Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இது நிலைக்குமா இல்லை நீடிக்குமா.. என் அன்பே!!"

இது நிலைக்குமா இல்லை நீடிக்குமா…என் அன்பே !!-Part 2

Part II:

 

ஒன்னும் இல்ல, அபி பசங்க சீக்கிரம் வளந்துட்டாங்க- ல அத நினைச்சா ஒரு மாற இருக்கு. சீக்கிரம் எல்லாமே மாறிடும்ல அபி?  என்றார் கேள்வியாக.

 



Advertisement

“என்ன மாறும்”-னு என்று கேட்டார் அபிராமி.

 

இல்ல, பரி அடுத்தவாரம் Bangalore கிளம்பணும். என் கண்ணு முன்னாடியே அப்பானுச் சுத்திட்டு இருந்த புள்ள, இந்தக் கார்த்தி-க்கு இப்போ தா, சைக்கிள் ஓட்டக் கத்துக்குடுத்த மாற இருந்துச்சு, ஆனா அவன் அன்னிக்கு என்ன சொன்னான் தெரியும் அஹ அபி? 

Advertisement

 

Advertisement

நீங்க ஏன்பா அவ்ளோ தூரம் கார் டிரைவ் பண்றீங்க, நா டிரைவ் பண்ற நீங்க ரிலாக்ஸ்- அஹ வாங்கனுச்  சொல்லறான்.கேக்கும் பொது என் ரெண்டுப் பசங்களும் பொறுப்பா வளர்ந்து இருக்காங்கன்னுப்  பெறுமையா இருக்கு. 

 

ஆனாலும் சீக்கரம் வளர்ந்துட்டாங்களோன்னும், தோணுதுடி அபி என்றார் மஹேந்திரன்.

Advertisement

 

அபிராமித் தன் கணவரை, அமைதியாகச் சில நொடிகள் பார்த்தார். பின்பு இங்க பாருங்க ; கார்த்திப்பா, வாழ்கை யாருக்காகவும் நிக்காம ஓடிட்டே இருக்கும், நம்ம நெனச்சாக் கூட, ஒரே நொடில அத நிறுத்திவெக்கவும் முடியாது, பின்னோக்கிச் செல்லவும்முடியாது.

 

அதனால, அது போறப் போக்குலத் தன்மையா வாழப் பழகிக்கணும். இப்போ என்ன, நம்மப் பசங்க வளர்ந்துட்டாங்க; நம்ம மட்டுமே சார்ந்து இருக்கமா, அவங்க வாழப்போறாங்க; அவங்களைச் சார்ந்து வரபோற உறவுகளுடன் அவங்கப் பயணம் இருக்கும் அவ்வளவுதான் என்றார்.

 

புரியுது அபி. இருந்தாலும் ஒரு மாற இருக்கு, அதை எப்படிச் சொல்றதுன்னு தெரில என்றார் மஹேந்திரன்.

 

உங்க மனசில இருக்கறது எனக்குப் புரியுதுக் கார்த்திப்பா; இவ்ளோ நாள், அவங்களை மட்டுமே யோசிச்சு, நம்ம வாழ்க்கை இருந்துச்சு.நம்ம அவங்கள முதன்மைப்படுத்தித் தான் எல்லா விஷயத்திலும் முடிவு எடுப்போம், அவங்களுக்கான முடிவும்.

 

எல்லா வளர்ச்சியிலும் முன்னாடி நின்னுச் சேர்ந்துப் பயணம் பண்ணுண்ணோம் , இனி அவங்க வாழ்க்கைப்பயணத்துல, அவங்கப் பின்னாடி நின்னுப் பாப்போம்.

 

 அவங்க முடிவுகளை அவங்களையே எடுக்கவிடணும்; எடுக்கற முடிவுதப்புனா அப்போ சொல்லுவோம், தேவைப்படும் பொது அவங்களுக்குத் தோள்குடுப்போம் என்று கூறினார் அபிராமி.

 

ஹ்ம்ம் !!பெரிய மாற்றம் தா:

 

ஆனா, ஒரே மாரி இருந்தா நல்லாயிருக்காது; காலம் தரும் மாற்றம் இது, இதுவும் நல்லதாதான் இருக்கும் என்று கூறிப் புன்னகைத்தார் அபிராமி.

