Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennaval

Ennaval 18

என்னவள்_18

 

மோகன் வந்து பேசி விட்டு சென்று முழுதாக ஒரு வாரம் முடிந்து இருந்தது. செல்வியிடம் எந்த மாற்றமும் இல்லை இன்னமும் மோகனை நினைத்தபடி அழுது கொண்டே இருந்தாள். அவளால் இதை ஏற்றுக்கொள்ள முடிய வில்லை…ஒரு வாரம் முடிந்து இருக்க பொன்னி செல்வியிடம் வந்து “செல்வி எழுந்திரு இன்னும் எத்தனை நாள் இப்படியே அழுதிட்டு இருக்க போற..எழுந்து வா இன்றைக்கு என்னோட தோட்டத்திற்கு வர்ற..இனி உன்னை அழுது பார்க்க கூடாது.  முன்னாடியே சொல்லி இருக்கிறேன் மோகன் என்னதான் உன் மேல ஆசை பட்டாலும் அவனோட அப்பா பேச்சை மீற மாட்டான் அந்த அளவுக்கு அவனுக்கு தைரியம் கிடையாது.  அங்கே கூரை சேலை வாங்கவும், கல்யாணத்துக்கு மண்டபம் பார்க்கவும்ன்னு வேலையை ஆரம்பிச்சாச்சு நீ இதையெல்லாம் மனதில் வச்சிக்கிட்டு இயல்புக்கு வரப்பாரு புரியுதா… இப்போது என் கூட புறப்படு ஒரு வாரம் ஆச்சு நானும் எங்கேயும் போகாமல் இங்கேயே இருக்கிறேன்  எத்தனை நாள் அடுத்தவங்க பொருப்பில் வேலையை விட முடியும் இன்றைக்கு தோட்டத்திற்கு போய் ஆகணும் என்னவர் உனக்கும் சேர்த்து சாப்பாடு கட்டறேன் சாயங்காலமா வந்தா போதும் எழுந்து புறப்படு”..

 



Advertisement

பேசியபடியே சமையல் அறைக்குள் சென்றவர் திரும்பி வந்து…”அப்புறம் சொல்ல மறந்துவிட்டேன் ரெண்டு நாளைக்கு முனானாடி உன்னோட ஜாதகத்தை புரோக்கர் கிட்ட கொடுத்து இருக்கறேன் நல்ல இடமாக  பார்க்க சொல்லி… கவர்மெண்டுல வேலை செய்யற மாப்பிள்ளை…மோகனை விடவும் அழகான மாப்பிள்ளையா…”

 

“அம்மா ஏன்மா நீயும் என்னோட உயிரை எடுக்கிற எனக்கு கல்யாணமும் வேண்டாம் எதுவும் வேண்டாம்  இப்போதைக்கு என்னை இப்படியே விட்டுடு..அழுதபடியே கூறினாள்.”

Advertisement

 

Advertisement

“எப்படி காலத்துக்கும் இப்படியே இருக்க போறியா…என்னுடைய அண்ணனை பற்றி உனக்கு தெரியலை அத்தனை தூரம் சவால் விட்ட என் பையன் எப்படி இருக்கிறான்…உன்னோட பொண்ணுக்கு நீ இன்னும் வரனே  பார்க்கலைன்னு கேவலமாக வந்து பேசிட்டு போவான் அதுக்கு நான் இடம்தர மாட்டேன்.  நீயும் அவங்கள  மீறி மோகன் வந்து உன்னை கல்யாணம் பண்ணுவான்னு மனக்கோட்டை கட்டாத…அவனுக்கு அத்தனை தைரியம் கிடையாது.  ஒரு தடவை இவன் முன்னாடி அவனோட அம்மாவை ,அப்பா அடிச்சா போதும் மறுபேச்சு பேசாமல் அடங்கிடுவான். அவனோட குணம் தெரிஞ்சு

தான் அண்ணன் தைரியமாக அந்த வரனை பேசிக்கொண்டு முடிச்சி இருக்கறாங்க…கிளம்பு…எல்லா நேரமும் உன் கிட்ட பொறுமையா பேச மாட்டேன். 

