Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennadi Maayaavi Nee

Ennadi Maayavi 20

மாயாவி 20 :::

 

தவறுவது தவறு செய்வது இயல்பு!

ஆனால் தெரிந்தே தவறு செய்வது இயலாமை!



Advertisement

தவறியதை திருத்திக் கொள்ள….

இயலாத எந்தன் இயலாமையை.. 

எனக்கு சுட்டிக் காட்டுகிறாயே!

Advertisement

என்னடி மாயாவி நீ!

Advertisement

 

நாட்கள் வேகமாக உருண்டோட அமுதன் அங்கு வந்து மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. தன் சம்பாத்தியத்தில் தனக்கு தேவையானதை எடுத்து கொண்டு வீட்டிற்கு அனுப்பி கொண்டிருந்தான். 

 

Advertisement

தந்தையின் மருத்துவ செலவுக்கும் சாப்பாட்டிற்குமே அது சரியாக போக வாங்கிய கடன்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் கவியிடம் ஆலோசனை கேட்டான்.

 

“உங்களுக்கு இருக்க மொத்த கடனையும் நான் அடைக்கிறேன்… எப்ப திரும்ப தர முடியுமோ அப்ப கொடுங்க…” என்று கவி சொல்ல அவன் மறுத்து விட்டான்.

 

அமுதன் மறுப்பையும் அவன் தேவையையும் அவன் மனைவியிடம் சொல்ல அவள் வேறு ஒரு யோசனை சொன்னாள். கவிக்கும் அதுவே சரியென்றுபட,

 

“அமுதன்! நான் உங்களுக்கு இருக்க கடனை அடைக்க மொத்தமா பணம் தர்றேன்… நீங்க அதை சும்மா வாங்கிக்க வேணாம்… அதுக்கு பதிலா உங்க வீட்டின் மேல பத்திரம் எழுதி கொடுங்க… எப்ப நீங்க முழு பணத்தையும் தர்றீங்களோ அப்ப அந்த பத்திரத்தை முறிச்சுக்கலாம்…” என்று சொன்னான். 

 

அமுதனுக்கும் அதுவே சரியென்று பட அவன் சம்மதித்த ஒரு வாரத்திலேயே பணம் கிடைத்ததும் ஒரு வழியாக அனைத்து கடனையும் அடைத்தவன் கவிக்கு திரும்ப கொடுக்க தன் சம்பாத்தியத்தில் இருந்து சேகரிக்க ஆரம்பித்தான்.

 

தற்போது ஓரளவிற்கு வேலையை கற்று கொண்டாலும் சில இடங்களில் தடுமாறிக் கொண்டும் இருந்தான். சரஸ்வதியும் அவனின் நிலை புரிந்து அவனுக்கு கற்றுக் கொடுக்க அவனும் தயக்கம் பார்க்காமல் கற்றான்.

 

அலுவக விஷயம் பேச அங்கு  மீட்டிங் ரூமில் எல்லோரும் கூடியிருக்க, 

 

“நம்ம இப்ப வரைக்கும் தனியார் ப்ராஜெக்ட் மட்டும் தான் பண்ணிக்கிட்டு இருக்கோம்… இப்ப முத முறையா கவர்ன்மெண்ட் ப்ரொஜெக்ட்ல இறங்கலாம்னு இருக்கோம்… அதுக்கு உங்க எல்லோரோட ஒத்துழைப்பும் இல்லாம சாத்தியம் இல்ல…”

 

“காரு நீயும் சரசும் இப்போதைக்கு டீம் கிட்ட பேசி அதற்கான பிளான்ல இறங்குங்க நான் மத்த வேலைகளை பார்த்துக்கறேன்…” என்று கவி சொல்லவும், அதற்கான வேலையில் இறங்கினார்கள்.

 

இரண்டு நாள் கழித்து தன்னறையில் எரிமலையின் சீற்றத்தில் சீறிக் கொண்டிருந்திருந்தாள் கார்குழலி, அந்த அறையில் சரஸ்வதியும் அமுதன் மட்டுமே நின்றிருந்தினர்.

