Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UAEI 11

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்---11

ஆஷிக்கின் இந்த டெல்லி பயணம் கூட ஆருண்யா யாரையாவது விரும்பி இருப்பாளோ என்று நினைத்து அதை தெளிவு படுத்த தானே இப்போது போவது.ஆனால் சித்தார்த் மட்டும் தன் தங்கையை காதலித்து ஏமாற்றி இருந்தால் அப்போது இருக்கு அவனுக்கு என்று மனதில் நினைத்துக் கொண்ட ஆஷிக் விஷயம் அறிவதற்க்கு இவளிடம் இவள் வழியில் போய் பேசினால் தான் என்ன என்று தெரிந்துக் கொள்ளமுடியும் என்ற காரணத்தால் அவள் வழியிலேயே சென்று பேச ஆராம்பித்தான்.

“சரி முதலில் நீ என்ன சாப்பிடுகிறாய் “ என்று கேட்டுக் கொண்டே ஸ்ரீதரை அழைத்தான்.

பரினிதாவும் அவன் விசாரிப்பில் மகிழ்ந்து தனக்கு பிடித்த மூன்று வகையான ஐஸ்கிரீமை சொல்லி விட்டு பின் “ஐய்யோ சம்மந்தம் பேசுறே வீட்டில் கைய் நனைக்க கூடாது என்று எங்க பாட்டிம்மா சொல்லுவாங்களே… அதனால் வேண்டாம்.” என்று சொன்னாலும் ஐஸ்கிரீமின் ஆசை அவள் கண்ணில் மின்னி மறைந்தது.

ஆஷிக்குக்கோ அந்த கோபமான மனநிலையிலும் அவளின் செயல் சிரிப்பை ஏற்படுத்தியது . அதனால் சிரித்துக் கொண்டே “பரவாயில்லை கைய் நனைக்க கூடாது என்று தானே சொல்லி இருக்காங்க.நீ ஐஸ்கிரீமை ஸ்பூனால் தானே சாப்பிட போகிறாய். அதனால் தாரளமாக சாப்பிடலாம்.” என்று அவன் சொல்லி முடிப்பதற்க்கும் ஸ்ரீதர் அந்த அறைக்குள் வருவதற்க்கும் சரியாக இருந்தது.

ஸ்ரீதரையும் அமர வைத்த ஆஷிக் அவரிடம் பேச ஆராம்பிக்கும் போதே ஆஷிக்கின் அன்னையிடம் இருந்து போனின் மூலம் அழைப்பு வந்தது.அதனை அட்டன் செய்து காதில் வைத்த ஆஷிக் அந்த பக்கம் பேச சான்ஸே கொடுக்காமல்.

“அம்மா நாம் டெல்லி போக போவது இல்லை.அதனால் நீங்கள் ஏர்போட் கிளம்ப தேவை இல்லை.” என்று சொன்னதும் அந்த பக்கம் ஆஷிக் அன்னை என்ன சொன்னாரோ …

“உங்களுக்கு என்ன திருமணம் தானே நடக்க வேண்டும். அது கண்டிப்பாக சீக்கிரத்திலேயே நடக்கும்.அது வேலையா தான் இப்போ நான் வெளியே போக வேண்டியது இருக்க்கு “ என்று சொல்லி விட்டு அந்த பக்கம் அவன் அன்னை பேச பேச போனை அணைத்து விட்டான்.

ஆஷிக்கின் செயலையே பார்த்திருந்த ஸ்ரீதர் பின் பரினிதாவை பார்த்தான்.இவனின் அடாவடித்தனத்துக்கும் இந்த பெண்ணின் குழந்தை தனத்துக்கும் எப்படி பொறுந்தும் என்ற யோசனையின் முடிவில் இதை தான் காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்களோ...என்று ஒரு முடிவுக்கும் வந்தார்.

