Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ninaivellaam Neeyae

Ninaivellaam Neeyae 15

நினைவெல்லாம் நீயே 15 

அவர்களின் பேஸ் கேம்ப் போகும் நேரம் முழுவதும் எதுவும் பேசாமல் அமைதியாக ரோட்டை பார்த்து ஜீப் ஓட்டிய சரன்ஜித்தின் முகம் இறுகி இருந்தது. 

 

ஏதோ கேட்க நினைத்து அவனை பார்த்த அனாமிகாவை பார்த்து சரன்ஜித் முறைத்ததும் அவளும் அமைதியாக இடப்புறம் திரும்பி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் 



Advertisement

 

வரவழைக்கப்பட்ட அமைதியான, மிக நீண்ட நேர பயணத்துக்கு பின் அவர்களின் கேம்ப் கேட் அருகில் ஜீப் சென்று நிறுத்தி இறங்கி, கேட்டில் நின்று செக்யூரிட்டியிடம் போன சரன்ஜித் அங்கிருந்த லெட்ஜரில் முதலில் கையெழுத்திட்டவன் பக்கத்தில் பார்க்க, அங்கு வராமலே வெளியே நின்று வேறு பக்கம் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தவளின் அருகில் சென்று கோபத்தோடுமேம்..ஆப் கே பாஸ் கோயி ஐடி ஹை..ஹை தோ தே தேனா ப்ளீஸ்..செக்யூரிட்டி செக் கர்னே கே லியே சாஹியே..உஸ் கே பாத் ஹி ஆப் க்வாட்டர்ஸ் கி அந்தர் ஜா சக்தே..அவுர் மேரா சாத் ஆயியே..ஆப் கோ பி செக் கர்னே கா ஹை.. ப்ரோசிஜர் ஹை..” 

(மேம்..உங்க கிட்ட ஐடி இருக்கா..செக்யூரிட்டி செக் பண்றத்துக்காக தேவைப்படுது..செக் பண்ண பிறகு தான் நீங்க க்வாட்டர்ஸ் இருக்கற இடத்துக்கு போக முடியும்..உங்களையும் செக் பண்ணுவாங்க..இது தான் ப்ரோசிஜர்..என் கூட வாங்க..) 

Advertisement

 

Advertisement

அவன் பேச்சை கேட்டு அமைதியாக அவனை தொடர்ந்தவள் தன் கைப்பையில் இருந்த ஐடி எடுத்து குடுக்க..அதை வாங்கி செக் செய்த செக்யூரிட்டி யாரையோ அழைத்து சில நிமிடங்கள் பேசி விட்டு.. 

அவளிடம் லெட்ஜரை நீட்டி கையெழுத்து இடும் இடத்தை காட்ட, அவளும் கையெழுத்து இட்டு விட்டு ஜீப்பில் ஏற, கேட் திறந்ததும் எந்த பேச்சும் இல்லாமல் அமைதியாக ஜீப் மறுபடியும் நகர்ந்தது 

 

Advertisement

அடுத்த இருவதாவது நிமிடம் ஒரு அழகிய வீட்டின் வாசலில் சென்று ஜீப் தன் சத்தத்தை நிறுத்தியது. ஜீப் நின்ற சத்தம் கேட்டு உள்ளிருந்து வேகமாக வந்த ஆட்கள் அனாமிகாவை பார்த்ததும்ஹே..குட்டிமா..வாங்க நாத்தனார்..அத்தை ஜிஎன்ற வித விதமான குரலால் உற்சாகமானவள்வந்தாச்சு..வந்தாச்சே என் மருமகளே..”என்று ராகம் பாடி கொண்டே அத்தை என்ற அழைத்த சிறு மலரை தூக்கி கொண்டு வீட்டுக்கு உள்ளே சென்றாள் 

 

அவளை முறைத்தபடி நின்ற சரன்ஜித்தை பார்த்துதேங்க்ஸ் சரன்..உள்ளே வா..இன்னிக்கு டின்னர் இங்க தான்என அழைத்த சரவணனிடம்நோ..சீனியர்.. 

ஹேவ் ட்டூ கோ..சீ யூ லேட்டர்..”என்று விடை பெற நின்றவனின் முகத்தை பார்த்த சரவணன்என்னாச்சு டா..ஏன் முகம் ஒரு மாதிரியா இருக்குயார் மேல கோவம்.. சொல்லு 

 

எதுவும் பதில் சொல்லாமல் அங்கே இருந்து கிளம்ப பார்த்தவனைஅடேய்..நில்லு டா..நான் உன் சீனியர்..அந்த மரியாதையாவது உனக்கு இருக்கா…”  

 

எஸ்..சீனியர்..அதனால தான் எதுவும் பேசாம கிளம்பறேன்..”  

