Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennavalin Innisai

Ennavalin Innisai 12 1

அத்தியாயம் 12

நரகம் எப்படி இருக்கும்

என்று உணர்ந்தேன் உன்னைக்

காணாத வேளைகளில்!!!



Advertisement

“அவங்க எல்லாம் இந்த மன்த் இங்க ஜாயின் பண்ண போறாங்க. நம்ம பிரகாஷ் டீம் பிரிச்சிட்டார். எட்டு டீம் லீடர் இருக்கீங்க? ஆளுக்கு மூணு பேர்ன்னு பிரிச்சிக்கோங்க”, என்றார்.

Advertisement

“ஓகே சார்”

Advertisement

“அவங்களுக்கு எப்படி ட்ரைனிங் கொடுக்கணுமோ அது படி கொடுத்து அடுத்த புராஜேக்ட்ல இன்வால்வ் பண்ணப் பாருங்க”

Advertisement

“ஓகே சார்”, என்று சொன்னதும் “ஓகே உங்க வொர்க் பாருங்க”, என்று சொல்லி விட்டுச் சென்றார்.

அடுத்த நாளே அவனது டீமில் வரப் போகும் மூன்று பேரின் லிஸ்ட் அவன் டேபிளுக்கு வந்தது.

அதை எடுத்துப் பார்த்தவன் அதிர்ந்து தான் போனான். ரகு, விக்னேஷ், ஸ்ருதி என்று போட்டிருந்தது.

“அவ தானா? அவளே தானா? இங்கயே, அதுவும் எனக்கு கீழேயே வேலைக்கு வரப் போறாளா?”, என்று திகைப்பாய் இருந்தது.

அவன் லிஸ்டேயே பார்த்துக் கொண்டிருக்க அங்கு வந்த பிரகாஷ் “என்ன டா அந்த பேப்பரையே பார்த்துட்டு இருக்க?”, என்று கேட்டான்.

“இந்த லிஸ்ட் போட்டது நீ தானா பிரகாஷ்?”

“அஃப்கோர்ஸ்”

“எதுக்காக இந்த பொண்ணை என் டீமில் போட்ட?”

“அவளை உனக்கு தெரியுமா டா?”

“சே சே, தெரியாது. மூணு பேரையும் பசங்களா பாத்து போட்டுருக்கலாம்ல? அதை தான் கேக்க வந்தேன்”

“அது இல்லை டா, ஒரு டீம்கு ஒரு பொண்ணு, ரெண்டு பசங்கன்னு போட்டேன்”, என்று அவன் சொல்ல அதற்கு மேல் அதைப் பத்தி பேசினால் சந்தேகம் வரும் என்பதால் விட்டுவிட்டான்.

அனைவரும் அங்கு ஜாயின் பண்ண வேண்டிய நாளும் வந்தது. ஸ்ருதி காலையில் இருந்தே பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தாள். அவனைப் பார்க்க வேண்டும் என்று ஒரு மனமும் அவ்வளவு பெரிய கம்பெனியில் அவனைப் பார்க்க முடியுமா என்று கேள்வியும் அவள் மனதில் ஒருங்கே எழுந்தது. நவீன் தான் அவளை கம்பெனி வாசலில் விட்டுவிட்டுச் சென்றான்.

பயத்துடன் உள்ளே வந்தாள். அவளுடன் படித்த மாணவர்கள் அங்கே இருக்க அவர்களுடன் சென்று அமர்ந்து கொண்டாள். வைஷ்ணவியும் அங்கே இருந்தாள். அதற்கு பிறகு டீம் பிரிக்கப் பட்டது.

வைஷ்ணவி பிரகாஷ் டீமுக்குச் செல்ல ரகு மற்றும் விக்கியுடன் அமர்ந்திருந்தாள் ஸ்ருதி. அவர்கள் வந்ததை அறிந்த ராகவன் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

அவன் அழைத்ததும் ஸ்ருதி, ரகு, விக்கி மூவரும் அவனது அறைக்குள் வந்தார்கள். அவன் கண்கள் ஒரு நொடிக்கு மேல் ஸ்ருதியிடம் நிலைத்தது. கல்லூரியில் பார்த்ததை விட இப்போது வேறு மாதிரி இருந்தாள் .

