Skip to content
Post Views: 3,453
இதோ.. இதோ.. என் பல்லவி
அத்தியாயம் – 15
Advertisement
Advertisement
சிவகாமியை தூக்கி கொண்டு வந்தவனால் பல்லவியின் அழுகை சத்தம் கேட்டு, அவனால் நகர முடியாமல், அந்த வீட்டின் வெளியே உள்ள சேரில் அமர்ந்து விட்டான்..
Advertisement
“சிவா, சிவாமா” என்று ஆபிதாவின் அழுகை சத்தத்தை கேட்டு அவனால் ஆபிதா வீட்டை விட்டு செல்ல முடியவில்லை..
Advertisement
சிவகாமியை இறக்கி விட்டவன் “அம்மா கிட்ட போ ” என்று குழந்தையை வீட்டினுள் அனுப்பி விட்டு, வீட்டு வாசலிலே அமர்ந்து விட்டான்..
பல்லவிக்கு விக்ரம் சிவகாமியை தூக்கி செல்வான் என்று நினைக்க வில்லை, தன் மகள் தன்னை விட்டு சென்று விட்டாள், என்பதை தாங்க முடியாமல் கதறி அழ..
அவள் அழும் சத்தம் கேட்டு, அறையில் தூங்கி கொண்டு இருந்த ஆஷிக் எழுந்து வந்து “அம்மா ஏன் அழுவுற, அழாத” என்று சமாதானம் பண்ணிய ஆஷிக்கை அணைத்து கொண்டவள். “சிவா, சிவா பாப்பா’ போயிட்டா என்று அழ..
“அம்மா பாப்பா இங்கே தானே இருக்கா” என்று ஆஷிக் சொல்ல…
“பாப்பா வா ” என்றவள் நிமிர்ந்து பார்க்க.
சிவாக்குட்டி தாய் அழுவதை பார்த்து, குழந்தையும் அழுது கொண்டே அவளின் பக்கத்தில் நிற்க.
“சிவாமா, வாடா ” என்று மகளை அணைத்துக்கொண்டவள். மகள் அழுகுவதை பார்த்து “அழ கூடாது, அம்மா அழழ பாரு” என்க..
குழந்தை அம்மாவின் முகத்தை பார்த்து அழுகையை நிருத்தி இருந்தது..
மஹாமுது முபாரக்கிடம், “நீ பண்ணுற ஏதுவும் சரியில்ல முபாரக், ஆபிதாவை விக்ரமோடு அனுப்பி விடு” என்றார்..
தந்தையை பார்த்து முறைத்த முபாரக். “ஆபிதாவையும், சிவகாமியையும் விக்ரமோட போக சொல்லுங்க, ஆனா நான் ஆஷிக்கை அனுப்ப மாட்டேன்”..
“ஏன் அனுப்ப மாட்டா”?.
“அவன் ஒரு இந்து,! ஆஷிக்கை நான் எப்படி அவன் வீட்டுக்கு அனுப்புவேன்”..
“அப்போ நீ கூட்டிட்டு போக போறீயா, உன் பொண்டாட்டி ஆஷிக்கை ஏத்துப்பாளா. ஆபிதா மாதிரி பாசம் காட்டி வளப்பாளா சொல்லு, நடக்குறத பேசு.. என் காலம் முடிஞ்சு போச்சு உன்ன நம்பி ஆஷிக்கை விட முடியாது,. ஆனால் நான் ஆபிதா கிட்ட என் பேரனை சந்தோஷமா விட்டுட்டு போவேன், முதலில் உன் வாழ்க்கையை பாரு, அப்புறம் ஆஷிக்கை பத்தி பேசலாம்” என்றார்..
ஆபிதாவின் தங்கை வாஜிதாபானு விசயம் தெரிந்து மஹாமுது இல்லம் வர.
வாஜிதாவின் கணவர் ஷேக்தாவுத்தும் மஹாமுதுவின் இல்லம் வந்தார். அவர்களின் வீட்டு வாசலில் தலைமேல் கைவைத்து அமர்ந்து இருந்த விக்ரமை பார்த்த ஷேக்தாவுத்”யாரு நீங்க,? மாமா சொன்ன விக்ரமா நீங்க வாங்க உள்ள வாங்க ” என்று வீட்டினுள் அழைத்து வந்தான்..
மஹாமுது முபாரக்கை திட்டி கொண்டு இருப்பதை கேட்டு கொண்டே வந்தான் விக்ரம்..
தன் மகளையும் பல்லவியையும் பார்க்க..
பல்லவி மகளை மடிமீது வைத்து, ஆஷிக்கை கைஅணைத்து பிடித்து கீழே அமர்ந்து இருக்க..
