Skip to content
Post Views: 3,159
கீதம் – 2 
” கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
Advertisement
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்
Advertisement
உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
Advertisement
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு..”
Advertisement
என வானொலியில் பாடல் ஒலிக்க, சுகந்தி சமயலறையில் வேக வேகமாய் வேலை செய்து கொண்டே, ” ஸ்ரீ, எந்திரி , காலேஜ் போகணும்ல, காலையில டெய்லி உனக்கு சுப்ரபாதம் பாடினா தான் எந்திரிப்பியா, பொம்பளை பிள்ளை ஆறு மணி வரை தூங்கிட்டு இருக்க..,” தாயின் அன்பு அர்ச்சனையில் தான் அவளின் விடியல் நடக்க போர்வையில் இருந்து மெதுவே எட்டி பார்த்தாள்.
” கிருஷ்ணா, இன்னைக்கு நல்லபடியா பொழுது போகணும். சேவ் மீ ..,” என்றபடியே எழுந்தவள்,” ம்ம்ம்மா., எந்திரிச்சுட்டேன்.,” தாய்க்கு குரல் கொடுத்தபடியே அடுத்த அரை மணி நேரத்தில் குளித்து, கிளம்பி வெளி வந்தாள். நீல கலரில் சுடிதார், நெற்றியில் ஸ்டிக்கர் போட்டு, காதில் சிறு ஜிமிக்கி, மெல்லிய செயின் என எந்த ஒப்பனையும் முகத்தில் இல்லாமல் அழகாய் ஜொலித்த மகளை கண்டதும் தாய் மனம் மலர்ந்தது.
” அம்மா, லேட்டாச்சு , சீக்கிரம் சாப்பிட குடு..,” என்றபடி சமயலறைக்கு வந்தவள், தண்ணீரை நிரப்பியபடி, தன் காலேஜ் பேகினை எடுத்து ஐடி கார்டு, ஹால் டிக்கெட் எல்லாம் சரியாக உள்ளதா என சரி பார்த்தபடி வர,
“இதுக்கு தான் காலையில் சீக்கிரம் எந்திரிக்க சொல்றேன். அவதி அவதியா தின்னுட்டு ஓடுறது, மதியம் இங்கே வந்து சாப்பிடுவியா, கட்டி கொடுக்கவா..,” என்றபடி தோசை , தக்காளி சட்னி வைத்து கொடுத்தார்.
“வேண்டாமா, மதியம் சீக்கிரம் வந்துருவேன்..,”
“பரீட்சை முடியிற வரை லீவு போட்டு படி, மதியமே சுடு தண்ணி காலுல ஊத்துனா மாதிரி வேலைக்கும் ஓடாதே , புரியுதா..,” என்றபடி அடுத்த தோசை வைக்க.
“லீவு தாம்மா, நான் மட்டும் வேலைக்கு போனா சாரே அடிச்சு பத்தி விட்டுருவேன்னு சொல்லி இருக்கார். இதுக்கு பதிலா அடுத்த மாசம் லீவு, அப்போ காலையிலேயே அங்க போக போறேன்…,”
“நல்லா எழுதுடி, நீ படிச்சு முடிச்சா தான் எனக்கு நிம்மதி, என் பொழப்பு மாதிரி உன் வாழ்கை அமைய கூடாதுன்னு தான் இத்தனை ஓட்டம். நீயாவது நிம்மதியா வாழனும். உனக்கு ஒரு கல்யாணத்தையும் முடிச்சிட்டா , என் சுமை குறையும்..,” சராசரி அன்னையாய் புலம்ப.