 

என்ன ஆச்சு..எனி திங்க் சீரியஸ்..சொல்லு டா..” 

 

இத சொல்லலாமானு தெரியல..இருந்தாலும் சொல்றேன்..உங்க வீட்டுக்கு வந்திருக்க கெஸ்ட் நம்ம மாறி ஆர்மிக்காரங்கள நம்ப மாட்டாங்க போல இருக்கு சீனியர்..” 

 

அவ கெஸ்ட் இல்லடா..என் தங்கச்சி..” 

 

அவங்க உங்களுக்கு யாரா வேணா இருக்கட்டும்..ஆனா எனக்கு அவங்க உங்க கெஸ்ட் மட்டும் தான்..” 

 

சரி டா..நீ சொன்ன படி அவ கெஸ்ட்டாவே இருக்கட்டும்..என்ன விஷயம் டாஅவ எதாவது உன்னை மரியாதை இல்லாம பேசினாளாஅவ அப்படிபட்ட பொண்ணு இல்லயே..வேற என்ன..” 

 

எதுவும் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றவனை பார்த்த சரவணன்ஏன் டா..என்னாச்சு.. 

உங்களுக்கு நடுவுல என்ன நடந்ததுனே எனக்கு புரியல..தலைய சுத்துடு டாகொஞ்சம் விளக்கமா சொல்றியா ப்ளீஸ்..” என முறைத்தான். 

 

சரவணனின் முறைப்பை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் கோபமாகசீனியர்உங்க கெஸ்ட்..மெயின் ஏர்போர்ட்ல வந்து இறங்கினதுமே சைகை காண்பிச்சு தான் பேசினாங்க.. 

சரி..நானும் அவங்களுக்கு பேச வராதுனு நெனச்சேன்…” 

 

ஆனா அது உண்மை இல்லனு மனன் சீனியர் வீட்டுக்கு போனதுமே தெரிஞ்சிது..ஏன் அவங்க என் கிட்ட நடிக்கணும்ஆர்மி மேன் மேலயே நம்பிக்கை இல்லாதவங்க எதுக்கு நம்ம எடத்துக்கு வரணும்…” 

 

அவன் பேசியதை கேட்டு தலையில் அடித்து கொள்ள தோன்றியது. அவனை உடனே வீட்டுக்குள் அழைத்து போனவன் அனாமிகாவை அழைத்தான்.. 

 

குட்டிமா..என்ன இதெல்லாம்.. 

சரன் உன்னை பத்தி பயங்கரமா கம்ப்ளையிண்ட் பண்றான்..ஏன் இப்டி பண்ண..” 

 

என்ன அண்ணா..நான் எதுவுமே பண்ணலையே..வர்றப்ப அவர் கிட்ட எதுவும் பேச கூட இல்லயே..” 

 

அதுக்கு முன்னாடியே நீ ஏர்போர்ட்ல ஏதோ பண்ணதா சொல்றானே..” 

 

என்ன பண்ணேன்..புரியல அண்ணா..” 

 

ஏர்போர்ட்ல அவன் கிட்ட என்ன பேசின 

 

சரவணனின் இறுகிய முகமும் குரல் மாறுதலும் அவளுக்கு ஏதோ புரிவது போல இருக்க.. 

அண்ணா அவரை பார்த்ததும் அவர் பாஷை எனக்கு தெரியாதுனு உணர்ந்தேன்..” 

 

நமக்கு தான் பஞ்சாபி தெரியாதே.. அதான் சைகைல பேசலாம்னு சைகைல பேசினேன் அண்ணா..ஏன் என்னாச்சு..” 

 

ஏன் இங்க்லீஷ்ல பேசி இருக்கலாமே..நீ அவன் கிட்ட சைகை பண்ணிட்டு மனன் அத்தான் வீட்டுல நல்லா பேசவே நீ அவனை ஏமாத்திட்டதா நினைச்சு அவனுக்கு கோவம் வந்திடுச்சு..” 

 

ஆர்மி ஆட்கள் இன்டக்ரிட்டி மேலயே நம்பிக்கை இல்லாம எதுக்கு இங்க வரணும்னு கேக்கறான்..நீ பண்ணது ரொம்ப தப்பு அவன் கிட்ட ஸாரி கேளு..” 

 

தன் தப்பு புரிந்ததுமே யோசிக்காமல் சரனிடம் மன்னிப்பு கேட்டவள்சரி அண்ணா நான் உள்ளே போறேன்என நகர்ந்தாள். 

