Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Un Arugil En Ithaiyam 8

Advertisement

SEMA
அத்தியாயம்---8

பரினிதாவின் குழப்பமான முகத்தை பார்த்து எது சொன்னால் அவள் சகஜநிலைக்கு திரும்புவாள் என்று அறிந்து வைத்திருந்த சித்தார்த் “குட்டிம்மா நாம் ஏற்காடு நாளை போக போறோம் இல்லையா...அதற்க்கு தேவையான ஏற்பாட்டை செய்து விட்டாயா…?” என்று கேட்டது தான் தாமதம்.

உடனே தன் அண்ணனின் திருமணத்தை மறந்து நாளை செல்வதற்க்கு தேவையான பொருட்களை வாங்குவதற்க்கு டிரைவரிடம் காரை எடுக்க சொல்லி ஷாப்பிங் செய்ய புறப்பட்டாள்.

சித்தார்த்தும் இந்த தடவை பரினிதாவையும் குழந்தைகளையும் எந்த காரணத்துக்காகவும் ஏமாத்த கூடாது என்று கருதி அனைத்து வேலையையும் ஒதுக்கி வைத்து விட்டு புறப்பட தயார் ஆனான்.

இங்கு ஆஷிக்கோ பரினிதாவை நினைக்காதே என்று தன் மனதுக்கும் அறிவுக்கும் இடையே ஒரு யுத்தமே செய்துக் கொண்டிருந்தான்.ஆம் பரினிதா நமக்கு சரி வரமாட்டாள் என்று நினைத்த ஆஷிக்கால் அவள் முகத்தையும் மறக்க முடியவில்லை.

அவளின் மென்மையான உடல் தீண்டலையும் அவனால் மறக்க முடியவில்லை.காலையில் இருந்து இரவு வரை வேலை நெட்டி தள்ளுவதால் பிரச்சினை இல்லாமல் சென்றது.

ஆனால் இரவு அவனை பாடாய் படுத்தியது.இது வரை வேலையின் அசதியால் வந்ததும் உறங்கி விடுவான்.ஏன் சில சமயம் பார்ட்டியில் இருந்து உறக்கத்தால் கூட பாதியிலேயே வந்து விடுவதும் உண்டு.

அவன் எப்போதும் தன் உடல் ஆரோக்கியத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பானோ அதே அளவுக்கு தன் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்வான்.

அவன் இருக்கும் தொழில் அப்படி பட்டது கொஞ்சம் விட்டாலும் எதிரிகள் தன்னை கவுக்க காத்திருப்பதால் அவன் எப்போதும் விழிப்புடன் இருந்தாக வேண்டும்.அதற்க்கு எப்போதும் தன் அறிவு புத்தி கூர்மையுடன் செயல்லாற்ற வேண்டும் என்ற காரணத்தால் அவன் மனநிலையை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்வான்.அதற்க்கு தூக்கம் மிக மிக அவசியம் என்று தெரிந்ததால் அவன் தன் தூக்கத்தின் எட்டு மணி நேரத்தை அவன் குறைத்ததே இல்லை.

அப்படி பட்டவன் மூன்று நாட்களாக தூங்க வேண்டும் என்று கண்ணை மூடினாலும் அவனால் முடியவில்லை.அவன் உடல் மொழியோ சொல்லவே வேண்டாம். இது வரை பணத்தின் மீதே நாட்டம் வைத்திருந்தவன்.

இப்போது அவனின் வயதுக்கே உண்டான தேவையை நாட ஆராம்பித்தது.அவள் சிறு பெண் என அறிவு எடுத்துரைத்தாலும் இல்லை என்று அவன் உணர்ந்த மென்மை அவனுக்கு எடுத்த உரைத்தது.

ஒரு நாள் மனது கேளாமல் கலெக்டர் ஆபிசின் வாசலுக்கே சென்று விட்டான்.பின் தான் தன் தவறின் அளவு தெரிந்து தான் என்ன செய்துக் கொண்டு இருக்கிறோம்.நாம் ஏன் இப்போது இங்கு வந்தோம் என்று நினைத்து திரும்ப நினைத்தான்.