” எம்மா, உனக்கு வேற வேலையே இல்லையா, எப்போ பாரு, கல்யாணம் பண்ணு, காதுல குத்துன்னு , நீ பட்டது போதாதா, நானும் கஷ்டப்படணுமா ? என் தம்பி படிச்சு வேலைக்கு போன பின்னே தான் நான் கல்யாணம் பண்ணுவேன்…,”
” க்ஹும்., ஏன் முப்பது வயசில தான் மனையில் உட்காருவியோ, அததுக்குன்னு வயசு இருக்குமா, அப்போ பண்ணா தான் மதிப்பு. இல்லைனா உடைஞ்சதும், உலுத்ததும் தான் கிடைக்கும். இன்னும் ஒரு வருஷம் படிப்பை முடிச்சுட்டு உன்னை கரை சேர்த்தா தான், செத்து போனா உங்க அப்பா ஆத்மா கூட சாந்தியடையும்..,”
” அம்மா நீங்க என்ன சொன்னாலும் நான் தட்டாம செய்வேன். ஆனால் இப்போதைக்கு இது மட்டும் கனவு காணாதீங்க. நடக்காது. ஊரில் எத்தனை பேரை பார்க்குறேன், யாரு சந்தோசமா மச்சினன், மாமியாருன்னு பார்த்து குடும்பம் நடத்துறாங்க, நான் கட்டிக்கிட்டு போயிட்டா உங்க ரெண்டு பேரையும் தலை முழுகிடனும், உங்களை விட எனக்கு எதுவும் பெருசில்ல, காலங்காத்தால சாப்பிட்ட ரெண்டு தோசை உங்கட்ட பேசியே ஜீரணம் ஆகிடும்மா. நேத்து பக்கத்து விட்டு ராணிக்கா பேசும் போதே நினைச்சேன். இன்னைக்கு காலையில் கச்சேரி நடக்கும்னு. சும்மாவே இருக்க மாட்டாங்களா. வந்து இன்னைக்கு இருக்கு அவங்களுக்கு..,” என்றபடி கல்லூரிக்கு கிளம்பி விட்டாள்.
தாயும் மகளும் ஓடி ஓடி உழைத்து கௌரவமாக வாழ்கை நடத்துகின்றனர். இவள் அரசு பள்ளியில் படித்து, தன் தம்பியை தனியார் பள்ளியில் படிக்க வைக்கின்றாள். வறுமையிலும் மானம் மரியாதையோடு ஊரில் வாழ்கின்றனர். பத்தாம் வகுப்பு முடித்து விட்டு, பக்கத்தில் உள்ள கிளினிக் ஒன்றில் பார்ட் டைம் வேலை பார்க்க ஆரம்பித்தவள், இன்று அங்கே சூப்பர்வைசர் வேலை பார்க்கும் அளவு முன்னேறி உள்ளாள்.
காலையில் கல்லூரி, மதியம் மருத்துவமனை, இரவில் மட்டுமே வீட்டில் வாசம். வாரவிடுமுறை அன்று கூட பக்கத்தில் உள்ள பள்ளிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்க சென்று விடுவாள். தான் அனுபவித்த தனிமை கொடுமை , சொல்லி அழுக கூட ஆள் இல்லாத நிலை, தன் அன்னையின் நிலை யாருக்கும் வரக்கூடாது என்ற எண்ணமே அவளை சைக்காலஜியை எடுத்து படிக்க வைத்தது. ஏனென்றால் பதினாறு வயதில் துள்ளி திரிய வேண்டிய வயதில் தாயாகி , பத்தே வருடத்தில் இரு குழந்தையோடு கைம்பெண்ணாக தனித்து நின்று, தன்னை காக்கவா, தன் பெண்ணை காக்கவா என இரவில் கூட உறங்காது தவித்த தாயை அருகே இருந்து கண்டவள். எத்தனை மனக்கஷ்டம் பெண்கள் அனுபவிப்பர் என்பதை உணர்ந்து கொண்டதாலேயே தன் மருத்துவமனைக்கு வரும் பெண்களின் துயரம் துடைக்க பாடுபடுகிறாள்.
தன்னை பற்றி எண்ணி கொண்டே கல்லூரி வாசலை தொட்டதும் முற்றும் முழுதாக பருவ பெண்ணாக மாறி விடுவாள். அங்கு அவளின் லூட்டியை கண்டு நொந்து போனவர்கள் ஏராளம். ஜாலியாக பேசி சிரித்து , லந்து பண்ணி , வம்பு சண்டை இழுத்து சிறகில்லா பறவையாய் சுற்றி வந்தாலும், படிப்பில் முதன்மை மாணவியாய் திகழ்வதால் யாராலும் அவளை ஒன்றும் குறை கூற இயலாது.
