Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
கரிசல் 17:

“யாரைக் கேட்டு முடிவு பண்ணுன மலரு..?” என்று விஷயம் தெரிந்து குதித்துக் கொண்டிருந்தார் பெரியசாமி.

“ஏங்க உங்களுக்கு தான் மதியைப் பிடிக்குமே...! அப்பறம் என்னங்க?” என்றார் மலர்.

“பிடிச்சா..மருமகளா கொண்டு வரணும்ன்னு ஏதாவது சட்டம் இருக்கா...? என் பையன் எம்புட்டு பெரிய படிப்பு படிக்கிறான்...அவனுக்கு குடிகாரன் பொண்ணை கட்டி வைப்பியா..?” என்றார்.

“எங்கண்ணன் குடிக்கிறதுக்கு மதி என்ன செய்வா..? பாவம்..! தங்கமான பொண்ணுங்க...நாம தேடித் போனாக் கூட இப்படிக் கிடைக்காது..!” என்று மலர் சொல்ல..

“வீட்டுல ஆம்பிள்ளை நான் ஒருத்தன் இருக்கேன்..என்னைக் கேட்காம நீயா எப்படி முடிவு பண்ணுவ..?” என்று ஏகத்திற்கும் குதிக்க...

“முகிலனுக்கு மதியைப் பிடிக்குது..! கட்டினா மதியை தான் கட்டுவேன்னு சொல்லிட்டான்..!” என்றார் ஒரே போடாய்.

“இல்ல..! எம்மவன் அப்படி சொல்லியிருக்க மாட்டன்..!” என்று அவர் நம்பிக்கையுடன் சொல்ல..

“உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னா...முகிலன் கிட்டயே கேட்டுக்கோங்க..! ஆனா எனக்கு மனோகரன் அண்ணன் பொண்ணு தான் மருமகளா வரணும்...!” என்று மலர் ஊன்றி அடிக்க...மனையாளை அதற்கு மேல் எதிர்க்க அவருக்கு துணிவில்லை.அது எப்போதும் இருந்ததில்லை. இருந்தாலும் பெரியசாமிக்கு மனம் இல்லை.

அவர் யோசனையில் இருக்க...முகிலனுக்கும் அந்த யோசனை தான்.அம்மாவிடம் சரி என்று சொல்லி விட்டலும்..மனதிற்குள் பல யோசனைகள்.

“எனக்கு கல்யாணம்ன்னு கூட படிக்கிறவங்களுக்கு தெரிஞ்சா எப்படி கிண்டல் பண்ணுவாங்க..? எல்லாமே டவுன்ல இருந்து படிக்க வர பிள்ளைங்க வேற...?” என்று அவனும் ஒரு பக்கம் யோசித்துக் கொண்டிருந்தான்.ஆனால் மதியை இழக்க அவன் அந்த நிலையிலும் தயாராக இல்லை.

“ம்மா என்னம்மா இப்படி சொல்றிங்க...? என்னை கண்டிப்பா படிக்க வைக்கிறேன்னு சொன்னிங்க தான..?” என்று வண்ண மதி அவள் அம்மாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

“சொன்னேன் தான்..ஆனா இப்போ தான் சூழ்நிலை சரியில்லையே..! அதனால பேசாம முகிலனைக் கல்யாணம் பண்ணிக்க..!” என்றார் பார்வதி.

“என்னால இப்ப கல்யாணம் எல்லாம் பண்ண முடியாது..! நான் படிச்சு பெரிய டீச்சர் ஆகணும்...நான் படிச்ச ஸ்கூலுக்கே டீச்சரா போகணும்..!” என்று அவள் வார்த்தைகளில் தன்னம்பிக்கை மிதக்க...

“அம்மா உன் நல்லதுக்காக மட்டும் தான் சொல்லுவேன் மதி.இன்னைக்கு இப்படி பேசுன ஊரு..நாளைக்கு எப்படி வேணும்ன்னாலும் பேசும்..உங்கப்பா நிலையா இருந்தா கூட பரவாயில்லை.அவரும் எப்ப பாரு தண்ணியை போட்டுட்டு..வீடு, பிள்ளைகுட்டின்னு கவலை இல்லாம திரியறாரு..!