சொன்னவர் அத்தோடு நிருத்த வில்லை இவரையும் இழுத்து கொண்டு தோட்டத்தில் வேலை பார்க்க புறப்பட்டு சென்றார். “

Advertisement

 

அங்கே அன்று தேங்காய் பறிக்க ஆட்கள் வந்து இருக்க  வேகமாக நேரம் நகர்ந்து கொண்டு இருந்தது.  தோட்டத்திற்கு வந்ததுமே செல்வியின் மனநிலை கொஞ்சம் மாறி இருந்தது. ஒரு வாரமாக நினைத்து நினைத்து அழுததாலோ என்னவோ முகம் லேசாக வீங்கியது போல ரத்தம் முழுவதும் சுண்டி வெளுத்து போய் காணப்பட்டாள்.கொஞ்சம் உட்புறமாக தள்ளி இவர்களது தோட்டத்தில் தக்காளி,கத்தரிக்காய் இம்முறை பயிர் செய்து இருந்தனர். அங்கே மெதுவாக நடந்து பார்த்து வர நகர்ந்து இருந்தாள். 

 

பூக்களும் பிஞ்சுகளுமாக கொத்து கொத்தாய் காய்த்து இருக்க…வேடிக்கை பார்த்தவளை பொன்னி அழைத்து இருந்தார். செல்வி இங்கே வா தேங்காய் லோடு எத்தறாங்க இங்கே வந்து எண்ணிக்கை சரியா இருக்கான்னு பக்கத்தில் இருந்து கவனி என இவளை எதை பற்றியும் யோசிக்க முடியாமல் அவளுக்கு ஏதாவது வேலையை கொடுத்து கொண்டே இருந்தார். 

 

[the_ad id=”6605″]

 

 

 

மதியம் அருகில் அமர்ந்து உணவு உண்ண வைத்து மறுபடியும் வேலையை பார்க்க என ஒரு மாதிரியாக அவளின் பழைய மனநிலையை மாற்றி இருந்தார். நான்கு மணி ஆரம்பிக்கும் போது தோட்ட வேலைக்கு வந்தவர்கள் ஒவ்வொருவராக புறப்பட்டு சென்றனர். தினக்கூலி அடிப்படையில் வேலைக்கு வர…அதற்கும் சம்பளம் தர இவளையே ஏவினார். 

 

வரிசையாக வந்து வாங்கியவர் இவளிடம் நலம் விசாரித்தபடி ஒவ்வொருவராக புறப்பட்டனர். கடைசியாக வந்தவர் “செல்விமா…இந்த வாரம் கத்தரிக்காய், தக்காளி செடிக்கு மருந்து அடிக்கணும் அம்மா கிட்ட சொல்லி இருந்தேன் பூச்சி மருந்து வாங்கிட்டு வரச் சொல்லி இருந்தாங்க வாங்கிட்டு வந்து இருக்கிறேன் இந்தாங்க அதோட  ஃபில்…பூச்சிமருந்து தோட்டத்தில் நம்ம பம்பு செட் ரூம்பில் இருக்கு என கூறியபடி கொடுத்து விட்டு நகர்ந்தார்.”

 

சொன்னதிற்கு சரி என்பது போல தலையாட்டியவள் சற்று நேரம் அமைதியாக அமர்ந்து இருந்தாள் தூரத்தில் தாயாரை பார்க்க அங்கே அவர் யாருடனோ பேசிக்கொண்டு இருக்க… ஒரு முடிவுக்கு வந்தவள் வேகமாக எழுந்து மோட்டர் ரூம்பை நோக்கி சென்றாள். சற்று உள்புறமாக இருந்தது அந்த மோட்டார் அறை அங்கே சென்று திரும்பி பார்க்க இவளை கவனிக்கவோ,இவளை பார்க்கவோ அங்கே யாருமே இல்லை வேகமாக மோட்டார் அறையை திறந்தவள் தேட இவள் தேடிய மருந்து ஒரு பையில் கட்டி வைத்து இருந்தது. 

