Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ithaiya Geethamae

Ithaiya Geethamae 1

💜 கீதம் – 1 💜



Advertisement

தனிமை நிறைந்த புறநகர் பகுதியில் அமைந்த வீடு. சுற்றிலும் மரங்கள் சூழ சோலைவனமாய் அமைந்து இருந்தது. மக்கள் எல்லாம் நித்திரையில் ஆழ்ந்து இருக்க, அமைதியான நடு நிசியில் காற்றை கிழித்துக் கொண்டு அந்த சப்தம் அலறலாய் எதிரொலித்தது . என்னவோ என பதறி கட்டிலை விட்டு இறங்கியவள், பயந்துக் கொண்டே கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள். சரேலென்று ஓர் உருவம் அவளைத் தாண்டி சென்றது. விதிர் விதிர்த்து அப்படியே நின்று விட்டாள். தன்னை கண்டு தானே அச்சப்படும் நிலையில் இருந்தாள். பக்கத்து அறையில் படுத்து இருந்த தன் கணவனை வேகமாய் சென்று எழுப்பினாள். அவனோ எழும்புவேனா என அழிச்சாட்டியம் செய்தான்.

” டேய். வேகமாக எந்திரிடா “என உலுக்கி எழுப்பினாள்.

Advertisement

Advertisement

“ஏய் லூசு. இப்பதானே ஷிப்ட் முடிச்சிட்டு வந்து படுத்தேன். தூங்க விடுடி. ஏண்டி இப்படி இம்சை பண்ற,” தூக்கத்தை கெடுத்த கோபத்தில் அவனோ கோபப்பட,

“டேய். வீட்ல வேற ஏதோ இருக்குது. எனக்கு பயமா இருக்கு, அங்க வந்து பாரேன்..,”என கைபிடித்து தரதரவென இழுத்து சென்றாள்.

Advertisement

அவர்கள் கண்டதோ புகை வடிவமாய் ஓர் உருவம். மொத்த தூக்கமும் பறிபோய் முழித்து கொண்டே அலறினான்.

மெதுவே அந்த உருவம் அவர்களை நோக்கி வந்தது. பயந்து கொண்டே பின்வாங்கி நடந்தனர். அலறல் கூட நின்று விட்டது.

கைகளை ஆட்டிக் கொண்டு காற்றில் மிதந்து வந்தது. கண்கள் இரண்டும் கோவை பலமாய் சிவந்து இருந்தது. உஷ்ண மூச்சு எடுத்தபடியே அவர்களை விரட்டிக் கொண்டு வர, தடதடவென படி இறங்கி ஓடி வந்தனர். தானும் வருவேன் என்றபடியே அதுவும் பின்னிலே மிதந்து வந்தது.

“ஏய். சாமி ரூம்க்கு ஓடி போவோம். அதால ஒன்னும் பண்ண முடியாது..,” என அவன் சொல்லி வாய் மூடவில்லை. பூஜையறை கதவுகள் இழுத்து சாத்தப்பட்டன. “ஆத்தி. இது அடங்காது போலயே. என்ன பண்ண, என்ன பண்ண..,”/ என சுற்றும் முற்றும் பார்த்தனர். பக்கத்திலுள்ள மேஜையில் நண்பன் கொடுத்த பைபிள் இருந்தது.

“சாத்தானே ! ஓடிவிடு..,”என அதை கையில் வைத்துக் கொண்டே ஆட்டி ஆட்டி காண்பித்தாள். அதற்கும் அசருவேனா என்றது அவ்வுருவம். இதோ அவர்களின் மூச்சு காற்று கேட்கும் சப்தம் அந்த இரவில் துல்லியமாக கேட்க, நெருங்கி வந்த உருவத்தினை கண்டு, இனியென்ன செய்ய போவுது என திக்கு தெரியாமல் அவர்கள் கண்களை மூடிக் கொண்டு கத்திய நொடியில், அடுப்பறையில் இருந்து டம்ளர் பறந்து வந்து விழுந்தது.