அதனால் முகிலனை கல்யாணம் பண்ணிக்க..மலர் மதினி உன்னைய ரொம்ப நல்லா பார்த்துக்குவாக..! அப்பறம் முகிலனைப் பத்தி நான் சொல்லவே வேணாம் உனக்கு.ரொம்ப தங்கம்..!” என்று பார்வதி நிதானமாக,பொறுமையுடன் எடுத்து சொல்ல....மதிக்கு அப்போதே தெரிந்து விட்டது. இனி நடக்க இருக்கும் விஷயத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று.

பார்வதி ஒரு விஷயத்தை தீர்மானமாக சொல்கிறார் என்றால்...அதற்கு மேல் எதிர்த்து பேச அவளால் முடியாது.அப்படி பேசினால் எப்படி அடி கிடைக்கும் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.

முகிலன்-மதி திருமண வேலைகள் படு வேகமாக நடக்க...நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த திலகாவிற்கு வயிறு எரிந்தது.
தன பாண்டியும்,குண பாண்டியும் கல்யாண வேலைகளில் உதவிக் கொண்டிருக்க..அதைப் பார்த்து விட்ட வந்த திலகா அதை அப்படியே அரசியிடம் போட்டுக் கொடுத்தார்.

“என்னக்கா...இவனுக ரெண்டு பேரும் அங்க மாடு மாதிரி வேலை பார்த்துட்டு இருக்கானுக...! இங்க வீட்ல ஒரு வேலை சொன்னா செய்றது இல்லை..அங்க போயி பாருங்க..!” என்று திலகா எடுத்துக் கொடுக்க..

“அட நீ வேற திலகா..என் புருஷனைக் கூட மாத்திட்டேன்...ஆனா இவனுங்களை என்னால் மாத்தவே முடியலை..அப்படி என்ன தான் மாயம் மந்திரம் செஞ்சாளுகளோ தெரியலை..அவளுகளைப் பத்தி பேசினா இவனுகளுக்கு கோபம் பலியா வருது..எப்படியோ போய் தொலைங்கன்னு விட்டுட்டேன்..!” என்று அரசி அலுத்துக் கொள்ள....திலகாவிற்கு புஸ் என்று ஆனது.

“அவளுக்கு வந்த வாழ்வைப் பாருங்கக்கா..! இவ மட்டும் முகிலனுக்கு பொண்டாட்டியா ஆகிட்டா..அப்பறம் அந்த பார்வதியை கைலையே பிடிக்க முடியாது..!” என்க..

“நீ சொல்றதும் உண்மைதான் திலகா...ஆனா இதுல நாம என்ன பண்றது..?” என்று அரசி அப்போதும் விலகிக் கொள்ள...

“அட என்னக்கா நீங்க..! நமக்கும் ஒரு சந்தர்ப்பம் வரும்...அப்ப காட்டுறேன் இந்த திலகா யாருன்னு..!” என்று வஞ்சனை கொண்டார்.

பெண்ணுக்கு பெண் தான் எதிரியோ..?

முகிலனுக்கு இன்னமும் யோசனை தீர்ந்தபாடில்லை.அப்போதைய திருமணத்தில் அவனுக்கு துளியும் விருப்பம் இல்லை.ஆனால் மதி அவனுக்கு வேண்டும்.இதை விட்டால் வேறு நல்ல சந்தர்ப்பமும் அவனுக்குக் கிடைக்காது என்று நன்றாகத் தெரியும்.

ஆனால் மதிக்கு தன்னைப் பிடித்திருக்கிறதா..? அவளுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமா..? என்று கேட்க துடியாய் துடித்துக் கொண்டிருந்தான்.ஆனால் அதற்கான சந்தர்ப்பம் தானாகவும் வாய்க்கவில்லை.அவனாலும் ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.

அவனுக்கு அதிக நாட்கள் விடுப்பும் எடுக்க முடியாது.

