Skip to content
Post Views: 3,902
“டேய் கருப்பா! இங்க உன் பொண்டாட்டி உனக்காக காத்துட்டு இருக்கேன், உனக்கு பூண்டு கொள்முதல் பெரிசா போச்சா?
பாவி.. பாவி இன்னியோட நமக்கு கல்யாணம் ஆகி நாலு முழு நாட்கள் முடிஞ்சிடுச்சு!
கல்யாணத்துக்கு முன்னாடி இந்த கருப்பனுக்குள் இருந்த ரெமோ எங்கே போனான்! இப்படி பொண்டாட்டி பக்கத்துல இருக்கும் போதும் சாமியார் மாதிரி இருக்க முடியுது இவனால?” ஜான்வி அதிசயித்தாள்.
Advertisement
ஆமாம். பரணி ஜான்வி கல்யாணம் கட்சித் தலைவர் தலைமையில், அவளின் பப்பாவின் சம்மதத்தோடு நடந்து முடிந்து, இன்றோடு நான்கு நாட்கள் ஆகி விட்டிருந்தன!
இப்போது அவர்கள் இருவரும் இந்தூருக்கு மறுவீடு வந்திருந்தனர்!
ஊர்மியே கூட இதை எதிர்பார்க்க வில்லை!
Advertisement
ஜகதீஸ் இவ்வளவு எளிதாக இந்த கல்யாணத்தை ஏற்றுக் கொண்டு, பொண்ணையும் மாப்பிள்ளையையும் இங்கு விருந்துக்கு அழைத்து வருவார் என்று!
Advertisement
ஆனால் ஜகதீஸ் செய்து இருந்தார்.
கல்யாணம் மிகவும் ஆர்ப்பாட்டமாகவே நடந்தது!
காரணம் கதிரின் நண்பர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள்!
Advertisement
வருபவர்களுக்கு கை குலுக்கியும் வணக்கம் சொல்லியுமே மணமக்கள் மிகவும் களைத்துப் போய் விட்டிருந்தனர்!
கல்யாணம் முடிந்தும் கட்சி பிரமுகர்கள் வந்த வண்ணம் இருந்ததால், அவர்கள் இருவரும் தொடர்ந்து ஒரு ஐந்து நிமிடம் கூட உட்கார முடியவில்லை!
அதனால் அன்றைய இரவு அவர்களால் கட்டிக் கொண்டு தூங்க மட்டுமே முடிந்தது! அவ்வளவு டயர்டாகி விட்டிருந்தார்கள்!
அடுத்த நாள் ரிசப்சன்!
முதல் நாள் கட்சிக்காரர்கள் கூட்டமே பெரிதாக இருந்ததால், நிறைய உறவினர்கள் ரிசப்சனுக்கு தான் வந்தார்கள்!
அவர்கள் கூட்டமும் மிகப்பெரியது!
ஜகதுவின் ஜனக்கட்டு மிகப்பெரியது!
அதற்கு கொஞ்சமும் குறைவு இல்லாதது ஜானுவின் ஜனக்கட்டும்!
அதிலும் ஜானுவின் வீட்டில் ரொம்ப வருசத்திற்கு அப்புறம் நடக்கும் திருமணம்!
விஜியின் திருமணம் காதல் திருமணமாகி இருக்க, சரவணனின் திருமணமோ மிகவும் சிம்பிளாக நடந்து இருந்தது!
அதனால் ஜானுவும் வளைத்து வளைத்து அனைவரையும் அழைத்து விட்டிருந்தார், அந்த ஓரிரு நாட்களிலேயே!
அவர்கள் வழி உறவினர்களுக்கும் ஜானுவும் அவர் குடும்பமும் எப்படி இருக்கிறார்கள் இப்போது என்று அறிய மிகவும் ஆர்வம் கொண்டு பத்திரிகை வைத்த அனைவருமே வந்து விட்டார்கள்!
அதனால் ரிசப்சன் அன்றும் ஜானவிக்கும் பரணிக்கும் உட்கார கூட நேரமில்லை!
அன்றும் ரொம்பவும் டயர்டாகி எப்போது ரூமிற்கு போய் கட்டிலில் விழுந்து கண் அயர்வோம் என்றே அவர்களின் நிலை அன்றைக்கும்!
அடுத்த நாள் குலதெய்வம் கோவில் பயணம்!
அன்றே மாலை ஒரு உறவினர் வீட்டில் விருந்து!
