம்பவில்லை என்றாள் போன் செய்து பேசி கொள்ளுங்கள் , ஆனால் 5.00 மணி அப்புறம் தான் பேச முடியும் " , கூறி விட்டு அவன் முகத்தை பார்த்தாள் ' தான் சொல்வதை நம்புகிறானா ' என்று பின்பு அவள் தொண்டை தண்ணி வற்ற பிளாஷ் பேக்(flashback) சொல்லி அவன் ஒரு வரியில் 'பொய்' என்று நினைத்துவிட்டால்.

அவன் உடல் மொழியில் ' நம்புகிறான்' என்று உறுதி செய்து விட்டு தொடர்ந்தாள்.

" அவங்க வீட்டில் ரொம்ப கண்டிப்பு , தனி போன்லாம் கிடையாது , அண்ட் ஒன் திங்க் ஷி இஸ் இன் டீப்லி லவ் வித் யூ ( அவள் உன்னை உண்மையாக காதலிக்கிறாள்) " என்று முடிக்க ஷாஹித் வாய் கம் போட்டு மூடி விட்டது போல் இருந்தது .

என்ன பேச என்று தெரியவில்லை தெரியவில்லை மனமோ ' இவள் என்னை காதலிக்கவில்லையா' என்று ஏமாற்றம் கொண்டது, மூளையோ அவள் பேசும் வார்த்தைகளில் வலி உள்ளது என்று சொன்னது , மனமோ பின்னே செய்யாத தப்பிற்கு அவளை எல்லார் முன்னாடியும் திட்டினாள் என்று சொல்லி மண்டையில் ஒரு கொட்டு வைத்தது .

கொஞ்சம் குற்ற உணர்வு தலை தூக்கியது ' 'பொறுமையாக பேசி இருக்கலாம் எனவும் அவள் சொல்வதை கேட்டு இருக்கலாம்' என்று யோசிக்க , அதற்கு முடிவாய் சமாதான கோடி பறக்க விட முடிவு செய்தான் .

அவள் முகத்தை பார்த்து பொறுமையாக சனா நான் வந்து என்று சொல்ல வருவதற்குள் " போதும் நீங்க நிறைய பேசிட்டீங்க , இனிமே என் கிட்ட எப்பவும் பேசிறாதீங்க " சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்து சென்று விட்டாள். அவளையே பார்த்த படி நின்று கொண்டிருந்தான் ஷாஹித் .

கிட்டதட்ட ஒரு வாரம் கழித்து வாழ்க்கை சகஜமாய் போய்க்கொண்டிருந்தது, சனா ப்ராஜெக்ட் விஷயமாக லைப்ரரி சென்றுகொண்டிருந்தாள் .

அதே சமயம் ஷாஹித்_உம் காலேஜ்_யின் ஆண்டு விழாக்காக ஒவ்வொரு கிளாஸாக அலைந்து கொண்டிருந்தான் .

இவர்கள் எப்படி வேகமாக சுழன்று கொண்டிருக்க விதியும் அவர்கள் வாழ்க்கையில் ஒன்று சேர்க்க சுழன்றது .

" ஓய் நானும் வரலாமா" என்ற குரலில் நின்றவள், அந்த குரளுக்கு சொந்தக்காரனாக ரவியை முறைத்தாள்

"ஹலோ மேடம் ஷாஹித் ஒத்துக்களை_னா என்ன , நாங்க இருக்கோம், எங்க குரூப்_ல நாலு பசங்க இருக்காங்க யாருனாலும் எங்களுக்கு ஓகே , நாலுபேரும் சேர்த்து வேணும் நாளும் ஓகே தான் , பேபி "

" இங்க பாரு மரியாதையா போயிடு இல்லை " என்று பல்லை கடித்து கொண்டு கூற ,

அவள் பேச்சை தடுத்து " என்ன பண்ணுவ பிரின்சிபால் கிட்ட போவியா , நீ கீழே இறங்கி போகுறதுக்குள்ள நாங்க உன்ன யாருக்கும் தெரியாம அசால்ட்டா தூக்கிடுவோம் " கூறி கொண்டே முன்னேற,

உள்ளுக்குள் பயம் எடுத்தாலும் அதை வெளிகாட்டி கொள்ளாமல் கெத்தாக அவனிடம் இருந்து விலக முயல ,

முயல மட்டும் தான் முடிந்தது ரவி , அவள் கையை பிடித்து இருந்தான் .