அந்த நேரத்தில் பரினிதாவுக்காக சொன்ன ஐஸ்கிரீம் வர அதனை எடுத்து இரண்டு வாய் எடுத்து சாப்பிட்டவள் மூன்றாம் வாய் எடுத்து தன் வாய் அருகில் கொண்டு சென்றவள் என்ன நினைத்தாலோ பக்கத்தில் இருக்கும் ஸ்ரீதரின் பக்கம் நீட்டி “சாப்பிடுங்க அங்கிள்” என்று கூறினாள்.

அவளின் செயலில் ஸ்ரீதருக்கு மனதில் ஒரு விதமான நெகிழ்ச்சி உருவாகியது என்றால் அஷிக்குக்கு அவளில் செயலில் கட்டுக்கடங்காமல் கோபம் ஏற்பட்டது.

ஸ்ரீதர் நல்லவர் தான் .ஆனாலும் ஒரு வயது பெண் தான் சாப்பிட்ட எச்சி ஐஸ்கிரீமை ஒரு ஆடாவனுக்கு நீட்டினால். அவன் வேறு விதமாக எடுத்துக் கொள்ள சான்ஸ் இருக்கும் போது இவளின் இந்த செயல் அவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

ஸ்ரீதர் வேண்டாம் என்று மறுத்த பிறகு தன் தோள்களை குலுக்கிக் கொண்டே விட்ட பணியை தொடர ஆராம்பித்தாள். அது தாங்க ஐஸ்கிரீம் சாப்பிடுவது. சாப்பிட்டுக் கொண்டே எதிரில் பார்த்த பரினிதா தன்னையே கோபத்துடன் முறைத்துக் கொண்டு இருந்த ஆஷிக்கை பார்த்ததும். இவர் ஏன் நம்மை முறைக்கிறார் என்று யோசித்தவள். ஒ நாம் ஐஸ்கிரீமை இவரிடம் சாப்பிட கொடுக்காமல் அவர் மனேஜரிடம் நீட்டுயதால் தான் தன்னை முறைக்கிறார் என்று கருத்திய பரினிதா ஒன்று இரண்டு ஐஸ்கிரீமை சாப்பிட்டு முடித்தவள்.

மூன்றாவதை அவனிடம் நீட்டி சாப்பிடுமாறு கூறினாள். அப்போதும் அவன் அதனை வாங்காமல் தன்னை முறைப்பதை பார்த்தவள். அய்யோ ஏன் இவன் இப்படி முறைத்து வைக்கிறான்.காரணம் சொன்னால் தானே புரியும் என்று நினைத்து அவனிடமே கேட்டும் வைத்தாள்.

அவன் யாரோ என்றால் அவள் இவ்வளவு மெனக்கெட மாட்டாள்.தனக்கு அண்ணியாக வர போகும் ஆருண்யாவின் அண்ணன் என்பதால் தான் அவன் கோபத்தை அறிய முற்ப்பட்டாள்.

அவளுக்கு பயம் தன்னிடம் உள்ள கோபத்தால் எங்கே பெண் கொடுக்காமல் போய் விடுவாறோ என்று தான். அவன் கோபத்தை அறிந்து அதனை போக்க எண்ணி அவனிடமே கேட்டாள்.

தங்களையே பார்த்துக் கொண்டு இருந்த ஸ்ரீதரை வேறு வேலை கொடுத்து வெளியே அனுப்பி விட்டு பரினிதாவிடம்

“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா.” என்று கேட்டதற்க்கு.

கூலாக “இருக்கு ஆனா அதை யாருக்கும் கொடுக்க முடியாது.” அவள் பதிலில் அவன் நொந்து போனது தான் மிச்சம்.

அனைவரும் என்னிடம் பேசவே பயப்படுவார்கள்.ஆனால் ஒரு சிறு பெண் தன்னிடம் என்னம்மா வாயாடுகிறாள். என்று நினைத்தவன் அவள் பேச்சை ரசித்தானே தவிர அவளை திட்ட அவனுக்கு மனது வர வில்லை.

