Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Nee Enai Neengaathae Anbae 6

Advertisement

S


பகுதி – 6

மறுவாரம் முழுவதும் ஜெனிக்குப் பரீட்சை நடந்ததால்... அவள் அதில் பிஸியாக இருந்தாள். வழக்கம் போல் அவளும் ராஜேஷும் கல்லூரியில் சந்தித்துக் கொண்டு தான் இருந்தனர்.

கடைசிப் பரீட்சை முடிந்து வெளியே வந்த ஜெனி அவளுக்காகக் காத்திருந்த ராஜேஷை பார்த்து புன்னகைக்க.... ராஜேஷும் பதிலுக்குப் புன்னகைத்தான். ஆனால்... அதில் ஜீவனே இல்லை...

“என்ன ஆச்சு ராஜேஷ் ரொம்ப டல்லா இருக்கீங்க?”

“ம்ம்.. இன்னையில இருந்து காலேஜ் லீவ் ஸ்டார்ட் ஆகிடும். இனி நான் உன்னை எப்ப பார்ப்பேன்?”

“ஒரு மாசம் தானே நீங்களும் இங்க தான M.B.A.,சேரப்போறீங்க... பிறகு என்ன கவலை...”

“இந்த ஒரு மாசம் உன்னைப் பார்க்காம இருக்கணும்னா எனக்கு இன்னைக்கு எதாவது ட்ரீட் வேணுமே....” சொன்ன ராஜேஷை ஜெனி புரியாமல் பார்க்க.....

“இன்னைக்கு movie போவோமா ஜெனி.....” என்றான் ராஜேஷ் ஆர்வமாக....

ஜெனியின் முகத்தில் இருந்த புன்னகை நொடியில் மறைய... அவள் மறுப்பாகத் தலையைத்தபடி அங்கிருந்து சென்றாள்.

“இன்னைக்கு விட்டா வேற நாள் போக முடியாது ஜெனி ... இதுவரை எங்கையும் வெளிய போகலை......” அவன் பேசுவது காதில் விழாதது போல் ஜெனி தொடர்ந்து நடக்க... ராஜேஷ் அவள் கைப்பற்றி நிறுத்தினான்.

“ராஜேஷ் புரிஞ்சிக்கோ எங்க வீட்ல நம்ம விஷயம் தெரிஞ்சிது பெரிய பிரச்சனை ஆகும்.” ஜெனியின் மறுப்பை ராஜேஷ் காது கொடுத்து கேட்கும் நிலையில் இல்லை....

“ப்ளீஸ் ஜெனி... நாம மட்டும் தனியா போகலை... உன் ப்ரண்ட்ஸ் என்னோட ப்ரண்ட்ஸ் எல்லோரும் சேர்ந்துதான். அதனால வீட்ல தெரிஞ்சாலும் ப்ரண்ட்ஸ் கூடப் போனோம்ன்னு சொல்லி சமாளிச்சிக்கலாம்.”

இனி என்ன சொன்னாலும் ராஜேஷ் கேட்கப்போவதில்லை என்பதை உணர்ந்த ஜெனி சரி என்று அரைமனதாகத் தலையாட்டியவள், தன் அம்மாவுக்கு அழைத்து “ப்ரண்ட்ஸ் வீட்டுக்கு போய் அக்கா கல்யாணத்துக்குப் பத்திரிகை கொடுத்துட்டு வரேன் மா....” என்று பொய் சொன்னாள்.

“சீக்கிரம் வந்திடு ஜெனி இல்லைன்னா அப்பா கோபப்படுவாங்க.” லீனா மகளை எச்சரிக்கை செய்து விட்டே போன்னை வைத்தார்.

போன்னை வைத்த ஜெனி ராஜேஷை பார்க்க.... “அவன் சீக்கிரம் வா.... ஷோக்கு டைம் ஆச்சு.... நமக்காக ஹரி டிக்கெட் எடுத்திட்டு காத்திருப்பான்.” என்று அவளை இழுத்துக்கொண்டு சென்றான்.

தியேட்டர்க்கு இரு ஆட்டோவில் சென்றனர். ஒரு ஆட்டோவில் ஜெனி அவள் தோழிகளுடனும், மற்றொன்றில் ராஜேஷும் அவன் நண்பர்களும்.