“லீவு விட்டா போதுமே ! எப்ப பாரு இந்த பேய் படத்தை ஓடவிட்டு கத்திகிட்டே இருக்குறது. அவன்தான் சின்னப்பையன் உனக்கும் அறிவில்லையா ? மலைமாடு மாதிரி வளர்ந்து நிக்குற. இன்னும் விளையாட்டுத்தனம் போகுதா பாரு, செமஸ்டர்க்கு படிக்காம எதுக்கு படம் பார்த்துட்டு இருக்க, நாளைக்கு எக்ஸாம் இருக்கு, படிக்கலையா? ” தன் தாய் திட்டுவதை கூட கேட்காமல் சுவாரசியமாய் படம் பார்த்து கொண்டு இருந்தாள் நம் நாயகி.

“அக்கா, நம்மளை அம்மா திட்டுறாங்க. அமைதியா இருக்க, அடிக்க போறாங்க பாரு..,” தன் அன்பு ஸ்ரீ அக்காவிடம் காதை கடித்தான் வைபவ்.

“டேய், யாராவது நம்மளை ரொம்ப கோபமா திட்டுனா கண்டுக்காத மாறி நடிக்கணும். அப்ப தான் அமைதியா அடுத்து என்னனு கேட்பாங்க. பேசாம என்னை கவனி..,” இவளும் அவன் காதருகே மெதுவே சொன்னாள்.

“ஸ்ரீ, நான் பேசுறது கேட்குதா இல்லையா, அமைதியா இருக்கீங்க ..,”என்றபடியே வந்தவரிடம்

“சாரிமா..,, இந்த டிவி சப்தத்துல சரியாய் கேட்கல இப்போ சொல்லுங்க ..”

“எக்ஸாம்க்கு படிக்காம என்ன பண்ற..,?” மகள் சாரி கேட்டதில் கோபம் குறைந்து அமைதியாய் பேச,

“அம்மா.., நோ டென்ஷன் , ரிலாக்ஸ், நாளைக்கு எக்ஸாம்க்கு தான் ப்ரீப்பர் பண்றேன். மனசுல பயம் வரும் போது ,என்ன பண்ணணும் அப்படின்னு கேட்டா, ப்ராக்டிகலா பார்த்து பதில் எழுதலாம் தானே. இதுக்கு யாராவது உட்கார்ந்துட்டு படிப்பாங்களா? ஏன்மா?” தாயின் முகம் பார்த்து மென்னகை புரிய,

“எல்லாத்துக்கும் ஒரு பதில் ரெடியா சொல்லு, பொறுப்பா இருக்கிற பொண்ணுன்னு தான் திட்ட கூட முடியல. என்னமோ பண்ணுங்க.., வைபவ் ஸ்கூல் விட்டு வந்ததும் அக்காவோட உட்கார்ந்துட்ட, எப்ப ஹோம்ஒர்க் பண்ண போற. எந்திரிச்சி போய் படி..,” சலித்து கொண்டே தன் வேலையை தொடர்ந்தார்.

“பார்த்தியா.., அம்மா அமைதியாகிட்டாங்க. இதுக்கு தான் சொன்னேன் . ஒருத்தங்க கோபப்பட்டா நம்மளும் கோபமா பேச கூடாது, அமைதியா பேசுனோம் என்றால் அவங்களும் அமைதியா ஆகிருவாங்க, புரிஞ்சுதா..,” என்றாள் ஸ்ரீ .

ஸ்ரீ MA சைக்காலஜி முதலாம் ஆண்டு படிக்கும் சுட்டி மாணவி. எதிலும் விளையாட்டுத்தனம். பொறுப்பை கூட பருப்பென செய்யும் அலட்டல் காரி. பார்த்தவர்கள் ஒரு நிமிடம் நின்று திரும்பி பார்க்கும் அழகின் சொந்தக்காரி. மாநிறம் என்றாலும் நிலவாய் ஒளிரும் விதானத்தில் மீன் போன்ற கண்கள், கிளி போல மூக்கு, கோவைப்பழம் போல இயற்கையிலேயே சிவந்த உதடுகள். அழகிய நடுத்தர உடல் வாகு, கொடியிடை , ஓட்டமாய் ஒரு நடை, அலை அலையாய் இடுப்பு வரை படரும் கூந்தல் அவளின் விடுமுறையில் மட்டுமே விரிந்து இருக்கும். இல்லையேல் அதுவும் அடங்கி இருக்கும்.