" விடு டா" என்று சனா கோபத்தில் அவன் கன்னத்தில் அறைய போக, வேறு ஒரு கை பளாரென ரவியின் கன்னத்தில் இறங்கியது .

வேறு யாரு நம்ம ரோமியோ? தானுங்க...

அடியில் ரவி கீழே விழ அந்த நொடியில் சனாவின் கையை பிடித்து இழுத்து தன் பின்னால் நிறுத்தி கொண்டான் ஷாஹித் .

பயத்தில் அவன் முழங்கையை பிடித்து கொண்டாள் சனா .

அவளின் பற்றுதலில் பயத்தை உணர்ந்தவன் , மென்மையாக அவள் தோளை பிடித்து தன் முன்னே வர செய்தவன், முகத்தில் கனிவுடன் வார்த்தைகள் மென்மையாக " ஆர் யூ ஓகே" என்றான் .

அவனின் மென்மையில் ஒரு நிமிடம் அசந்து நின்றவள் , அவனின் கேள்விக்கு ஆம் என்று தலையை ஆட்டினாள்.

ரவியின் குரூப்பை ஆசிரியரிடம் கூறி விட்டு சனாவிடம் வந்தவன் , அவள் முகத்தை பார்த்தான் இப்போது கொஞ்சம் தெளிந்து இருந்தது .

மட்டுப்பட்ட கோவம் மீண்டும் தலைக்கேறியது ஷாஹித்திற்கு.
" உனக்கு அறிவு_னு ஒன்னு இருக்கா இல்லையா , ஒரு விஷயத்தை பண்ணும் போது யோசிக்க மாட்டியா , நீ உன் நண்பிக்காக பண்ண காரியத்துல இப்போ நீயே மாட்டிக்க பார்த்துட்ட "

"இல்லை அது வந்து " என்று சனா ஏதோ சொல்ல வர,

" பேசாத நீ பண்ணுறது முட்டாள் தனமான காரியம் தான்" என்று அவளை வாங்கு வாங்கு என்று வாங்கி எடுக்க ,

சனா தலையை குனிந்த நிலையிலேயே இருந்தாள் அதில் வருத்தமுற்றவன் .

" என்ன பேச மாட்டுக்க " கோபத்தை குறைத்து கொஞ்சம் மென்மையாய் கேட்க

" நீங்க தான பேசாத என்று சொன்னிங்க "

அவளின் குழந்தை தனமான சிணுங்களில் தன்னையே இழந்தவன் , புன்னகையுடனே

" அன்னைக்கு டேய் , ரோமியோ , அதுவும் ரோடு சைடு ரோமியோ னு எல்லாம் ஒருத்தங்க கூப்பிட்டாங்க , இப்போ நீங்க என்று மரியாதையை எல்லாம் வருதே" ஷாஹித் கிண்டல் செய்ய, அதில் சிலிர்த்து கொண்டு எழுந்தவள் .

" உங்க உதவிக்கு ரொம்ப நன்றி ரோமியோ"

" அடிங் " என்று அவளை விரட்ட, சிட்டாய் பறந்து விட்டாள் சனா .

அந்த வாரம் வெள்ளிகிழமை கல்லூரியில் விடுமுறை எடுத்து , தனது ரூம்மேட் மதியுடன் கல்யாணத்திற்கு செல்ல தயாராகி கொண்டிருந்தாள் சனா .

