Skip to content
Post Views: 1,884
அத்தியாயம் 31
இன்றோடு இருவருக்கும் திருமணம் முடிந்து சில மாதங்கள் கடந்திருந்தது.
Advertisement
அன்று… அவனோடான திருமணப் பந்தத்தில் இணைந்து அனுதினமும் புது உலகை அனுபவித்துக் கொண்டிருந்த ஒர் அழகிய காலைப் பொழுது அது.
Advertisement
பள்ளியில் முக்கியமான மீட்டிங் இருந்ததால் அவசரம் அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள் ஆரியா. அவளுக்கு எப்பொழுதும் அவதி அவதியாக கிளம்பிய பழக்கமில்லை ஆனால் இன்று அரக்க பறக்க கிளம்பிக் கொண்டிருந்தாள் அதற்கு காரணம் அவனல்லவா…
Advertisement
திருமணம் முடிந்த இரவென்று “ஜஸ்ட் கோ வித் ஃப்லோங்க, நடக்கும் போது நடக்கட்டும். இந்த சாங்கியம் சம்பிரதாயம் மேல இந்த விஷயத்துல எனக்கு ஈடுபாடு இல்லை. உங்க காதல்ல நான் மூழ்கிட்டு, என் காதல்ல உங்களை மூழ்க வைச்சிட்டு அப்பறம் தான் உங்களுக்குள்ள மூழ்கணும்…” என்றவன் அதற்கு பின்னான நாட்கள் கூட அவளிடம் காதலை மட்டுமே யாசித்தான்.. அதே கணம் தன் காதலால் அவளை திக்கு முக்காடவும் வைத்தான்.
Advertisement
கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையில் காதல் என்ற ஒன்றை மட்டுமே காட்டிக் கொண்டிருந்தவன் நேற்றைய இரவு காதலையும் தாண்டிய புது உலகை அவளுக்குக் காட்டினான்.
“எனக்கு நீங்க வேணும்ங்க, உடம்பும், மனசும் உங்களை கேட்குது…” என்றவனின் மெல்லிய குரல் இப்பொழுதும் காதில் கேட்டது அவளுக்கு… நிலத்தில் பெருவிரலால் ஊன்றி நின்று கொண்டாள். பள்ளிக்கு செல்ல நேரம் ஆகிறது என்றாலும் நேற்றைய நாளின் நினைவுகளை அவளால் தடுக்கவே முடியவில்லை…
“என்னடி இப்படி இருக்க? கொல்றடி…”
“ஜஸ்ட் வாவ்…”
“ஆரா…ஜஸ்ட் டிவைன் டி நீ…” என்று விடாமல் கூறியதும்
“என் பேரை சொல்லிட்டே இருடி…” அவளில் மூழ்கி கொண்டே கூறியதும் நினைவில் வந்து அலைக்கழித்தது…
பொத்தென சோபாவில் அமர்ந்து கொண்டவளுக்கு முகம் முழுக்க சிவந்து தான் போனது. அருகில் அமர்ந்து சிவக்க வைக்க வேண்டும் என்று இல்லையே நினைவுகள் கூட சிவக்க வைக்கலாம் அல்லவா…
“ஆரா,தோசை செஞ்சுட்டேன் சாப்பிட்டு போங்க..” கிச்சனில் இருந்தபடியே அழைத்தான் ஏகலைவன். அவனது குரலில் தன்னிலைக்கு வந்தவள் சிவந்த முகத்தைக் காட்டிக் கொள்ளாமல்
“இல்லைப்பா ஆல்ரெடி ரொம்ப லேட் ஆயிடுச்சு…” எனக் கூறிக் கொண்டே கைப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டாள்.
“ஒரு அஞ்சு நிமிஷம் சாப்பிட்டு போகறதுக்குள்ள ஒண்ணும் லேட் ஆகாது…” என்றவன் கிச்சனிலிருந்து வெளிவந்தான்.
அவனது முகத்தைக் கூடப் பார்க்காது “நான் கிளம்பறேன்…” என்று முன்னால் நடக்க பதில் சொல்லாமல் கிச்சனுக்குள் நுழைந்தவன் டிபன் பாக்ஸில் தோசையைப் போட்டுக் கொண்டு அவளிடம் சென்றான்.
அதற்குள் வேலு வாகனத்தைக் கிளப்பிருக்க “வேலு அண்ணா ஒரு நிமிசம்…” என்றவன் அவளிடம் டிபன் பாக்ஸை நீட்டினான். அவளோ அதனை வாங்காது முறைத்தாள்.
