Skip to content
Post Views: 3,482
3௦
குளிர் நிலவாய்
என்னைக் குளிர்வித்தவள்,
Advertisement
இன்று எரிதனாலாய்
தகிப்பதேனோ?!
கொஞ்சும் நிலவாய்
Advertisement
குலவி மகிழ்ந்தவள்,
Advertisement
இன்று கொண்டவனைக்
காய்வதேனோ?!
“ஹும்!!” என்று ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்டவள், ‘முதல்ல டாக்டரைக் கன்சல்ட் பண்ணுவோம்!’ என்று எண்ணியபடி கதவைத் திறந்து கொண்டு வந்தாள்.
Advertisement
வெளியே வந்தவளின் கைகளைப் பிடித்துக் கொண்ட ரஞ்சன், “நிலா… என்னடா ஆச்சு! ஏன்மா கதவைத் தட்டத் தட்ட திறக்கமட்டேங்கிற! வா ஹாஸ்பிட்டல் போகலாம்” என்று பதட்டத்துடன் அழைக்க,
“ப்ச்! இங்க யாரும் இல்ல…! அதனால தேவையில்லாம நடிக்க வேண்டிய அவசியமில்லை!” என்று விட்டேத்தியாகக் கூறியவள், அவன் கைகளை உதறிவிட்டு, தனது மாற்று உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்றாள்.
அவன் செய்வதறியாது அவள் மீது பார்வையைப் பதித்தபடியே நின்றிருக்க, அவள், அவன் மேல் இருந்த கோபத்தைக் கதவின் மீது காட்டினாள்.
“மனுஷனாட நீ?! கோவம் வந்தா என்ன வேணா பேசிடுவியா?! இப்போ அவளுக்கு உடம்பு வேற சரியில்லை! ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டாலும் வர மாட்டேங்கறா?! அய்யோ! இவளை எப்படித்தான் சமாதானப் படுத்தப் போறேனோ?!!!” என்று தலையைப் பிடித்தபடி கட்டிலில் சென்று விழுந்த ரஞ்சனுக்கு, ஏதோ யோசனை தோன்ற,
‘அவளுக்கு என்ன ஆச்சு?! முதல்ல எழுந்து நின்னா, அப்புறம் மயக்கம் வர மாதிரி தள்ளாடினா?! அப்புறம் திடிர்னு ஓடி போய் வாந்தி எடுக்கறா?! அய்யய்யோ!? மறுபடியும் தூக்க மாத்திரை கித்திரை சாப்பிட்டுத் தொலைச்சிட்டாளா????!!!’ என்று வாய்விட்டு அலறியவன்,
“சே! சே! அதெல்லாம் எப்போவோ தூக்கி போட்டாச்சு இல்ல…?! அப்புறம்…. அப்புறம் எப்படி வாந்தி, மயக்கம்?!” என்று யோசித்தவனுக்கு நெஞ்சில் மின்னலடிக்க,
“டேய் ரஞ்சு…!!!!! நீ அப்பாவாயிட்டடா!!!!!!!!” என்று கத்தியபடி கட்டிலிலிருந்து எகிறிக் குதித்து குத்தாட்டம் போட்டான்.
நல்லவேளை, தண்ணீர் திறந்து விட்டிருந்தபடியால் அவனின் கூக்குரல், குளியலறைக்குள் குளித்துக் கொண்டிருந்த நிலாவிற்குக் கேட்கவில்லை! இல்லையென்றால்…. இல்லையென்றால்… நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள் வாசகர்களே….
குளியலறைக் கதவை உடைத்துக் கொண்டு போய் அவளை அள்ளித் தூக்கிக் கொண்டு தட்டாமாலை சுற்று வேண்டும் போல் இருந்தது அவனுக்கு. நேற்று நடந்தது அனைத்தையும் மறந்தே போனான், தன் தலைவியின் கோபத்தையும் சேர்த்து.
அதேநேரம் அவள் குளித்துவிட்டு வெளியே வர, ஓடிப்போய் அணைத்துக் கொள்ள துடித்த அவனது ஐம்புலன்களும் அவளது ஒற்றைக் கோபப் பார்வையில் கட்டுண்டு அடங்கின.
இருந்தாலும் அவனின் எக்ஸ்ப்ரெஷன் மாறவில்லை! பையித்தியத்தைப் போல் ஈஈஈ… என்று இளித்துக் கொண்டு நின்றிருந்தவனை, ‘என்ன?!’ என்று கண்களால் ஒரு வெட்டு வெட்டிவிட்டு தயாராகத் துவங்கினாள்.
“நிலா….!” என்று அவள் அவன் பின்னோடு சென்று நிற்க, அங்கு ஒரு ஜீவன் இருக்கவேயில்லை என்பது போல் நினைத்து அவள் கிளம்பி வெளியே சென்றாள்.
