Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Rishiram's kaathal pookkum kaalam chapter 14

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 14

பிரிவு என்பது நிரந்தரமானது இந்த உலகில். சந்திக்கும் இரண்டு பேர் கண்டிப்பாய் பிரிய நேரிடும். தாயின் வயிற்றில் இருந்து தொப்புள் கொடி நீக்கி பிரித்தெடுக்கப்படும் குழந்தை முதல் பிரிவை சந்திக்கிறது. ஆனாலும் மனதிற்கு பிரிவு பெரும் துயரைத் தருகிறது. அதுவும் காதலர்களுக்கு? முதல் எதிரியே பிரிவு தான்.
லீவில் திக்குமுக்காடிப் போனாள் தேவி. தினமும் காலை ஆனவுடன் காலேஜ் போனால் கண்ட சரவணனின் முகம் இப்போது காணக் கிடைக்க வில்லை என்பதே அவளால் தாங்க முடிய வில்லை.
தினமும் அவனது போட்டோவை படிக்கும் புத்தகத்தில் வைத்து பார்த்து ரசிப்பதும், அவர்கள் இருவர் புளிய மரத்தடியில் நின்று கழித்த பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வதும் அவளது பொழுதுபோக்கு ஆயிற்று.
'அப்படி என்ன தான் படிப்பாளோ? லீவு தானே கொஞ்சம் அம்மாவுக்கு ஒத்தாச பண்ணலாமே அப்படின்னு தோண்றதுல்ல. அப்படி கட்டாயப்படுத்தி சாம்பார் வைக்கச் சொன்னா உப்புக்கு பதிலா சக்கரய அள்ளிப் போட்டு... ம்ம்ம்.. நீல்லாம் எப்படி தான் குப்ப கொட்டப் போறயோ?'
அம்மா துணிகளை மடித்து வைத்தபடியே வழக்கமான பல்லவியைப் பாடினாள்.
இரண்டு நாட்கள் ஆயிற்று சரவணனைப் பார்த்து. இரண்டு நாட்கள் என்னவோ இருநூறு வருடங்கள் போல் தோன்றியது. போனும் டெட் ஆயிப் போயி தன் பங்குக்கு தேவியின் துயரை ஏற்றியது.
இன்று சனிக்கிழமை. பெருமாள் தான் கை கொடுக்க வேண்டும்.
டக் என்று குளித்து அழகான சேலை அணிந்து கொண்டு சின்னதாய் ஒரு பொட்டு வைத்து அம்மாவிடம் வந்தாள்.
'அம்மா! நான் சரசு வீட்டுக்குப் போய் அவளை கூட்டிகிட்டு பெருமாள் கோயிலுக்கு போயிட்டு வர்றென்.' என்றாள்.
'சரி!' என்றவள் அவளது ஜாக்கெட்டைப் பார்த்து 'எல்லாத்தயும் உள்ள தள்ளு. வெளிய தெரியுது பாரு பாடி. அப்படி என்ன அவசரமோ! கோயில் திறந்திருக்கும் பதினோரு மணி வர. அந்தப் பெருமாளாவது ஒனக்கு புத்தி தரட்டும்.'
மடித்த துணிகளை பீரோவில் அடுக்கப் போனாள் அம்மா.
எப்படியோ அனுமதி கிடைத்ததே என்று வெளியே தெரிந்த பிராவை உள்ளே திணித்து விட்டு பர்ஸை எடுத்துக் கொண்டு ஒரு 'வரேம்மா'வை உதிர்த்து விட்டு வீதியில் இறங்கி நடந்தாள்.
மனசு பட பட என்று அடித்துக் கொண்டது.
சரவணனைக் காண வேண்டும் என்று மனம் கொதித்தது.
அவன் சிரிப்பும் பேச்சும் மனதில் ரிவைண்ட் ஆகிக் கொண்டே வந்தன.
'என்னடி எதிர வர்ர ஆளக் கூடத் தெரியாம என்ன யோசிச்சிட்டே போற?'
சரசு வீட்டு பக்கத்து வீட்டுக்காரி கையில் கூடையுடன் எதிர்ப்பட்டுக் கேடார்.
'ஒண்ணும் இல்லக்கா. கோயிலுக்குப் போகணும். நட சாத்திரக் கூடாதேன்னு ஒரு பதற்றம்.'