 

ஹ்ம்ம் நீ சொல்றதும் சரிதா அபி, என்றார் மஹேந்திரன். சரி; நீங்களும் போய்க் குளிச்சுட்டு வந்துருங்க, கோவிலுக்குப் போகணும்ல என்றார் அபிராமி.

 

அதற்குப்பிறகும், யோசனையுடன் கையைக் கட்டிநின்று கொண்டுயிருந்த கணவரைப் பார்த்து,

எப்பா ஏய் மஹேந்திரா !! உங்க புள்ளைகளுக்கு “கல்யாண வயசு தா வந்துருச்சுடி” என்று சொல்வதற்குக் கூட 3,4 வருஷம் ஆகும். so, போய்க் குளிப்பா என்று நக்கலடித்தார் அபி.

 

அதைக் கேட்ட மஹேந்திரன், புன்னகையுடன் சரியான வாயாடி அபி -நீ என்று, அவர் மனைவியின் தலையைத் தொட்டு ஆட்டிவிட்டுக் குளிக்கச்சென்றார்.

 

இங்கே காதம்பரி-யின் அறையில், குளித்து முடித்து blow dry பண்ணிகொண்டு, அதற்கு அவளே கமெண்ட்ரியும் கொடுத்துக்கொண்டு இருந்தாள். ஒகே! முடிகாயவெச்சாச்சு. Next “Let’s do GRWM” என்றாள்.

 

இப்போ எங்கப் போறோம் ? பரியின் wardrobe-க்கு. இப்போ எங்கப் போறோம் ? பரியின் wardrobe-க்கு என்று Dora போலப் பேசிவிட்டு, பின்பு அவளே புஜ்ஜியைப் போல் “அது எங்க இருக்கு”?. மறுபடியும் Dora mode-க்குச் சென்று, “உங்குளுக்குத் தெரியுதா wardrobe எங்க” என்று கேட்டாள்.

 

பின்புக் குரலை மாற்றி, “உன் தலைக்குப் பின்னாடி” என்றாள். பின்பு “ஒஹ்!, பாத்திங்களா அது என் தலைக்குப் பின்னாலத் தா இருக்கு, வாங்கப் போவோம்” என்றாள் பரி.

தன் அலமாரியின், கதவைத் திறந்து “என்ன என்ன ஐட்டம்களோ; என்னோட wardrobe-லே, அதைத் திறந்துப் பார்த்தால் தெரிந்துவிடும்ம்ம்!” என்று வடிவேல் மாடுலேஷனில் பாடிக்கொண்டு ;அவளது அலமாரியை நோட்டம் இட்டாள் பரி.

 இன்னிக்கு என்ன டிரஸ் போடலாம் மிஸ் காதம்பரி, உங்களுக்கு ஆனா options

Option A) “தாவணிப் போட்ட தீபாவளி” 

Option B)”Saree ke fall sa”

Option c)” சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே”

 

என்று ஒவ்வொரு options-கும் பாடினாள்.  பின்பு எது? என்று யோசித்து, “Option சி” என்று கேள்வியும் நானே, பதிலும் நானே என்பது போல் பேசிக்கொண்டு இருந்தாள்.

 

அடுத்தக் கேள்விக்கான தருணம், “ரெடி ஆஹ் இருக்கீங்களா?” பறி என்று கேட்டாள். பின்பு அவளே Option-எ: காஜல், option-பி: சாம், option-சி: திரிஷா என்று கேட்டாள், Option-எ: காஜல் என்று கூறிக்கொண்டு, ஓர் அழகான பிங்க் நிற அனார்கலிச் சுடிதார்-யை எடுத்துக் கொண்டு அதைமாற்றச் சென்றாள்.

 

என்னடா!! காஜல், சாம் என்று ஏதோதோ பேசுகிறாள் என்று நினைத்து; அவள் அலமாரியைப் பார்த்தால், அதில் நிறைய டிரஸ், படத்தில் வரும் கதாநாயகிகளின் உடையை ஒத்தது போல் இருந்தன.