 

“உங்களுக்கு இங்க வேலை செய்ய விருப்பம் இல்லைன்னா தாராளமா இங்கிருந்து போயிடுங்க… இந்த வேலையை கூட ஒழுங்கா உங்களால செய்ய முடியலையா? புது ப்ரொஜெக்ட்க்கு சாம்பிள் டிசைன் கேட்டு மூணு நாளாச்சு…” 

 

“மூணு நாளுக்கு அப்புறம் நானா கேட்ட பிறகு எடுத்துட்டு வர்றீங்க… அது கூட பரவால்ல அந்த டிசைன்ல அத்தனை தப்பிருக்கு…. அதை ஒரு முறை கூட சரி பார்க்காம அப்படியே எடுத்துட்டு வந்து தர்றீங்க…” என்றபடி அதை தன் மேசையில் தூக்கிப்போட்டாள்.

 

அவளின் கோபத்தை பார்த்தவாறே உள்ளே நுழைந்த கவி, 

 

“ஹே காரு விடு ! நமக்கு இன்னும் நேரமிருக்கு அதுக்குள்ள ரெடி பண்ணலாம்… இதுக்கு ஏன் இவ்வளவு கோபம்…” என்றவனை முறைத்தவள்,

 

“ஒரு முறை தவற விடலாம் எல்லா முறையும் அப்படியே இருக்க கூடாது… ஏற்கனவே ஒரு ப்ராஜெக்ட் போனது பத்தாதா… நீ சும்மா எல்லாருக்கும் சப்போர்ட் பண்ணாத…”

“இல்ல இவங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன்னா நான் இனி இங்க வேலை செய்யல…” என்றவள் அழுத்தமாக அமுதனை பார்த்தவாறே வெளியேற,

 

“தப்பு என்பேர்ல தான்… நான் தான் டிசைன் பண்ணேன்… கரெக்ஷன்ஸ் பார்க்க வேண்டி இருந்துச்சு ஆனால் பிளானை உடனே கேட்கவும் அப்படியே கொண்டு வந்துட்டேன்… சாரி!” என்றவன் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் கிளம்பி விட்டான்.

 

அவர்கள் இருவரின் செயலையும் பார்த்து அதிர்ந்து நின்ற கவியை பார்த்த சரஸ்வதி,

 

“சாரி! நானும் சரியா பார்க்கல… வேற ஒரு வேலையில பிசியா இருந்ததால கவனிக்கல… அவரும் அப்படியே கொண்டு வந்துட்டாரு…” என்றவளை முறைத்தவன்,

 

“நானே அவங்க இரண்டு பேருக்கும் நடுவுல இருக்க பிரச்னையை சரி பண்ணி எப்படியாவது அவங்களை சேர்த்து வைக்கணும்னு நினைச்சா நீ இப்படி பண்ணிட்டு இருக்க… உன்னால தான் இப்படி எல்லாம்…”

 

“நீ பார்த்திருந்தா பிளான் அவ கிட்ட வந்திருக்காதுல… ச்சே எங்க இருந்து தான் வந்து சேர்றாங்களோ…” என்று அவளை திட்டி தீர்த்து வெளியேற, அவனிடம் இருந்து இப்படி ஒரு கடுமையை எதிர்பார்க்காத அவளோ அவன் வார்த்தையில் கலங்கி நின்றாள்.

இந்த நிலையை எப்படி சரி செய்வது என்று கவியும் சரஸ்வதியும் ஆளுக்கு ஒரு மூலையில் யோசித்துக் கொண்டிருக்க, மாலை எல்லோரும் கிளம்பும் நேரமும் வந்தது.

கவி இருவரையும் அழைக்க இருவரும் வரவில்லை என்றனர். குழலி பேசியதற்கு எங்கே அமுதன் கோபித்துக் கொள்வானோ என்று பார்க்க அவனின் அமைதி கவிக்கு நிம்மதி கொடுத்தது… 

 

ஆனாலும் அமுதனிடம் அவன் தயங்கி நிற்க, “வீட்டுக்கு போங்க கவி, போன முறை போல நான் எங்கேயும் போயிட மாட்டேன்… நைட் வீட்டுக்கு வந்துடுவேன்…” என்று சிறு சிரிப்போடு சொல்லவும் அசடு வழிய அவ்விடத்தை விட்டு அகன்றான்.

 

அலுவகத்தில் எல்லோரும் கிளம்பி இருக்க, ஒரு முடிவோடு எழுந்து குழலியின் அறையை நோக்கி சென்று அவள் அனுமதி கொடுத்தபின் உள்ளே நுழைந்தான்.

 

அவள் பேசிய பேச்சின் வீரியம் அறிந்து அதில் எந்த தவறும் இல்லை என்றாலும் போன முறை போல ஏதேனும் வார்த்தை தடித்து மறுபடியும் அவன் சென்றுவிடுவானா என்று உள்ளுக்குள்ளே ஒரு பயத்தை மறைத்து கொண்டு அவனை எதிர் கொண்டாள்.