சரி நாம் இப்படியே பேசிக் கொண்டு இருந்தால் வேலைக்கு ஆகாது என்று நினைத்த ஆஷிக் “நீ எதை வைத்து ஆருண்யாவும்,உன் அண்ணனும் காதலித்தார்கள் என்று சொல்கிறாய்.நான் இப்போது டெல்லி போவதே என் சிஸ்டர் கல்யாணத்திற்க்கு தான்.” என்ற பேச்சைக் கேட்டவுடன்.

தான் சாப்பிட்டுக் கொண்டு இருந்த மீதி ஐஸ்கிரீமை அங்கு உள்ள டஸ்பினில் போட்டு விட்டு வாயைய் துடைத்துக் கொண்டே “அது எப்படி நீங்க என் அண்ணியை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுப்பீங்க.

நான் இந்த கல்யாணத்தை நடத்த விட மாட்டேன்.” என்று சொல்லிக் கொண்டே தன் கைய் பையில் வைத்திருந்த டைரியை எடுத்து அதில் உள்ள போட்டோவை காண்பித்து “இதை நான் நீங்கள் பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கு அனுப்பி வைத்து விடுவேன்.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அந்த போட்டோவை ஆஷிக் அவள் கையில் இருந்து கைய் பற்றிக் கொண்டான்.

தன்னிடம் உள்ள ஒரே ஆதாரம் பறி போனதும் கோப ட்யூனில் பேசிக் கொண்டு இருந்த பரினிதா குழையும் ட்யூனுக்கு மாறி “ இதோ பாருங்க காதலித்தவர்களை பிரிப்பது மகா பாவம்.” என்று சொல்லி அவனிடம் முறையிட்டும் அதன் எதிர் ஒலி எதுவும் ஆஷிக்கிடம் இல்லாது போக அப்போது தான் அவன் முகத்தை கூர்ந்து பார்த்தாள்.

ஆஷிக் தன் கையில் உள்ள போட்டோவையே ஒரு கொலை வெறியுடன் பார்த்திருந்தான். அவன் பார்வையை பார்த்த பரினிதா பயந்தே போய் விட்டாள். இவன் எதற்க்கு இப்படி கோபத்துடன் அந்த போட்டோவை பார்க்கிறான்.

இப்போது என் அண்ணாவுக்கும் திருமணம் ஆகவில்லை தானே….இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து விட்டால் பிரச்சினை தீர்ந்தது.இதற்க்கு ஏன் இவன் இப்படி கோபத்துடன் இருக்கிறான் என்று மனதுக்குள் மட்டும் நினைக்காமல் அதனை அவனிடம் கேட்டும் விட்டாள்.

அவள் பேசியதில் அவன் கோபம் அதிகமானதே தவிர குறையவில்லை. என்ன ஒன்று அந்த போட்டோவில் இருந்த பார்வை இப்போது பரினிதாவிடம் இடம் மாறியது. அது தான் கொஞ்சம் வித்தியாசம். மற்ற படி வேறு ஒன்றும் ஆகவில்லை.

அதே கோபத்துடம் “இல்லை நீ தெரிஞ்சு தான் பேசுகிறயா.. ?.இல்லை தெரியாமல் பேசுகிறயா…? என்னுடைய சிஸ்டருக்கு வயது என்ன தெரியுமா...இருபத்தியெட்டு. இந்த வயதில் இருப்பவர்கள் எல்லாம் திருமணம் முடிந்து இரு குழந்தைகளுக்கு அம்மாவும் ஆகிவிட்டார்கள்.

ஆனால் இவள் திருமண பேச்சை எடுத்தாலே...நான் எங்கேயாவது சென்று விடுவேன் என்று சொல்லி விட்டதால் திருமணத்துக்கும் பார்க்க முடியாமல், எங்கள் சொந்தக்காரர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலும் சொல்ல முடியாமல் நானும் எங்கள் அம்மாவும் எவ்வளவு பிரச்சினையை சாமளித்தோம் தெரியுமா…?