“முறைக்காதடி மண்டமூக்கி, சாப்பிட்டே போ… ரொம்ப டயர்டா இருக்க…” என்றான் அவளது தலையில் செல்லமாக தட்டி…
அவனது “ரொம்ப டயர்டா இருக்க…” என்ற வார்த்தையில் சிவந்து விட்டது அவளது முகம்.
அவளது சிவந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே “மீட்டிங் போயிட்டு வா… இன்னைக்கு ஆபிஸ் போக வேண்டாம். இப்படியே வந்துரு…” என்றான் மெல்லிய குரலில்.
“என்ன…” என்று அதிர்ந்து பார்த்தாள்.
அவளின் பார்வையில்
“ஹேய்…” ஆர்ப்பாட்டமாக சிரித்தவன்
“நைட் சரியா தூங்கல தானே அதான் சொன்னேன்.வேற ஒன்னுமில்லை…” என்றதும் பதில் பேசாமல் சரியென்றவளுக்கு வெட்கம் வந்து தொலைத்தது.
ஆரியா தங்கிருந்த அந்த சிறிய வீட்டில் தான் தற்பொழுது இருவரும் தங்கியிருந்தனர். ‘நாலு அஞ்சு பிள்ளைகளை பெத்துக்கிட்டு பெரிய வீட்டுக்கு போவோம் டி… அப்ப தான் வீடு நிறையா ஆட்கள் இருக்கிறது போல இருக்கும். நம்ம இரண்டு பேருக்கும் இந்த வீடே ஓகே தான்..” என்று கூறியிருந்தான். அதன்படி வாரத்திற்கு ஒரு முறையோ இல்லை இரண்டு முறையோ அங்கு செல்வது வழக்கம் மற்றபடி இருவரும் இதே வீட்டில் குடியிருந்தனர்.
அவன் ஆரியின் வீட்டில் தங்கி இருப்பதற்கு கூட அலுவலகத்திலும் சரி, வெளியிலும் சரி சில பேச்சுகள் வர தான் செய்தது அதை கணவன், மனைவி இருவருமே கண்டுகொள்ளவில்லை.
ஸ்கூலில் மீட்டிங்கை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவள் சோபாவில் அமர்ந்தாள். அவள் முன் டீயை நீட்டினான் ஏகலைவன். அவனைப் பார்த்து புன்னகை பூத்தவள் தேநீரை வாங்கிக் கொண்டே “ஆபிஸ் போகலையா?…” எனக் கேட்டாள்.
“ஏன் மேடம் உங்களுக்கு மட்டும் தான் டயர்டா இருக்குமா? எங்களுக்கு எல்லாம் இருக்காதா? உங்களுக்கு இருக்கிற டயர்ட்டும், வலியும் எங்களுக்கும் இருக்கும் தெரிஞ்சுக்கோங்க….” என்றவனை முறைத்தாள்.
“தூக்கம் வருது டி… லீவ் வேணும்னு உனக்கு மெயில் பண்ணிட்டேன்… நீ தான் பார்க்கல…” என்றதும் சிரித்துக் கொண்டே சரியென்றாள்.
அன்றைய பகல் பொழுது முழுவதுமே கணவன், மனைவி இருவருக்கும் உறக்கத்திலேயே சென்றது…
இரவும், பகலும் முத்தமிட்டு கொள்ளும் அந்தி மாலை பொழுது அது… தூக்கம் கலைந்து கண் விழித்தாள் ஆரியா. கண்களுக்குள் உறங்கிக் கொண்டிருந்த ஏகலைவன் தான் விழுந்தான். மெல்லிய புன்னகை அவளிடத்தில்.
கைநீட்டி அவனது கேசத்தைக் கோதிக் கொடுத்தாள். பட்டென அவளது கையைப் பிடித்து இழுத்தவன் அவளை இறுக அணைத்து கொண்டான். அவனின் எதிர்பாரா செயலில் முதலில் அதிர்ந்தவள் பின் அவனது மார்பில் முகம் புதைத்து அழுத்தமாய் முத்தமிட்டாள்.