ஜெனிக்கு ஒரே படபடப்பாக இருந்தது. அவளுக்கு யாரை பார்த்தாலும் தெரிந்தவர்கள் போலவே இருந்தது. மாட்டிக்கப் போறோம் என்று பயந்தபடி நின்றிருந்தாள்.



ஜெனியும் அவள் தோழிகளும் தள்ளி நிற்க... ஹரி அவர்களிடம் டிக்கெட்டை கொடுத்துவிட்டுச் சென்றதும், இவர்கள் முதலில் உள்ளே சென்று அமர்ந்தனர்.

ஜெனிக்கு உள்ளே சென்று அமர்ந்ததும் தான் படபடப்பு அடங்கியது. படம் ஆரம்பிக்கும் நேரம்தான் ராஜேஷும் அவன் நண்பர்களும் உள்ளே வந்தனர்.

ராஜேஷ் வந்து ஜெனியின் அருகே உட்கார... ஜெனிக்கு மீண்டும் டென்ஷன் ஏறியது... அவளின் நிலையை உணர்ந்த ராஜேஷ் ஆதரவாக அவள் கையைப் பற்றிக்கொண்டான். ஜெனியும் சற்று அமைதியாகி படம் பார்ப்பதில் கவனம் செலுத்தினாள்.

அவள் அப்பா அவளைச் சினிமாவுக்கு எல்லாம் அழைத்துச் சென்றது இல்லை... ஊரில் இருக்கும் அவள் தாத்தா பாட்டி வீட்டிற்குச் சென்றால்.... அவர்கள் அழைத்துக்கொண்டு போவார்கள்.

இடைவேளையில் ராஜேஷ் ஜெனியை வெளியே அழைக்க... அவள் வர மறுத்து விட்டாள். ராஜேஷும் அவன் நண்பர்களும் சென்று ஐஸ்க்ரீம் வாங்கி வந்தனர்.



ஜெனி கோன் ஐஸ்க்ரீமை ரசித்துச் சாப்பிட... ராஜேஷ் அவள் சாப்பிடும் அழகை ரசித்துக்கொண்டிருந்தான். மீண்டும் படம் ஆரம்பித்ததும் ஜெனி அதில் முழ்க...
ஜெனியின் கையைச் சுரண்டிய ராஜேஷ், அவள் திரும்பியதும் “நீ என்ன இப்படிப் படம் பார்க்கிற?... நீ இதுக்கா வந்த...” என்று கேட்டதும், ஜெனி இவன் என்ன லூசா என்பது போல் பார்த்தாள்.

“படம் பார்க்க வந்திட்டுப் படம் பார்க்காம... என்ன பண்ணுவாங்க?”

ஜெனியின் கேள்விக்கு ராஜேஷ் வாயால் பதில் சொல்லாமல்... ஜெனியின் தோளைச் சுற்றி கைபோட்டு லேசாக அணைக்க... ஜெனி அவனைப் பார்த்து முறைக்க முயன்று முடியாமல் சிரிக்க... ராஜேஷ் புன்னகையுன் ஜெனியை மேலும் தன் பக்கம் இழுக்க... ஜெனியும் அவன் தோளில் சாய்ந்துக்கொண்டாள்.

அதன் பிறகு இருவரும் படம் எங்கே பார்த்தார்கள்... அவர்கள் இருவருக்கு மட்டும் கேட்கும் குரலில் மெதுவாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

ஜெனி தன் அக்காவின் திருமணத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தாள். புனிதாவின் புகுந்த வீட்டினர் பற்றிச் சொன்னவள்.... விஜய்யை பற்றியும் சொல்ல மறக்கவில்லை.

ஜெனி தன் இயல்பையும் மீறி படம் முடியும் வரை ராஜேஷின் தோளில் சாய்ந்து பேசிக்கொண்டே இருந்தாள். ராஜேஷ் புன்னகையுடன் அவள் முகத்தைப் பார்த்தபடி இருந்தான்.

படம் முடியப்போகும் நேரம் ராஜேஷ் ஜெனியின் கன்னத்தில் முத்தமிட... ஜெனி திடுக்கிட்டு போய் அவனைப்பார்த்தவள் மெல்ல அவனிடமிருந்து விலக... ராஜேஷும் தள்ளி அமர்ந்தான்.