'அதான் வாரா வாரம் போற கோயில் தானே! இன்னைக்கு என்ன புதுசா?'
'சரசுக்குத் தெரியாது. அவ ரெடி ஆயி போகணும்லக்கா'
எப்படியோ சமாளித்து சரசுவின் வீட்டில் நுழைந்தாள்.
அவள் அங்கே சட்னி தயார் செய்து கொண்டிருந்தாள்.
அவள் அருகில் வந்தவள் கிசுகிசுத்தாள்.
'என்னடி இன்னும் ரெடிஆகாம இருக்க?'
'ம். ஒனக்காக பெருமாள் காத்துட்டு இருப்பாரு. எனக்காக யாரு..'
அவளது வாயைப் பொத்தினாள்.
'யாராவது கேட்டுரப் போறாங்க. சீக்கிரம் கிளம்பி வா.'
அவள் கையை விலக்க, சரசு சொன்னாள்.
'அப்பா அம்மா எங்க அத்த வீட்டுக்குப் போயிருக்காங்க. தாத்தா பாட்டி தான் உள்ள இருக்காங்க. சரி லீவு தானேன்னு சாவகாசமா செய்யலாமேன்னு பாத்தா..'
'சரி சட்னு கிளம்பி வா.'
அவள் ரூமில் சென்று ட்ரஸ் மாத்தி விட்டு வரும்போது சரசுவின் பாட்டி உள்ளிருந்து வந்தாள்.
'வா தேவி! அம்மா நல்லா இருக்காளா? சரசு எப்படி படிக்கிறா?'
'ம்ம் நல்லா இருக்காங்க. சரசு நல்லா படிக்கிறா. தாத்தா எப்படி இருக்கிறாங்க பாட்டி.'
'ம். நாள எண்ணிட்டு இருக்குறார். பெருமாள் என்ன நினைக்கிறாரோ?'
ஒரு பெருமூச்சு விட்டாள் பாட்டி.
சரசு வந்து விட்டாள்.
'வாடி. ரெண்டு இட்லி சாப்டலாம்.'
'சும்மாரு. சீக்கிரம் போலாம்.'
'நீ ஜாலியா இருக்க நான் பட்டினியா வரணுமா?' என்று கிண்டல் அடித்தாள் சரசு.
பாட்டி 'ரெண்டு இட்லி சாப்பிட்டுட்டு போ தேவி. சரசு நீயும் தான்.'
என்றாள்.
சரசு தேவியைப் பார்த்துக் கொண்டே'இவளுக்கு பெருமாளப் பாத்தா தான் வயித்துல சாப்பாடே இறங்குமாம். இவ இப்படி சாப்டாம இருக்கறப்ப நான் மட்டும் சாப்பிட்டா நல்லா இருக்குமா பாட்டி? நீங்க சாப்டுங்க. நான் கோயில்ல தயிர் சாதம் சாப்டுக்கறென்.' என்றாள்.
அவள் சொல்வதை கவனியாது 'வரோம் பாட்டி' என்று அவளது கையை இழுத்துக் கொண்டு வெளியே ஓடி வந்தாள் தேவி.
'ஏய் மெதுவா. யப்பா கை வலிக்குது.'
தேவி கண்களில் நீர் திரள ஓட்டமும் நடையுமாய் பஸ் ஸ்டாப் நோக்கி நடந்தாள்.
சரசு சொன்னாள்.
'தேவி இது நல்லால்ல. ரெண்டு நாள் தான ஆவுது. ஏன் இப்படி பண்ற?'
திரும்பிய தேவி சொன்னாள். 'காதலித்துப் பார் தெரியும்'
'நான் தான் பாக்கறேம்ல. வேணாம் சாமி. ஒன்ன இந்த கோலத்துல பாக்க என்னால முடியல.'
பஸ் ஸ்டாப் வந்திருந்தது.
பெருமாள் கோவில் செல்லும் பஸ் இரண்டு நிமிடங்களில் வர ஏறிக் கொண்டார்கள். ட்ரைவருக்கு பின் இருக்கையில் இருந்த வழக்கமான சீட்டில் அமர தேவிக்கு காலேஜின் முதல் நாள் நியாபகம் வந்து மனதைப் பிசைந்தது.
அப்போது 'கொஞ்சம் இந்த புக்சப் பிடிங்களேன்.' என்று ஜன்னல் ஓரமாய் ஒரு குரல் கேட்க சட் என்று திரும்பினாள் தேவி.
அங்கே முகம் முழுவதும் அவளைக் காணாத கவலை வழிய ஏக்கத்துடன் நின்றிருந்தான் சரவணன்.

(தொடரும்)
 
Nice epi.
Hmmmm pranthu muthiduchu Saravana.
Sarasu usharu than nee theriduva penne.
Sambaril sugar ahhhhhhh?
 
Top