 

அவன் உள்ளே நுழைந்ததிலிருந்து இருவரும் அறையை ஆராய்வது போல மறைமுகமாக ஒருத்தர் ஒருத்தரை ஆராய்ந்ததிலே நேரம் ஓட, அமுதனே அந்த அமைதியை கலைத்தான்.

 

“சாரி! தப்பு என்பேர்ல தான் நீ அவசரமா கேட்டதும் அப்படியே கொண்டு வந்து கொடுத்துட்டேன்… எனக்கு கடைசியா ஒரு வாய்ப்பு கொடு… நான் மறுபடியும் அதை சரி செய்து கொடுக்கறேன்…” என்றவனின் பொறுமையான பதிலில் அவள் திகைக்க,

 

“ஒரே ஒரு சான்ஸ்… கண்டிப்பா நேரத்துக்குள்ள சரியா முடிச்சு கொடுத்துவேன்…” என்றதும்,

 

அவளின் அமைதியை கண்டு “ப்ளீஸ் குழல்….” என்றவனின் ப்ளீசில் கரைந்தவள் சம்மதமாக தலையசைத்ததும்,

 

“தேங்க்ஸ் தேங்க்ஸ் குழல்!” என்றவனின் புன்னகை அவளுக்கு இதம் தருவதை உணர்ந்தவள் அவனின் ஆனால் என்ற இழுப்பில் அவனை கேள்வியாக பார்த்தாள்.

 

“எனக்கு இதுல இன்னும் பிளானிங் அப்புறம் சைட்ல எப்படி எல்லாத்தையும் ஹாண்டில் பண்றதுன்னு எல்லாம் நீ கூட இருந்து சொல்லி தர்றியா… சரஸ் சொல்லி தர்றாங்க தான் ஆனால் சில சமயம் அவங்ககிட்ட சந்தேகம் கேட்க எனக்கு தயக்கமா இருக்கு… அதனால….” என்றவனை பார்த்தவளின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது.  

அவளின் முகபாவனை புரியாமல் மறுபடியும் “ப்ளீஸ் குழல்…”  என்றவனை பார்த்து,

 

“உங்களுக்கு இதுலன்னு இல்லை எதுவானாலும் நான் கூட இருந்து பண்றேன்… ஆனால் இனிமேல் என்கிட்ட இந்த மாதிரி ப்ளீஸ் சொல்லாதீங்க… ப்ளீஸ்” என்றவளின் குரல் அவளுக்கே கேட்காத அளவிற்கு கரகரத்தது.

அவளின் அந்த குரல் அவனை ஏதோ செய்ய, “சரி சரி ! இனி நான் சொல்லல… நேரமாகுது கிளம்பலாமா?”  என்று அவன் அழைத்ததும் கிளம்பியவளை அவளின் இடத்தில் இறக்கி விட்டு அவன் இருப்பிடம்  சென்றான்.

மறுநாள் அமுதனை அவனிடத்தில் காணாமல் அதிர்ந்த கவி, சரஸ்வதியிடம் கேட்க,

 

“எனக்குத் தெரியாது… காலையில இருந்து நான் பார்க்கல…” என்றவளின் பதிலில் கடுப்பானான்.

 

“உனக்கு என்ன தான் தெரியும்… நீ எதையும் ஒழுங்கா செய்யறது இல்லை…” என்றவனுக்கு எந்த பதிலும் அளிக்காமல் தன் வேலையை பார்த்தவளைப் பார்த்து மேலும் எரிச்சலாகி, “ச்சே நம்மையே இப்படி எல்லாம் டென்ஷன் பண்ணறாங்க…” என்று புலம்பியவாறே, குழலியின் அறையை திறந்தவன் அதிர்ந்தான்.

 

அமுதன் அவளிடம் கேட்ட மறுநாளே அலுவகத்தில் அவனுக்கென்று தனியாக நேரம் ஒதுக்கி அவனுக்கு அனைத்தையும் கற்றுக் கொடுக்க அவன் சிரமேற்று கற்றுக் கொண்டிருந்தான்.  

 

அறை கதவு திறந்த ஓசையில் கவனம் கலைந்த இருவரும் நிமிர்ந்து பார்க்க அங்கிருந்த கவியை கண்டதும்,

 

“என்னடா கவி?” என்று குழலி இயல்பாக கேட்டாள்.