இதழோடு இதழ் சேர்த்து கொடுக்கும் முத்தத்தை விட மார்பில் அவள் கொடுத்த முத்தம் ஒருவித போதையைக் கொடுத்தது. அவளைத் தன்னிலிருந்து பிரித்து விட்டவன் அவளின் முகம் பார்த்தான். சும்மாவே அவள் அழகி தான் தற்பொழுது பேரழகியாய் அவன் கண்களுக்கு தெரிந்தாள்.
அவளது செவியில் நுனி மூக்கை நுழைத்துக் கொண்டே “உங்களை ரொம்ப தேடுதுங்க. தூக்கமே அண்டல, இப்பவே வேணும்னு தோணுது எடுத்துக்கவா…” எனக் கேட்டான் தாபக் குரலில்.
அவனது குரல் நுண்ணிடையாளை சிலிர்க்க வைக்க “ம்ம்..” என்றாள்.
காந்தை ‘ ம்ம்…’ என்றது தான் தாமதம் அவளது இதழ்களை தன் இதழ்களுக்குள் இழுத்துக் கொண்டான் வேகமாக.
அவனது அதிரடியில் “ம்…” என்று அவள் சிணுங்க…
அவளது சிணுங்களில் ஆசைகள் வந்து கரை மோத இன்னும் பெண்ணின் இதழ்களுக்குள் கரைந்துப் போனான் அவன்.
மெல்லினம் மேல் வல்லினம் மிகும் என்பது தமிழ் இலக்கணத்தில் மட்டுமல்ல காதல் இலக்கணத்திலும் தான்…
வலி மிகு இடங்கள், வலி மிகா இடங்கள் தமிழில் தெரிந்தாலும் அவளது கணவனுக்கு அது தெரியாது போகவே அவளது உடலில் கவிதை எழுதினான் சற்று வேகமாக.
அவன் எழுதிய கவிதையில் தவித்து, துடித்து, துவண்டுப் போனாள் பெண்ணும்…
“டிவைன் டி நீ…” அவளை அணைத்து கொண்டே கூறியவனுக்கு உணர்வுகள் இன்னும் இன்னும் பேயாட்டாம் போட்டது.
அவளின் மீது பித்து பிடித்தவனாக கூடல் முடிந்த பின்னும் கூட சாரல் சரசமாக பாவையின் கன்னத்தில் குட்டி குட்டி முத்தம் வைத்துக் கொண்டேயிருந்தான்…
நிமிடம் கடந்து தான் செந்நிற வதனம் இயல்பு நிலைக்கு திரும்பியது இருவருக்கும். அவளின் கேசத்தை செவியோரம் ஒதுக்கி விட்டவன் “சாப்பிடலாமா?…” எனக் கேட்டான். ‘இப்பவா …’ என்பதைப் போல் பார்த்தாள்.
ஆரியின் பார்வைப் புரிந்ததும் சட்டென சுவர் கடிகாரத்தைப் பார்த்தான். அதுவோ நள்ளிரவை தாண்டிக் காட்டியது. கேசத்தைக் கோதிக் கொண்டவனுக்கு வெட்கம் கூட வந்தது. அதனை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் “உங்களுக்கு பிடிச்ச குட்டி தோசையும், பூண்டு சட்னியும் செய்யுறேன். ரெப்ரஷாயிட்டு வாங்க…” என்றவன் எழ,
அவனது கையைப் பிடித்தவள் “இருங்க நானும் வரேன்…” என்றாள்.
“ம்ம்…” என்றவன் அங்கேயே நின்றான்.
போர்வையுடனே எழுந்து அமர்ந்தவள் தனது உடைகளைத் தேட அதுவோ திசைக்கொன்றாய் கிடந்தது… சட்டெனத் திரும்பி கலையை செல்லமாக முறைத்தாள். அவளது பார்வையில் அசடு வழிய உடைகளை எடுத்துக் கொடுத்தவன் கேசத்தைக் கோதிக் கொண்டே குளியலைக்குள் நுழைந்து கொள்ள ஆரியின் இதழ்கள் புன்னகையை பூசிக் கொண்டது.
****
கலையும், ஆரியும் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியிருந்தது.
அன்று பாரியூர் குண்டம் திருவிழாவிற்கு வந்திருந்தனர் இருவரும். காசியும், மேகலையும் இரண்டு நாட்களுக்கு முன்பே வந்திருக்க இவர்கள் இருவரும் நேற்று இரவு தான் வந்திருந்தனர்.