படிக்க வேண்டிய பாடங்கள் அவனுக்கு மலை போல் குவிந்து கிடக்க...அவனுக்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல் வந்தது.
ஒரு பக்கம் மனதுக்கு பிடித்த பெண்...ஒரு பக்கம் கஷ்ட்டபட்டு கிடைத்த படிப்பு ஒரு பக்கம்...என்று அவன் தள்ளாடிக் கொண்டிருந்தான்.அவனுக்கும் பக்குவப்படாத வயது தானே..!

ஏதோ ஒரு வேகத்தில் சரி என்று சொல்லிவிட்டோமோ..? என்று நூறாவது முறையாக யோசித்து விட்டான்.பதில் தான் கிடைத்தபாடில்லை.

“என்னாச்சு முகிலா..? ஏன் எப்பவும் யோசனை முகமாவே இருக்க..?”””” என்று மலர் கேட்க...

“எனக்கு மதி கூட பேசணும்..? அவளுக்கு இந்த கல்யாணத்துல சம்மதமான்னு கேட்கணும்..!”என்று சொன்னான்.

“என்ன முகில் இது புதுப்பழக்கம்..நம்ம ஊர்ல அப்படி கேட்குறது எல்லாம் வழக்கம் இல்லை..உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பேசினதுக்கு அப்பறம்..ரெண்டு பேரும் பாக்கவே கூடாது.இதுல எங்க இருந்து பேச..?” என்று மலர் கேட்க..

“அம்மா..! இதெல்லாம் அநியாயம்.அதுக்காக ஒரு வார்த்தை கேட்குறதுல என்ன குறைஞ்சிட போகுது..அவ சின்ன பிள்ளைம்மா..அவகிட்ட நான் சில விஷயங்களை சொல்லணும்...!” என்று முகிலன் மன்றாடிப் பார்க்க..மலர் அதுக்கு ஒப்புக் கொள்ளவேயில்லை.

எங்கே அவன் பேசப் போய்...வேறு ஒரு பஞ்சாயத்து வந்து விடுமோ என்ற பயம் தான் அவருக்கு.

முகிலனின் கதவுகள் அடைக்கபட...அங்கு மதியின் நிலையோ சொல்லவே வேண்டாம்.அவளை வீட்டை விட்டே பார்வதி வெளியேற்றவில்லை.பேசி முடித்த பொண்ணை வெளியே அனுப்பினால் காத்து கருப்பு அண்டி விடும் என்ற ஆதீத நம்பிக்கை அந்த ஊரில் நிலவிக் கொண்டிருந்தது நெடுங்காலமாய்.

மதியின் திருமணத்தில் கொஞ்சம் வருத்தம் இருந்தாலும்...மாப்பிள்ளை முகிலன் என்று கேள்விப்பட்டதில் இருந்து செல்விக்கும்,கங்காவுக்கும் அப்படி ஒரு சந்தோசம். அவளைப் பார்க்க வீட்டிற்கே சென்றிருந்தனர்.

“என்னடி வண்ணமதி...என்னமோ படிக்க போறேன்னு சொன்ன..? எங்களுக்கு முன்னாடி கல்யாணம் பண்ண போற..?” என்று செல்வி எதார்த்தமாக விளையாட்டாய் கேட்க..அது மதியின் மனதில் துணுக்காய் விழுந்தது.

குழப்பத்தில் இருக்கும் மனம்..எதை சொன்னாலும் தப்பர்த்தம் கற்ப்பிக்குமாம். அந்த நிலையில் இருந்தால் வண்ண மதி.
“என்ன கிண்டல் பண்றியா..?” என்று மதி கேட்க...

“உன்னைக் கிண்டல் பண்ணி எங்களுக்கு என்ன ஆகப் போகுது..? உனக்கு கல்யாணம்..அதுவும் முகிலன் அண்ணா கூட தான்னு கேள்விப்பட்டப்ப எவ்வளவு சந்தோசம் தெரியுமா எங்களுக்கு..!” என்று அவள் வெள்ளந்தியாய் சொல்ல..

“எல்லாத்துக்கும் நீங்க தாண்டி காரணம்..என் மூஞ்சியிலேயே முழிக்காதிங்க..!” என்றாள் பட்டென்று.

“நாங்க என்னடி பண்ணினோம்..? எங்க மேல கோபப்படுற..?” என்று கங்கா கேட்க..