ஒரே அலைச்சல்! அடுத்த நாள் இந்தூர் கிளம்பி விட்டார்கள்!
இங்கே வந்தவனை ஜகதீஸ் அவர்களின் ஹாஸ்பிட்டலை சுற்றிக் காட்ட அழைத்துப் போய் விட்டார்!
பகல் முழுவதுமே அவன் அவள் பப்பாவோடும் நிகிலோடுமே இருந்தான்.
மாலை வீட்டிற்கு வந்தவன், ஜான்வியிடம் சொல்லி விட்டு மீண்டும் வெளியே கிளம்பி போய் விட்டான்!
இந்தூரில் இருந்து தான் தமிழ்நாட்டுக்கு பூண்டு கொள்முதல் செய்கிறார்கள் நம் தமிழ்நாட்டு மொத்த விலை வியாபாரிகள் என்று அறிந்து கொண்டவன், அங்கு விசாரித்து ஏஜென்ட் ஒருவனைத் தொடர்பு கொண்டு பேசி விட்டு வெளியே கிளம்பி போய் விட்டான்.
இரவு ரொம்ப நேரம் கழித்தே அவன் வீடு திரும்பினான்!
அதற்குள் ஜான்வி அவனுக்காக காத்திருந்து விட்டு, அப்படியே சோபாவிலேயே தூங்கி விட்டிருந்தாள்!
பின் நடு ஜாமத்தில் அவளுக்கு விழிப்பு வந்து, எழுந்து கட்டிலில் போய் படுத்து அவனைக் கட்டிக் கொண்டு தூங்கினாள்.
இப்போது விடியற்காலை கண் விழித்து, தூங்கிக் கொண்டிருக்கும் அவனையே பார்த்து பேசிக் கொண்டிருக்கிறாள் இப்போது!
“டேய்.. எப்படி இப்படி தூங்குற? கண்ணைத் திறந்து தான் கொஞ்சம் பாரேன்! பாக்க மாட்ட.. உன்னை..” என்று சொல்லிக் கொண்டு அவனின் இதழ்களில் முத்தமிட்டாள்.
தூங்கிக் கொண்டிருந்தாலும் அனிச்சை செயலாய், அவளை முத்தமிட்ட பரணி, “ஜான்வி ப்ளீஸ் தூங்க விடேன்!” என்றான்!
“முடியாது” என்றாள் ஜான்வி செல்ல கோபத்துடன்!
“நீ இப்ப கண்ணைத் திறக்கல, உன்னை கண்டபடி கடிச்சு வச்சுருவேன்!” என்று சொல்லி அவனின் கன்னத்தை கடிக்கவும் செய்ய,
“ஷ். ஏய். விடுடி” என்றவாறு எழுந்து உட்கார்ந்த பரணி அப்படியே அசந்து போய் விட்டான்!
அவனால் ஜான்வியிடம் இருந்து பார்வையை திருப்ப முடியவில்லை!
ஏனென்றால் அவளின் உடை அப்படி!
வழுவழுவென்றிருந்த, உடம்போடு ஒட்டியிருந்த அந்த ஸ்லீவ்லெஸ் சாட்டின் நைட்டி, அவளின் வளைவுகளையும் வனப்பையும் அவனுக்கே அவனுக்காய் எடுத்துக் காட்ட, அவளை இப்படி ஒரு உடையில் இதற்கு முன் பார்த்து இருக்காத பரணியால் அவளை விட்டு கண்ணை எடுக்கவே முடியவில்லை!
அங்கே ஊரில் டாக்டர் ப்ரொபசனுக்கு ஏற்றவாறு ரொம்பவும் கண்ணியமான உடைகளை அணிந்து, அது காட்டன் சாரியோ இல்லை சுடிதாரோ இல்லை வீட்டில் இருக்கும் போது அணியும் நைட்டியோ கூட பார்ப்பதற்கு மரியாதை தரும் வகையிலேயே இருக்கும்!
இங்கோ அவனுக்கே அவனுக்காக மட்டும் என்று அவள் அணிந்திருக்கும் இந்த உடை!
இதுவும் கூட கனகு சொல்லி ஊர்மி இங்கு வாங்கி வைத்து இருந்தது தாம்!
கனகு தான் போனில் ஆன்லைன் சாப்களில் பார்த்து ஊர்மியிடம் சொல்லி வாங்க சொன்னார்.
அவருக்கு அந்த கடைகளில் பார்க்க மட்டுமே தெரியும் ஆர்டர் போட தெரியாது!