 

 வேகமாக பையை அவிழ்த்தவள் உள்ளே பார்க்க எட்டு சிறிய அலுமினிய பாட்டிலில் பூச்சி மருந்து இருந்தது.இன்னும் மூன்று நாட்கள் கழித்துஅடிப்பதற்காக வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை கையில் எடுத்து பார்த்தவள் வேகமாக சுற்றிலும் பார்த்தபடி ஒன்றை எடுத்து தனது பிளாசா பேண்ட் பாக்கெட்டில் வைத்தவள் மறுபடியும் அதே போல அந்த பையை கட்டிடம் வைத்து விட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினாள்.

 

மறுபடியும் முதலில் அமர்ந்து இருந்த இடத்திற்கு வர…அப்போது தான் பொன்னி அந்த இடத்திற்கு வந்தார். “எல்லோருக்கும் சம்பளப்பணம் கொடுத்தாச்சா…எங்க போய் இருந்தே…”

 

“சட்டென என்ன சொல்வது என தெரியாமல் அம்மா அங்கே பம்ப் செட்…என ஆரம்பித்து பாத்ரூம்  போனேன்மா..என்ன முடிக்க…”

 

அவருக்கும் இவளுடைய எண்ணம் எதுவும் தெரியவில்லை இங்கே வந்த பிறகு முகம் கொஞ்சம் தெளிவானது போல் தோன்ற தவறாக எதுவும் நினைக்கவில்லை. ” சரி தோட்டத்தில் தண்ணீர் பார்க்கணும் போய் பார்த்துவிட்டு வரேன் நீ இங்கையே இரு…

எங்கேயும் போகாதே…இந்தா என்னபடி கையில் இருந்த கொய்யா காயை இவளிடம் தந்தவர்  உனக்கு தான் கொய்யா காய் பிடிக்குமே அதுதான் மரத்தில் இருந்து பறிசிட்டு வந்தேன் என இரண்டு கொய்யா காயை கையில் தந்து விட்டு நகர்ந்தார் பொன்னி…”

 

கையில் வாங்கியவள் திரும்பி நடக்கும் அவரை பார்த்த செல்விக்கு முனுக்கென்று கண்களில் கண்ணீர் கட்டி வழிய ஆரம்பித்தது இவ்வளவு பாசம் இருக்க தான் எடுக்க போகும் முடிவை நினைத்து அழுதவள் சற்று நேரத்தில் திரும்பி விடுவார் என நினைத்து வேகமாக கண்களை துடைத்து கொண்டாள்  கையில் தந்து இருந்த கொய்யா காயை கடித்து உண்ண ஆரம்பித்தாள்.

 

மொத்தமாக எல்லாவற்றையும் மறந்து விட வேண்டும் என முடிவு செய்தவள் அமைதியாக அமர்ந்து இருக்க… இங்கே இருவரும் வந்து இருப்பது தெரிந்து மோகன் இருவரையும் பார்க்க தோட்டத்திற்கு வந்து இருந்தான். 

 

“செல்வி என்று குரல் கொடுத்தபடி இவளிடம் வர”…அத்தனை நேரம் முடிவு செய்தது எதுவும் அவளின் கவனத்தில் இல்லை காலையில் தாயார் கூறியதோடு இப்போது இறந்து விட்டால் என்ன என முடிவு செய்தது எதுவுமே கவனத்தில் வரவில்லை மோகனின் குரல் கேட்டதும் வேகமாக அவனின் அருகில் சென்றவள் சற்றும் யோசிக்காமல் அவனை இழுத்து அணைத்திருந்தாள்.