குளியலறையில் ஏதோ சத்தம் கேட்க மெல்ல கண் விழித்தான் ஏகலைவன். அருகில் மனைவி இல்லை என்றதும் பட்டென கண் விழித்தவன் குளியல் அறைக்குள் செல்லாமலயே
“ஏங்க என்ன பண்ணது…” எனக் கேட்டான்.. பதிலில்லை அவளிடத்தில் அவசரமாக உள்ளே நுழைந்தான். தலையைப் பிடித்தபடி வாஸ் பேசன் முன் நின்றிருந்தாள் ஆரியா.
“என்னாச்சு மா…” என்பது போல அவளது அருகில் சென்றவன் தலையைப் பிடித்தபடி முதுகை வருடி விட்டான்.
முடிந்தமட்டும் வாந்தி எடுத்தவள் அவன் நெஞ்சின் மீதே சாய்ந்து கொண்டாள்.
ஆரியை அணைத்துக் கொண்டே குளியல் அறையிலிருந்து வெளி வந்தவன் “என்ன பண்ணுதுடி? ஹாஸ்பிடல் போலாமா?…” எனக் கேட்டான். வேண்டாம் என்ற தலையாட்டால் மட்டும் அவளிடத்தில்.
“எப்ப இருந்து இப்படி இருக்கு உங்களுக்கு…” எனக் கேட்டான்.
“இரண்டு நாளவே இப்படி தான் இருக்கு ப்பா…” என்றாள் சோர்ந்த குரலில்.
“அன்னைக்கே சொல்ல மாட்டியா நீ…”அதட்டியவன் அவளது கலங்கிய முகத்தைத் துடைத்து விட்டபடி
“சரி, கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடு நான் ஜுஸ் ஏதாவது கொண்டு வரேன்…” என்றவன் திரும்ப, எக்கி அவனது கையைப் பிடித்தாள்
“பயமா இருக்கு டா…” என்றாள்.
“ஹேய் என்னடா…” என்றவன் அவளின் கன்னத்தில் கை வைத்தான்.
அதில் சாய்ந்து கொண்டே “நம்ம பாப்பாக்கு நல்லா காது கேட்கும் தானே…” எனக் கேட்டாள் தவிப்பாக.
“ஏங்க ஆக்சிடென்ட்ல தானே இப்படி ஆச்சு, நம்ம குழந்தைக்கு அப்படி வராது. அப்படியே வந்தாலும் நம்ம அவளை விடப் போறது இல்லை தானே…” என்றவனுக்கு அப்போது தான் அவள் கூறியது புரிந்தது.
கணம் கண்கள் இரண்டும் விரிந்து கொண்டது மெல்ல தலையாட்டி ‘ ஆமாவா..’ என்று கண்களால் கேட்டான்.
“அப்படி தான் நினைக்கிறேன்…” என்றாள் மெல்லிய குரலில். சட்டென அவளை இழுத்து அணைத்து கொண்டவனுக்கு பேச்சே வரவில்லை…
நிமிடங்கள் கடந்து “ஹாஸ்பிடல் போயி கன்பார்ம் பண்ணிட்டு வந்து வீட்டுல சொல்லுவோமாங்க…” என்றான் மெல்லிய குரலில்
“ம்ம்…” என்றாள் அவளும். அடுத்த நிமிடம் வீட்டில் கூறிவிட்டு மருத்துவமனை சென்றனர். அங்கு அவர்கள் நினைத்தது போலவே சொல்லவும் சந்தோசத்தில் தலைகால் புரியவில்லை ஏகலைவனுக்கு. மருத்துவமனை என்றும் பாராது அவளை அணைத்துக் கொண்டான்.
******
இங்கு அவனது இல்லத்தில் .
ஹாலில் போடப்பட்டிருந்த சோபாவில் பேத்தியோடு அமர்ந்திருந்த தியாகுவோ கிச்சனுக்கும், ஹாலுக்கும் புன்னகை முகமாக வளம் வந்து கொண்டிருந்த மனைவியை பார்த்தார்.
“அச்சோ அழகு முட்டாயூ… அங்க பாருங்க அங்க பாருங்க. உங்க ஆயா அதிசயமா சிரிக்கிறா பாருங்க..” கையில் வைத்திருந் பேத்தியிடம் சௌந்தர்யாவைக் கைகாட்டி கூறினார் தியாகு.
அவரது பேச்சில் தனது மூன்று அரிசி பற்களை காட்டி சிரித்து வைத்தாள் காசியின் மகள்.
