Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UAEI 16

Advertisement

Admin

Admin
Member


அத்தியாயம்---16

ஒன்றும் பேசாமல் தன்னையே பார்த்திருந்த ஆஷிக்கை பார்த்த பரினிதா “என்ன எதுவும் சொல்ல மாட்டேங்கிறீங்க. ஒன்று என்னை திட்டுவீங்க இல்லை லூசு மாதிரி என்னை பார்ப்பீங்க. ஆனால் இப்போ நீங்க என்னை திட்டவும் இல்லை. அந்த பார்வையும் இல்லை , என்ன விஷயம்.” என்று கேட்டதற்க்கு.

“ஒன்றும் இல்லை பரினிதா. இனி கூடிய சீக்கிரமே உனக்கு பிடித்த மாதிரி நீ இருப்பே.இப்போ நான் உன்னை வீட்டில் கூட்டிட்டு போயி விடுறேன். அப்புறம் மறக்காதே நான் நாளை என் அம்மாவுடன் டெல்லி போகிறேன். அதற்க்குள் நீ இங்கு ஏதாவது பண்ணி வைத்தாய் என்றால் நான் சும்மா இருக்க மாட்டேன்.” என்று முதலில் நெகிழ்ச்சியுடன் பேசிய ஆஷிக் பின் ஒரு கண்டிப்புடன் பேசி காரை எடுத்தான்.

இன்று ஒரு நாளிலேயே அவன் கோபம் ,நெகிழ்ச்சி,அன்பு என்று அனைத்தையும் அவனிடத்தில் பார்த்ததால் அவன் கோபத்தை ஒரு பொருட்டாக கருதாமல் “என்ன வீட்டுக்கு கூட்டிட்டு விடபோறீங்களா…?”

“ஆமாம் வீட்டுக்கு தான். ஏன் உனக்கு வீட்டுக்கு போற எண்ணமே இல்லையா…? என் ஆபிஸில் அண்ணா திட்டுவாங்க,பாட்டிம்மா திட்டுவாங்கன்ணு சொன்னே. அப்போ அது சும்மாவா…”

“இல்லை நிஜமா தான் திட்டுவாங்க.”

“அப்போ இப்போவும் வீட்டுக்கு போகும் எண்ணம் இல்லாமல் வீட்டுக்கா என்று கேட்கிறே…”

“இப்போ நான் போகும் நேரத்தை விட கடந்து தான் விட்டது.அதனால் இப்போ போனாலும் திட்ட தான் செய்வாங்க. அதே இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து சென்றாலும் திட்ட தான் செய்வாங்க. அதனால் இப்போ நீங்க என்ன செய்றீங்க. ஒரு நல்ல ஒட்டலுக்கு கூட்டிட்டு போய் எனக்கு ஏதாவது வாங்கி கொடுத்துட்டு அப்புறம் வீட்டுக்கு கூட்டிட்டு போய் விட்டுடுங்க.” என்று சொல்பவளை இவளை பெத்தாங்களா செஞ்சாங்களா என்று பார்த்திருந்தான்.

அவன் எதுவும் சொல்லாமல் இருப்பதை பார்த்த பரினிதா “உடம்பு ஏறனும் என்று சொன்னால் மட்டும் போதாது.அதுக்கு ஏதாவது ஸ்டெப் எடுக்கனும். எங்க வீட்டு சமையல்காரம்மா செய்வதை சாப்பிட்டா ராணா மாதிரி இருக்க நீங்களே தனுஷ் மாதிரி ஆயிடுவீங்க.அப்போ நான் எம்மாத்திரம் சொல்லுங்க பார்க்கலாம்.” என்று மேல ஏதோ பேச வந்தவளை தடுத்து.

கைய் எடுத்து கும்பிட்டு “தாயே போதும் இப்போ என்ன…? உன்னை ஒட்டலுக்கு தானே கூட்டிட்டு போகனும், கூட்டிட்டு போகிறேன்.” என்று சொல்லி விட்டு தன் காரை எடுத்தான்.