கொஞ்சம் உடல் இளைத்து ஒல்லியாக, உயரமாக இன்னும் நிறம் கூடி இருந்தாள். முகம் சிறிது இளைத்ததால் அவளது கண்கள் இன்னும் பெரிதாக தெரிந்தது.

பிங்க் கலரில் சுடிதார் போட்டிருந்தாள். “இந்த அரை லூசு என்ன ஒவ்வொரு வருஷமும் அழகா ஆயிட்டே போகுது?”, என்று எண்ணியவன் “ஹலோ, அயம் ராகவன். உங்களை எல்லாம் இங்க பாத்ததுல ரொம்ப சந்தோஷம்”, என்று சொல்லி அவர்களை அமர வைத்தான்.

அதற்கு பின்னர் அந்த கம்பெனி பற்றி பேசியவன் மறந்தும் அவள் புறம் திரும்பவே இல்லை. அவளுக்கு அது வசதியாக தான் இருந்தது. “நீ பாக்கலைன்னா என்ன? நான் பாத்துட்டே இருப்பேன்”, என்று எண்ணி அவனைக் கண்ணால் கண்டு மனதுக்குள் நிரப்பிக் கொண்டிருந்தாள்.

அவளிடம் இருந்து எந்த அரவமும் இல்லாததால் பேசிய படியே லேசாக அவள் புறம் திரும்பினான் ராகவன். அவன் திரும்பியதும் அவளது கண்ணிமைகள் கவிழ்ந்து பட்டாம் பூச்சி போல படபடத்தது.

“ஆரம்பிச்சிட்டாளா?”, என்று எண்ணியவன் மறுபடி அவள் புறம் திரும்பவே இல்லை.

“ஓகே கைஸ், எல்லாரும் வெளியே போங்க. சிஸ்டம் அட்மின் ராம் இருப்பார். அவர் உங்களுக்கு சீட்டிங்க் அலாட் பண்ணுவார். சிஸ்டம் ஆன் பண்ணினீங்கன்னா அதுல சில பி.டி.எப் இருக்கும். அதைப் படிங்க. நாளைக்கு மீட்டிங்ல என்ன பண்ணலாம்னு பேசுவோம்”, என்று ராகவன் சொன்னதும் மூவரும் எழுந்து கொண்டார்கள்.

ரகு மற்றும் விக்கி இருவரும் வெளியே செல்ல உள்ளேயே தேங்கி நின்றாள் ஸ்ருதி.

“வாட்?”, என்றான் ராகவன்.

“எப்படி இருக்கீங்க?”

“ஹலோ, தேவையில்லாதது பேசாம உங்க சீட்டுக்கு போங்க”, என்று அவன் எரிந்து விழ முகத்தை தொங்க போட்டு விட்டு வெளியே வந்தாள்.

அறையை விட்டு செல்லும் முன் அவள் வீசிச் சென்ற சோகப் பார்வையே அவன் மனதில் மையம் கொண்டது. அதில் இருந்து வெளியே வந்து வேலையில் கவனம் செலுத்துவதற்குள் திணறிப் போனான்.

அதற்கு அடுத்த நாள் ஒரு பெண்ணுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். அவள் பெயர் ஸ்வேதா. அவளும் ஒரு டீம் லீடர் தான். அவளுக்கு ராகவன் மேல் ஒரு கண் உண்டு.

அதனால் அவள் அவனிடம் வழிந்த படி பேசிக் கொண்டிருக்க அவள் மனது புரியாத ராகவனோ வேலையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தான். ஆனால் அந்த பெண்ணின் நோக்கம் ஸ்ருதிக்கு புரிந்தது. தன்னவனை இன்னொரு பெண் பார்ப்பதா என்ற கோபம் எழ அவர்களை நெருங்கினாள்.

ராகவன் அவளை நிமிர்ந்து பார்க்க “என்னை மறந்துட்டீங்களா?”, என்று கேட்டாள் ஸ்ருதி.

அவன் திட்டினாலும் பரவாயில்லை, அவர்கள் பேச்சைத் தடுக்க வேண்டும் என்பது தான் அவளது நோக்கம்.

அவள் நினைத்தது போல அவன் ஸ்வேதாவை மறந்து ஸ்ருதியை திட்ட ஆரம்பித்து விட்டான். “ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்க ஸ்ருதி. எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு. திருப்பி திருப்பி வந்து எதுக்கு பேசிட்டு இருக்க? போ இங்க இருந்து”, என்று அவன் கோபத்துடன் கத்த அவன் கோபத்தில் ஸ்வேதா மிரண்டு போனாள்.