 

அவள் பிங்க் நிற அனார்கலி-க்கு ஏற்ப, பிரெஞ்சு braid போட்டுக் கொண்டாள்; கையில் ஒரு வாட்ச், காதில் ஒரு பெரிய ரிங் போன்று வெள்ளைகல்பதித்த காதணி உடன் தனது “Get Ready with me”-யை  முடித்துவிட்டுத் தன்னைச்  சரிபார்த்துக்கொண்டாள். 

 

அம்மா நா, அம்மா தா!! அப்படியே அந்தக் காஜல் dress-மாறத் தேச்சு இருக்காங்க என்றாள்.கடைசியாகக் கண்ணாடியில், தன்னைப் பார்த்து “அழகி டி” என்று கூறிக்கொண்டு தனது அரை விட்டு வெளியே சென்றாள். 

 

டைனிங் டேபிளில் நால்வரும் அமர்ந்து உண்ணத்தொடங்கினர். மஹேந்திரனும், அபியும் உறவினர் ஒருவர் திருமணத்திற்கு எவ்வளவு மொய் வைக்க வேண்டும், என்பதைப் பற்றி ஆலோசித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்தக் கார்த்தியோ; கவனத்தைத் தங்கையின் புறம் திருப்பினான்.

 

பரி, தனது மொபைலில் ஏதோ விடியோவைப் பார்த்துக்கொண்டு இருப்பதைக் கண்டவன், அவளது தட்டில் உள்ள தக்காளிக் குழம்பில் தன் அருகே இருந்த சின்ன உப்பு ஜாடியிலிருந்து, ஒரு சிறியளவு உப்பைப் போட்டு அதைக் கலக்கிவிட்டான்.

 

இதைக் கவனிக்காத காதம்பரியோ, அடுத்தப் பணியாரத்தைப் பிட்டு உப்பைப் போட்டப் பகுதியில் இருந்த குழம்பைத் தொட்டுச் சாப்பிட்டாள், சிறியதாக முகம் சுளித்துத் தனது மொபைலிலிருந்து பார்வையை எடுத்துக் கார்த்தி, உப்பைப்போடாத இடத்திலிருந்து தன்விரலால் சிறிது குழம்பையெடுத்து ருசிப்பார்த்தாள், நல்லாத்தான் இருக்கு என்று தன் தலையை அசைத்தவாரே கூறிக்கொண்டாள்.

 

இதைக் கவனித்த கார்த்தி, தனது சிரிப்பைக் கட்டுப்படுத்த படாதபடுப்பட்டான். ஏதாவுதுக் கூறுவாள் என்று எண்ணியவனோ, மறுபடியும் அவள் கவனம் அந்த விடீயோவின் பக்கம் போகவும் கடுப்பாகினான்.

 

மறுபடியும் சிறுது உப்பை எடுத்துப் பரி அவள் பணியாரத்தைச் சாப்பிடும்பொழுது போடாப்போனான், சரியாக அப்பொழுது அவள் பார்த்துக்கொண்டு இருந்த series-ன் எபிசொட் முடிந்ததால், அவள் தட்டின் புறம் பார்வையைச் செலுத்திய பரியின் கண்களுக்கு இதுப்பட்டது.

 

டேய்!! எரும, எதுக்குடா உப்பைப் போடற என்று உப்பைப் போடவந்த கார்த்தியின் கையை அடித்தாள்.

 

 மா!! பாருமா. குழம்பு ஏற்கனவே உப்புக்கரிக்குது, இந்த எரும வேற அதுல எக்ஸ்ட்ரா உப்பைப்போடறான். உடனே மஹேந்திரனோ இல்லையே பாப்பா தக்காளிக் குழம்பு, எப்பவும் போலச் சூப்பர் ஆஹ் இருக்கே என்றார்.

 

பரி பதில் பேச இடம் கொடுக்காமல், கார்த்தியோ, பாருமா உன் சமையலை வாயில வெக்க முடியலன்னு சொல்றா என்று கூறி தங்கையைப் பார்த்து நக்கலாய்ச் சிரித்தான்.