அவள் நேராகச் சமையலறைக்குச் செல்ல, அவனும் பின்னோடு சென்றான்.
“என்னடா இன்னும் குளிக்கலை போல?! எதுக்கு குட்டி போட்ட பூனையாட்டம் உன் பொண்டாட்டி பின்னாடியே திரியற?!” என்று காமாட்சி அதட்ட,
“ஹான் அது வந்து பாட்டி… அவளுக்கு காலையில இருந்து உடம்பு சரியில்லை! தலைச்சுத்துதுங்கறா, வாந்தி எடுக்கிறா! அதான் ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டுப் போகலாம்னு!” என்று ரஞ்சன் சொல்ல,
“ம் ரொம்பதான் அக்கறை!” என்று பொறிந்தாள் நிலா.
அதைக் கேட்ட ரஞ்சன், “பாருங்க பாட்டி.. ஹாஸ்பிட்டல் வரமாட்டேன்னு சொல்றா?! இவள என்னன்னு கேளுங்க?!” என்று அவளைக் கோர்த்துவிட்டு விட்டு ஒதுங்கிக் கொள்ள,
“இல்ல பாட்டி… ரொம்ப சோர்வா இருக்கு, அதான் கொஞ்ச நேரம் கழிச்சிப் போகலாம்னு இருந்தேன்!” என்று நிலாதான் சமாளிக்க வேண்டியதைப் போயிற்று.
“என்னம்மா… ஏதேனும் விசேஷம் போல இருக்கா?!” என்று காமாட்சி கேட்க,
“அப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன் பாட்டி..! எதுக்கும் டாக்டரைப் பார்த்து கன்பார்ம் பண்ணிக்கலாம்னு தோணுது!” என்று அவள் சொல்ல, அதைக் கேட்ட அனைவரின் உள்ளமும் மலர்ந்தன.
“இருக்கும் என்ன? என் கொள்ளுப் பேரனேதான்!” லேட் பண்ணாம உடனே ஹாஸ்பிட்டலுக்குக் கிளம்பு!” என்றவர், ராதாவிடம்,
“ஏதாவது இனிப்பு இருந்தா கொண்டு வா ராதா…!” என, அவர் ஓடிப் போய் வீட்டிலிருந்த லட்டுவை எடுத்து வந்து நிலாவிற்கு ஊட்டினார்.
அதை வாங்கிக் கொண்டவள் நெஞ்சில், ‘நேற்று இந்நேரம் இது தெரிந்திருந்தால் நிலைமையே வேறு! ஆனால் இப்போது?!’ என்ற எண்ணம் தோன்ற கண்கள் பனித்தன.
“அட என்னம்மா… நல்லநேரத்துல இப்படிக் கண்கலங்கலாமா?!” என்று ராதா அவள் கண்ணைத் துடைத்துவிட,
“ம் ஆன்ட்டி..!” என்றவள், அங்கிருந்த பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசி பெற்றாள்.
“பையன் வரப் போறான் னதும் என் பேரன் முகத்துல புது பிரகாசம் தெரியுதே?!” என்று காமாட்சி சொல்ல,
“போங்க பாட்டி…!” என்றவன், “நான் போய் ரெண்டே நிமிஷத்துல குளிச்சிட்டு வந்திடறேன், அதுக்குள் நீங்க அவளை சாப்பிட வையுங்க!” என்று சொல்லிவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்தான்.
அவன் சென்ற சில நிமிடங்களுக்குப் பின் தங்கள் அறையிலிருந்து வெளியே வந்த யாஷினியும், நிருவும், விஷயம் கேள்விப்பட்டு, “ஏய்… நிலா கங்க்ராட்ஸ்…. என் நிலாவுக்கு இன்னொரு குட்டி நிலா பிறக்கப் போறா…!” என்று சந்தோஷமிகுதியில் நிரு கத்த, நிலா முகம் சிவக்கத் தலை குனிந்தாள்.
குளித்துவிட்டுத் தயாராகி வெளியே வந்த ரஞ்சன், தன் மனைவியின் சிவந்த முகம் கண்டு முற்றிலும் தன்னைத் தொலைத்தான்.
“பாட்டி உங்களுக்கு இன்னொரு கொள்ளுப்பேரனோ பேத்தியோகூட வரப் போறாங்க!” என்று நிரு கூற, யாஷினியின் முகமும் அங்கு சிவந்து ஜொலித்தது.
“டேய்… குட்டிப் பையா….!!!!??” என்று ஆசையும், ஆச்சரியமும் சேர காமாட்சி அவனைப் பார்த்துவிட்டு யாஷினியைப் பார்க்க, அவளும் ‘ஆமாம்!’ என்பது போல் தலையசைக்க, அங்கே சந்தோஷத்திற்குக் குறைவில்லாமல் போனது.