💜💜💜

பெங்களூர் மெடிக்கல் காலேஜில் இன்று இறுதி ஆண்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சி அரங்கில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாய் அமர்க்களமாய் நடந்தேறி கொண்டு இருந்தது. அரை மணி நேரம் ஆடி களைத்து, தன் நண்பனை அங்குமிங்கும் தேடி காணாது , தன் வகுப்பு தோழிகளை தேடி ஓடி வந்தாள் தர்சினி . அழகு கொஞ்சும் பதுமை. முட்டி அளவு வெள்ளை நிற கவுனில், எடுப்பாய் அழகை கூட்டி தேகம் சிலிர்க்க வைக்கும் தேவதை பெண். எதிரே வந்தவர்களை நிறுத்தி ,

“நிஷா.., ஆர்வ்வை பார்த்தியா?” மெல்ல கேட்க,

“என் கனவு கண்ணன் என்னை கூட்டிட்டு போகாம தனியா கான்டீன் பக்கம் போனாரு..,” பெருமூச்சு விட்டு கொண்டே சொன்னாள்.

“வாயிலே எதாவது வந்துரும்.., பேசாம போடி..,” கண்ணை உருட்டி அதட்ட

“என் தலையை பத்தி சொன்னா, உனக்கு என்னடி.., ஏன் கோபப்படுற..,” மூக்கு சிவக்க கேட்டாள் நிஷா.

“அதானே.., அன்னைக்கு என்னையும் திட்டுனா. என்னவோ இவளுக்கு மட்டும் தான் ஆரவ்வை எழுதி வச்சி இருக்காங்களா..?” கொடி பிடித்தாள் வந்தனா.

“உன்னையும் திட்டுனால.., என்னையும் போன வாரம் விரட்டி விட்டுட்டா..,” தன் பங்குக்கு வந்தாள் ஷிவானி.

“சொல்லு கேர்ள்.., ஆரவ் எல்லாருக்கும் பிடிச்ச பையன். எங்க எல்லாருக்கும் பெஸ்டி… அவன் கன்ன குழியிலே விழுந்து நீச்சல் அடிக்க ரெடி… உனக்கேன் கோபம் வருது..,” மூச்சு வாங்க கேட்டாள் ரஞ்சனி .

“ஹலோ.., அவன் யாரையும் காதலிக்கமாட்டான். எனக்கே நோ சொல்லிட்டான்… உங்களை மட்டும் லவ் பண்ணனுமா? அவனுக்குன்னு லட்சியம் இருக்கு. அதை நிறைவேத்துன பின்னாடி தான் காதல், கல்யாணம் எல்லாம். சும்மா நீங்க எல்லாரும் மேலே வந்து விழுந்தா அவனும் விழுவானா? அதான் உங்களை தடுத்து நிறுத்தினேன். என் பெஸ்ட் பிரெண்டுக்கு எல்லாமே பெஸ்டா தான் கிடைக்கணும். உங்களை மாறி எல்லாம் வேண்டாம்..,” தன்னை மறுக்கும் நண்பன் இவர்களில் ஒருத்தியை தேர்ந்தெடுத்து விடுவானோ என்கிற மனபயத்துடன் அவர்களை தட்டி கழிக்க சொல்ல,

“இங்க பாரு, உன்னை அவனுக்கு பிடிக்கல.., அதான் நோ சொல்லிருப்பான். உன்னை வேணாம்னு சொன்னா உன்னை பிடிக்கலனு அர்த்தம்.., அதுக்கு நாங்க என்னடி பண்ணோம்… இன்னைக்கு நைட் அவன்ட பேசி கரெக்ட் பண்றோம்… பாக்குறியா..? ” ஷிவானி மல்லுக்கு நிற்க ,

” ஓஒ,..,சேலஞ்ச் பண்றீங்களா..,. வாங்கடி.., நானும் அவன ரிசார்ட் கூட்டிட்டு வர்றேன்…, அவன் யாரையும் திரும்பி கூட பார்க்க மாட்டான்…, அவன் என்ன சொல்றான்னு பார்க்கலாம்..,’ சபதம் போட்டவள் திரும்பினால் அவன் வந்து கொண்டு இருந்தான்.