 

“மோகன் நீ இல்லாமல் என்னால வாழ முடியாது ஏதாவது செய் மோகன் இல்லையின்னா நான் செத்துவிடுவேன் மோகன் ஏதேதோ பிதற்றியவள் அவனது இரண்டு கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்டாள் மறுபடியும் உன்னை பிரியமாட்டேன் என்பது போல அணைத்தபடியே அழ…அவளது கண்ணீர் அவனது சட்டையை நனைந்து கொண்டு இருந்தது. “

 

எல்லாமே சில நிமிடம் தான் “மோகன்…என்ற சத்தத்தோடு பொன்னி அருகில் வந்து இருந்தார் வேகமாக செல்வியை அவன் இடத்தில் இருந்து பிரித்தவர்…உனக்கு ஒரு தடவை சொன்னால் புரியாதா…இது நடக்காது…அவளை பார்க்க வராதேன்னு அன்றைக்கே சொன்னேன்ல்ல…மறுபடியும் வந்து நின்றால் என்ன அர்த்தம்..

அவ இன்னோரு வீட்டில் வாழப் போறவ…

நல்ல வேலை வந்தேன் வேற யாராவது பார்த்தா ஊரெல்லாம் சொல்லி அசிங்கபடுத்தி இருப்பாங்க…நான் உன்னை இப்படி தான் வளர்த்தேனா.. கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் இப்படி கட்டிபிடிச்சிட்டு நிற்கற…சொல்லியவர் கோபமாக அவளது முதுகில் இரண்டு அடி அடிக்க…”

 

“வேண்டாம் அத்தை அவளை அடிக்காதிங்க…மோகன் வேகமாக கூறினான்.”

 

“மோகன் அவள் இன்னும் என்னுடைய பொண்ணு தான்…செல்வி

வா வீட்டுக்குபோகலாம் அங்கே புரோக்கர்பையனோட ஜாதகம் கொண்டு வந்து இருக்கிறதா ஃபோன் பண்ணி இருக்கறாரு…என்றவள் இவனிடம் திரும்பி இனி இவளை எப்பவும் பார்க்காதே இவளுக்கு நான் நல்ல வாழ்க்கையை அமைச்சு தரணும் கிளம்பு மோகன் என்றார்.” 

 

“அத்தை நான் உங்கள் கிட்ட பேசணும் மோகன் பரிதாபமாக கேட்டான்”. அவனது  கண்களும் கலங்கி இருந்தது. 

 

“பேசினது ,கேட்டது எல்லாமே போதும் மோகன் …எல்லாத்தையும் இன்றைக்கோட முடிச்சிடு…புறப்படு மோகன்  என் பெண்ணோட ஆசை நிறைவேறாது போ…போய் உன்னோட அப்பாவோட ஆசையையாவது நிறைவேற்று…இனியும் இங்கே வந்து அவளை பார்த்து அவளோட மனசை கலைக்காதே…அழுதழுது இப்போது தான் தேறி வர்றா…என்றவர் செல்வியின் கையை பற்றி இழுத்து கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டார்.”

 

திரும்பி திரும்பி இவனை மட்டும் பார்த்தபடியே செல்வியும் கண்ணீர் வழிய அவரோடு நகர்ந்து கொண்டு இருந்தாள். தன்னுடைய கையாலாகாத தனத்தை நினைத்தபடியே வீட்டை நோக்கி புறப்பட்டான். ஒரு வாரமாக வீட்டில் சண்டை ஓயவில்லை.  இவன் வேண்டாம் என சொல்ல எதையும் கேளாமல் பத்திரிக்கை வாங்கியவர் திருமணபத்திரிக்கை அடிக்க கொடுத்துஇருந்தார்.

 

“முடியாது “என இவன் ஆவேசமாக கத்த அதை விடவும் ஆவேசமாக சமையல் அறைக்குள் போனவர் அங்கிருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து தன்தலையிலும் மனைவி தலையிலும் ஊற்றி திப்பெட்டியை இவனிடம் தூக்கி எறிந்து இருந்தார்.