“ஆமா..அன்னைக்கு எக்ஸாம் முடிச்சுட்டு வரப்ப..நான் உங்களையும் கூப்பிட்டேன்..நீங்கதான் பிகு பண்ணிக்கிட்டு வரலை.நீங்க மட்டும் அன்னைக்கு என்கூட துணைக்கு வந்திருந்தா..இவ்வளவு பிரச்சனையும் வந்திருக்காது..! நானும் இப்படி படிப்பைக் கெடுத்து கல்யாணம் செய்ற அளவுக்கு போயிருக்க மாட்டேன்..!” என்று சொல்லி கொண்டிருந்தவளின் கண்கள் கலங்க..

“ஏய் மதி...! இப்படி எல்லாம் நடக்கும்ன்னு நாங்க என்ன கனவா கண்டோம்...!நாங்க என்னடி பண்ணோம்...எங்களை கோவிச்சுக்காத மதி..” என்று செல்வி கெஞ்ச..

“வேண்டாம் போய்டுங்க..! என்கூட பேசாதிங்க..! இனி எப்பவும் பழம் விட மாட்டேன்..!” என்று சொல்ல....

“பழம் விட மாட்டியா..? நாங்க உன் பிரண்டுக தாண்டி...உனக்கு எப்ப பேசனும்ன்னு தோணுதோ அப்ப பேசு..! நீ வாடி செல்வி..!” என்று கங்கா அவளை அழைத்துக் கொண்டு செல்ல...அதற்கும் கண்கலங்கினாள் மதி.
 
எல்லோரும் தூரமாய் போவதைப் போன்ற உணர்வு.அது ஏன் என்று ஆராயும் அளவுக்கு அவளுக்கு வயது முதிர்ச்சியும் இல்லை.அறிவு வளர்ச்சியும் இல்லை.

மனோகரன் எந்த கவலையும் இல்லாமல் எப்போதும் போல் இருந்தார். மனதளவில் மகிழ்ச்சி தான் அவருக்கு.ஆனால் அதை வெளிப்படுத்தாமல் இருந்தார்.அவருக்குதான் முகிலனை ஏற்கனவே பிடிக்குமே.

பெரியசாமியைத் தவிர அனைவருக்கும் சம்மதம் மற்றும் சந்தோசம் என்ற ரீதியில் தான் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

பார்வதி,மலருடன் சேர்ந்து வீடு சொல்வதற்காக சென்றிருந்தார். அப்போதெல்லாம் பத்திரிக்கை அடிக்காமல் கல்யாணம் செய்பவர்கள்...வீடு வீடாக சென்று வெற்றிலை பாக்கு மட்டும் வைத்து அழைப்பர்.அதை தான் வீடு சொல்லுதல் என்பர்.

மதி வீட்டின் கொல்லைப் புறத்தில் சோகமாய் அமர்ந்திருக்க...அவளின் அந்த தனிமைக்காக...பல நாட்களாக காத்திருந்தான் முத்து.

“மதி..மதி..” என்று அவன் அமைதியாக கூப்பிட..முதலில் அவளுக்கு கேட்கவில்லை.அவர்கள் இருவரின் வீட்டிற்கும் பொது சுவர் தான்.இரண்டு வீடும் ஒரே மாதிரியான அமைப்பைக் கொண்டவை.அப்போது..அந்த கிராமத்தில் பெரும்பாலும் அந்த வகையிலான ஓட்டு வீடுகள் தான் அதிகம்.

முத்து கொஞ்சம் சத்தமாக ‘மதி’ என்று அழைக்க..அப்போது தான் திரும்பினாள் மதி.

அவனைப் பார்த்து முறைத்தவள்..”என்கிட்டே பேசாத...போய்டு..! உன்னால தான் எல்லாம்...” என்று கண்ணைக் கசக்க..

“இப்ப எதுக்கு அழுகுற...நான் என்ன பண்ணேன்..? நான் அடி வாங்கினது தான் மிச்சம்.உனக்கென்ன..? கடைசியில கல்யாணம் பண்ணிக்கிட்டு போகப் போற.. என்னால உனக்கு என்னமோ கெடுதல் நடந்த மாதிரி முகத்தை திருப்பிக்கிற..” என்று அவள் மேல் தப்பு இருப்பதைப் போல் பேசினான் முத்து.

