Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavipritha's Thazhampoo Vaasam Nee-29

Advertisement

ஒரு கூட்டு குடும்பத்தின் அன்பு பாசம் விட்டு கொடுக்கிறது அரவணைப்பு எல்லாம் அழகா கொடுத்து இருக்கீங்க.. கூடவே கொஞ்சம் அரசியல் அதன் சூழ்ச்சி பிசினஸ் எல்லாம் சேர்த்து கொடுத்து இருந்தது ரசிக்கும் படியாக இருக்குது..

அவ்வளவு பெரிதாக பொறுப்புகள் ஏற்காத நாயகன். காதல் என ஒரு பெண்ணிடம் சுற்றி கொண்டு இருக்கும் போது அவள் நட்பு கோடு போட்டு வேறு திருமணம் என விட்டு செல்ல உடைந்து போகும் அவனை தேற்ற தவிக்கும் அண்ணன்... எங்குமே அவள் அவனிடம் காதலை காட்டவில்லை நட்பு மட்டுமே என தெரிந்து முற்றிலும் தளர்ந்து போகும் அவனுக்கு கொடுக்கப்படும் முக்கியமான பொறுப்பு அவர்களின் தொழிலின் முக்கிய புள்ளி அதை முடிக்காவிட்டால் தோல்வி எனும் நிலையில் அதை முடிக்க அரும்பாடு பட்டு இல்லாத பொறுமையை இழுத்து பிடித்து காதல் தோல்வி எல்லாம் காணாமல் போய் நிற்கும் வேளை தான் தொழிலில் உள்ள பிரச்சினைகள் புரிய வர வேறு அவதாரம்..

போன வேலை நடக்காது என்ன செய்வது என தெரியாது வருபவனுக்கு இடியாக அண்ணனின் செயல், குடும்பத்தை தேற்றி பிள்ளைகளை பார்த்து, இருமாதங்களில் திருமணம் எனும் நிலையில் இருக்கும் தங்கையை பார்த்து, அதலபாதாலத்தில் நிற்கும் தொழிலை பார்த்து, தொழிலாளர்கள் தான் முக்கியம் எனும் தந்தை அண்ணனின் தாரக மந்திரத்தை கடைபிடித்து மீள முயலும் வேளை அவனுக்கு கிடைக்கும் சிறு அரசியல்வாதி அறிமுகம் அவனின் எண்ணங்களை மாற்றி அவரின் மூலம் எல்லாம் செய்து கொள்ள துணிய அதன் பொருட்டு அவனுக்கு திருமணம்...

காதல் இல்லா கடமையாக செய்யும் திருமணத்தில் அவன் வீட்டினருக்கு உடன்பாடு இல்லை ஆனால் காதல் என சொல்பவனிடம் எதிர்க்காது முடித்து வைக்க, இவனின் முகம் பார்க்கும் பெண்ணை யோசிக்க கூட முடியாமல் கடந்தகாலம் கண்முன்னே போக எல்லாம் பிஸினஸ் ஆக பார்த்து கொஞ்சம் சிக்கல்.. புது பெண்ணுக்கு மனவருத்தம் இயல்பிலேயே நிதானம் கொண்ட பெண் நிதானித்து அவனை கணித்து ஒதுங்கி நிற்க, தந்தையும் அவனின் செயல் புரிந்தும் புரியாமலும் தவிர்க்க அங்கு புரிய தொடங்குது அவனின் கடந்தகால n நிகழ்கால தவறு..

கடந்தகாலம் விடைபெற, நிகழ்காலத்தை முன் நிறுத்தி தந்தையிடம் எல்லாம் சொல்லி அவரின் அறிவுரை பெற்று எல்லாம் நேர் செய்பவனுக்கு மனைவியை கரெக்ட் செய்ய செய்யும் முயற்சி எல்லாம் அவளின் அந்நிய பயப்பார்வையில் அடிபட நெருங்கும் வழி தெரியாமல் சின்ன பெண்ணிடம் சிக்கி தவிக்கிறான்..

கடந்தகாலம் n அவளை திருமணம் முடித்த அனைத்தும் சொல்லி அவளின் மன்னிப்பை யாசிக்கும் போது அவளுக்கு வருத்தம் வந்தாலும் அவனின் அன்றைய நிலை மற்றும் அவன் மேல் கொண்ட காதல் அவனின் அத்தனை தவறையும் மன்னித்து ஏற்றுக்கொள்ள சொல்லுது... அவனின் குறும்பை அவள் கையில் எடுக்கிறாள்... அவனின் தவறு என்ன? அதை எப்படி அவள் கடந்தால் என அழகா சொல்லி இருக்காங்க ரைட்டர்...