அத்தோடு போனா கூட பரவாயில்லை.ஆனால் என் அம்மா இவ்வளவு வசதி இருந்தும் ஒரு பெண்ணுக்கு நல்லது செய்ய முடியவில்லையே என்று வருந்தியே அவர்கள் உடல் நிலையிலும் பாதிப்பு ஏற்பட்டு விட்டது.

நீ என்ன வென்றால் வெகு சாதரணமாக சொல்கிறாய். அது தான் என் அண்ணாவுக்கும் திருமணம் ஆகவில்லையே இருவருக்கும் திருமணம் செய்து விட்டால் பிரச்சினை திர்ந்தது என்று.” அவன் பேச பேச தான் ஒரு பெண்ணுக்கு திருமண வயது கடந்தும் திருமணம் நடக்க வில்லை என்றால் ஏற்படும் பிரச்சினையை அறிந்துக் கொண்ட பரினிதா எழுந்து அவன் சேரின் அருகில் சென்று அவன் தோள் மீது வைய் வைத்தவாரே ..

“சாரி எனக்கு இவ்வளவு பிரச்சினை ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை.என் அண்ணன் மீதும் தவறு இல்லை.” என்று அவள் பேசிக் கொண்டு இருக்கும் போதே தன் தோள் மீது இருக்கும் அவள் கையை தட்டி விட்டான்.

அவள் கைய் தன் தோள் மீது பட்டதும் காய்ச்சிய இரும்பை நீரில் முக்கினால் எப்படி அதன் சூடு தணியுமோ….அப்படி தணிந்த அவனின் கோபம் தன் அண்ணன் மேல் தவறு இல்லை என்று பரினிதா சொன்னதும் பன் மடங்காக பெருகியது.

அந்த கோபத்தை தன் முகத்தில் காட்டியவாரே “என்ன தவறு இல்லை.ஒரு பெண்ணை விரும்பி விட்டு தன்னிடம் உள்ள போட்டோவை காண்பித்து இவ்வளவு நெருக்கமாக பழகி கைய் கழுவி செல்வது தவறு இல்லையா…? அது எப்படி ஒரு பெண்ணாய் இருந்துக் கொண்டு நீ இப்படி பேசுகிறாய்.சரி விடு உன்னிடன் இப்படி யாராவது நடந்துக் கொண்டால்..”

என்று அவன் பேசும் போதே அந்த இடத்தில் வார்த்தை பிசிரு இல்லாமல் அவனால் பேச முடியவில்லை.தன் மனதுக்குள்ளாகவே சேச்சே அப்படி ஒன்றும் அவளுக்கு ஆக கூடாது. இதே சந்தோஷத்துடன் அவள் எப்போதும் இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டது.

அவன் திட்ட ஆராம்பித்ததும் தன் கண்ணை மூடிக் கொண்டவள் அவன் திட்டு பாதியிலேயே நின்றதும் கண் திறந்து அவனை பார்த்தாள். முதலில் இருந்த கோபமுகம் இப்போது இல்லை என்று தெரிந்ததும்.

மீண்டும் மெல்ல அவன் அருகில் வந்து “இப்படி பொசுக்கு பொசுக்குன்னு கோபம் வருவது உடம்புக்கும் நல்லது இல்லை.உறவுக்கும் நல்லது இல்லை.பாருங்க இப்போ நான் எவ்வளவு அமைதியா பேசிட்டு இருக்கேன்.

பாருங்க நீங்க கோபம் பட்டிங்களே நான் கோபம் பட்டேனா...சொல்லுங்க நான் கோபம் பட்டேனா...இல்லை தானே. நான் ஏன் கோபம்படலே ஏன்னா நாளைக்கு நீங்க என் உறவு முறையா ஆக போறவங்க .