ஆனால் எடுக்கும் போதே இனி இவள் என்ன சொன்னாலும் காரை மட்டும் நிறுத்தவே கூடாது.இவள் ஒவ்வொறு பேச்சிக்கும் நான் காரை நிறுத்தனும் என்றால் என் எல்லா காரின் ப்ரேக்கின் ஒயர் கண்டிப்பாக அறுந்து தான் போகும் என்று நினைத்துக் கொண்டே காரை ஒட்டினான்.

அவன் நினைத்ததுக்கு ஏற்ப தான் திரும்பவும் அவள் பேசி வைத்தாள். அவன் கைய் எடுத்து கும்பிட்டதற்க்கு “உங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் ப்ராப்தம் உண்டாகட்டும்.” என்று தன் கைய் அவன் தலை மீது வைத்து ஆசிர்வாதம் செய்வது போல் செய்ததை பார்த்து.

“என் திருமணம் நீ மனது வைத்தால் தான் நடக்கும் .அதனால் உன் அருள் எனக்கு கண்டிப்பாக தேவை.” என்று கூறி அவனும் அவளை திரும்பவும் வணங்கினான்.

அவன் அப்படி சொன்னதை கேட்ட பரினிதா என்ன என்று யோசித்தாள்.பின் அவள் எப்போதும் செய்வது போல் தன் மூளையை உபயோகித்து ஒ ஆருண்யா திருமணம் நடந்தால் தானே இவனும் திருமணம் செய்துக் கொள்ள முடியும். அதற்க்கு நம் உதவி தேவை தானே அது தான் குறிப்பிடுகிறான் என்று நினைத்துக் கொண்டு அவனுக்காக பாவமும் பட்டுக் கொண்டாள்.

ஆம் இவனுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்க வேண்டும். இப்போதே பார்ப்பதற்க்கு முப்பதுக்கு மேல் உள்ளார். இதற்க்கு மேலும் தள்ளினால் வயது நாற்பது மாதிரி தெரிய ஆராம்பித்து விடும் என்று அவனுக்காக வருந்தினாள். ஆனால் நல்ல வேலை இதை அவனிடம் சொல்ல வில்லை. அது வரை அவள் தப்பினாள்.

எதுவும் பேசாமல் வருபவளை பார்த்துக் கொண்டே தன் காரை ஒரு ஐந்து நட்சத்திர ஒட்டல் முன் நிறுத்தி இறங்கி அவளுக்காக காரின் கதவை திறந்தான்.அவளும் இறங்கி அவனுடன் பேசிக் கொண்டே அந்த ஒட்டலுக்கு சென்றாள்.

ஆஷிக்கும் அவள் பேசுவதுக்கு சிரித்துக் கொண்டே தலையாட்டியவாறு தன் நடையை அவளுக்கு ஏத்த மாதிரி மெதுவாக்கி நடந்து அந்த ஒட்டலின் முகப்பில் உள் நுழைந்தான். அதனை ஆஷிக்கின் சொர்க்க பூமியை திறக்க அழைத்த அமைச்சர் பார்த்து விட்டு யார் இந்த பெண் யாரையும் மதிக்காதவன் இந்த பெண்ணிடம் இப்படி பணிவுடன் செல்கிறான்.

அதுவும் சிரித்துக் கொண்டே என்று நினைத்துக் கொண்டு பக்கத்தில் உள்ள ஒரு அல்லக் கைய்யிடம் அந்தப் பெண் யார் விசாரித்து வைக்கும் படி சொல்லி விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.

இது ஏதும் அறியாது ஆஷிக் பரினிதா கேட்டதை அனைத்தையும் வாங்கி கொடுத்து விட்டு தானும் அவளுடன் சேர்ந்து அவள் வரவழைத்த உணவை பகிர்ந்து சாப்பிட்டு அவளை அவள் வீட்டின் கேட் அருகில் காரை நிறுத்தியதும் அவள் இறங்கும் வேளையில் அவள் கை பையை பிடுங்கி கொண்டான்.