 

“அமுதன் ! உங்களை காணோம்னு நான் ஆபீஸ் முழுக்க தேடிட்டு இருக்கேன்… நீங்க இருக்கீங்க…” என்றான்.

 

“ஏன் கவி எனக்கு ஒரு போன் பண்ணி இருக்கலாமே?” என்றதும் தான் அதை அவன் யோசிக்கவில்லை என்று உரைத்தது.

“அச்சோ ! எனக்கு அது தோணவே இல்லை… உங்களை காணோம்னு தெரிஞ்சதும் மத்தது யோசிக்கல… நீங்க இங்க இருப்பீங்கன்னும் எதிர்பார்க்கல…” என்றவனை பார்த்து,

 

“நான் தான் எங்கும் போக மாட்டேன்னு சொன்னேனே… நீங்க என்னை நம்பலையா?” என்று சோர்வாக அமுதன் கேட்க,

 

“சாரி அமுதன்…. ரியலி சாரி!” என்றான்.

 

“பரவால்ல கவி… எனக்கு பிளான்ல கொஞ்சம் சந்தேகம் இருந்தது அதான் குழல் கிட்ட கத்துக்கிட்டு இருக்கேன்…” என்றதும் ஆச்சர்யமானான்.

 

“ஏன் உங்களுக்கு வேற டீச்சர் கிடைக்கலையா? ஏன்னா இவ தலையில கொட்டி கொட்டி சொல்லி தர ஆளாச்சே…” என்று கேலி செய்ய,

 

குழலியோ, “அதெல்லாம் உன்னை மாதிரி மக்கு பசங்களுக்கு… இவர் ஒன்னும் அப்படி இல்லை…” என்று சொன்னதும், இருவருமே அவளை பார்த்தனர்.

 

“அப்படியே என் தலையில கொட்டி சொல்லி தந்தாலும் கத்துக்க நான் தயார் தான்….” என்று அமுதன் சொன்னதும்,

 

“ஆஹான்! தல பத்திரம் அமுதன்…” என்றவன், “நீங்க நடத்துங்க நான் எதுக்கு நடுவுல கரடி மாதிரி…” என்று சிரிப்போடு வெளியேறினான்.

இருவருக்குள்ளும் திடீரென ஒரு சங்கடம்… இத்தனை நேரம் இருவரின் பேச்சுவார்த்தையில் ஒரு வார்த்தை கூட வேலையை தாண்டி விழவில்லை…

 

அப்படி இருக்க இப்போது கவி வந்து அப்படி பேசி சென்றதும் இதற்கு முன் ஒருவருக்கு மற்றவர் மீதிருந்த தயக்கம் கோபம் எல்லாம் எங்கோ மறைந்து நெருக்கம் ஆரம்பித்திருப்பதை உணர்ந்ததாலே அவர்களிடையே அந்த சங்கடம்…   

 

ஊரிலிருந்து திரும்பி மறுபடியும் இங்கு வேலைக்கு வந்த பின் அமுதனின் பேச்சு, அமைதி, கனிவு, வேலையில் காட்டும் ஆர்வம் என இந்த மாற்றம் எல்லாம் எதனால் என்ற கேள்வி அவ்வப்போது குழிலிக்குள் வந்தாலும் அதற்கான விடையை அறிந்து கொள்ள அவள் ஆர்வம் காட்டவில்லை… அந்த விடை தனக்கு எதிராக இருக்குமோ என்ற ஒரு அச்சம் அவளுக்குள்…   

 

கணவன் மனைவியாக மட்டுமல்ல இதுவரை நட்பாக கூட அவர்களுக்குள் பேச்சு இல்லை… ஆனால் ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு அவர்களுக்குள் இருப்பதை இருவருமே தடுக்கவில்லை…   

 

என்னவோ மனம் தன்னாலே அவனுடனான பந்தத்தை ஏற்க ஆரம்பித்திருந்தது… இத்தனை நாள் தனிமையில் வாசம் இருந்தவளின் மனம் தனக்கான துணையாக அவனை நாடியதோ… 

நாளையைப் பற்றி யோசிக்காமல் இன்று இந்த நொடி அவர்களிடையே இருக்கும் தருணங்களையே தன் வாழ்க்கையின் பொக்கிஷங்களாக சேகரித்து கொண்டிருப்பவளுக்கு இந்த தருணங்களையே அவள் வாழ்க்கையாக கணவன் அவன் மொத்தமாக திருப்பி கொடுப்பானா? பார்க்கலாம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!