” இங்கே பாரு.., அவன் நோ சொன்னா விட்டுட்டு போயிரணும்.., மல்லுக்கு நிற்க கூடாது சரியா..? தோத்து போறதுக்கு.., ஆல் த பெஸ்ட் பா…, ” பரிகாசம் செய்தபடி அவனை நோக்கி சென்றாள்.

“டேய்.., மச்சி..,, எவ்ளோ நேரமா தேடுறேன்.., எங்கடா போயிட்ட..” தேடி கிடைக்கா எரிச்சலில் வார்த்தையில் கோபம் காட்ட

“‘ அது.., என் மொக்க பிரென்ட் ஆட்டமாய் ஆடி.., களைச்சு போய் வருவாலே.., வந்த உடனே குடிக்க கேட்பாளேனு.., கேன்டீன் போய் கோக் வாங்கிட்டு வந்தேன்பா.., ஏன்டா.., ரொம்ப நேரம் தேடி அலைஞ்சியா..? “

” ம்க்கும் ..,மக்கு மன்னாரு, இதெல்லாம் கரெக்டா வாங்கி வருவான்.., ஆனால் லவ் மட்டும் யாரையும் பண்ண மாட்டான்…, நானும் ஜாயின் பண்ண நாளில் இருந்து நூல் விடுறேன், கண்டுக்கவே மாட்டேங்கிறான்…, சிக்குவேனான்னு பறக்குறானே.., பக்கத்துல இருந்தே கவுக்க முடியல.., இனி அவன் பறந்து போனானே.., என்னை மறந்து போனானேனு பாடிட்டு இருக்கனும்…, நான் இனிமே ஒருத்தனை பார்த்து.., பேசி.., பிடிச்சி.., லவ் பண்ணி.., கல்யாணம் பண்ணி.., ம்ம்ம்.., விடிஞ்சிரும்..” மனதில் அவனை வறுத்து எடுத்து கொண்டு,

‘நண்பேன்டா., ஆரவ் ., உன்னை மாறி எங்கேயாவது இருப்பாங்களா.., தேடினாலும் கிடைக்க மாட்டான்..,” அவன் கரத்தோடு , கைகளை கோர்த்து கொண்டு , :ஆமாம்.., என் டான்ஸ் எப்படி இருந்துச்சின்னு சொல்லவேயில்லை.., ” கண்ணில் கேள்வியோட நோக்க.

“சும்மா ஸ்டேஜ் தெறிக்க விட்டிங்களே.., என்னமா ஆட்டம் போட்டிங்க.., ப்பா., வளைஞ்சு.. , நெளிஞ்சி ஆடி.., பசங்கல கத்த விட்டீங்க,.., என்ன,.., கொஞ்சம் டிரஸ் பெருசா போட்டு இருக்கலாம்., LKG பாப்பா கவுன் மாதிரி இருந்துச்சு ..,” நக்கல் தோனியில் பதில் சொல்ல

“நாங்க பச்சை மண்ணு.., குழந்தை மாதிரி மனசு.., அதான் அவங்க டிரஸ் போட்டோம்.. ,” தலையை இடவலமாய் ஆட்டி கொண்டு புருவம் உயர்த்த ..,

“அத சொல்லி தானே பசங்க கத்திட்டு இருந்தாங்க.., குழந்தை மாறி கையில் தூக்கி.. கொஞ்சனும் போலன்னு..,” நக்கல் குரலில் எள்ளி நகையாட,