வேறு மாதிரி சந்தர்ப்பம் என்றால் அவர் பரத்திடமோ பவியிடமோ சொல்லி ஆர்டர் போட சொல்லியிருப்பார்! இப்போது முடியவில்லை!
எனவே ஊர்மியிடம் காட்டினார்!
ஏனென்றால் கனகுவின் கழுகுக் கண்களுக்கு ஜான்விக்கும் பரணிக்கும் எதுவுமே நடக்கவில்லை என்பது தெரிந்து விட்டது!
திருமண நாள் மறுநாள் காலை, அவர் செல்வியைக் கொண்டு கேட்கவே வைத்து விட்டார்!
வேறு யாரும் கொஞ்சம் சிறு வயது திருமணமான பெண்கள், ஜான்வியிடம் பேச அவர்கள் வீட்டில் இல்லை இப்போது!
பரணியின் அத்தைப் பெண் அனிதா இருந்தாலும் அவள் ஜான்வியிடம் அத்தனை நெருக்கம் இல்லை!
நெருக்கமாக இருக்கும் பவியும் பாரதியும் சின்னப் பெண்கள்! கல்யாணம் ஆகாத சின்னப் பெண்கள்!
எனவே செல்வியின் மூலம் கேட்டார்.
மறுநாள் குளித்து விட்டு கிச்சனுக்குள் நுழைந்த ஜான்வியிடம், சிரித்துக் கொண்டே செல்வி கேட்டாள்.
“என்னம்மா தம்பி உங்களை சந்தோசமாக வச்சுகிச்சா?”
இதன் அர்த்தம் ஜானவிக்கும் புரிந்தது!
அவள் கிராமத்தில் டாக்டர் தொழில் பார்ப்பதால், அவளுக்கும் இந்த மாதிரி சூசகமான கேள்விகளுக்கு அர்த்தம் தெரியும்!
ஆனால் பதில் ஒன்றுமே சொல்லாமல் மெல்ல சிரித்து விட்டு போய் விட்டிருந்தாள் ஜான்வி!
இதுவும் மேலும் சிலவும் கனகுவின் ஆராய்ச்சி பார்வையில் இருந்து தப்பாமல், புரிய வைத்தது.
உடனே அவர் ஊர்மியைக் கூப்பிட்டு “அங்கு உங்க ஊர்ல போயாச்சும் அவங்களுக்கு இது நடக்கட்டும், நீ தான் பார்த்துக்கணும்” என்று சொல்லி அனுப்பினார்!
அதன்படியே ஊர்மியும் அவற்றை ஜான்வியிடம் கொடுத்து அணிந்து கொள்ள சொன்னாள்.
இப்போதும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் பரணி!
“ஏய்.. ஏண்டி இப்படி என்னை கொல்ற? நான் பாவமில்லையா?” என்றான் மனதில்!
“டேய்.. உனக்காக ஸ்பெசலா இப்படி ட்ரெஸ் பண்ணிட்டு உன்னைக் கட்டிக்கிட்டு படுத்து இருக்கேன், இப்படி சாமியார் மாதிரி பார்த்துட்டு இருக்கியே உனக்கு என்ன தான் ஆச்சு?” அவளும் அவனோடு மனதில் பேசினாள்.
அவளை மெல்ல விலக்கி விட்டு எழுந்தான் பரணி!
“ரெப்ரெஷ் ஆகிட்டு வரேன்” என்றபடி ரெஸ்ட் ரூமிற்குள் புகுந்து கொண்டான்!
பாத்ரூமுக்குள் சென்றவனுக்கு ஒரே ஆற்றாமையாக இருந்தது! ஏன் எனக்கு இப்படி நடக்கிறது? அவனுள் ஒரே கேள்வி!
காரணம் ஜகதீஸ்!
அவனை அவர் ஒன்றும் சும்மா அவரின் ஹாஸ்பிட்டலை சுற்றிக் காட்ட அழைத்துப் போகவில்லை!
பார்..என்னுடைய மருத்துவ சாம்ராஜ்யத்தை! இதை ஆளப் பிறந்தவள் என் மகள் ஜான்வி!
அவளை நீயும் உன் குடும்பமும் ஒரு சின்ன கூட்டுக்குள் அடைப்பது போல உங்க அந்த சின்ன கிராமத்தில் அவளின் வாழ்க்கையை அடைத்து வைத்து இருக்கிறீர்கள்!