அப்போது அங்கு இருந்த ஊழியர் ஒருவர் ஆஷிக்கை பார்த்து விட்டு “என்ன சார் இப்போ போய் வந்து இருக்கீங்களே கலெக்டர் சார் இல்லையே… சார். அவர் விடுமுறையில் இருக்கிறார் சார். எப்படியும் வர எப்படியும் இன்னும் மூன்று நாள் ஆகும் சார்.”

என்ற அந்த ஊழியரின் வார்த்தையில் நமக்கு இது சரி படாது என்று திரும்ப நினைத்தவன் திரும்பவும் என்ன நினைத்தானோ “ஏன் விடுமுறை எடுத்து இருக்கிறார். அவர் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதாவது பிரச்சினையா…?” என்று மனது கேளாமல் கேட்டு விட்டான்.

அந்த ஊழியருக்கு ஆஷிக் பற்றி தெரியும் என்ற காரணத்தால் தேவையில்லாமல் பேசவும் மாட்டார்.மற்றவர்களை பற்றி விசாரிக்கவும் மாட்டாரே என்று நினைத்து “அதெல்லாம் ஒன்றும் இல்லை சார்.அவர் தங்கை மற்றும் ஆஸ்ரமத்து குழந்தைகளுடன் அவரின் ஏற்காடு கெஸ்ட்டு அவுசுக்கு போயிருக்கிறார் சார்.” என்ற அவன் வார்த்தையில் மனது கொஞ்சம் சமாதானம் ஆனாது.

கொஞ்சம் தான் ஆனாது.நாம் இங்கு தூக்கம் பிடிக்காமல் புலம்ப விட்டுட்டு அவள் பாட்டுக்கு ஜாலியா அவள் அண்ணன் கூட ஊர் சுத்த போயிருக்களா...என்று நினைக்க தான் தோன்றியது.

அவனுக்கு நன்கு தெரியும் இந்த ஒரு வாரத்தில் பரினிதா தன்னை பற்றி நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டாள் என்று.ஏன் இன்னும் சொல்ல வேண்டும் என்றால் தன்னை எங்காவது பார்த்தால் அவளுக்கு நியாபகம் கூட இருக்காது என்பதனையும் தான்.இந்த நினைவோடு தன் ஆபிசுக்கு வந்தவனை ஆஷிக்கின் மனேஜர் ஸ்ரீதர் .

“சார் நீங்க சொன்னா மாதிரி டெல்லிக்கு ப்ளைட் டிக்கட் புக் பண்ணிட்டேன் சார்.” என்ற வார்த்தையில் ஒரு சிறு பெண் நினைவில் தான் என்ன மாதிரி மாறிபோனோம் என்று வருந்தினான்.

ஆம் ஸ்ரீதர் சொல்லும் வரை தன் அன்னையிடம் தான் சொன்ன அடுத்த வாரம் டெல்லி போகலாம் என்ற நினைவே சுத்தமாக மறந்திருந்தான். மறந்திருந்தான் என்று சொல்வதை விட பரினிதாவின் நினைவு அவனை மறக்க வைத்தது என்று சொன்னால் அது சரியாக இருக்கும்.

ஒரு பெண்ணின் நினைவால் நாம் என்ன மாதிரி சுயநலமாக மாறி போனோம். ஆருண்யாவுக்கு தனக்கும் ஒரு வயது தான். இன்னும் சொல்ல போனால் பெண்ணான அவளுக்கு திருமணம் வயது கடந்து விட்டது என்று கூட சொல்லலாம்.