 

பரியோ இல்லாம டேஸ்ட் எப்பவும் போலச் சூப்பர் தா ஆனா அங்கங்க உப்பாயிருக்கு என்றாள். அபிராமி எதுவும் பேசாமல் இருப்பதைப் பார்த்த மஹேந்திரன், இத சாப்பிட்டுப்பாரு பாப்பா என்று ஒருவாய் ஊட்டிவிட்டார். இது எப்படி இருக்கு? என்று கேட்டார்.

 

அதற்குப் பரி ஒகே பா, ஆனா என்னுது உப்பாயிருக்கு என்றாள் சோகமாக. அதற்கு மஹேந்திரன் ஒருவேளை plate- ல உப்பு இருந்து, நீப்பாக்களையோ என்னமோ பாப்பா வேற plate எடுத்துட்டுவந்து அதுல போட்டுக்கிறியா என்றார்.

 

பரி பதில் சொல்லுமுன், அபிராமி நீங்க வீட்ல இருக்க எந்தத் தட்டில் போட்டாலும் பரிக்கு உப்பாத்தான்  இருக்கும் என்றார். என்ன அபி? சொல்றயென்று கேட்டார்ப் பரியன் தந்தை. அதற்கு அபி, என்ன கார்த்தி அப்பா கேக்கறாங்க, பதில் சொல்லு “டியர் சன்” என்றார்.

 

ஈஈ என்று அசடு வழிந்தப்படியே, பாத்துட்டீங்களா ராஜமாதா என்றான் கார்த்தி.

 

பரி உடனே அப்பா பாத்திங்களா, இவந்தான் அந்தக் கல்ப்ரிட் என்றாள். அம்மா “You too Brutus”என்றாள். என்ன “யூ  டூ புரூட்டஸ், யூ த்ரீ புரூட்டஸ்” அவன் ரெண்டு தடவை உப்பபோட்டான், அதுகூடக் கவனிக்காம போன்ல முழி இருக்க.

 

எத்தனை தடவை சாப்பிடறப்ப போன் ஆஹ் பாக்காதன்னு, சொன்னனே கேட்டியா என்று கேட்டார் அபிராமி. இனியாவது தட்டுல என்ன இருக்குனுப் பாத்துச் சாப்பிடு என்றார்.

 

 ஹ்ம்ம் என்றாள் பரி. நால்வரும் சாப்பிட்டு முடித்தவுடன் கார்த்தியும், பரியும் டைனிங் டேபிளில் உள்ள காலியானப் பாத்திரங்களைக் கிட்சேன் சிங்கிள் போட்டு விட்டு லிவிங் ரூமில் உள்ள 3 சீட்டெர் சோபாவில் வந்து அமர்ந்தனர்.

 

அப்பொழுதுப் பரி பார்த்துக் கொண்டு இருந்த விடியோவை, பார்த்த கார்த்தி இது யாருடி, புதுசா பாக்க கொரியாக்காரன் மாறியும் இல்லச் சீனா, ஜப்பான் மாறியும் இல்ல என்று வினவினான். “Hey, It’s a Turkish series Dolunay… man”  என்றாள். 

 

என்ன நாய்? என்றான் ரகமாய். 

 

நாய் இல்ல Man, Dolunay என்றாள் பரி.

 

ஓ!! அப்போ ஒன்லித் துர்கிஷ் தா, நோ கொரியா என்றான்.

 

நோ இப்போ ப்ரெசென்ட் கிருஷ் இந்த ஆக்டர் கேன் யாமன். எவ்ளோ அழகா இருக்கான்ல? என்றாள் பரி.

 

எனக்கொன்னும் அப்டித் தோணலையே என்றான் கார்த்தி. என்ன தோணல? உன் கண்ணத்தெறந்து “லுக் அட் ஹிம்” என்றாள்.

 

அதற்குக் கார்த்தி, தன் ஒற்றைப்புருவத்தை உயர்த்தி seriously பரி என்றான். பரி உடனே “Oh my poor brother, I understand.You’re jealous of him” இவ்ளோ, அழகாயிருந்தாப் பொறாமை வரத்தானே செய்யும். ஆண்களே பார்த்துப் பொறாமைப்படும் பேரழகன் ஆச்சே என்றாள். 