தனது உயிர் தோழி பிரியாவிற்கு இன்று திருமணம் யூ.ஜி யில் பிரியா, திவ்யா , நிஷா எல்லோரும் ஒரே கல்லூரி தான் அதில் திவ்யா , நிஷா மட்டும் பி.எட் ஆசிரியர் காண படிப்பிற்கு சென்றுவிட, சனா முதுகலை படிப்பிற்கு ஆசை பட்டு எம்.எஸ்.சி படிக்கிறாள் .

இளங்கலை படிக்கும் போதே ப்ரியாவின் காதலுக்கு பெற்றவர்கள் பச்சை கோடி காட்ட இப்போது இரண்டு காதல் புறாக்களுக்கு திருமணம் .

இதில் சனாவிற்கு தான் மிகுந்த எதிர்பார்ப்பு , இதுவரை தனது சொந்தங்கள் திருமணத்திற்கே சென்று பழகியவள் , முதல் முறையாக பிராமணர்கள் கல்யாணத்தில் கலந்து கொள்கிறாள் .
...............


" மதி கிப்ட் எடுத்தாச்சா "

" ஆமா பா , கார் வந்திட்டாம் போன் போட்டாங்க வா போகலாம்" என்று மதி அழைக்க இரண்டு பேரும் ஹாஸ்டலை விட்டு வெளியே வந்து, மீதி நண்பர்களுடன் காரில் அரட்டை அடித்த படி மண்டபம் வந்து சேர்ந்தது .

சென்னையில் உள்ளே பிரமாண்டமான மகாராஜா மண்டபத்தில் கார் நின்றது காரில் வந்ததால் ஒரு மணி நேரத்திற்குள் வந்தாயிற்று.

சனா உள்ளே வந்தயுடன் ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் , இது கல்யாண மண்டபமா இல்லை சொர்க்கமா என்று பிரித்தறிய முடியவில்லை , அந்த இடமே கொள்ளை கொள்ளும் அழகாய் இருந்தது .

எங்கிலும் பூக்களின் அலங்காரம் , அந்த பெரிய பிரம்மண்டமான ஹாலில் ஒரு பக்கம் நாதர்ஸ்வரம், தவில் என்று இசையால் நிறைத்து கொண்டிருக்க.

இன்னொரு பக்கம் ஐயர் மூலமாக அக்கிணி குண்டத்தை தயார் செய்தும் , அதற்கு தேவையான பொருள்களை அடுக்கி வைத்து கொண்டும் இருந்தனர் பெரியவர்கள் .

அதில் மிகவும் ஈர்த்தது அவர்களின் சேலை கட்டு தான் அந்த உடையில் தன்னை நினைத்து பார்த்தவள் சிரித்து கொண்டாள்.

இன்னொரு பக்கம் நேராக மேடை இருந்தது அதிலும் சிகப்பு வண்ண பூக்களால் அசர அடிக்கும் அழகில் இருந்தது அந்த அலங்காரம் .

" ஓஓ " என்ற இரைச்சலில் நடப்பிற்கு வந்தவள் சத்தம் வந்த மேடையை பார்த்தாள் , அங்கே பத்து பதினைந்து நபர்கள் ஒருவனை சுற்றி நின்று உள்ளிருப்பவனை அமுக்கி எடுத்து கொண்டிருந்தனர் .

'என்ன நடக்கிறது' என்று இவளிற்கு ஆவல் எழும்ப கூர்ந்து கவனித்தாள் , கோட் சூட் போட்டவனை படாத பாடு படுத்தி கொண்டிருந்தார்கள் ,கையில் ஒரு செல்பி ஸ்டிக் வேறு அவன் தான் மாப்பிள்ளை என்று சனாவிற்கு தெரியும் ஏற்கனவே ப்ரியாவின் மூலமாக பார்த்து இருக்கிறாள்.