பரினிதா சிரித்துக் கொண்டே “என்ன ஒட்டலில் வாங்கி கொடுத்ததுக்கு காசு எடுக்க பார்க்கிறீங்களா...அதில் எதுவும் இல்லை. உங்கள் ஆபிசுக்கு வரும் போதே காருக்கு கொஞ்சம் பணம் கம்மியாக தான் இருந்தது. பின் நான் சென்னை கலெக்டர் தங்கை என்று சொல்லி தான் அவனை அனுப்பியே வைத்தேன்.”

என்று கூறுபவளை பார்த்து இவள் பேசுவதுக்கு எல்லாம் நாம் பதில் பேசிக் கொண்டு இருந்தால் நாம் இந்த ஜென்மத்துக்கு வீட்டுக்கு போக முடியாது என்று நினைத்துக் கொண்டே அவள் கைய் பையை திறந்து அவள் செல்லை எடுத்து தன் போனின் நம்பரை போட்டு தன் போனுக்கு ரிங் வந்ததும் தன் செல்லில் பதிய வைத்துக் கொண்டு அவள் செல்லில் தன் நம்பரை பதிய வைத்து அவள் கைய் பையிலேயே வைத்து விட்டு.

“நான் டெல்லி சென்றாலும் இங்கு வரும் வரை உன்னிடம் தினமும் பேசுவேன்.” என்று சொன்னதற்க்கு.

“எதற்க்கு “

“ம் நீ லூசு மாதிரி ஏதாவது செய்து விட்டால். அதற்க்கு தான்.”

“சரி உங்க செல். உங்கள் காசு,உங்கள் நேரம்.” என்று சொல்லி விட்டு அவள் இறங்கிய வேலையில் பக்கத்தில் ஒரு கார் வந்து நிற்கவும் பதறி ஒதுங்கி நின்றாள். ஆஷிக்கும் சட்டென்று தன் காரை விட்டு இறங்கி யார் என்று பார்க்கும் போது அந்த காரில் இருந்து சித்தார்த் ஆஷிக்கை முறைத்துக் கொண்டே இறங்கினான்.

சித்தார்த்தை பார்த்த பரினிதா பயப்படவில்லை.ஆனால் அண்ணனுக்கு தெரியாமல் சர்ப்ரைஸ் தரலாம் என்று நினைத்திருந்தோமே இப்போது என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டு தானாகவே ஆஷிக்கின் அருகில் சென்று அவன் காதருகில்

“இப்போ என்ன சொல்லலாம் அண்ணா பார்த்து விட்டாரே….”என்று ரகசியம் பேசுகிறேன் என்று கூறியதை யார் கேட்டிருந்தாலும் கண்டிப்பாக சொல்லியிருப்பார்கள். அவள் இது வரை ரகசியமே பேசியிருக்க மாட்டாள் என்று.ஏன் என்றால் அவள் பேசிய ரகசியம் அந்த லட்சணத்தில் இருந்தது.

அதனை கேட்ட ஆஷிக் சித்தார்த்தை பார்த்தான். அவன் எதிர் பார்த்த மாதிரியே சித்தார்த் ஆஷிக்கை சந்தேகத்துடன் பார்த்திருந்தான்.

அவன் மேலும் தப்பு சொல்ல முடியாது அவன் நிலையில் யார் இருந்தாலும் அப்படி சந்தேகத்துடன் தான் பார்ப்பார்கள்.சித்தார்த் ஆஷிக்கை பார்த்து கோபத்துடன் ஏதோ பேச வரும் போதே...

“நான் ஆருண்யாவின் சகோதரன் ஆஷிக் .” என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.

ஆஷிக்குக்கு சித்தார்த் தன்னுடன் பேசும் போது அது கோபத்துடன் இருக்க கூடாது என்று நினைத்தே தன்னை ஆருண்யாவின் சகோதரன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.அவன் எதிர் பார்த்த மாதிரியே சித்தார்த்தும் ஒன்றும் பேச தோன்றாமல் சிலையாக ஆஷிக்கை பார்த்திருந்தான்.