 

அவள் நகர்ந்ததும் சரனோடு சில விஷயங்களை பேசிய சரவணனும் வீட்டுக்கு நுழைய நேராக டைனிங் டேபிளில் உக்காந்திருந்த அனாமிகாவின் உடை மாறாமல் இருப்பது, கலைந்த தலை என அவள் தோற்றம் பார்த்து சரன் மறுபடியும் முறைக்க.. 

 

இவன் என்ன எனக்கு முறை மாமனா..இந்த முறை முறைக்கறானே..என நினைத்துபடி அவளும் அவனை பார்க்க ஆரம்பித்தாள் 

 

என்னாச்சு டா..மறுபடியும் 

 

உங்க கெஸ்ட் ட்ராவல் பண்ணிட்டு வந்திருக்காங்களே..அவங்களுக்கு ரிப்ரெஷ் பண்ண தெரியாதா..இல்ல அது அவங்க ஊர்ல பழக்கம் இல்லயா..” 

 

அதை கேட்டதுமே பட்டென்று அனாமிகாநான் வந்ததுமே முகம் அலம்பி, தலை வாரி, வேற ட்ரஸ் மாத்தி சாமியறைக்கு போய் கும்பிட்டு வந்தாச்சு..அண்ணா..” 

 

கொஞ்ச நேரம் என் மருமகளோட விளையாடின பாவம்..இப்ப இப்டி இருக்கற மாறி ஆகி இவரெல்லாம் என்னை கேள்வி கேட்கற மாறி ஆகிடுச்சு..” 

 

ஏன் இந்த ஆலு பரோட்டாக்கு கோவம் வந்து எகிரறாரு எனக்கு புரியல அண்ணா..நான் எப்டி இருந்தா இவருக்கு என்ன 

 

நம்ம ஊர்ல எல்லாம் ரிப்ரெஷ் பண்ணாம சாப்பிட கூட விட மாட்டாங்கல்ல..அண்ணா..இத அங்க சொல்லுங்க..” என நக்கலோடு சொல்லி அவன் தோற்றத்தை தலையோடு கால் பார்க்க..அதிலே அவனுக்கு கோபம் அதிகமாக ஆரம்பித்து வீட்டுக்கு இருந்து வெளியே போக திரும்பினான் 

 

எப்போதும் குட்டிமா என கொஞ்சலாக அழைக்கும் சரவணனின் குரல், அனாமிகா என்று இறுகிய குரல் மாற்றம் அவளை சில நொடிகளில் அமைதியடைய செய்தது.  

 

நீ ஏன் டா எப்ப பாரு கிளம்பறத்துக்கு ரெடியா நிக்கற….அவளை விடு சரன்..உன்னை கூப்பிட்டது நான் தானே..என் மேல உனக்கு கொஞ்சமாவது மரியாதை இருந்தா..நீ அந்த ரூம்க்கு போய் ரிப்ரெஷ் ஆகிட்டு வா..”என அவனை அனுப்பி விட்டு அனாமிகாவை பார்த்த பார்வையில் அவள் தலை தானாக குனிந்தது 

 

நாம வளர்ந்திட்டோம்னா அதுக்கான முதிர்ச்சி நமக்கு இயல்பா இருக்கணும்..அதுவும் நாம இதுவரை பாக்காத, பழகாத ஒரு புது மனுஷன் கிட்ட பேசும் போது அது தானா வரணும்..” 

 

அமைதியா யாரையும் புண்படுத்தாம பேசற அந்த குணம் எங்க போச்சு..உன் இயல்பு இது இல்லயேஇத சத்தியமா உன் கிட்டேந்து நான் எதிர்பார்க்கல..எனக்கு ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு 

 

நமக்கு சம்பந்தமே இல்லாம அவங்களை கேலி பண்றது எல்லாம் ரொம்ப சில்லறைத்தனம் உனக்கு புரியுதா….”  

 

ஸாரி அண்ணா..இந்த தப்பை பண்ண மாட்டேன்ஆனா அவர் மட்டும் என்னை கிண்டல் பண்ணலாமா…” 

 

அத நான் அவன் கிட்ட நிச்சயம் கேப்பேன்..நீ ஸாரி.. சொல்லணும்ங்கறத்துக்காக நான் சொல்லலனு உனக்கு புரியும்னு நெனக்கறேன்என அமைதியாக சொல்லி விட்டு சரவணன் தன்னறைக்குள் நுழைந்தான் 

 

அங்கிருந்த அவன் குழந்தையை பார்த்ததும் சற்று மனநிலை மாறி அமைதியடைய அவளை தூக்கி கொஞ்சி கொண்டே ஹாலுக்கு வந்தவன் கண்டது அவன் மனைவி பரிமாற எதுவும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்க்காமல் அமைதியாக சாப்பிட்டு கொண்டு இருந்த அனாமிகாவையும், சரனையும் தான்.(தொடரும்) 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!