“நாம அப்புறம் பேசலாம்”, என்று சொல்லிச் சென்றாள் ஸ்வேதா. அவள் போனதும் நிம்மதியாக இருந்தது ஸ்ருதிக்கு.

“உன்னைத் தான் சொல்றேன். போ இங்க இருந்து. என் கண்ணுலே முழிக்காத. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”, என்று ராகவன் சொல்ல கண்களில் கண்ணீருடன் அவனையே ஒரு நிமிடம் பார்த்துக் கொண்டிருந்தாள். பின் “சாரி சார்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாள்.

அவள் சொன்ன ‘சார்’ என்ற வார்த்தை அவனை அதிகம் பாதித்தது. அதிகமாக பேசி விட்டோமோ என்று எண்ணியவனுக்கு அந்த நாள் இனிய நாளாக இல்லை. அடுத்த நாள் அவனைப் பார்த்தும் பார்க்காதது போல சென்றாள் ஸ்ருதி.

வியப்பாக அவளைப் பார்த்தான் ராகவன். ஆனால் ஒளிந்திருந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதை அவன் அறிய வில்லை. அவளுடைய காந்த பார்வை இல்லாமல் அந்த அலுவலகமே அழகிழந்து போனது போல இருந்தது.

அடுத்த நாள் மீட்டிங்கில் “குட் மார்னிங் சார்”, என்று சொன்னவளை வெறித்துப் பார்த்தான் ராகவன். அந்த ஒற்றை வார்த்தையிலே அவள் அவனை தள்ளி வைத்து விட்டது புரிந்தது.

அவன் அறிந்து ஸ்ருதி அப்படிக் கிடையாது. அவனைக் கண்டதும் அவள் முகத்தில் ஒரு வெளிச்சம் வரும். அவள் முகம் முழுவதும் சந்தோசத்தில் மலர்ந்து போகும். அவன் அவளைத் திரும்பிப் பார்த்து விட்டால் அவன் காதல் பார்வை பார்த்தது போல அவள் முகம் சிவந்து விடும். ஆனால் இப்போதோ அவள் முகத்தில் எந்த உணர்வும் இல்லை. இயல்பாக அவனை நேருக்கு நேர் பார்த்தாள்.

எங்கேயோ தெரிந்தவரைப் பார்க்கும் போது ஒரு ஹலோ சொல்வது போல சொன்னவளை வியந்து தான் பார்த்தான். அது அவனுடைய பேச்சால் விளைந்த மாற்றம் என்று அவனுக்கு புரிந்தது.

அவனைப் பார்த்து விட்டு வந்த ஸ்ருதி ஓய்ந்து போனவளாக தன்னுடைய சீட்டில் வந்து அமர்ந்தாள். நேற்று முழுவதும் அவனைப் பார்க்க கூடாது, அவனிடம் பேசக் கூடாது என்று யோசித்து யோசித்து அவள் எடுத்த உறுதி எல்லாம் அவனைக் கண்டதும் தூள் தூளாக ஆனது போல ஒரு உணர்வு எழுந்தது.

அவன் முன்பு அவளுடைய மனதை, உணர்வுகளை மறைத்து விட்டு வந்ததை நினைத்து இயலாமையில் அழுகை வந்தது. கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் கன்னத்தில் பட்டு அவள் கைகளில் தெறித்து விழுந்தாலும் அவள் அதை உணரவே இல்லை.

அழக் கூடாது என்று நினைத்தாலும் அவளால் முடிய வில்லை. ராகவனின் நினைவு அவளைச் சுற்றி சுற்றி வந்தது.

அவனை மறக்க வேண்டும் என்ற உறுதி எடுத்தாலும் அதை தன்னால் செயல் படுத்த முடியவில்லையே என்று அவளுக்கு அவளை நினைத்தே வெறுப்பாக வந்தது.

அவளால் காதலிக்க படுவது சந்தோஷமாக இருந்தது ராகவனுக்கு. காதலிக்கப் படுவதால் ஏற்படும் சுகம் எப்படி இருக்கும் என்று உணர்ந்தவனுக்கு அவளுடைய பாராமுகம் வலியைத் தந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!