 

அதற்கு, கார்த்திக் பார்த்திங்களப்பா உங்க பாப்பா என்னப் பண்ரான்னு என்றான். தான் இவ்வளவு நேரம் பேசியதை; தன் தந்தை கேட்டதை உணர்ந்தப் பரி, அசடுவழிந்தவரே சும்மா பேசிட்டு இருந்தோம்ப்பா என்றாள்.

 

இதைக் கேட்ட அபிராமியும் வழியுதுடிப் பரி, தொடச்சுக்கோ என்றார்.

 

தனது அம்மா அப்பாவும் சிரிப்பதைப் பார்த்தக் கார்த்தியோ, அப்பா என்னப்பாச் சிரிக்குறிங்க? சிரிக்கக்கூடாதுப்ப., அன்னைக்கு இப்படித்தான் work முடிஞ்சு வீட்டுக்கு வரேன், நான் வந்தது கூடத்தெரியாம எதோ korean actor-யை, பாத்திட்டுப் பசங்க கூட “White Statue” மாற இருப்பாங்கன்னு இப்போதாண்டிப் பாக்கிறேன் மலருங்க்ரா.நல்லா நாலுச்சாத்து சாத்துங்க என்றான்.

 

இவர்கள் சண்டையைப் பொறுப்படுத்தாமல், அபிராமிச் சரி, வாங்கக் கோவிலுக்குக் கிளம்பலாம் என்றார். அதற்குப் பரி இரும்மா மலர் ஒண்ணும்வரலக் கால் பண்ண எடுக்கமாட்டீங்கறா என்றாள்.

 

அதற்கு மஹேந்திரன், மலர் வரல. இப்போத்தா வாசு கால் பண்ணான் என்றார். ஏன்னுச் சொன்னாரப்பா என்றாள். உன்னுயிர் தோழியில்ல ஏதோ Korean series வீடிய வீடியப் பார்த்துட்டு, இப்போ தூங்கிட்டு இருக்கலாமா என்றார் கார்த்திச் சிரித்துக்கொண்டே. 

 

சரியான Korean Series பைத்தியங்கள் என்றுசொல்லியவாரே காரை எடுக்க வெளியேச்சென்றான் கார்த்தி. 

 

அபிராமி வீட்டின் கதவை, பூட்டிக்கொண்டு காரில் சென்று அமர்ந்தார் பரியுடன்.

 

“பாட்டாப் போடுடா” கார்த்தி என்றாள் பரி. okayங்க, பைத்தியம் என்று நக்கலடித்தான்.

 

ப்பா!! பாருங்கப்பா என்று சீனுங்கினாள். சிரித்துக்கொண்டே மஹேந்திரன் அவன் பேசறமாறத்தான், நீயும் மலர்த் தங்கமும் பண்றீங்க என்றார். ஏங்க? என்றார் அபிராமி.

 

வாசு இன்னிக்கு ஒரே புலம்பல் அபிமா. நைட் I மணிக்கு, மலர் ரூம்-ல லைட் எரியுதுன்னு போய்ப்பார்த்து இருக்கான். மலர் அழுதுட்டே ஏதோ பாத்துட்டு, இருந்து இருப்பா போல. என்னாச்சு மலர்ன்னுக் கேட்டா? ஒண்ணுமில்லப்பா ட்ராமாப் பாத்துட்டுஇருக்கன்னுச் சொன்னாளாம். அதுக்கு ஏன் அழுகுறேன்னு கேட்டா ட்ராமா பேரே “Queen of Tears” எப்படி அழுகாம இருக்கிறதுன்னு கேக்கராளாமா?

 

கடுப்பாகி வெளிய வந்துட்டேன் அப்டின்னா. மீனா கூடச் சீரியல் பாக்குறதில்லை அப்டிங்கிறான் என்றார் மஹேந்திரன். 

 

இவ்வாறு கதைப் பேசியவாரே அக்குடும்பம் கோவைத் தண்டு மாரியம்மன் கோவிலை நோக்கிச்சென்றது.