சித்தார்த்துக்கு ஆஷிக்கிடம் முக்கியமாக ஒன்று கேட்க வேண்டியிருந்தது. ஆனால் அது எப்படி கேட்பது என்று தெரியாமல் விழித்திருந்தான். ஆனால் அவனுக்கு அந்த கஷ்டத்தையே கொடுக்காமல் அவன் அன்பு தங்கை அவனுக்கு உதவி செய்தாள்.

ஆஷிக் தன்னை ஆருண்யாவின் சகோதரன் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட உடன் பரினிதா அவனிடம் சண்டை போட ஆராம்பித்து விட்டாள். “உங்களை யார் ஆருண்யாவின் சகோதரன் என்று அறிமுகப்படுத்திக்க சொன்னா…?” என்ற கேள்வியில் அவளுக்கு விடைக் கொடுக்க வில்லை என்றாலும் மனதில் நீ பேசி வைத்த லட்சணத்தில் உன் அண்ணன் என்னை கொலையே செய்திருப்பான்.

இந்த லட்சணத்தில் ஏன் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டாய் என்று கேட்பதை பார் என்று மனதில் அவளை திட்டினாலும் வெளியில் எதுவும் பேசாமல் அவளை பார்த்து சிரித்து வைத்தான்.

அதற்க்கும் “என்ன சிரிப்பு வேண்டியிருக்கு .நான் என் அண்ணாவுக்கு ஆருண்யா அண்ணியை பிறந்த நாள் சர்பிரைசாக காமிக்கலாம் என்று நினைத்திருந்தேன். இப்படி சொதப்பி விட்டீர்களே…”

என்ற பரினிதாவின் அந்த வார்த்தை சித்தார்த்துக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியது என்றால் ஆஷிக்குக்கு கோபத்தை ஏற்படுத்தியது. “என்ன என் சிஸ்டர் என்ன பொருளா உன் அண்ணன் பிறந்த நாளுக்கு கொடுப்பதற்க்கு.” என்று கோபத்துடன் பரினிதாவை பேசினாலும் , பார்வை சித்தார்த்தையே பார்த்திருந்தது.

ஆஷிக்குக்கு என்ன தான் சித்தார்த்தின் செயலில் நியாயம் இருந்தாலும் எந்த மாதிரி சமயத்தில் ஆருண்யாவை கைய் கழுவி சென்றான்.அப்போது அவள் மனது காரணம் புரியாமல் எப்படி வலித்து இருக்கும். என்று நினைக்கும் போது சித்தார்த்தின் மீது என்ன கட்டு படுத்தியும் கோபம் தான் வந்தது.

அந்த கோபத்தை தான் வார்த்தைகளாக வெளிவந்தது.ஆஷிக்கின் பேச்சை கேட்ட பரினிதா இவன் என்ன லூசா நல்லா தானே பேசிட்டு இருந்தான். இவன் ஏன் திடிர் திடிர் என்று இப்படி மாறி மாறி பேசுகிறான் என்று நினைத்துக் கொண்டே அவள் பேசும் போதே…

சித்தார்த் பரினிதாவிடம் “நீ உள்ளே போ குட்டிம்மா...நான் ஆஷிக்கிடம் பேச வேண்டும்.” என்று கூறியதும்.ஒன்றும் மறுத்து பேசாமல் சரி அண்ணா என்ற வகையில் தலையாட்டி விட்டு ஆஷிக்கை நிமிர்ந்து கூடபார்க்காமல் சென்று விட்டாள்.

ஆஷிக்குக்கு பரினிதா அப்படி சட்டென்று சித்தார்த் சொன்ன உடன் சென்றது பிடிக்கவில்லை. குறைந்த பட்சம் தன்னை பார்த்து ஒரு தலை அசைத்து சென்று இருந்தாலாவது அவன் மனது கொஞ்சம் சமாதானம் ஆகி இருக்கும்.

ஆனால் இப்படி விருட்டென்று சென்றதை அவன் மனம் ஏற்க மறுத்தது. இவள் அன்ணன் பேச்சை அப்படியே கேட்பாளா….என்றே எண்ணமே அவனுக்கு எதை எதையோ என்ன தோன்றியது.