“நீ என்ன சொல்ற..?” என்றாள்.

“ஆமா...! உண்மையைத் தானே சொல்றேன்..! அவன் அடிச்சதுனால தான் எங்கம்மா சண்டைக்கு போட்டுச்சு.கடைசியில..என்னைக் கெட்டவனாக்கி..நீ இப்ப கல்யாணம் பண்ண போற..இதுல பாவமேன்னு உன்கிட்ட பேச வந்தா..என்னையவே குத்தம் சொல்ற..?” என்றான்.

“அப்படியா சொல்ற..?” என்று அப்பாவித்தனமாக கேட்டவள்...”சாரி முத்து..அவங்களுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்..!” என்றாள்.

“விடு..விடு...! உனக்காகத்தானே..! இதெல்லாம் ஒரு அடியா..? உனக்காக நான் என்ன வேணுமின்னாலும் செய்வேன் மதி...!” என்று அவன் வார்த்தையாட...

“உன்னை நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு முத்து..! எவ்வளவு பிரச்சனை நடந்திருக்கு..ஆனா இப்பவும் எனக்காக பார்க்குற...இப்படி எல்லாம் நல்லவனா இருக்காத முத்து..!” என்றாள் அந்த பாவப்பட்ட நல்லவள்.

“அப்படியா சொல்ற மதி...! நல்லவனுக்கு தான் சோதனை அதிகம் வரும்ன்னு சொல்லுவாங்க..! ஒருவேளை அதனால் தான் நான் அடி வாங்கியிருப்பேனோ..?” என்று அவன் சொல்ல..

“இருக்கலாம் முத்து..!” என்றாள்.

இது அவள் அறியாமை அல்ல.அந்த வயதில் அவளுக்கு தெரிந்த பக்குவம் அது தான்.தொலைக்காட்சிகளில் மனத்தைக் கெடுக்கும் விளம்பரங்களும், இரட்டை அர்த்த வசனங்களை கொண்ட சீரியல்களும்,தடவி தடவி காதலிக்கும் படங்களையும் அதிகம் காணாத வயது.அங்கு காணவும் கிடைக்காது.தொலைகாட்சிப் பெட்டியே இல்லாத அவள் வீடு... படிப்பையும், குடும்பத்தையும்,நண்பர்களையும் நேசிக்க மட்டுமே கற்றுக் கொடுத்திருந்தது.

அந்த நேசிப்பு சில சமயங்களில் அவளின் அப்பாவித்தனத்தால் இனம் காண முடியாத ஒன்றாகவும் இருந்திருக்கிறது.வெளுத்ததெல்லாம் வெள்ளை வேட்டி என்று நினைக்கும் ரகம் அவள்.அவளின் ஒரே நேசிப்பு.. தான் டீச்சர் ஆக வேண்டும் என்பது.

“நீ கல்யாணம் பண்ணி போய்ட்டா என்கூட பேசக்கூட மாட்ட..?” என்றான் முத்து சோகமாய்.

“எதுக்கு அப்படி சொல்ற முத்து.நீ எப்பவும் எனக்கு பிரண்டு தான்.நான் பேசுவேன்..!” என்றாள்.

“உனக்கு விஷயமே புரியலை மதி.ஏற்கனவே உன்னைய என்கூட சேர்த்து வச்சி தப்பா பேசுனதுனால தான்..உனக்கு இப்ப கல்யாணமே பண்றாங்க..அப்பறம் எப்படி என் கூட பேச விடுவாங்க..! இதெல்லாம் நீ யோசிக்கவே மாட்டியா..?” என்றான்.

“ஆமாம்ல..! அதை மறந்துட்டேன் பாரு..!” என்று அவள் தலையைத் தட்ட...

“நீ என் கூட பேசலைன்னாலும் பரவாயில்லை மதி...ஆனா நீ சந்தோஷமா இருக்கணும்.உன்னோட சந்தோசம் தான் எனக்கு முக்கியம்..நான் உன் பிரண்டு இல்லையா..இதெல்லாம் இங்க இருக்குற யாருக்கும் புரியாது..!” என்றான்.