 

“கொல்லி வைக்க தாண்டா பையன் வேணும் அதை இப்போதே செஞ்சிடு…நாங்கள் போன பிறகு உன் இஷ்டப்படி யாரை வேணும்னாலும் கட்டிக்கோ…என்றபடி உடை முழுக்க ஈரத்தோடு நிற்க… கையில் தந்த தீப்பெட்டியை தூக்கி எறிந்து விட்டு சென்று இருந்தான்.”

 

முகத்தில் நான்கு நாட்கள் தாடியோடு சரியாக உணவு உண்ணாமல் எங்கே போவது என தெரியாமல் இங்கே செல்வியின் தோட்டத்திற்கு வந்திருந்தான்.

 

என்ன செய்வது எங்கு போவது எதுவும் தெரியவில்லைஒன்று மட்டும் தெளிவாக தெரிந்தது சூழ்நிலை கைதி போல மாட்டிக்கொண்டு மீளமுடியாமல் தவிப்பது இப்படி தான் இருக்கும் என்பது….

கோபம் எல்லாமே சக்தியின் மேல் திரும்பி இருந்தது இப்போது இவனுக்கு….எங்க இருந்து வந்தா எனக்கு இருக்கற கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் கெடுக்க… என அவளை மனதில் திட்டிக்கொண்டு தனது வண்டியில் புறப்பட்டான்.

 

செல்வியை வேகமாக வீட்டிற்கு இழுத்து செல்ல…வாசலிலேயே இவர் வரச்சொல்லி இருந்த புரோக்கர் நின்று இருந்தார்.

 

[the_ad id=”6605″]

 

 

 

“வாங்கண்ணா…தோட்டத்தில் கொஞ்சம் வேலை அதுதான் நீங்க வரும் போது இங்கே இருக்க முடியலை” என்றபடி கதவை திறந்து விட்டவர்…”செல்வி ஃகாபி வை” என செல்வியுடம் சொன்னவர் அமருவதற்கு சேரை எடுத்து போட்டு விட்டு தண்ணீர் எடுத்து வர சமையல் அறைக்குள் சென்றார். அவளது பின்னாலேயே வந்த செல்வியிடம் “ஃகாபி வை அதுக்கு முன்னாடி முகத்தை கழுகிட்டு ரெண்டு பேருக்கும் எடுத்துட்டு வா என ஹாலை நோக்கி நகர்ந்து சென்றார். “

 

“அண்ணா இந்தாங்க தண்ணீர் குடிங்க…மாப்பிள்ளை ஜாதகம் ஏதாவது வந்து இருக்கிறதா…”

 

“ஆமாம் மா அருமையான ஜாதகம் ஒன்று வந்து இருக்கு….நீங்கள் கேட்ட மாதிரியே…பையனுக்கு பேங்க்ல உத்தியோகம்…பேனேஐரா இருக்கறாப்பிடி…சம்பளம் எழுபதாயிரம்…அம்மா அப்பா சென்னையில் இருக்கறாங்க பையனுக்கு கோயம்புத்தூர் பிரான்ஜில் வேலை பையனும் பார்க்க ஜம்முன்னு இருக்கிறான் செல்வி பொண்ணுக்கு பொருத்தமாக இருப்பான். பிக்கல்,பிடுங்கல் எதுவும் கிடையாது. மாப்பிள்ளை மட்டும் தான் தனியாக இருக்கறாங்க…என்ன சொல்லறிங்க…”

 

“சரிங்கண்ணா இதையே முடிச்சிடுங்க…நல்ல நாள் பார்த்து வந்து பார்த்துவிட்டு போக சொல்லுங்க மேற்கொண்டு பேசிக்கலாம்…”

 

“இந்தாங்க பையனோட ஃபோட்டோ என்ன இவர் கொடுக்கும் போது செல்வி ஃகாபியோடு வந்தாள். நன்றி மா என வாங்கிக்கொண்டவர் ஃகாபி குடிக்கவும் புறப்பட்டார். “

 

“பொன்னி அவரது கையில் ஐநூறு ரூபாய் கொடுத்து விட்டவர் கல்யாணம் முடிவு ஆச்சுதுன்னா நீங்க கேட்கற கமிஷன் தரேன் எந்த பிரச்சினையும் இல்லாத நல்ல இடமாக இருக்கணும் என்று செல்வி நல்ல படியாக வாழணும்.”