கணவனின் சீண்டலில் அவர்களிடம் வந்தவர் “பாட்டனுக்கும், பேத்திக்கும் ஆளுக்கு நாலு உதை கொடுத்தா சரியா போயிடும்…” என்றவரின் முகம் இன்னும் இன்னும் புன்னகையில் மின்னியது.
“என்னவாம் முகம் முழுக்க மின்னுது…” மனைவியிடம் குறும்பாக கேட்டார்.
“என்னவோ தெரியலங்க மனசு முழுக்க சந்தோசமா இருக்கு…” என்றார் சௌந்தர்யா.
அதற்கு தியாகு பதில் கூறும் முன்பே
காசியும், மேகலையும் ஹாலிற்கு வரவும் “டீ போட்டேன் எடுத்துட்டு வரேன்…” என்று சௌந்தர்யா சமையல் அறைக்குள் நுழைந்து கொண்டார்.
“பாருங் மாமா, அங்க நான் கொஞ்ச நேரம் இல்லைன்னாலும் ஊரையே கூட்டுவா, இங்க வந்ததுலிருந்து என் பக்கம் கூட வரல…” காசியிடம் கூறிக் கொண்டே தந்தையின் அருகில் அமர்ந்தாள் மணிமேகலை.
“அழகு பொண்ணு, அம்மாகிட்ட போறீங்களா…” எனத் தியாகு கேட்கவும் கிளுக்கி சிரித்து கொண்டே அவரது நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் காசியின் இளவரசி.
மகளின் சிரிப்பை கண்களுக்குள் புதைத்துக் கொண்டே அமர்ந்து இருந்தவன் நினைவு வந்தவனாக “கலை எங்கிங் மாமா…” எனக் கேட்டான்.
“இங்க தான் இருக்கனுங் மாமா…” என்றபடி வந்தான் ஏகலைவன்.
தம்பதி சகிதமாக வெளியில் சென்றவர்கள் தற்பொழுது மகன் மட்டுமே வர “ஆரியா எங்கப்பா…” என்று கேட்டார் தியாகு.
“மாமா இங்க தான் இருக்கேன்…” அவனுக்கு பின்னாலிருந்து எட்டிப் பாத்தப்படி ஆரியா கூறினாள்.
“வாடா மா… என்னாச்சு?; ஏன் முகமெல்லாம் சோர்ந்து இருக்கு…” ஆரியாவிடம் கேட்டவர்
“வெளிய போயிட்டு வரேன்னு சொன்னதும் ஏன்னு கேட்க கூடாதுன்னு தான் கேட்கல தம்பி… என்னாச்சு ப்பா…” ஆரியிடன் ஆரம்பித்து கலையிடம் கேள்வியாக முடித்தார் தியாகு.
“அது ப்பா…” என்றவன் ஆரியாவை பார்க்க அவளோ குனிந்து கொண்டாள்.
மருமகளின் சோர்ந்து தெரிந்த முகமும், மகனின் தவிப்பும் ஏதோ புரிவது போல் இருந்தது. இருந்தும் அவனே கூறட்டும் என்று நினைத்தார்.
கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டே சமையலறையில் இருந்து வெளிவந்த தாயை பார்த்தவன் “மா … உங்களுக்கு இன்னொரு பேத்தியோ பேரனோ வர போறாங்க, ஸ்வீட் ஏதாவது செய்ங் மா…” என்றான் மெல்லிய குரலில். சௌந்தர்யாவை தவிர மற்ற மூவரின் இதழ்களில் புன்னகை அரும்பாகியது.
இங்கு சௌந்தர்யாவோ மகன் கூறுவது முதலில் புரியாது விழித்தார் பின் அது புரிந்ததும் விழி விரிய ஆரியை பார்த்தார். அவளோ ஆம் என்பதைப் போல் தலையாட்டினாள்.
அதற்கு பின் சௌந்தர்யாவை மட்டுமல்ல தியாகுவை கூட கையில் பிடிக்கவே முடியவில்லை. ஆரியின் தந்தை, தாயிடத்தில் இருந்து பார்த்து கொண்டனர் பெரியவர்கள் இருவரும்.