அப்படி இருக்கும் போது அவள் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யாமல் தனக்கான துணையை தேட நினைத்தோமே….எட்டு வருடத்திற்க்கு முன் தான் நீட்டிய பக்கத்தில் எல்லாம் ஏன் என்றும் கேட்காமல் படித்தும் பார்க்காமல் கைய்யெழுத்து இட்ட ஆருண்யாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை ஏற்பாடு செய்து கொடுத்த பிறகு தான் இனி தன் வாழ்க்கையை பற்றி யோசிக்க வேண்டும்.

அதற்க்கு என்று பரினிதா இல்லாத வாழ்கையையும் அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அவன் மனமும் சரி உடலும் சரி அவள் தான் வேண்டும் என்று அடம் பிடித்தது. அவள் இல்லாத வாழ்க்கை தனக்கு மகிழ்ச்சியை கொடுக்காது என்பதனை இந்த ஒரு வாரத்திலேயே அவன் அறிந்துக் கொண்டான்.

இனிமேல் யார் விரும்பினாலும் சரி விரும்ப வில்லை என்றாலும் சரி. பரினிதாவை தன்னோடு இணைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து இருந்தான்.இந்த முடிவை யாருக்காவும் மாற்றுவதாக இல்லை.இந்த யாருக்காவும் என்பதில் பரினிதாவும் தான் அடக்கம் என்று மனதில் உறுதி பூண்டான்.

அதற்க்கு நாம் முதலில் ஆருண்யா விஷயத்தை பார்க்க வேண்டும் என்று முடிவு எடுத்து ஸ்ரீதரிடம்

“ சரி ஸ்ரீதர் ரிட்டன் டிக்கட் ஒரு வாரம் கழித்து செய்.” என்று ஸ்ரீதரை தன் கேபினை விட்டு அனுப்பி விட்டு சிந்தனையில் ஆழ்ந்தான்

சித்தார்த் குடும்ப விவரம் அவனுக்கு முதலிலேயே தெரியும் என்பதால் சித்தார்த்திடம் பணத்தை காண்பித்து பெண் கேட்க முடியாது.நேரியையாக இந்த விஷயத்தை பரினிதாவிடம் பேசலாம் என்றால் பேசினால் புரிந்துக் கொள்வாளா...என்பது சந்தேகம் தான்.

கண்டிப்பாக தான் பேசியவுடன் தன் அண்ணனிடம் பத்த வைத்து விடுவாள் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.இப்போது அவன் கவனம் முழுவதும் தன் இடத்தில் ஒட்டல் கட்ட சித்தார்த்திடம் பர்மிஷன் வாங்குவதை விட தான் எப்படி கேட்டால் பெண் கொடுப்பான் என்பதிலேயே இருந்தது.

பின் தனக்கு தானே அவன் சமாதானமும் செய்துக் கொண்டான்.அவள் இப்போது தான் மூன்றாம் வருடமே படிக்கிறாள். அவள் படிப்பு முடியவே இன்னும் ஒரு வருடம் இருக்கிறது.

அவள் படிப்பு முடித்து தான் கண்டிப்பாக அவள் திருமண பேச்சையே எடுப்பார்கள். நாம் அதற்க்குள் ஆருண்யாவின் மனதில் இருப்பதை தெரிந்துக் கொண்டு அவளுக்கு கல்யாணம் செய்து வைத்துட வேண்டும் என்று அவன் நினைப்பு ஒட இடையில் ஒரு சமயம் அவள் அரியஸ் எல்லாம் க்ளியர் செய்தால் தான் அவள் திருமணத்திற்க்கே பார்ப்பார்களோ அந்த நினைவே அவன் வயிற்றில் புளியை கரைத்தது.

ஏற்காட்டில் இருக்கும் பரினிதா ஒருவன் தன்னை நினைத்து புலம்புவதை அறியாமல் அவள் விடுமுறையை தன் குழந்தைகளுடனும்,அண்ணனோடும் இரண்டு நாள் சந்தோஷமாக கழித்தாள்.

இரண்டாம் நாள் மாலை மழை வரும் போவது போல் இருக்க சித்தார்த் பரினிதாவிடமும், குழந்தைகளிடமும்.