ராஜேஷின் கண்களில் சலனம் இல்லை... ஜெனியை பிரியப்போகும் தவிப்பே தெரிந்தது. ஜெனியும் பிரிவை நினைத்து அமைதியானாள்.

படம் முடிந்ததும் ஜெனியும் அவள் தோழிகளும் முதல் ஆளாக வெளியே சென்றனர். தியேட்டர் வாசல் வரை யாரும் பார்த்து விடுவார்களோ என்று பயந்து கொண்டே சென்ற ஜெனி... கடைசியாக ஒருமுறை திரும்பி ராஜேஷை பார்க்க... ராஜேஷ் அவளைப்பார்த்து புன்னகையுடன் கையசைத்தான். ஜெனியும் பதிலுக்குப் புன்னகைத்து விட்டு சென்றாள்.



ஜெனிக்குப் பயத்தில் கால்கள் பின்னிக்கொண்டு வேகமாக நடக்கவே வரவில்லை... அவள் பதட்டத்துடன் வீட்டிற்குள் நுழைய.... அவள் பயந்தபடியே ஸ்டீபன் ஹாலில் இருந்தார்.

ஜெனியை பார்த்த ஸ்டீபன் “மதியமே உனக்குப் பரீட்சை முடிஞ்சிருக்குமே.... எங்க போன?” என்றார் கோபமாக....
ஜெனிக்குப் பயத்தில் வியர்த்துக் கொட்டியது.... அவளுக்குப் பேச்சே வரவில்லை... “அவ பிரிண்ட்ஸ்க்கு பத்திரிகை கொடுக்கப் போறேன்னு என்கிட்டே சொல்லிட்டுதான் போனா...” லீனா மகள் சார்பாகப் பேச....

“உன் ப்ரண்ட்ஸ் நீ வீட்டுக்கு வந்து பத்திரிகை கொடுத்தாதான் கல்யாணத்துக்கு வருவேன்னு சொன்னாங்களா.... உன்னை யார் அவங்க வீட்டுக்கு எல்லாம் போகச் சொன்னது? அதுவும் என்னைக் கேட்காம.... இன்னொரு தடவை நீ இது மாதிரி எதாவது செய்த... நான் மனுஷனா இருக்க மாட்டேன்.” ஸ்டீபனின் சீற்றத்தில் அந்த வீடே அதிர்ந்தது.

ஜெனி தப்பித்தால் போதும் என்று அறைக்குள் ஓடிவிட்டாள். ஸ்டீபன்னுக்குத்தான் சினிமாவுக்குப் போனது தெரிந்திருக்குமோ என்ற பயத்தில் இருந்தவள்... அது தெரியவில்லை என்று நிம்மதி பெருமூச்சு விட... புனிதா அவளை ஆராய்வது போல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இந்நேரம் தன் தந்தை பேசிய பேச்சுக்கு ஜெனி மற்ற நேரமாக இருந்தால் அழுதிருப்பாள். ஆனால்... இன்று எதோ சரியில்லை என்று தோன்றியது.

இன்னும் நான்கு நாட்களில் திருமணம் என்பதால்... புனிதாவிர்க்கு மேலும் அதைப் பற்றி ஆராய நேரம் இல்லை.

ஞாயிறு அன்று மாலை சர்ச்சில் திருமணமும், அதைத் தொடர்ந்து ஒரு பெரிய மண்டபத்தில் வரவேற்ப்பும் இருந்தது.

ப்ரித்வி சில நெருங்கிய உறவினர்களோடு முதலில் புனிதாவின் வீட்டுக்கு வர... அவனுக்கு மாலை, செயின் மோதிரம் எல்லாம் அணிவித்து மரியாதை செய்து ஸ்டீபன் அவனை உள்ளே அழைத்துச் சென்றார். பின்பு அங்கிருந்து மணமக்கள் தேவாலையத்திற்குச் சென்றனர்.

விஜய் ப்ரித்வியுடன் வீட்டுக்கு செல்லவில்லை... அவன் விருந்தினரை வரவேற்க நேராகத் தேவாலயத்திற்கு வந்து விட்டான்.