யாஷினியின் கர்ப்பம் பற்றி கேட்ட சந்தோஷத்தில் தன் நிலையைக் கூட சில நிமிடங்கள் மறந்து போனாள் நிலா.
அனைவரும் மகிழ்ச்சியுடன் காலை உணவை முடித்துக்கொண்ட பின், “கிளம்பலாமா நிலா…!” என்று ரஞ்சன் கேட்க,
“ம் ஒரு நிமிஷம் இருங்க” என்று தன் அறைக்குள் சென்றவள், தன் கைப்பையுடன் திரும்பினாள்.
வீட்டினரிடம் விடைபெற்று இருவரும் கிளம்பிச் சென்றனர். சிறிது தூரம் அவனுடன் காரில் சென்றவள், “காரை நிறுத்து!” என்றாள்.
“ஏன் நிலா ஏதவாது வாங்கனுமா?!” என்று கேட்டபடி அவன் காரை ஓரமாக நிறுத்த,
“ஸாரி… ஆடி கார்ல ட்ராவல் பண்ற அளவுக்கு எனக்குத் வசதியில்ல!” என்றவள், வேறு பேச்சின்றி காரிலிருந்து இறங்கி, வழியில் போய்க் கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்து அதில் ஏறிக் கொண்டாள்.
“நிலா.. என்ன பண்ற நீ?! ஒழுங்கா நம்ம வண்டியில ஏறு!” என்று அவளைப் பின்தொடர்ந்து வந்த ரஞ்சன் சொல்ல,
“நீங்க வண்டியை எடுங்க!” என்றாள் ஆட்டோக்காரரிடம்.
“சார் ப்ளீஸ்… ஆட்டோவை எடுக்காதீங்க!” என்று ரஞ்சன் சொல்ல,
“இப்போ நீங்க ஆட்டோவை எடுக்கறீங்களா..? இல்ல நான் வேற ஆட்டோ பிடிச்சுக்கட்டுமா?!” என்றாள் தீர்மானமாக.
“மன்னிசிடுங்க சார்..!” என்று ஆட்டோவைக் கிளப்பினான் அந்த டிரைவர்.
அவள் செய்கையில் ரஞ்சுக்கு சற்றே கோபம் துளிர்த்தாலும், மனைவியாயிற்றே?! விட்டுவிட முடியுமா? ஓடிப்போய் தன் காரை எடுத்துக் கொண்டு அவளைப்பின் தொடர்ந்தான்.
அவள் ஒரு சிறிய கிளினிக்கின் முன் ஆட்டோவை நிறுத்தச் சொன்னதும், ‘இங்க எதுக்கு நிக்கறா?!’ என்று நினைத்தபடி, காரை நிறுத்தியவன், அவள் இறங்கி கிளினிக்கின் உள்ளே சென்றதும், அவளைத் தொடர்ந்து உள்ளே சென்றான்.
“வாம்மா நிலா.. எப்படி இருக்க?!” என்ற அந்த லேடி டாக்டர், அவள் பின்னோடு வந்த ரஞ்சனைப் பார்த்து, “இவர்தான் உன் ஹஸ்பண்டா… ஏதேனும் விஷேஷமா?!” என்றார் புன்னகையுடன்.
ஆட்டோவில் ஏறிய பின் ஏதேதோ யோசனையில் மூழ்கியவள், டாக்டர் ரஞ்சுவைப் பற்றிக் கேட்டதும்தான் அவனை கவனித்தாள்.
‘பாலோ பண்றியா?!’ என்று திரும்பி அவனை ஒரு முறை முறைத்தவள், “ம் டாக்டர்!” என்றாள்.
“டாக்டர்… காலையிலயிருந்தே இவ ரொம்ப சோர்வா தெரியிறா.. இதுல தலை சுத்தல், வாந்தி வேற..! பிரேக்னன்சி சிம்ப்டம்ஸ் மாதிரி தெரியுது!” என்று அவன் சொல்ல,
“என்னம்மா நிலா டேட்ஸ் தள்ளிப் போயிருக்கா?!” என்றார் அந்த டாக்டர்.
“ம் டாக்டர்!” என்று நிலா பதிலளிக்க,
“சரி பிரேக்னன்ஸி டெஸ்ட் எடுத்துடுவோம்!” என்றவர், டெஸ்ட் முடிந்தபின் நல்ல முடிவையே சொல்ல, ரஞ்சனின் முகம் மலர்ந்தது.
ஆனால் நிலாவின் முகத்தில் அவன் அளவிற்கு சந்தோஷம் தென்படவில்லை என்பதை உணர்ந்த மருத்துவர்,
“என்ன நிலா எனி ப்ராப்ளம்?!” என்றார்.
error: Content is protected !!