உறவு முறைக்குள்ள கோபதாபமெல்லாம் விட்டுடனும்.ஏதோ பேச வந்த ஆஷிக்கை தடுத்து உங்கள் கோபத்தில் நியாயம் இருக்கு .அதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் நீங்கள் மத்தவங்க பத்தியும் கேட்கனும் தானே…

என் அண்ணன் ரொம்ப நல்லவன். இதை நான் என் அண்ணன் என்பதற்க்காக நான் பெருமையாக சொல்லவில்லை. எங்கு வேண்டும் என்றாலும் விசாரித்து பாருங்க. இது வரை என் அண்ணன் வாழ்க்கையிலும் சரி, பதவியிலும் சரி, ஒரு ரிமார்க் கூட கிடையாது.

என் அண்ணன் என்னிடம் கோபப்பட்டாருன்னா அதற்க்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும். என் அண்ணன் பதவியை நான் எங்கும் சொல்ல கூடாதுன்னு சொல்லுவார். ஆனால் நான் அதனை கேட்க மாட்டேன்.

ஆனால் என் மீதும் தப்பு இல்லை.இதோ இப்போ நான் உங்களை பார்க்கணும் என்று சொன்னா உங்க ரிசப்ஷனிஸ்ட்டு என்னை தெனாவட்டாக ஒரு பார்வை பார்த்து பார்க்க முடியாது என்று சொல்லிட்டாங்க.

பின் நான் கலெக்டர் தங்கை என்றதும் தான் என்னை உடனே உங்களிடம் அனுப்பினார்கள். இதெல்லாம் நான் ஏன் சொல்றேன்னா...என் அண்ணன் பதவியை நான் இது போல் எப்போதாவது உபயோகித்து கொள்வேன்.

ஆனால் என் அண்ணன் அது கூட செய்ய மாட்டார். ஏன் போன வருடம் அவர் பிறந்த நாளுக்கு நான் என் அண்ணன் அப்புறம் என் பாட்டிம்மா கோயிலுக்கு போயிருந்த போது அங்கு ஏதோ விசேஷம் போல் ஒரே கூட்டமா இருந்தது.

அந்த கூட்டத்தோடு கூட்டமாக தான் என் அண்ணன் நின்னார். எங்களையும் நிக்க வைத்தார்.அங்கு பாதுக்காப்புக்கு இருக்கும் ஒரு போலீஸ் காரர் ஒடி வந்து நீங்க ஏன் இங்க நிக்கறங்க வாங்க சார் என்று எவ்வளவு வற்புறுத்தியும் என் அண்ணன் போக வில்லை. அப்படிபட்ட என் அண்ணா ஒரு பெண்ணை எப்படி ஏமாற்ற முடியும்.” என்று அவள் பேச பேச ஆஷிக் யோசிக்க ஆராம்பித்தான்.

அவள் சொன்ன மாதிரி மற்றவர்களிடம் சித்தார்த்தை பற்றி விசாரிக்கவே தேவை இல்லையே...ஆல்ரெடி அவனின் முழுவிவரமும் ஏற்கனவே அவனிடம் இருக்கிறது தானே…

அதுவும் இல்லாமல் சித்தார்த்தின் விவரம் படிக்க படிக்க இந்த காலத்தில் இப்படியா என்று அவனே வியந்து தானே போனான்.சித்தார்த்தின் கல்லூரி கால காதல் பின் முறிவு என்று போட்டு இருந்ததை நான் அப்போதே கொஞ்சம் கவனித்து பார்த்திருந்து இருக்கலாம் என்று இப்போது யோசிக்க ஆராம்பித்தான்.

இப்போது தன் கோபத்தை கட்டுப் படுத்திக் கொண்டு “சரி இப்போ சொல். உன் அண்ணன் என் சகோதரியை விட்டு பிரிந்ததுக்கு உண்டான நியாயமான காரணம் என்ன…?”

அவன் கேட்டதற்க்கு எதுவும் பேசாமல் தன் கையில் உள்ள டைரியை அவனிடம் நீட்டினாள். அதனை வாங்கி முதல் பக்கத்தை பார்த்து “இது உன் அண்ணன் டைரி. இதை ஏன் என்னிடம் தருகிறாய்.”