அவனின் பேச்சில் கரைந்தவள்...”நீ ரொம்ப நல்லவன் முத்து..!” என்றாள்.

“எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான் மதி..!” என்று அவன் இழுக்க..

“என்ன முத்து..!”

“இல்ல வேண்டாம் மதி..! சொன்னா உனக்கு மனசுக்கு கஷ்ட்டமா இருக்கும்..!” என்று அவன் நிறுத்த..

“அதான் வாய் வரைக்கும் வந்திடுச்சுல்ல...சொல்லு..எனக்கு கஷ்ட்டமா எல்லாம் இருக்காது..!” என்றாள்.

“என்ன..? எனக்கு தான் படிப்பு வரலை..! என் பிரண்டு நீயாவது படிச்சு..நீ ஆசைப்பட்ட படி டீச்சர் ஆகிடுவன்னு நினைச்சேன்..! அது எங்க..உனக்கு தான் அந்த முகிலன் கூட கல்யாணம் நடக்க போகுதே..! சும்மாவே ஆடுவான்.இன்னும் டாக்டர் வேற ஆகிட்டான்...அவ்வளவு தான்..உன்னைய மதிப்பானா..? பத்தாவது படிச்சவ என் பொண்டாட்டின்னு அவன் எப்படி வெளிய சொல்லுவான்...அதை நினைச்சு நீயும் கவலைப்படுவ.. அதை நினைச்சா எனக்கு மனசே விட்டுப் போகுது மதி...” என்றான்.

“முத்து சொல்றதும் உண்மைதான்.மணி மாமா டாக்டருக்கு படிக்கிறாங்க..! நான் வெறும் பத்தாவது தான்..இது எப்படி அவங்களுக்கு மரியாதையா இருக்கும்..ஒரு வேளை மலர் அத்தை சொன்னதுக்காக சரின்னு சொல்லியிருப்பாகளோ..!” என்று யோசித்தாள்.

“என்ன யோசனை மதி..?” முத்து.

“கல்யாணம் பண்ணிட்டு மணி மாமா என்னை படிக்க வைப்பாங்கன்னு அம்மா சொன்னாங்க..! அதான் யோசிக்கிறேன்..!” என்றாள்.

“அட நீ வேற..? எல்லாம் அப்படித்தான் சொல்லுவாங்க..! ஆனா செய்வாங்களா..? எனக்கு ஒன்னும் இல்லை...உனக்கு எது விருப்பமோ அப்படி செய் மதி.நீ என் பிரண்ட்...நீ சந்தோஷமா இருக்கணும்..அது தான் எனக்கு வேணும்..!” என்றான்.

முத்துவின் வார்த்தைகள் அவள் மனதில் பயத்தை ஏற்படுத்தியது. கல்யாணத்திற்கு பிறகு முகிலன் எப்படியும் தன்னை படிக்க வைப்பான் என்று எண்ணியிருந்தாள்.பார்வதியும் அப்படி சொல்லி தான் அவளை சமாதானம் செய்திருந்தார். இப்போது முத்து பேசியது..குழம்பிய குட்டையை மேலும் குழப்ப...என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தாள் வண்ண மதி.

அதே நேரம்..மனோகரனைத் தேடி பெரியசாமி வந்தார் அவர்களின் வீட்டுக்கு.யாரையும் காணாமல்..தேடிக்கொண்டே பின்கட்டுக்கு சென்றார்.(மாடு கட்டும் கொட்டகையில் இருப்பார்கள் என்ற எண்ணத்தில்.)

அங்கு வண்ண மதியும்,முத்துவும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த பெரியசாமிக்கு...கோபம் தொண்டை வரை வந்து வார்த்தை வெளியே வர..அடக்கிக் கொண்டார்.

“மதி..!” என்று அவர் கூப்பிட அவரின் சத்தத்தில்...முத்து விசுக்கென்று அவன் வீட்டிற்குள் சென்று விட்டான்.அவன் எப்போதும் போல் நின்று பேசியிருந்தால் அவருக்கு சந்தேகம் வந்திருக்காதோ என்னவோ.அவன் அப்படி உடனே சென்றது அவருக்கு பல யோசனைகளைத் தந்தது.