உயரே உயரே பறக்க வேண்டிய ஒரு பறவையின் சிறகுகளை வெட்டி அதைக் கூண்டில் அடைப்பது போல இருக்கிறது இது!
நீயும் உன் குடும்பமும் காதல் என்றும் பாசம் என்றும் என்னென்னமோ செண்டிமெண்ட்கள் பேசி அவளின் வளமான, எதிர்காலத்தில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்! என்பதை சொல்லவே அவனை அழைத்து சென்றது!
இதோ அவளுக்காகவே காத்திருக்கும் என் மைத்துனன் மகன் நிகில்! சிறு வயதில் இருந்தே ஜான்வியைக் கல்யாணம் செய்ய ஆசைப்பட்டு காத்து இருப்பவன்!
எல்லாவற்றையும் கெடுத்து விட்டது, கெடுத்துக் கொண்டிருப்பது நீயும் உன் குடும்பமும்!
“ப்ளீஸ், நான் என் பொண்ணை ரொம்ப நாளா பிரிஞ்சு இருந்தேன்! என் முதல் மனைவிக்காக!
இப்போது அவள் இறந்த பின்னாவது, என் மகளை என்னோடு வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்!
என் பொண்ணை என் கிட்ட திருப்பிக் கொடுத்துடு” என்று பெரும் ஜபர்தர்சில் ஆரம்பத்து கெஞ்சலில் முடித்தார் ஜகதீஸ்!
பக்கா செல்பிஷ், ஸெல்ப் செண்டர்டு ஜகதீஸ்!
“இங்க வந்துட்டா உங்க பொண்ணு ரொம்ப வசதியா இருப்பா, ஆனா சந்தோசமா இருப்பாளா? அவளால என்னை விட்டோ, அவளின் பாட்டிக்களை விட்டோ இருக்கவே முடியாது!” என்றான் பரணி.
“பாட்டிகளை விடு! அவர்கள் காலம் இன்னும் கொஞ்ச வருசமோ மாதங்களோ! அதெல்லாம் டாக்டரான அவள் ஏத்துப்பா, ஏன் அவள் அம்மாவின் இறப்பையே ஏற்றுக் கொண்டு தானே இருக்கா?
நீ.. நீ மட்டும் தான் இங்கு பிரச்சினை! நீ அவள் லைபில் இருந்து விலகிட்டா போதும்!” என்றார் ஜகதீஸ் கடுமையாக!
என்ன அவள் லைபில் இருந்து விலகுவதா? இத்தனை நேரமும் அவர் ஏதோ அவனை வீட்டோடு மாப்பிள்ளை ஆக்க தான் இத்தனை பேசுகிறார் என்றே நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தார் ஜகதீஸ்!
“என்ன விலகி போகணுமா? என்ன சொல்றீங்க நீங்க?”
“ஆமா , நீ அவளுக்கு டிவோர்ஸ் கொடுத்துடு.
இப்பவும் அவளைக் கல்யாணம் செய்ய நிகில் ரெடி!
உங்களுக்குள்ள பிசிக்கல் ரிலேசன்ஷிப் ஏற்பட்டு இருந்தா கூட அவளை ஏத்துக்க அவன் ரெடி தான் ! அவ்வளவு பெரிய மனசு அவனுக்கு! அத்தனை லவ் அவள் மேலே!”
“ஆமா ரொம்ப பெரிய மனசு! அடுத்தவன் பொண்டாட்டி மேலே ஆசை வைக்கும் பெரிய மனசு!” பரணி அவரை இகழ்ச்சியாக ஒரு பார்வைப் பார்த்தான்!
அவரோ அதைக் கண்டுக் கொள்ளாமல் “நீ இங்கிருந்து கிளம்பி போய்டு. ஜான்வியை நான் இங்கே இன்வெஸ்டார் மீட்டிங்க்ஸ், அது இதுன்னு ஏதாச்சும் சொல்லி இங்கேயே நிறுத்தி வச்சுக்கிறேன்.
அப்புறம் இங்க உள்ள லக்சரி வாழ்க்கை, அதிகாரம், பெரிய பதவின்னு அவ மனசை கொஞ்சம் கொஞ்சமா மாத்தி அவளை நிகிலுக்கு கல்யாணம் செஞ்சு வச்சு அவங்கள என் வீட்டோட என் கூடவே வச்சுக்க போறேன்!” என்றார் ஜகதீஸ்!