புனிதா வெள்ளை நிற பட்டுப்புடவையில்... முகத்தை ஒரு மெல்லிய திரை மறைக்க நடந்து வர... அவள் பக்கத்தில் தங்க நிறத்தில அழகான வேலைபாடுகள் செய்யப்பட்ட அனார்கலி சுடிதார் அணிந்து, மிதமான ஒப்பனையில் ஜெனி தேவதையாக நடந்து வந்தாள்.



தேவாலயத்தின் வாயிலில் நின்றிருந்த விஜய் இமைக்க மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குச் சற்று தள்ளி நின்றிருந்த ராஜேஷும் அதே நிலையில் தான் இருந்தான். கூட்டம் அதிகமாக இருந்ததால் ஜெனி அவர்கள் இருவரையுமே கவனிக்கவில்லை... அவள் தன் அக்காவுடன் மெல்லிய குரலில் பேசியபடி உள்ளே சென்றுவிட்டாள்.
திருமணத்திற்கு முன்பு நடந்த பிரத்தனையில் எல்லோரும் கவனமாக இருக்க... ஜெனி ராஜேஷ் வந்திருக்கிறானா என்று பார்வையால் தேட... அவள் பார்வையில் விஜய் விழுந்தான்.

விஜய் ஜெனியை பார்த்து புன்னகையுடன் வரவேற்ப்பது போல் இரண்டு கைகளால் கும்பிட... ஜெனியும் பதிலுக்குப் புன்னகையுடன் அதே போல் செய்தாள்.

விஜய் இந்த டிரஸ் உனக்கு ரொம்ப நல்லாயிருக்கு என்பது போல் செய்கையில் காமிக்க... ஜெனி தேங்க்ஸ் என்றாள் உதடசைத்து... பிறகு ஜெனி முன்புறம் திரும்பி விட்டாள்.

சிறிது நேரம் சென்று ஜெனி மீண்டும் ராஜேஷ் வந்திருக்கிறான்னா என்று பார்க்க... ராஜேஷ் துரத்தில் இருந்து ஜெனியை பார்த்துக் கையசைத்தான். ஜெனியும் ராஜேஷை பார்த்து புன்னகைக்க... இருவரும் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தனர்.

ப்ரித்விராஜ் புனிதா மேரி திருமணம் நல்லபடியாக முடிந்து. குடும்ப உறுப்பினர்கள் மணமக்களுடன் புகைப்படம் எடுத்ததும், வரவேற்ப்புக்கு செல்ல கிளம்பினர். ராஜேஷ் அதுவரை அங்கேதான் இருந்தான்.

ப்ரித்வியும் புனிதாவும் அலங்கரிக்கப்பட்ட காரில் ஏறினர். அந்தக் காரை விஜய்தான் ஓட்டினான். புனிதாவுக்குத் துணை என்று ஜெனியையும் அந்தக் காரில் ஏற்றிவிட்டனர். பின் இருக்கையில் புதுமணத் தம்பதிகள் இருந்ததால்... விஜய் அவளுக்காக முன் பக்க கதவை உள்ளிருந்படியே திறந்து விட... ஜெனி உள்ளே அமர்ந்தாள்.

உறவினர்கள் உற்ச்சாக குரல் எழுப்பி மணமக்களை வழி அனுப்ப... விஜய்யின் நண்பர்கள் விஜய்யும் ஜெனியும் ஜோடியாகக் காரில் அமர்ந்திருப்பதைக் கிண்டல் செய்து உற்ச்சாகமாக கைதட்டினர். விஜய் புன்னகையுடன் கையசைத்து விட்டு காரை எடுத்தான்.

ஜெனிக்கு இதெல்லாம் புரியவில்லை... அவள் ராஜேஷ் எங்காவது தெரிகிறான்னா என்று ஜன்னல் வழியாகப் பார்க்க... ராஜேஷ் தூர நின்று கையசைத்தான். தான் கிளம்பிவிட்டதை ராஜேஷ் பார்த்துவிட்டான் என்பதால் ஜெனியும் நிம்மதியாக இருந்தாள்.



வரவேற்ப்பிற்க்கு மண்டபத்திற்குச் செல்வதற்கு முன் புனிதா அவள் வீட்டிற்குச் சென்று புடவை மாற்றி ஒப்பனையைச் சரி செய்து கொண்டாள். அதுவரை ப்ரித்வியும், விஜய்யும் ஹாலில் அமர்ந்திருந்தனர். புனிதா வந்ததும் மீண்டும் அனைவரும் காரில் ஏறி மண்டபம் சென்றனர்.