வட்டமாக இருந்தவர்கள் போட்டோ எடுப்பதற்காக இப்போது அரை வட்டமாக மாறி இருந்தனர் , அதில் ஒருவன் மாப்பிள்ளை கழுத்தில் ஒரு கை இருக்க, இன்னொரு கை அவன் ஜெல் போட்டு ஸ்டைல்லாக சீவிய தலையை களைத்து கொண்டிருந்தது . அதே நிலையில் போட்டோவிற்கு போஸ் வேறு .

உதட்டில் புன்னகை அரும்ப , அந்த சேட்டையை செய்து கொண்டிருந்தவன் முகத்தை ஆழ்ந்து பார்த்தவளுக்கு உலகம் நின்றது , மூச்சு முட்டியது , இதயம் வேகமாக துடிக்க , வாய் ' ஷாஹித் ' என முணுமுணுத்தது.

ராயல் ப்ளூ ஷர்ட் , சாண்டல் நிற பான்ட் கையில் டைடன் வாட்ச் ஆளை அசர வைக்கும் புன்னகை நெற்றியில் அடங்காமல் புரளும் முடி கற்றைகளை ஒதுக்க கைகள் பரபரத்தது அடக்கி கொண்டாள் பேதை .

தன்னை ஒரு பெண் அணு அணுவாக ரசித்து கொண்டிருக்கிறாள் என்று தெரியாமல் நண்பர்களுடன் மேடையில் அரட்டை அடித்து , கீழ் இறங்கி வந்தவன் கால்கள் சனாவை கண்டதும் அப்படியே நின்றது .

அங்கு சிலை போல் நின்ற சனாவை பார்த்தவனின், மனதினுள் மெல்லிய கவுண்டர் ' அது சிலை இல்லைடா சிற்பம்' என்று சொன்னது . சொன்ன மனதை படித்த கண்கள் அவளை மேல் இருந்து கீழ் வரை ரசித்தது.

ராமர் பச்சை நேரத்தில் பட்டு உடுத்தி கழுத்தில் ஒரு மெல்லிய செயின் , அதற்கு ஈடு கொடுக்கும் விதமாக காதில் குடை ஜிமிக்கி அழகாக அங்கும் இங்கும் ஆடி அவன் மனதை ஆட்டம் காண வைத்தது.

கண்களில் உள்ள மை அவன் கண்களோடு கவி பேசியது , உதட்டில் உள்ள மெல்லிய சாயம் அவனை 'என்னை விட்டு வேறு எங்காவது பார்ப்பாயா' என்று சண்டை இடுவது போல் இருந்தது .

கஷ்டபட்டு பார்வையை அவள் கண்களுக்கு கொண்டு வந்தான் , எத்தனை நேரம் அந்த கண்கள் கொஞ்சி கொண்டதோ , நண்பர் பட்டாளத்தின் கத்தல் குரல் கேட்டவுடன் நடப்பிற்கு வந்தவர்கள்.

தாம் இருந்த , நினைத்த எண்ணங்களை நினைத்து தன்னையே நொந்து கொண்டார்கள் .

அப்போது மதி நேரம் காலம் புரியாமல்
" ஹேய் சனா அவன் தான அன்னைக்கு வந்து கத்திட்டு போனான் " என்று கூற

அவளை சனா முறைத்தாள் , அதை கண்டு கொள்ளாமல் .

"ஆனா செம்மையா இருக்கான் டி"

இப்போது சனா அவளை வெட்டவா குத்தவா என்ற ரேஞ்சில் முறைக்க,

சனா முறைப்பதை பார்த்து மதி அவள் தோளில் தட்டி, " பொறாம....."

" என் வாயில ஏதாவது வராம , ஒழுங்கா ஓடி போயிடு"

" யாரு கூட போக , ஆள் இருந்தா போகலாம்"

" நீயே ஒரு மாடு , உனக்கு ஆள் ஒரு கேடு"

" சரி சரி கலாய்க்காத , வா பிரியாவ பார்க்க போகலாம் " என்று சனாவின் கையை பிடித்து இழுத்து மணமகள் அறைக்குள் சென்றனர் .

தொடரும்
 

Advertisement

Top