“டேய்.., நீ என்னை கலாய்க்கிறியா.., இல்லை திட்டுறியா.., இன்னைக்கு ஒரு நாள் தானடா முடியும்.., ஊருக்கு போனா இது எல்லாம் போட கூடாதுனு உனக்கே தெரியும்ல..,அப்புறம் என்னடா .., “சற்றே கெஞ்ச

” நல்ல பிரெண்டுக்கு அழகே தப்பு பண்ணா திருத்தணும்.., திட்டனும்.., கலாய்க்கணும்.., அப்போ தான் அவங்க பெஸ்ட் பிரென்ட்..,. இல்லைன்னா..,”

” நீ இப்போ ஒர்ஸ்ட் பிரென்ட்.., போடா..,” என்று அவன் கையில் அடித்தாள்.

“சரி குடிச்சி முடி.., ஹாஸ்டல்ல விட்டுட்டு நான் கிளம்புறேன்…,”

“ஏன்டா,, நம்ம கிளாஸ்ட்மேட்ஸ் எல்லாரும் இன்னைக்கு நைட் ரிஸார்டுல பார்ட்டி அரேஞ் பண்ணி இருக்காங்க.., நீயும் போக மாட்டே.., என்னையும் விட மாட்டே., கொஞ்ச நேரம் மட்டும் அங்க போய்ட்டு வருவோம்.., இன்னைக்கு தானே லாஸ்ட் டேட்…, அப்புறம் எல்லாரும் எப்போ இந்த மாதிரி மீட் பண்ணுவோம்னு தெரியாது.., என் செல்லம்ல.., நான் உன் கூடவே தான் இருப்பேன்.., தனியா எங்கேயும் போக மாட்டேன்.., அம்மாட்ட மட்டும் பர்மிசன் வாங்கி கூட்டிட்டு போடா.., ப்ளீஸ்.., ப்ளீஸ்..,” முகவாயை திருப்பி கெஞ்சலாய் விளிக்க,

” ஒரு மணி நேரம் தான் அங்க இருப்போம்ன்னு கூட்டிட்டு போறேன்.. இல்லைனா இல்லை.. டீல் ஓகேயா..,” அதட்டலா தான் கேட்டான். எங்கே அவளுக்கு தெரியாமல் எதாவது தப்பு நடந்திட்டால் தான் தானே அவளின் பொறுப்பு என்பதாய் அவன் பேச்சு அமைய ,

‘”பக்கி.., உன் கூட மட்டும் தான் அம்மா விடுவாங்கன்னு என்னமா சீன் போடுறே.., ஓவரா ஆடாதடா… வந்து தொலை.., போவோம்..,” என ஒப்பு கொடுத்தாள்.

தர்சினியின் தாயிடம் அனுமதி பெற்று அவளை கூட்டி சென்றான் ஆரவ். இறுதி ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவன். அகண்ட நெற்றி, நீள் வடிவ முகம், அடர்ந்த மீசை, குறுந் தாடி, ஆளை கவிழ்க்கும் புன்னகை அரசன், சிரிக்கும் போது குழி விழும் கன்னத்தில் சேர்ந்தே கல்லூரி பெண்களையும் இழுக்கும் கனவு கண்ணன். எதையும் ஜாலியாக எடுத்து கொண்டு, அசால்ட்டாய் செய்து முடிக்கும் சூரன். எந்த கெட்ட பழக்கமும் இல்லாத அக்மார்க் நல்லவன். நட்பினை தாண்டி எந்த பெண்ணிடமும் அவன் பார்வை போகாது. ஆதலால் இவளுக்கு பாடிகார்ட் வேலையும் அவ்வப்போது இவன் தான் பார்ப்பான். கோடிஸ்வரரின் ஒரே மகளான தர்சினியை தனியே படிக்க அனுப்பிவிட்டு, கண் கொத்தி பாம்பு போல பரிதவிக்கும் தாயின் ஏக நம்பிக்கை பெற்ற ஒரே ஆண் மகன்.

💞💞💞

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!