புதியதாக கல்யாணம் செய்து கொண்டவர்களை, அதிலும் ஆசை ஆசையாய் காதலித்து மணந்தவர்களைப் பிரிக்கிறோம் என்ற உணர்வு கொஞ்சமும் அவரிடம் இல்லை!
இத்தனைக்கும் அவரும் அவள் அம்மா விஜியை காதலித்து மணந்தவர் தான்!
சுயநலம்! பெரும் சுயநலம்! அவரை இத்தனை தூரம் பேச வைத்தது!
அதை மகள் மீதான பாசம் என்று அவரே நினைத்துக் கொண்டார்!
உண்மையான பாசம் அவளின் சந்தோசத்தை மட்டுமே அவளின் மகிழ்ச்சியான வாழ்க்கையை மட்டுமே தானே எண்ணியிருக்கும்!
பரணி மனம் நொந்தான்.
எப்படியும் தன் ஜான்வி தன்னை விட்டு போக மாட்டாள் என்ற நினைப்பும் அவனுள் ரொம்பவே உறுதியாக இருந்த போதும், நூற்றில் ஒரு வாய்ப்பாக, ஒரு வேளை அவளுக்கும் இந்த பெரிய ஹாஸ்பிட்டலுக்கு எம்டி ஆவது பிடித்துப் போயிருந்தால்?
நடப்பது ஆண்டவன் செயல் என்றே அவனுக்கு தோன்றியது!
அவனின் காதல் அவளை அவனிடம் கொண்டு வந்து சேர்க்கட்டும் என்று நினைத்து, ஜானவியிடம் ஒரு அவசர எக்ஸ்போர்ட் ஆர்டர் விசயமாக அவன் உடனே ஊருக்கு கிளம்ப வேண்டும் என்று சொல்ல, அவளும் அவனுடன் கிளம்ப முயன்றாள்.
ஆனால் ஜகதீஸ், அவளை மீட்டிங்க்ஸ் முடிச்சுட்டு போ என்று சொல்லி அங்கேயே வைத்துக் கொண்டு விட்டார்.
ஆரம்பத்தில் இதையெல்லாம் தவறாக நினைக்காத ஊர்மிக்கு எங்கோ பொறி தட்டியது.
பரணி கிளம்புகையில் அவன் முகத்தைக் கவனித்தாள். அதில் ஏதோ சரியில்லை என்று தெரிந்து விட்டது!
ஜான்வியிடம் “நீ ஏன் ஊருக்குப் போக வில்லை?” என்று கேட்டாள்.
“பப்பா தான் ஏதோ மீட்டிங்க்ஸ் இருக்கு, முடிச்சுட்டு போன்னு சொன்னார்” என்றாள்.
ஊர்மி ஹாஸ்பிட்டல் நிர்வாகியை அழைத்துக் கேட்டாள்.
அப்படி ஒன்றும் இல்லை என்று தெரிந்தது!
சம்திங் ராங்!
அவளுள் எச்சரிக்கை மணி அடித்தது.
அவள் நிகிலைக் கவனித்தாள்.
அவன் இப்போது ரொம்பவும் சந்தோசமாக இருந்தான்! ஜான்வியையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தான், முன்னிலும் அதிகமாய்!
அவள் அண்ணனும் ஏதோ வெற்றிப் புன்னகையுடன் இப்போது அடிக்கடி இங்கே வந்து போகிறார்!
சந்தீப் என்ன சதி செய்து இருக்கிறார் இப்போது?
அவளுள் பெருத்த சந்தேகம்!
உடனே அவள் போன் பண்ணினாள் கனகுவுக்கு!
விஷயத்தை சொல்லி, அவளின் சந்தேகத்தையும் சொல்லி பரணி அங்கு தனியே கிளம்பி வந்து கொண்டிருப்பதையும் சொன்னாள்!
“ஏதாச்சும் பண்ணி ஜான்வி இங்கிருந்து கிளப்புங்க” என்றாள்.
கனகு யோசித்தார்.
உடனே ஜானுவுக்கு “நெஞ்சு வலி” வந்து சீரியாசாகி ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆனார்!
பரணி நேராக வீட்டிற்கு வராமல் சென்னையில் இரண்டு நாட்கள் சுற்றிக் கொண்டு இருக்க,
இங்கு ஜான்வி வந்து விட்டாள் அடுத்த ப்ளைட்டில்!
காரை விட்டு பதறிபடி இறங்கினாள்!
கூடவே காரின் இன்னொரு கதவைத் திறந்துக் கொண்டு இறங்கினான் நிகில்!
error: Content is protected !!