“மழை வருவது போல் இருக்கிறது நாம் போய்விடலாம்” என்றதற்க்கு அந்த குழந்தைகள் கூட உடனே சம்மதித்து விட்டார்காள். ஆனால் அவர்களோடு சிறு குழந்தையான பரினிதா தான் சம்மதிக்கவே இல்லை.

சித்தார்த்திடம் “நாம் வந்ததே மூன்று நாளுக்கு தான்.அதையும் மழை அது இது என்று சொல்லி அழைக்கிறீர்களே…” என்று குற்றப் பத்திரிக்கை வாசித்தாள்.

இனி நாம் என்ன தான் கூப்பிட்டாலும் வர மாட்டாள் என்று நினைத்த சித்தார்த் அவளிடம் “சரி நீ சொல்வதை கேட்டு நான் குழந்தைகளை அழைச்சிட்டு போகிறேன். அதே மாதிரி என் பேச்சையும் நீ கேட்க வேண்டும். ட்ரைவரை இங்கயே உன் பாது காப்புக்கு விட்டுட்டு போறேன் . மழை வந்தவுடன் காரில் வந்து விட வேண்டும்.” என்று சொல்லி டிரைவரிடம் அவளை ஒப்படைத்து விட்டு குழந்தைகளை மட்டும் அழைத்துக் கொண்டு கெஸ்ட் அவுஸ் வந்தடைந்தான்.

அங்கு பரினிதாவோ மழை வந்தவுடன் வரவில்லை. அப்படி வந்தால் அது பரினிதா இல்லையே… டிரைவர் அழைக்க அழைக்க அதை பொருட்படுத்தாது மழையில் நனைந்துக் கொண்டே அந்த பார்க்கை சுற்றி வலம் வந்தாள்.

பின் சொட்ட சொட்ட நனைந்துக் கொண்டு வந்த தன் தங்கையை திட்டவும் மனம் இல்லாமல் ஆதாங்கத்தோடு “என்ன குட்டிம்மா நான் சொன்னேன்னா...இல்லையா..மழை வந்தவுடன் வந்து விட வேண்டும் என்று. இப்படி நீ செய்தால் அடுத்த தடவை உன் பேச்சை நான் எப்படி கேட்பேன்.” என்று வாய் பேசினாலும் கைய் தன் பாட்டுக்கு அவளின் தலையை துவட்டி விட்டுக் கொண்டு இருந்தது.

அப்போது அசால்டாக “இது வைரம் பாஞ்ச கட்டை அண்ணா..எனக்கு ஒன்றும் ஆகாது .” என்று கெத்தாக கூறி தன் ரூமுக்கு சென்றாள்.

ஆனால் அடுத்த நாளே அவள் உடல் வைரம் பாய்ந்தது இல்லை.வெரும் உலுத்து போன கட்டை தான் என்று அவள் உடல் காய்ச்சல் மூலம் அனைவருக்கும் தெரிய வந்தது.

அதனால் அடுத்த நாள் நானும் ஊர் சுற்ற வருவேன் என்று கூறியவளை “நீ இப்போது என் பேச்சை கேட்டு வீட்டில் ஒய்வு எடுப்பது என்றால் குழந்தைகளை மட்டுமாவது அழைச்சிட்டு போய் வருவேன். இல்லை என்றால் அனைவரையும் சென்னைக்கே அழைச்சிட்டு போயிடுவேன்.” என்ற சித்தார்த்தின் வார்த்தைக்கு நல்ல பலன் இருந்தது.

“இல்லே நீங்க போங்க நான் வரவில்லை.” என்று கூறி அன்று வீட்டில் ஒய்வு எடுத்தாள்.

சித்தார்த்துக்கு தன் தங்கையை பற்றி நன்கு தெரியும். குழந்தைகளையும் அழைச்சிட்டு போக மாட்டேன் என்று சொன்னால் தான் கேட்பாள் என்று நினைத்து தான் அவன் அவ்வாறு கூறினான்.அதற்க்கு நல்ல பலனும் கிடைத்தது.