 

“நிச்சயமா…நல்லது மட்டும் தான் நடக்கும் “என்றபடி புறப்பட்டார். 

 

[the_ad id=”6605″]

 

 

 

இரவு உணவு ஊண்ண மோகன் அமர்ந்து இருக்க…அவனது தந்தை  தியாகு வேகமாக வந்தவர்…”அரசி சாப்பாடு போடு…இப்பதான் நிம்மதியாக இருக்கு…செல்விக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சு…இன்னும் ரெண்ரொரு நாளில் பார்க்க வரப்போறாங்கலாம் இனியாவது இவனை ஒழுங்கா அடங்கிட்டு இருக்க சொல்லு”, என சொல்லி விட்டு அமர…சாப்பிட அமர்ந்தவன் எதுவும் சாப்பிடாமல் எழுந்து தன்னுடைய அறைக்கு நகர்ந்தான்.

 

அதே நேரம் அங்கே சக்திக்கு ஃபோன் வந்து இருந்தது திவ்யாவிடம் இருந்து…”ஹாய் சக்தி நல்லா இருக்கிறாயா…சாப்பிட்டாச்சா அப்பா என்ன செய்யறாங்க…அம்மா என்ன செய்யறாங்க என விசாரித்தவள்…”

 

“அக்கா இங்கே எல்லோரும் நல்லா இருக்கிறோம் நாம தினமும் பேசறோம் தெரியுமா ஓவ்வொரு தடவையும் இதே கேள்வியை கேட்பியா…”

 

அப்படியே பழகிடுச்சு…பக்கத்தில் மாமா இருக்கறாங்க…பேசறையா…மாமாகிட்ட ஃபோன் தர்றேன் என்றவள் அருகில் அமர்ந்து இருந்த சிவாவிடம் ஃபோனை கொடுத்து இருந்தாள்.”

 

ஃபோன் கை மாறவும் “சொல்லுங்க மாமா…அபிக்குட்டி என்ன பண்ணறா…”நீங்கள் எப்படி இருக்கறிங்க…அக்கா கிட்ட தினமும் பேசறேன். அதனால நல்லா இருப்பா தெரியும்…அத்தை,மாமா எப்படி இருக்கறாங்க…”

 

“கையில் தான் இருக்கறா சக்தி நாங்க எல்லோரும் நல்லா இருக்கிறோம். அம்மா அப்பா ரெண்டு பேரும் உன்னை கேட்டாங்க…கல்யாணத்திற்கு முன்னாடி ரெண்டு நாள் இங்கே வந்து தங்கணும்மாம் இது அவங்களோட ஆசை…மாமா கிட்ட சொல்லறேன் வந்திட்டு போ…அப்புறம் நீ சொன்ன  இல்லையா. .. மாப்பிள்ளையை பற்றி விசாரிக்க…அங்கே போய் விசாரித்தேன் எதுவும் தப்பா தெரியவில்லை எல்லோரும் நல்ல விதமாகதான் சொல்லறாங்க…என்ன சின்ன வயதில் இருந்து அந்த பையனோட அத்தை பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும்ன்னு பேசி இருக்கறாங்க…இப்போது அந்த ரெண்டு குடும்பத்திற்கும் பேச்சு வார்த்தை இல்லை போல இருக்கு அதனால் இங்கே பார்த்து இருக்கறாங்க…சோ பயப்பட எதுவும் இல்லை.  அதனால இந்த சக்தி பொண்ணு கண்டதை பற்றியும்  யோசிக்காமல் சந்தோஷமாக கனவு காணலாம்”, என கிண்டலாக கூற…

 

“போங்கமாமா “,என்று சிரித்தபடி ஃபோனை கட் செய்தாள் சக்தி. 

 

தொடரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!