நாயகி சிறு பெண் என்றாலும் நிதானமும் பொறுமையும் அழுத்தமும் அதிகம் அதே சமயம் அன்புக்கு அடிமை... புகுந்த வீட்டில் அப்படி பொருந்தி வரா... குழந்தைகளின் காட்டும் கனிவு பாசம் நாத்தனரிடம் அன்பு மாமியார் மாமானர் அக்கா மாமா என அழகா பொருந்தி போகும் பெண்.. அனைவருக்கும் ஈசியா எல்லாம் செய்யுற.. கணவனிடம் ஊடல் எல்லாம் சூப்பர்ப்... கோபம் அவ்வளவா வரவே இல்லை.. எல்லாம் காதல் எனும் மாயக்கயிறு கொண்டு கட்டி இழுத்துட்டு போகுது...

நாயகனின் அண்ணன் குழ்ந்தைகள் மீதான பாசம் எல்லாம் செம்ம.. கூட்டு குடும்பம் என்பது அரிதாகி வரும் இந்நாட்களில் அவர்களின் பிணைப்பு, குடும்பத்தை அரவணைக்கும் பாங்கு எல்லாருமே செம்ம அழகா பொருந்தி போறாங்க..

இளா லதா: இளாவின் தொழில், தொழிலாளர் பக்தி அவனின் சிறு சருக்கலில் எடுக்கும் முடிவு சிறு விலகல் இடைவெளி தந்தாலும் எங்குமே குடும்பமே விட்டு கொடுக்காமல் தாங்கி பிடித்து கொள்ளுது... அதுவும் தம்பி இருந்தா போதும் அவ்வளவும் பலம் தான் எனும் போல அண்ணன் தம்பி பாசம்.. லதாவின் தார்மீக நியாயமான கோபம் கூட காதல் என வரும் போது மறைந்து போகுது...

இருவரின் பொறுப்பு எல்லாம் சூப்பர்.. இருவருக்கும் இடையான பந்தம் கொஞ்சம் சறுக்கல் வந்தாலும் அழகா நிளைச்சு நிக்குது.. லதா நல்லா ஸ்கோர் பண்ணிட்டா silent ah...

மாமியார் மருமகள் உறவு அழகா இருக்கு.. அதே போல் நாத்தனார் உறவும் சூப்பரா சொல்லி இருக்கீங்க...

மூர்த்தி காமாட்சி அழகான பாசமான பெற்றோர்.. குடும்பம் உடையாமல் இருக்க இவர்களின் பங்கு பெரிது.. மருமகள் என இல்லாமல் அனைத்திலும் துணை நிக்கிராங்க...

தாமு அவருக்கு இருப்பது எல்லா பெண்களின் தந்தைக்கும் இருக்கும் ஆசை தான்.. அதை சரியானவன் கிடைக்கும் போது பெண்ணை கட்டிகொடுத்து அவனுக்கு முழு மரியாதை கொடுத்து அவன் சொல்லுவதை செய்து மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் அவர், சாரங்கன் இருவரும் ஊழல் அரசியல்வாதிகள் மத்தியில் நல்லவர்களாக இருப்பது சூப்பர்.. அவர்களின் மூர்த்தி மீதான மரியாதை அருமை...

காவ்யா அன்பான பாசமான வீட்டின் கடைக்குட்டி.. அண்ணன் அண்ணிகள் எல்லார் மீதும் அதீத அன்பு.. அதுவும் அவளும் ஈஸ்வரும் வம்பிழுத்து கொள்ளும் இடங்கள் ரசிக்க கூடியதா இருக்குது..

நாயகன் அந்த மந்திரியை அதிக கவனம் ஈர்க்காம வச்சு செஞ்சுட்டான்... மக்களுக்கு மாமனாரை சேவை செய்ய வச்ச மாதிரியும் ஆச்சு, அந்த மந்திரியை கட்டம் கட்டி ஒதுக்கிய மாதிரியும் ஆச்சு சூப்பர்...
 
Awesome story. ?
Full of positive way of thinking, violence lan illama. Ella problems kum oru vazhi iruku, easy going ah. ?
Family orientated, andha pinanipu, Anbu, pasama, characters lam super ?
 
Top