 

மஹேந்திரன் அபிராமி குடும்பம், கோவை மாநகரில் உள்ள நல்லாம்பாளையம் பகுதியில் வசிக்கின்றனர். அவர்களுக்கு நாம் பார்த்ததுப்போல் கார்த்திகேயன், காதம்பரி என்று இருமக்கள். கார்த்திகேயன் புகழ்பெற்ற மருத்துவமனையில் ஹாஸ்பிடல் அட்மின்ஸ்டட்டோராக உள்ளான். காதம்பரி தனது B.E (CSE) டிகிரியை GCT-ல் இவ்வருடம் முடித்தாள். அத்துடன் பெங்களூரில் உள்ள ஒரு MNC- ல் வேலை கிடைத்து உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் அவ்வேலையில் சேர வேண்டும்.

 

மஹேந்திரன் ஒரு தனியார் கம்பெனி-இல் வேலைசெய்துவிட்டு, உடல்நிலை காரணமாக VRS, வாங்கிவிட்டார்.  தற்பொழுது, தனது தோட்டத்தில் வாழை, கரும்பு என்று விளைவித்து அதை ஆர்கானிக் கடையொன்றுக்கு விற்பனை செய்துவருகிறார். 

 

மஹேந்திரனின் தோழர்; ஸ்ரீனிவாசன் (எ) வாசு, அவரது மனைவி மீனாக்க்ஷி. இவரது மகள் தான் மலர்விழி (எ) மலர் பிகாம் (Accounts & Finance), PSG-இல் படித்துவிட்டு கார்த்திகேயன் வேலை செய்யும், அதே ஹாஸ்பிடலில் வேலை செய்கிறாள் ஒருவருடமாக. வாசு காந்திபுரம் மற்றும் பீளமேடு- ல் காம்ப்லெஸ் கட்டி அதை வாடகைக்கு விட்டு இருக்கிறார்.

 

அபிராமியும், மீனாக்ஷியும் தம்மகள்களுக்கு பிடித்தமான உடைகளைத் தைத்துத் தருவார்கள் அபிராமி தைப்பதும், மீனாக்க்ஷி aari ஒர்க் மற்றும் embroidery-யும் செய்வர். இதற்குத் தனி fans உண்டு, மகள்களின் தோழிகள் மற்றும் அவர்களது பெற்றோர், அக்கம்பக்கத்தினர் அவர்களுக்கும் இருவரும் தைத்துத்தருவார்கள்.

 

மஹேந்திரன் வாசுவும் பார்ப்பதறகு இருதுருவங்கள் போல்யிருந்தாலும், அவர்களது நட்பு இந்நாளும் இணைபிரியாமல் உள்ளன. அதைப் பார்ப்பவர்களுக்கு ஆச்சர்யம் தான் ஏனென்றால், வாசுவோ “எவன் பாத்தாலும் வெட்டுவேன் என்னும் ரீதியில் இருக்கும் (Rugged Boy)”, மஹேந்திரனோ “நம்ம வேலையை மட்டும் நாம் பார்ப்போம்” என்னும் குணம் உள்ளவர்.

 

தம்மைப் போல் மகள்களும் 11-ம் வகுப்பிலிருந்து வேற கிளாஸ், காலேஜ் என்றாலும் இன்றளவும் ஒற்றுமையாக இருப்பது அவ்விருத்தந்தைக்களும் அளவில்லா மகிழ்ச்சி.

 

இங்கே கோவிலிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன்,  தன் அன்னையிடம் கூறிக்கொண்டு பக்கத்துக்குத் தெருவில் இருக்கும் தன் தோழி மலர் வீட்டுக்குச் செல்ல ஆயுதமானாள் பரி. மலரின் வீட்டிற்க்கு சென்று, அவ்வீட்டின் கதவைத் தட்டினாள், “அடியே மலருப்புள்ள கதைவதோராடி” என்று ராகம் இழுத்தாள் பரி.

 

சிறுது நேரம் நேரம்கழித்து  கதவைத் திறந்த மலர், புன்னகை முகமாய் வாடி “என் செல்லக்குட்டி” என்றாள். குட்டி, கிட்டயெல்லா இருக்கட்டும். காலைல கோவிலுக்கும் வரல, வீட்டுக்கு வாடின்னு மெசேஜ் பண்ணா அதுக்கு, ஓகேன அனா ஆளாக்காணோம்.