இவர்கள் செல்லவதற்கு முன் மற்றவர்கள் மண்டபத்திற்குச் சென்றிருந்தனர். அந்த மண்டபம் நகரில் பிரபலமான மண்டபங்களில் ஒன்று.... முழுவதும் AC வசதி செய்யப்பட்டது.



இவர்கள் கார் சென்று நின்றதும், மண்டப சிப்பந்தி வந்து கார் சாவியை வாங்கிக்கொண்டு இவர்களை மண்டபத்திற்குள் அனுப்பினார். மணமக்களைப் பார்த்ததும் புகைப்படம் எடுப்பவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்ள... அவர்களுக்கு நடுவில் மாட்டிக்கொள்ளாமல் ஜெனியும், விஜய்யும் ஒரு பக்கம் ஒதுங்கினர்.

விஜய் ப்ரௌன் நிற சூட்டில் ஸ்மார்ட்டாக இருந்தான். அவனும் ஜெனியும் சேர்ந்து வருவதைப் பார்த்த விஜய்யின் நண்பர்கள் உற்ச்சாக குரல் எழுப்பி ஆரவாரமாக வரவேற்க்க... ஜெனி விஜய்யை குழப்பமாகப் பார்த்தாள்.

அவளின் நிலை உணர்ந்த விஜய் “நீ உள்ளப் போ ஜெனி...” என்று அவளை அனுப்பி வைத்தவன், தன் நண்பர்களைப் பார்த்து முறைத்தான்.

“டேய் நீங்க பண்ற கேலி அவளுக்குப் புரியலை... புரிஞ்சா என்னோட பேசவே மாட்டா பார்த்துக்கோங்க...” நண்பர்களை எச்சரித்த விஜய் உள்ளே செல்ல... அவன் நண்பர்களும் அவனைத் தொடர்ந்து உள்ளே சென்றனர்.

ஜெனி உள்ளே சென்ற போது... ராஜேஷ், அவனுடைய நண்பர்கள் ஜெனியின் தோழிகள் எல்லாம் ஒரு பக்கம் உட்கார்ந்திருந்தனர். ஜெனி அவர்களிடம் சென்று பொதுவாகப் பேசிவிட்டு வந்தவள், மேடை ஏறி தன் அக்காவின் பக்கத்தில் நின்று அவளுக்கு வரும் பரிசு பொருட்களை வாங்கி வைக்க உதவினாள்.

ப்ரின்சி, லின்சியை எல்லாம் அடையாமே தெரியவில்லை... அந்த அளவிற்குப் பகட்டாக உடை அணிந்து மேலும் வைர நகைகள் ஜொலிக்க நட்சத்திரங்கள் போல் மின்னினர். புனிதாவும் ஜெனியுமே வைர நகைகள்தான் போட்டிருந்தனர். ஆனால் அவர்கள் அணிந்திருப்பதற்கும், இவர்கள் அணிந்திருப்பதற்கும் மலைக்கும் மடுவிர்க்கும் உள்ள வித்தியாசம்.

விஜய் பரபரப்பாகச் சுற்றிக்கொண்டிருந்தான். விஜய் ஒரு முறை அவன் உறவினர்களுடன் மேடை ஏறி விட்டு கீழே இறங்கும் போது “விஜய் அத்தான்...” என்று ஜெனி அழைத்தாள் . அவளுக்கு ப்ரித்வி அத்தான் முறைதான். அதனால் அவன் சகோதரன் விஜய்யையும் அப்படியே அழைத்தாள்.

“என்ன ஜெனி?”

“அத்தான் எனக்கு ஒரு ஹெல் பண்ண முடியுமா.... என்னோட ப்ரண்ட்ஸ கொஞ்சம் சாப்பிட இடம் பார்த்து உட்கார வைக்கறீங்களா... அதோ அங்க இருக்கிறாங்க.” என்று ஜெனி ராஜேஷும், அவள் தோழிகளும் உட்கார்ந்திருக்கும் இடத்தைக் காட்ட....