“வேறு எதற்க்கு படிக்க தான்.”

“மற்றவர்களின் டைரியை படிக்க கூடாது அது நாகரிகமும் கிடையாது.”

“மற்றவர்கள் டைரி தான் படிக்க கூடாது.ஆனால் உன் மச்சான் டைரியை படிக்கலாம். தப்பே இல்லை.” அவள் சொன்ன அந்த மச்சான் என்ற உறவு அந்த சூழ்நிலையிலும் அவன் மனதுக்கு இதமாக இருந்தது.

பரினிதா ஆருண்யாவை சித்தார்த் திருமணம் செய்தால் ஆஷிக்குக்கு மச்சான் முறை தானே ஆக வேண்டும். அவள் அந்த அர்த்தத்தில் தான் சொன்னாள். ஆஷிக்குக்கும் இது நன்றகவே புரிந்தது.

இருந்தும் அவன் மனதில் இவளை நான் திருமணம் செய்துக் கொண்டாலும் சித்தார்த்துக்கு நான் மச்சான் தானே...அவன் அந்த வழியில் யோசித்தான்.

நாம் இவ்வளவு சொல்லியும் அவன் அந்த டைரி பிரிக்காமல் இருக்கிறனே என்று நினைத்துக் கொண்டே “அது தான் சொல்றேன் இல்லையா படி என்று .இன்னும் யோசித்தால் என்ன அர்த்தம்.நீ ரொம்ப நல்லவன் என்றா…? நீங்க எவ்வளவு தான் இது மாதிரி சீன் போட்டாலும் நான் நம்ப மாட்டேன்.”

அவள் பேச பேச ரசித்துக் கொண்டே வந்தவன். கடைசியாக நீ நல்லவன் இல்லை என்ற வார்த்தை அவள் சொன்ன விதம் ரசித்தாலும் அதில் இருந்த உண்மை அவனை சுடவே செய்தது.அவன் இந்த குறுகிய காலத்திலேயே இந்த நிலைக்கு வந்து இருக்கிறான் என்றால் அதற்க்கு அவன் பல வழிகளை கைய்யாள வேண்டியதாக இருந்தது.

ஏன் இவன் பணம் ரொட்டேஷனில் விடும் போது வாங்கியவர்கள் கொடுக்க தாமதம் ஆனாலோ….இல்லை ஒழுங்காக வட்டி கொடுக்கவில்லை என்றாலோ….அடியாட்களை வைத்து தான் இவன் அதனை வசூலிப்பான்.

சில சமயம் வாங்கியவர்கள் கொடுக்க முடியாத கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாலும் இவன் இந்த வழியை தான் பின் பற்ற வேண்டியிருந்தது.அவன் மற்றவர்களுக்காக பார்த்தால் இவன் தொழில் அல்லவா பாதிக்கும். அதனால் தொழில் என்று வந்து விட்டால் ஈவு , இரக்கம் எல்லாம் பார்க்க மாட்டான்.அவன் இந்த யோசனையில் இருக்கும் போதே…

பரினிதாவோ நான் சொல்ல சொல்ல இன்னும் டைரியைய் பிரிக்காமல் இருக்கிறானே என்று நினைத்துக் கொண்டே அவன் தோள் பற்றி அவனின் யோசனையை தடுத்தாள்.

“சைகையாலேயே டைரி பிரி என்று கூறினாள்.

அப்போதும் அவன் பிரிக்காமலேயே இருக்கவும் அவனிடமே “நீங்க நிஜமாவே ரொம்ப நல்லவரோ…?” என்று அவனிடமே கேட்டும் வைத்தான்.

“ஏன் நான் நல்லவனாக இருக்க மாட்டேன் என்று நீ முடிவு செய்தாய்.” என்று கேட்டான்.

ஏனோ தெரியவில்லை அவள் நினைவில் தான் கெட்டவனாக இருப்பதை அவன் விரும்பவில்லை.
 
Top