“ஏய், லந்து, எல்லாம் படிச்சிட்டியா..,? “
“ஒன்னுமே படிக்கல. சும்மா ஜாலியா தூங்கி எந்துருச்சி வந்தேன்..,”
“ஒனக்கு பயமே இல்லையா. நானெல்லாம் ராத்திரி புல்லா தூங்காம விழுந்து விழுந்து படிச்சேன்..,”
” அச்சோ, எங்கேயும் அடிப்படல இல்லை. என மேலிருந்து கீழ் பார்த்து ஊமை காயம் தானா, ஒன்னும் காணோம்..,”
” ஏண்டி, விட்டா உன் கிளினிக் கூட்டி போய் படுக்க போட்ருவ போல. எல்லாரும் சொல்லறதை தானா சொன்னேன். ஆத்தி உன்கிட்ட பேசவே கூடாது..,”
” பிரியா, மொத அவ வாயை பிளாஸ்டர் போட்டு ஓட்டுங்கிறேன். எடக்கு மடக்கா பேசி மனுஷனை கொல்லுறா…,”
” அறிவா பேசுனா பிடிக்காதே உங்களுக்கு…, “
” உன் அறிவு வாளியை நீயே வைச்சுக்க. எங்களுக்கு வேண்டாம்..,”
” ராஜி, என் செல்லம்ல நீ, இதுக்கே சலிச்சா எப்புடி. இன்னும் எவ்ளோ இருக்கு..,” என்றபடி கண் சிமிட்ட
” உன்கிட்ட எவன் வந்து மாட்ட போறானோ? பாவம்டி. ஆமா நேத்து அந்த பரத் பயலை ஏண்டி அடிச்ச…,”
” அந்த மன்மதராஜா என்னை லவ் பண்றானாம். மூணு வருஷம் ஆகியும் ஒன்னும் சொல்லாம இருக்கேனாம். இன்னைக்கு முடிவு சொல்லாம விடமாட்டேன்னு கையை பிடிக்க வந்தான்.
அவ்ளோ தானே, முடிவு சொல்றேன்னு ஒரு அறை தான் விட்டேன். அதுக்கே அழுகுறான். இந்த அடியே தாங்க முடியல, லைப் லாங் எப்படி தாங்குவேன்னு தான் கேட்டேன். தலை தெறிக்க ஓடி போய்ட்டான்…, ” சிரிப்பை அடக்கி கொண்டு அவள் சொல்ல.
அவள் சொன்னதை கேட்டு இருவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர். ” உன்கிட்ட மாட்டிட்டு பசங்க தான் பாவம்டி. அவனுகளும் திருந்த மாட்டேங்கிறாங்க…,”
” சும்மா பார்த்துட்டு போனா, சிரிச்சா எதுவும் சொல்றேனா , இல்லையே, கையை பிடிச்சி இழுத்தா, ஐயோ அம்மானு அழுது, லவ்க்கு சரின்னு சொல்லிட்டு இவன் பின்னாடி போகணுமா , போங்கடி., நம்மகிட்ட எல்லாம் அன்புக்கு அன்பு, வம்புக்கு வம்பு தான்…,”
“அவனுக்கு ஒன்னை பத்தி முழுசா தெரியாது. நீ மாடர்ன் ட்ரெஸ் போட்ட காளியத்தானு தெரிஞ்சா பின்னாடி வருவானா. லூசு பையன்…,”
” சந்து பொந்து எல்லாம் புகுந்து, லந்து பண்றதால தானே உன்னை நந்துன்னு சொல்லாம, லந்துன்னு கூப்பிடுறோம்.., இருவரும் ஹைபை அடித்து கொள்ள
” ராஜி.,, என்னை கழுவி ஊத்தாமா, உனக்கு தூக்கம் வராதே. சரி லேட்டாகிருச்சு எக்ஸாம் ஹால் போகலாம் ..,”என்றப்படி நல்ல பிள்ளைகளை போல அமைதியாய் சென்றனர்.
******
” ஹாய் பிரன்ட்ஸ், எல்லாரும் என்ன, என்ஜாய் பண்ணாம அமைதியா இருக்கீங்க?..,” என கேட்டபடி தர்ஷினியோடு ரிசார்ட்டில் உள் நுழைந்தான் ஆரவ்.
” நீங்க வரலைன்னு தான் வெயிட் பண்ணோம். வாங்க போகலாம்..,” என்றபடி உள்ளே சென்றனர். டிஜே போட்ட பாடலின் இசைக்கேற்ப கொண்டாட்டமாய் அனைத்து நண்பர்களும் இணைந்து ஆடி கொண்டு இருந்தனர். சிலர் அங்கங்கு நின்றபடி பேசி கொண்டே, அவர்களின் அசைவையும் ரசித்து கொண்டு இருந்தனர். தர்ஷியை அந்த பெண்களோடு இருக்க சொல்லிவிட்டு தன் பிற நண்பர்களோடு பேச சென்ற ஆரவிடம்,
” என்ன மச்சி! உன் பாசமலரையும் சேர்த்தே கூட்டிட்டு வந்துட்டியா? ” நக்கலாய் கேட்டான் ராகவ்.