ஆரியா கர்ப்பம் தரித்து இரண்டு மாதங்களுக்கு பிறகு அன்றொரு நாள் இரவில்…
படுக்கையில் அமர்ந்திருந்த
மனைவியின் கை விரல்களை தன் விரல்களுக்குள் அழுத்திப் புதைத்துக் கொண்டே “டாக்டர் கிட்ட கேட்டீங்களா?…” எனக் கேட்டான் ஏகலைவன். அவன் என்னக் கேட்கிறான் என்பது தெளிவாகப் புரிந்தது ஆரிக்கு இருந்தும்
“என்னது…’ என்று கேட்டாள் தெரியாதவள் போல.
“அதைப் பத்தி தான்…” என்றான்.
“எதைப் பத்தி…” புருவங்கள் சுருங்க கேட்டாள்.
“போடி…”என்றவன் எழுந்து நடக்க இதழ்களுக்குள் சிரிப்பை அடக்கியப்படி
“ஏங்க…” என்றழைத்தாள்.
“போடி.. மனுசன் அவஸ்தை புரியாம…” என்றான் கோபமாக..
அவனது கோபத்தை கண்டுகொள்ளாமல் “வேணாமா…” எனக் கேட்டாள் தற்பொழுது அவளது குரலில் குறும்பு கூத்தாடியது
“வேண்டாம் போடி…” என்றவன் பட்டெனத் திரும்பி பெண்ணைப் பார்த்தான்.
பாவையின் பார்வைக் கூறிய செய்தியில் அவளிடம் விரைந்தவன் “பாப்பாக்கு ஒன்னும் ஆகாது தானே…” எனக் கேட்டான்.
அவள் இல்லையென்று தலையாட்ட நொடியும் தாமதிக்காமல் அவளின் இதழ்களை இழுத்து தன் இதழ்களுக்குள் கொண்டு வந்தவன் மெல்ல மெல்ல அவளையும் தன் ஆளுகைக்குள் கொண்டு வந்திருந்தான்.
கூடல் முடிந்த பிறகு கூட அவளை தன் அணைப்பில் வைத்திருக்க அவளும் அவனது மார்பில் முகம் புதைத்தப்படி “லவ் யூ…” என்றாள்.
“ஹான்… என்னடி…” எனக் கேட்டான் அதிர்ந்து…
காதலிக்கும் போது சரி, அதற்கு பின்னும் சரி அவளது வார்த்தையில் இந்த வார்த்தை மட்டும் வரவே இல்லை. சில சமயம் அவனே கேட்டிருக்கிறான் ‘ ஒரு ஐ லவ் யூ சொல்லேன் டி..’ என்று. அப்போதெல்லாம் சொல்லாதவள் இப்பொழுது சொல்கிறாள் என்றாள் என்ன அர்த்தம் தனக்கு தானே கேட்டுக் கொண்ட நொடி ‘ஹான் கதை முடிய போகுதுன்னு அர்த்தம்…’ என்றது அவனது மனம்… ‘ அடிங்க..’ என்று அதனின் தலையில் தட்டி அடக்கியவன் மனைவியிடம்
“என்னவாம்…” புருவத்தை உயர்த்திக் கேட்டான். அவனது மார்பில் முகத்தைப் புதைத்து இருந்தவள் நிமிர்ந்து கணவனின் முகம் பார்த்து
“ஆரிக்கு, ஏகலைவன் மேல காதலாம்…” என்றாள். அவளது உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டான். அவளோ அவனது மார்பில் முத்தமிட்டு
கருமை பூசி கார்முகிலாய்
மாறவும் வாய்ப்பற்று…
நிறமற்று நின்றதென் வானம்..
அதை வண்ணமயமாக்கி
வர்ணம் பூசிடவே
வானவில்லாய் வந்த
வர்ண தேவன் நீ! என்று கவிதை கூறினாள் அவள்.
ஆரியின் கவிதையில் ஆனந்தமாக அதிர்ந்து, ஆச்சரியமடைந்து பின் அவளை தனக்குள் இறுக்கி அணைத்துக் கொண்டான் ஏகலைவன்.
சுபம்…
மறக்காம உங்களோட விமர்சனத்தை கொடுங்க டியர்ஸ் காத்திட்டு இருப்பேன்…
இத்தனை நாளைக்கும் தொடர்ந்து படிச்சு எனக்கு ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் ரொம்ப நன்றி டியர்.. உங்களோட ஆதரவு தான் இத்தனை நாள் கடந்தும் இந்த கதையை எழுதி முடிச்சு இருக்கேன்😍😍 ரொம்ப நன்றியும் என் அன்பும்😍😍 அடுத்த கதையோட சீக்கிரம் வரேன்…
error: Content is protected !!