 

இப்போ வந்து செல்லக்குட்டி, பன்னிகுட்டின்னுட்டு இருக்க என்று பொரிந்தாள். “பொங்காத ஆத்தா”, இப்பத்தான் சாப்பிட்டு முடிச்சு ரெடியாகலாம்ன்னு போன, நீ வந்துட்டா என்றாள் மலர்.

 

அப்பொழுது மீனாக்க்ஷி, பரிக்காக முலாம்பழம் ஜூஸ் எடுத்துக்கொண்டு வந்து தந்தார். என்ன பரி, packing-ல முடிஞ்சுதா? என்று கேட்டார். ஹ்ம்ம் பண்ணிட்டேங்க அத்தை என்றாள்.

 

மலர் மெல்லமாகப் பரியின் காதில், நா வேலைக்குப் போகும்போது பண்ண அட்வைஸ் எல்லாம் repeat mode ஆகும் இப்போ, அதுக்குள்ள நான்போய் ரெடியாகிட்டு வந்துடுறேன் என்றாள்.

 

சரி மா, நீங்கப் பேசிட்டு இருங்க நாகிளம்பிட்டு வரேன் என்று கூறிக்கொண்டு தனது அறைக்குச் சென்றாள். பின்பு மீனாக்க்ஷி பரியிடம், இங்கப்பாரு பரிக்குட்டி புது ஊருக்குப் போற எல்லாமே புதுசு. பாஷை புதுசு, இடம் புதுசு, சோ எந்த விஷயம் பண்ணாலும் ஒரு தடவைக்கு, ரெண்டு தரவ யோசுச்சு பண்ணு.

 

பலத்தரப்பட்ட மனுஷங்களா பாப்ப, ஒவ்வொருத்தரும் வேற வேற குணாதிசியங்களோட இருப்பாங்க, நீ தா ஒருத்தர நம்பருக்கு முன்னாடி நல்ல யோசிச்சுமுடிவு பண்ணனும் சரியா பரிக்குட்டி என்றார். உனக்கு எப்பவுமே சப்போர்ட் ஆஹ் நாங்க எல்லாரும் இருப்போம். நீ அங்க நல்லபடியா வேலையும் பாத்துட்டு, நல்ல என்ஜோய் பண்ணு என்றார் மீனாக்க்ஷி.

 

நான் பாத்து பத்திரமா இருந்துகிறேன் அத்தை என்றாள் பரி புன்னகைமுகமாய்.சரி மா நாங்க கிளம்பறோம், கொஞ்சநேரம் இருந்துட்டு வரேன் என்று மலர் அன்னையிடம் கூறினா.ள் ஹ்ம்ம் சரிஎன்றார் மீனாக்க்ஷி. சரிங்க அத்தை, நானும் போய்ட்டுவரேன் என்றாள் காதம்பரி. சரி பரி பாத்துப் பத்திரமா இரு என்றார் மீனாக்க்ஷி.

 

இருதோழிகளும், பரியின் வீட்டை நோக்கிச் சென்றனர். இருவரும் வீட்டிற்குள் வந்ததைப் பார்த்த கார்த்தியோ ஒஹ்!!  இணைப்பிரியா தோழிகளின் தரிசணம் காண “அடியேன், என்ன தவம் செய்தேனோ” என்றவனை தோழிகள் இருவரும் ஒருவிதஎரிச்சலோடு பார்த்தனர்.

 

அதைக் கண்டுகொள்ளாத, கார்த்தி என்ன உங்கப்பாட்டு சத்தம் கேக்கல இன்னிக்கு; “மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு” என்று பாடியவன், இருவரையும் பார்த்து, ஆமா இதுல யாரு தேவயானி, ரம்பா?

 

சரி அது எதுக்கு, நீங்களாவது ஒரே விஜய நினைச்சு பாடதிங்க என்று நக்கலடித்தான். அவனைப் பார்த்து முறைத்துவிட்டு இருவரும் பரியின் அறைக்குச்சென்றனர்.