ஒரு வேளை சித்தார்த் நம்மை மறுத்தால் பரினிதாவும் மருத்து விடுவாளோ…என்றும். இவளிடமும் நாம் காதலை சொல்ல முடியாது. சொன்னால் அதையும் விளையாட்டாக தான் எடுத்துக் கொள்வாள்.

பரினிதா வீட்டுக்குள் நுழைந்தவுடன் சித்தார்த் ஆஷிக்கை பார்த்து.

“ நாம் கொஞ்சம் பேசலாமா….ஆஷிக் “

“கண்டிப்பாக பேசிதான் ஆகவேண்டும். இதே என் சகோதரி வேறு மாதிரி இருந்து இருந்தால். நான் உங்களிடம் பேச வேண்டிய அவசியமே இருந்து இருக்காது. ஆனால் என்ன செய்வது இன்னும் என் சிஸ்டர் திருமணத்துக்கு சம்மதிக்க வில்லை.அப்படி இருக்கும் போது என் சகோதரியின் திருமணத்திற்க்காவது உங்களிடம் பேசி தானே ஆக வேண்டும்.”

ஆஷிக் கோப பேச்சை கேட்டும் அமைதியுடன் “உங்கள் சூழ்நிலையில் நான் இருந்தால். கண்டிப்பாக இதோடு அதிக கோபம் தான் பட்டிருப்பேன்.உங்கள் கோபம் நியாயமானது தான். நான் உங்கள் சகோதரியை விட்டு பிரிவதற்க்கு ஆயிரம் காரணம் சொன்னாலும், அவளுக்கு நம்பிக்கை கொடுத்து விட்டு பின் பிரிவது என்பது தவறு தான்.

ஆனால் இது வரை அவள் திருமணம் செய்யாமல் இருப்பாள் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. சில சமயம் நான் ஆருண்யாவை பற்றி விசாரிக்கலாம் என்று என்னும் போது அவளுக்கு இந்த வயதுக்கு கண்டிப்பாக திருமணம் முடிந்து இருக்கும் என்று நினைத்து நான் எவ்வளவு வேதனை பட்டிருப்பேன் என்று எனக்கு தான் தெரியும்.

அதுவும் இல்லாமல் இதை விசாரித்து தெரிந்துக் கொண்டு இன்னும் என் மனதை புண் படுத்திக்க வேண்டுமா…..? என்று நினைத்து தான் நான் அவளை பற்றி விசாரிக்கவில்லை. இன்னும் சொல்ல போனால் அவள் நினைவு என்னை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்றால் யாரிடமும் சகஜமாக பேசாத நான் உங்கள் பெயருக்காவே உங்களிடம் பேசும் அளவுக்கு. ஏன் என்றால் என்னவள் உதட்டில் இருந்து அதிகம் உச்சரித்த பெயர் ஆஷிக்.” என்று சொல்லி விட்டு ஒரு ஆழ மூச்செடுத்து இதற்க்கு மேல் எப்படி என் காதலை புரிய வைப்பது என்பது போல் ஆஷிக்கை பார்த்தான்.

ஏற்கனவே ஆஷிக்குக்கு சித்தார்த்தின் மேலும் அவன் குடும்பத்தின் மேலும் அதிக மதிப்பு இருந்ததாலும், மேலும் சித்தார்த்தின் டைரி மூலம் சித்தார்த்தில் நிலை புரிந்ததாலும், ஒன்றை மட்டும் சித்தார்த்திடம் தெளிவு படுத்த எண்ணினான்.

“சரி சித்தார்த் நீங்கள் சொல்வது எல்லாம் சரி. நீங்கள் என் சகோதரியை விட்டு பிரிவதற்க்கு உங்கள் பெற்றவர்களின் விபத்து நியாயமான க..” என்ற அவன் பேச்சை சித்தார்த் இடையிட்டு

“ நான் எதுவும் உங்களிடம் சொல்ல வில்லையே ... உங்களுக்கு எப்படி தெரியும். அதுவும் இல்லாமல் பரினிதா எப்படி” என்று அதற்க்கு மேல் நீ தான் சொல்ல வேண்டும் என்று சித்தார்த் ஆஷிக்கை பார்த்தான்.