“வாங்க மாமா..!” என்றாள் மதி.

“மனோகரன் எங்க..?” என்றார்.

“தெரியலை மாமா..அப்பா சொல்லிட்டு போகலை..ஏதாவது வேலையா போயிருப்பார்..!” என்றாள்.

“ஆமா..குடிகாரனுக்கு என்ன வேலை இருக்க போகுது..!” என்று சன்ன குரலில் சொல்ல...அவரின் அந்த வார்த்தைகள் மதிக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

“எங்கப்பாவை குடிகாரன்னு சொல்லாதிங்க மாமா..!” என்றாள்.

“குடிகாரனை குடிகாரன்னு தான் சொல்ல முடியும்.இருக்குற வேலை எல்லாம் விட்டுட்டு துரைய தேடி வந்தா..துரைவீட்டுல இல்லை..இப்படி உன்னை தனியா விட்டுட்டு எங்க போனாக...!வீட்டுல ஆள் இல்லைன்னா..கண்டவங்க கூட பேசலாம்ன்னு இருக்கா..?” என்றார் கோபமாய்.

“மாமா நான் கண்டவங்க கூட எல்லாம் பேசலை...முத்து என் பிரண்ட்..” என்றாள் கோபமாய்.

“ஆம்பளைப் பையனுக்கு பொம்பளைப் பிள்ளை கூட என்ன நட்பு வேண்டி கிடக்கு..என்னைப் பார்த்த உடனே ஓடி ஒளியற அளவுக்கு..!” என்றார்.

“முத்து உங்களுக்கு பயந்து போகலை.அவன்னால மறுபடியும் பிரச்சனை வேண்டாம்ன்னு போயிருப்பான்..!” என்றாள்.
“இப்படி வாய்க்கு வாய் பேசுற பிள்ளைக குடும்பத்துக்கு தோது பட்டு வராது..குணத்தை மாத்துற வழியைப் பாரு..!” என்றவர்..

“இந்த மலருக்காக...கண்டதை எல்லாம் சகிச்சுக்க வேண்டி இருக்கு..!” என்று துண்டை உதறி தோளில் போட்டபடி அவர் வெளியே செல்ல எத்தனிக்க...

“வாங்க அண்ணா..!” என்றபடி வந்தார் பார்வதி.

“ம்ம்...ம்ம்ம்..!” என்றார்.

“மதி மாமாவுக்கு மோர் ஏதாவது குடுத்தியா..?” என்று பார்வதி கேட்க..

“அந்த பழக்கம் எல்லாம் சொல்லிக் குடுக்கலை போல இருக்கே..!” என்றார் பெரியசாமி கடுப்பாய்.

அவரின் வார்த்தைகள் பார்வதிக்கு நறுக்கென்று இருக்க...மதியை முறைத்தார்.

அவரின் முறைப்புக்கு பயந்தவள்..”இல்லம்மா..மாமா இப்பதான் வந்தாக..அப்பாவை கேட்டுட்டு இருந்தாங்க..அதான் பதில் சொல்லிட்டு இருந்தேன்..இந்தா போய் எடுத்துட்டு வந்துடுறேன்..!” என்று அவள் மோர் எடுக்க செல்ல...

“இங்க பார் பார்வதி..! எனக்கு மதியை பிடிக்கும் தான் இல்லைன்னு சொல்லலை.ஆனா அவ நடவடிக்கை எனக்கு சரியா படலை..பார்த்துக்க..!” என்றபடி மோரை எதிர்பார்க்காமல் சென்று விட்டார் பெரியசாமி.

அவர் சென்றாலும்..அவர் சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகள் பார்வதிக்குள் ஒரு பூகம்பத்தை ஏற்படுத்த...மதியின் காதுகளிலும் விழுந்தது.பார்வதியை நினைத்து அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது.

romba nalla iruku sis
 
Avasara kalyana erpadu.. madhi chinna ponnu .. mukilan um padikiraan naduvla muthu vera. Periasamy vera ivalo kaduppa irukaru .. nice epi sis
 
Top