” ம்ம்… அவ எப்பவும் என்னோடு தானே வருவா, ஏன்டா கேட்கிறே…,”
“‘ அதானே பார்த்தேன்., இருந்தாலும் மச்சி, இவ்ளோ அழகா இருக்கிற பொண்ணை கரெக்ட் பண்ணி மஜா பண்ணாம, கூஜா தூக்கிட்டு பின்னாடி சுத்துறியே ! நீ வேஸ்டு டா. நீயெல்லாம் அதுக்கு சரி பட்டு வரமாட்டனு பசங்க தெரியாமலா சொல்ராங்க..,”
” பேசாம இரு ராகவ், உனக்கு எங்களை பத்தி தெரியாது..,” கோபத்தில் முகம் சிவக்க கூறினான்.
” பின்ன என்னடா, ஜாயின் பண்ண நாளில் இருந்து அவ கூடவே திரிவானாம். யாரையும் பக்கத்துலயே விடாம தேவுடு காப்பானாம். ஒன்னு நீ என்ஜாய் பண்ணு, இல்லை எங்களையாவது விடு.., வாய் குளற தடுமாறியபடி தள்ளாடி ராகவ் கேட்க,
” மைண்ட் யுவர் வேர்ட்ஸ். எங்களை பத்தி எதுவும் தப்பா பேசாதே..,”
” அப்படிதாண்டா சொல்லுவேன். நீ மட்டும் ஒரு நாள் வராம இரு, அவளை என் வலையில விழ வச்சு காட்டுறேன்.., மப்பில் புலம்பி கொண்டிருந்தவனை தள்ளி விட்டு, ” ச்சே… இதுக்கு தான் இங்கே கூட்டிட்டு வர மாட்டேன்னு சொன்னேன், கேட்டாளா..,” திட்டியப்படி நின்றவனிடம் ராஜா பேசினான்.
” அவன் சொல்றதும் சரி தானேடா, ஏன் அவளுக்கு பாடிகார்ட் மாறி சுத்திட்டு இருக்க. வேற வேலையே இல்லையா?..,”
” டேய் ஏண்டா எல்லாரும் இப்படி புரியாம பேசுறீங்க. அவளோட சூழ்நிலை அப்படி, நான் கூடவே இருந்து தான் ஆகணும்..,”.
“அப்படி என்னடா சிச்சுவேஷன் சொல்லு. நானும் தெரிஞ்சுகிறோம்.,, “
” நீங்க எல்லாரும் நினைக்கிற மாதிரி தர்ஷினி சுதந்திர பறவை இல்லடா. அவளை கொத்திட்டு போறதுக்கு ஒரு கூட்டமே சுத்திட்டு இருக்கு..,” என்றபடி தான் மருத்துவ கல்லூரியில் இணைந்த நாளன்று நடந்த சம்பவத்தை கூறி முடிக்கும் தருவாயில் தங்களை நோக்கி வந்து கொண்டு இருந்த தர்ஷியை பார்த்ததும் இருவரும் கண்ணால் ஜாடை செய்து மௌனம் சாதித்தனர்.
” இவ்ளோ நேரம் சீரியஸா பேசிட்டு இருந்தாங்க. நம்மள பார்த்ததும் ஏன் பம்மிட்டு அமைதியா நிற்கிறான்னு தெரியலயே. ஆரவ்ட கேட்டா சொல்ல மாட்டான். இந்த மங்குஸ் மண்டையன் தலையை தட்டி ரெண்டு வார்த்தை சிரிச்ச மாதிரி பேசினா, இந்தா சொல்லிட்டேன்னு எல்லாம் கக்க போறான். இதுக்கு கண்ணை வேற காட்டி ஜாடையா. மவனே நாளைக்கு இருக்குடி உனக்கு…,” என ராஜாவை டீலில் விட்டு விட்டு ,
” இன்னைக்கு ஆரவ் செல்லத்துக்கு மட்டும் தான் டெஸ்ட் வைக்குறோம். பயபுள்ள அவள்கள திட்டிட்டா அவங்கட்ட தப்புச்சேன். இல்லைனா இவன்கிட்ட மாட்டிக்குவேன். பங்கு இன்னைக்கு உனக்கு சங்கு தான். யாருகிட்டனு தான் தெரியல. .,” மனதில் நினைத்தபடி ஒன்றும் அறியா சிறு பிள்ளை போல் மெல்ல நடை பயின்றாள்.