 

மலர் பரியின் பெட்டில் அமர்ந்தபடி; ஏண்டி பரி? உங்க அண்ணனுக்கு ஏழுகழுதை வயசுயாச்சே, ஒன்னும் நம்மளாப் பாத்தா இப்டி ஒரே டயலாக்க சொல்லிட்டே இருக்கானே, எப்பதான் அவன் நம்மள கலாய்ச்சு காமெடி பண்ணல cringe பண்ரான்னு ரியலைஸ் பண்ணுவான் என்று கேட்டாள். 

 

அதைக் கேட்ட பரியோ, அது கஷ்டம் டீ மலரு நம்ம எப்போ அவன் பேசறதுக்கு ரியாக்ட் பண்ணலையோ, அப்போவே புரிஞ்சு இருந்து இருக்கனும். அனா இன்னும் விடாம மொக்க போடறான் பாரேன்.

 

எனக்கே சில தடவை டவுட் வருது இவன் எப்படி MBA-ல கோல்ட் மெடல் வாங்குனான்னு என்றாள். அதற்கு மலர் உங்கண்ணனுக்கு நம்ம ரெண்டு பேர இரிட்டேட் பண்ணணும் நினைக்கும், போதுதான் அறிவு வேலைசெய்யாது இல்லையா 5 வயசு குழந்தை மாற வேலைசெய்யும் என்றாள் கடுப்பாய்.

 

அதைக் கேட்டுச் சிரித்த பரி, என்ன இன்னிக்கு ஓவர் கடுப்பா இருக்க அவன்மேல என்று வினவினாள் பரி. பின்ன என்னடி, என்னோட லீட் அவன் பிரெண்ட் தான அவர்ட்ட போய்,

டேய்! சிவா, உன் டீம்ல எல்லாரும் வேலை செய்றங்களா இல்ல series பாக்கறாங்களாண்ணு, அப்போப்போ செக் பண்ணிக்கோன்னு சொல்லிட்டு என்ன பாத்து நக்கலாசிரிக்கிறான். எல்லாரும் டக்குனு சிருச்சுட்டாங்க தெரியுமா?

 

எங்க டீம்ல எல்லாருக்கும் தெரியும் நா series பார்ப்பேன்னு. அப்புறம் சிவா சார், டேய் சும்மா இருடா அப்டின்னதுக்கு இல்லடா மலர்ங்க அப்பா தா அவள பாத்துக்கோ, கார்த்தின்னு சொன்னாரு. அதா வேலைய, கரெக்டாஹ் பண்ணலான அவங்க அப்பாட்ட சொல்றக்கு,சொன்னா அப்புறம் ஒழுக்கமா வேலை நடக்கும்.

 

உனக்குத் தான் மச்சி ஹெல்ப் பண்ற, உன் டீம் நல்லா வேலை செஞ்சா உனக்கு பேரஃஓர்மன்ஸ்(Performance) ரேட்டிங், நல்லா கிடைக்கும்ல அந்த நல்ல எண்ணம் தா மச்சி வேற ஒன்னும் இல்ல அப்படிங்கறான்.

 

  எனக்கு வந்த ஆத்திரத்துக்கு, பேப்பர் வெயிட் எடுத்து அவன் மண்டையில போடலான்னு பாத்தேன், உன் பாசமான அண்ணன்னாச்சே அதான் பொழச்சு போனு விட்டுட்டு வழக்கம்போல, அவனுக்கு மைனா இன்ஸ்பெக்டர் வைப் ப்ளஸ் ஹாசினி இவங்க ரெண்டு பேர் கேரக்டர் சேர்ந்த பொண்ணு வைப் ஆஹ் வரட்டும்ன்னு வேண்டிட்டேன் என்றாள் மலர்.

 

எங்க அண்ணன் பாவம் என்றாள் சிரித்தபடி பரி. அப்போ, உங்க அண்ணன் வாய தேச்சுவிடு, எல்லா சரியாப்போகும் என்றாள் மலர். சிறுது நேரம் கதை அளந்துவிட்டு மலர் தன் வீட்டுக்குச் சென்றாள்.பரியும் நாளையிலிருந்து தான் எதிர்கொள்ளப்போகும் புதிய விஷயங்கள், தனக்கு நல்லதாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டு கண்ணயர்ந்தாள்.

 

அவளுடன் சந்திப்போம் பெங்களூரில்!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!