ஆஷிக்குக்கு பரினிதா பெயர் சொன்னவுடன் தன்னால் அவன் உதட்டில் புன்னகை ஒட்டிக் கொண்டது. இருந்தும் அதை சித்தார்த்திடம் மறைத்து அனைத்தையும் சொல்லி முடித்தான்.

ஆஷிக் சொல்ல சொல்ல சித்தார்த்துக்கு பெருமை தாளமுடியவில்லை. தன் குட்டிம்ம்மாவா இவ்வளவு காரியத்தையும் செய்தது. அவனால் நம்ப கூடமுடியவில்லை. நாம் சிறு பெண் என்று நினைத்து இருந்தவள் எவ்வளவு பெரிய வேலை எல்லாம் செய்து இருக்கிறாள் என்று சந்தோஷப்படும் வேளையிலேயே ...நான் இன்னும் பரினிதாவின் கடமையை நிறைவேத்தி முடிக்க வில்லையே…என்று அவன் எண்ணம் ஒடும் போதே..அவன் முகம் வாடி விட்டது.

பரினிதாவை பற்றி சொல்லி விட்டு அவன் முகத்தையே பார்த்திருந்தா ஆஷிக். முதலில் நான் சொல்ல சொல்ல சித்தார்த்தின் முகம் மலர்ந்ததும். பின் கடைசியாக வாடியதையும் பார்த்த ஆஷிக்.

ஆஷிக் “இப்போதும் என்ன தான் உங்களுக்கு பிரச்சனை” என்று கேட்டதற்க்கு ஒன்றும் சொல்ல முடியாமல் நின்றான்.

அவனால் என்ன தான் சொல்ல முடியும் இன்றும் உன் தங்கையோடு என் கடமை தான் முக்கியம் என்று சொல்லவா முடியும். அது நியாயமும் ஆகாது என்பதை அவனே நன்கு உணர்ந்து இருந்தான். அதுவும் இல்லாமல் தனக்காக தன் இளமையே துளைத்து விட்டு ஒருத்தி இருக்கும் போது இருபது வயதே முடியாதா பரினிதாவின் திருமணத்தை பற்றி பேசவா முடியும்.

தான் கேட்டதுக்கு ஒன்றும் பேசாமல் பார்த்திருந்த சித்தார்த்தை பார்த்து “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். உங்கள் தங்கை விஷயம் தானே….” ஆஷிக் கேட்ட உடன் சட்டென்று அவனை பார்த்து ஆம் என்ற விதமாக தலையாட்டினான்.

“அப்போ பரினிதா சொன்னது சரிதான் போலவே…” என்றதற்க்கு.

“குட்டிம்மா என்ன சொன்னா…?”

“நீங்கள் தான் உங்கள் தங்கையைய் குட்டிம்மா என்று நினைத்திருக்கிறீர்கள். ஆனால் அவள் உங்களுக்கு மேல் யோசிக்கிறாள். “

என்ன என்று பார்த்திருந்த சித்தார்த்திடம் “நீங்கள் இப்படி தான் யோசிப்பீர்கள் என்று உங்களை பற்றி சரியாக யூகித்து என்னிடம் நீங்கள் டெல்லிக்கு சென்று உங்கள் சகோதரியிடம் கல்யாணத்திற்க்கு சம்மந்தம் வாங்கிக் கொண்டு வாங்கள் நான் அதற்க்குள் என் திருமணத்தை முடித்துக் கொள்கிறேன் என்று சொன்னாள்.” என்று ஆஷிக் சொன்னவுடன் அதிர்ச்சியுடன் .
 
சித்தார்த்துக்கும் ஆருவை பற்றி சொல்லி சந்தோஷ படுத்திட்டாங்க.அப்படியே பரினிய உனக்கு கேட்டிடு ஆஷிக்.
 
Top