“கண்டிப்பா ஜெனி. இதுக்கு ஏன் இவ்வளவு யோசிக்கிற...” என்ற விஜய் ஜெனியின் நண்பர்களை நோக்கி சென்றான்.

அங்கே அவன் ராஜேஷையும் அவன் நண்பர்களைப் பார்த்தும், எதுவும் வித்தியாசமாக நினைக்கவில்லை. அவனும் நகரத்தில் பிறந்து வளர்ந்தவன், அவனுக்கு ஆண் பெண் நட்பு இந்தக் காலத்தில் சகஜம் என்று தெரியும் என்பதால்... அவர்களிடம் சென்று தன்னை அறிமுகபடுத்திக்கொண்டு சாப்பிட அழைத்துச் சென்றான்.

விஜய்யோடு செல்லும் ராஜேஷை பார்த்து ஜெனி நிம்மதியாகத் தன் வேலையைக் கவனிக்க ஆரம்பித்தாள். ராஜேஷும் சாப்பிட்டு முடித்து வந்தவன், தூரத்தில் இருந்தே ஜெனியிடம் வரேன் என்று தலையசைத்து விட்டு, அவன் நண்பர்களுடன் அங்கிருந்து கிளம்பி சென்றான்.

வரவேற்ப்பு முடிய இரவு பதினோரு மணி ஆகி விட்டது. அதன் பிறகு தான் குடும்பத்தினர் சாப்பிட சென்றனர். இருபக்க உறவுகளோடு பேசி சிரித்தபடி சாப்பிட நன்றாக இருந்தது. ஜெனி செல்வராணியின் அருகில் அமர்ந்திருந்தாள்.

ஜெப்ரி விஜய் மற்றும் அவர்கள் வயதில் இருந்த உறவினர்கள் ப்ரித்வியையும் புனிதாவையும் கிண்டல் செய்ய... அதை ரசித்தபடி மற்றவர்கள் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.



மண்டபத்தில் இருந்து புனிதா அவள் கணவன் மற்றும் புகுந்த வீட்டு உறவுகளோடு புறப்பட.... லீனா தன் மகளுக்குப் புத்திமதி சொல்லிக்கொண்டிருந்தார்.

“காலையில சீக்கிரம் எழுந்து குளிச்சிட்டு வெளிய போ... அவங்க வீட்டு வழக்கம் என்னன்னு உன் மாமியாரை கேட்டு எதுனாலும் செய்... நீங்க இங்க இருக்கப் போறது கொஞ்ச நாள்தான்... இருக்கிறவரை அவங்க மனசு கோணாம நல்லபடியா நடந்துக்க...” லீனா மெதுவான குரலில் தன் மகளுக்கு அறிவுரை சொல்ல... அதைக் கேட்டுப் பின்னால் நின்றிருந்த செல்வராணி மனநிறைவுடன் சிரித்தார்.


இதே போல் நாட்டில் எல்லா அம்மாவும் தன் பெண்களுக்குச் சொல்லிக்கொடுத்து அனுப்பினால்... எந்தக் குடும்பத்திலும் பிரச்சனை வராது என்று நினைத்தார்.

ஏற்கனவே வீட்டில் ஸ்டீபன் கல்யாண மணடபத்தில் இருந்து கிளம்பும் போது எந்த அழுகை சீன்னும் இருக்கக் கூடாது என்று எச்சரிக்கை செய்திருந்ததால்... புனிதாவும், ஜெனியும் வந்த அழுகையை அடக்கிக்கொண்டு நின்றிருந்தனர்.

ப்ரித்வியும், புனிதாவும் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு காரில் ஏற... கண்ணில் நீரோடு நிற்கும் ஜெனியை பார்த்தபடி விஜய் காரை எடுத்தான்.

நள்ளிரவில் வீட்டிற்கு வந்த விஜய்க்கு தூக்கமே வரவில்லை... அவன் அறையின் பால்கனியில் உலாவிக்கொண்டு இருந்தான். அவன் கண்ணில் கண்ணீரோடு இருந்த ஜெனியின் முகமே நின்றது. அவ அழுதா நாம ஏன் இவ்வளவு பீல் பண்றோம்? என்று யோசித்துக்கொண்டிருந்தான்.
SEMA sis super ud
 
Top