அவள் நெருங்கி வர மேற்படிப்பு பற்றி விவாதம் செய்வதை போல பேச்சை மாற்றினான்.
” எங்கள் ஹாஸ்பிடல் சுத்தியும் நிறைய கிராமங்கள் இருக்கு. சின்ன வயசுன்னு கூட பார்க்காம பெண்களுக்கு கல்யாணம் பண்ணி, அதனால் அவங்க தன் சுயம் தொலைச்சு, தற்கொலை, டெலிவரி டெத்னு நிறைய கேஸ் எங்க ஹாஸ்பிடல்ல வரும். அதையெல்லாம் பார்த்து வளர்ந்ததால் எந்த பொண்ணையும் தப்பான கண்ணோட்டத்துல பார்க்க தோன்றதே இல்லை. முடிஞ்சவரை அந்த மாதிரி கிராமத்துல போய் சேவை செய்யணும். சோ அடுத்து அங்க இருந்து என் பயணம் தொடரும். அப்பா மேல் படிப்பு படிச்சா இன்னும் நல்லது பண்ணலாம்னு சொல்லி இருக்கார். படிச்சிட்டு அங்கே போய் மருத்துவத்தோடு மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தனும். இதான் என் லட்சியம்..,”
” கேரி ஆன் மச்சி. உன் பின்னாடி வர்ற எந்த பொண்ணையும் திரும்பி கூட பார்க்காம படிப்புன்னு மட்டுமே சுத்திட்டு இருக்கானு தான் பசங்க கிண்டல் பண்ணி பார்த்து இருக்கேன். ஒரு நல்ல லட்சியத்தை அடைய கஷ்டப்பட்டு இருக்குற, கண்டிப்பா அது வீண் போகாது. ஆல் தி பெஸ்ட் பார் யுவர் கிரேட் பியூஸர்…,”
தேங்க்ஸ்டா, நெஸ்ட் மீட் பண்ணலாம் ., ” என்றபடி அவளிடம் போகலாம் என்ற பார்வையோடு இணைந்து நடந்து வர
” என்ன மேடம், அதுக்குள்ளே வந்துட்டிங்க., கிளம்பலாமா.., “
” மச்சி., நீயில்லாம ரொம்ப போர்., அதான் உன்கிட்ட வந்துட்டேன். வாயேன் போய் பேசலாம்., “
” ஏதாவது தப்பு பண்ணியா.., நான் வந்து இழுத்துட்டு வராம அவங்கள விட்டு வரமாட்டியே..,ம்ம்ம்., என்ன பண்ண, சொல்லு .,”
“டேய்.., நான் உன்னை தேடி வந்தாலே ஏதாச்சும் பிரச்சனை பண்ணிட்டு தான் வரணுமா., என்னை நம்பவே மாட்டியா., “
” எலி ஏன் பேண்டு போட்டுட்டு எலிபேண்டா வருதுன்னு எனக்கு தெரியாதா..,” உன்னை நான் அறிவேன் என்ற பாவனை அவன் முகத்தில்.
அதற்குள் வேகமாய் தங்களை நோக்கி வரும் பெண்களை கண்டு நின்றான். அவன் அருகில் வந்ததும் “” ஆரவ்.., ஒன் மினிட்.., ” ஒருத்தி மெதுவே கூப்பிட்டாள்.
” என்னாச்சு, எதுவும் பிரச்சனையா, எல்லாரும் ஒண்ணா சேர்ந்து வந்து இருக்கீங்க..,” என அடுத்தடுத்து கேள்வி கணைகளை தொடுக்க,
“அது…”, என நிறுத்தி விட்டு மற்றவர்களிடம் ஜாடை காட்ட, மொத்த பேரும் ஒத்த குரலில் ” ஐ லவ் யூ.., ஆரவ்..,” என கோராசாய் காதலை உரைத்தனர்.


error: Content is protected !!