அன்று ஏற்காடு கெஸ்ட் அவுசில் அண்ணன், குழந்தைகள் சென்ற பின் கொஞ்ச நேரம் அண்ணன் சொல் பேச்சி கேட்டு ஒய்வு எடுத்துக் கொண்டு இருந்தவள். பின் முடியாமல் ஹாலுக்கு வந்தாள்.

அவளை பார்த்த சமையல் காராம்மா “என்ன பாப்பா சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரட்டுமா “என்று கேட்டதற்க்கு சரி என்று தலையாட்டினாள்.

அவள் கொடுத்த சிப்ஸை கொரித்தபடியே என்ன செய்யலாம் என்ற யோசனையின் முடிவில் இது வரை செல்லாத பகுதியான அந்த கெஸ்ட் அவுசின் லைப்ரெரிக்கு சென்றாள்.

உள் நுழைந்தவளுக்கு அங்கு இருக்கும் புக்கின் அளவை பார்த்து சந்தேகமே வந்து விட்டது.இது அண்ணா படிப்பதற்க்கு வாங்கி இருக்கிறாரா இல்லை சும்மா பார்ப்பதற்க்கா …என்று யோசித்துக் கொண்டே புக்கின் ரேக் அருகில் சென்று ஒரு புக்கை பார்வை இட்டாள்.

பார்வை இட்ட முடிவில் அவள் மனதில் இது தான் தோன்றியது. நாம் வருவதற்க்கு ஏற்ற இடம் இது வல்ல என்று. சரி திரும்பி விடலாம் என்று நினைக்கையில் அந்த புக் அலமாரியில் இருந்த ப்ளூ கலர் டைரி அவளை ஈர்த்து என்ன எடேன் என்று அவளை அழைப்பு விடுப்பது போல் இருக்க அதனை கையில் எடுத்தாள்.

எடுத்து முதல் பக்கத்தில் பார்த்ததும் தான் தெரிந்தது அது சித்தார்த்தின் டைரி என்று .சரி வைத்து விடலாம் என்று கருதி அதை வைக்க போனாள்.அவள் அதனை படிக்க வேண்டாம் என்று நினைத்ததுக்கு காரணம் மற்றவர்களின் டைரியை படிக்க கூடாது என்ற நாகரிகத்துக்காக இல்லை.

அவள் மிகவும் விரும்பி பார்க்கும் டோரா புஜ்ஜியின் நிகழ்ச்சி பார்க்கும் நேரம் வந்து விட்டது என்று நினைத்து தான் அதை இருந்த இடத்திலேயே வைக்க பார்த்தாள்.பாவம் அன்று டோரா புஜ்ஜி பார்க்கும் கொடுப்பினை அவளுக்கு இல்லை போல்.

அவள் டைரியை வைக்கும் போது அதனில் இருந்து இரண்டு போட்டோ கீழே விழுந்தது.அப்போதும் நல்ல பிள்ளை போல் அதனை அதுக்குள் வைக்க தான் பார்த்தாள்.விதி யாரை விட்டது மறைத்ததை திறந்து பார்க்கும் ஆவாள் கொண்ட மனித இயல்பு உடைய பரினிதா அதனை வைக்கும் முன் அது என்ன என்று திருப்பி பார்த்தாள்.


பார்த்தவள் ஒரு நிமிடம் தன் கண்ணையே நம்ப முடியாமல் கண்ணை கசக்கி விட்டு திரும்பவும் அந்த போட்டோவை பார்த்தாள்.திரும்பவும் அவள் கண்ணுக்கு அந்த போட்டோவில் ஒரு பெண்ணை சித்தார்த் பின்னால் இருந்து அவளை அணைத்தது போல் இருந்தது.
sema
sis
 
Top