விக்ரம் பார்ப்பதை உணர்ந்த பல்லவி,. அவளும் விக்ரமை பார்க்க, கண்களாலே ஏன்டி இப்படி பண்ணுற, என் கூட வா என்பது போல் கண்களால் பேச…
அவளோ விக்ரம் சிவாக்குட்டியை தூக்கி சென்று விட்டான்.. தன்னை அவன் இருக்கும் இடத்துக்கு வர வைத்து விடுவான் என்று நினைத்து இருக்க…
அவன் எங்கும் செல்லாமல், தன் மகளை தன்னிடமே தந்து விட்டு, தனக்காக அவமானம் பட்டாலும் பரவாயில்லை என்று இங்கே இருக்கும் விக்ரமை பார்த்து இருந்தாள்..
விக்ரம் பல்லவி பிள்ளைகளை அணைத்து வைத்திருந்ததை பார்த்து இருந்தான்.. அவனுக்கு அவள் ஏதோ சொல்லவருவது போல் தெரிய.. என்ன என்பது போல் அவளையே பார்த்து இருந்தான்..
அவளோ விக்ரமை பார்த்து கொண்டே ஆஷிக்கை அணைத்து கொண்டு அழ..
புரிந்து விட்டது விக்ரமுக்கு, முபாரக் என்ன சொல்லி ஆபிதாவை மிரட்டி வைத்து இருக்கிறான் என்று, ஒரு முடிவு எடுத்தவனாக..
முபாரக்கிடம் சென்றவன் நான் என்ன பண்ணுணா என்ன நம்புவீங்க என்றான்…
” உன்ன நான் ஏன் நம்பனும்”.. என்றான் முபாரக்..
“நீங்க சொன்னா தான் ஆபிதா என் கூட வருவா, பிலிஸ் சொல்லுங்க என்கிட்ட இருந்து என்ன எதிர் பாக்குறீங்க,. என்கிட்ட பணம், சொத்து எல்லாம் இருக்கு, அத விட நீங்க ஏதோ என்க்கிட்ட எதிர் பாக்குறீங்கன்னு நினைக்கிறேன் சொல்லுங்க” என்றான்..
“நீ உன் பொண்ண, ஆபிதாவை அழைச்சுட்டு போ, ஆனா ஆஷிக்கை நான் உங்க கூட அனுப்ப மாட்டேன்”..
“ஆபிதா ஆஷிக் இல்லாம என் கூட வரமாட்டா, அவள நான் ஏற்கனவே பாத்து இருக்கேன், ஆஷிக்கை அவ தன் மகனை போலவே பாத்துட்டு இருக்கா. அந்த பையன விட்டு, அவ எப்படி வருவா” என்றான்.
“அது எனக்கு தெரியாது, நான் ஆஷிக்கை ஒரு இந்து வீட்டுக்கு அனுப்ப மாட்டேன் ” என்றான்.
விக்ரம் அப்பாட என்றவன்.”ஏன் சார் இத முதல்லயே சொல்லி இருக்கலாமுல்ல” என்றவன். “நான் கடவுளே இல்லை என்று பேசுறவன் சார், ஆஷிக் எங்க வீட்டுக்கு வந்தாலும், அவன் ஒரு இஸ்லாமிய பையன் மாதிரியே தான் அவனை நான் வளப்பேன்” என்று விக்ரம் சொல்ல..
“அதெல்லாம் முடியாது, நான் ஆஷிக்கை உன் கூட அனுப்ப மாட்டேன்” என்றான்.
“அது தான் விக்ரம் மாப்பிள்ளை சொல்லிட்டாரே அப்பறம் என்ன முபாரக்” என்றார் மஹாமுது..
“மாப்பிள்ளையா நானா” என்ற விக்ரம் மஹாமுதுவிடம் நன்றி சொல்லி அணைத்து கொள்ள..
“இல்லை அதெல்லாம் ஒன்னும் இல்லை” என்று முபாரக் ஏதோ சொல்ல வர.. ஷேக்தாவுத் முபாரக்கிடம் “ஆபிதாவை பாருங்க எப்படி ஓஞ்சு போயி உட்கார்ந்து இருக்கா, இந்த 4 வருஷமா நமக்காக வாழ்ந்த பொண்ணு அவ, அத நெனச்சு பாருங்க.. விக்ரமை பத்தி எனக்கு ஒரளவு தெரியும், அவர் ஆஷிக்கை நல்லா பாத்துப்பாரு.. நாமலும் இருக்கோமுல்ல. சேர்ந்து ஆஷிக்கை பாத்துக்கலாம்” என்றான்..
“நான் இதுல ஒன்னும் சொல்லுற மாதிரி இல்ல. எனக்கு இதுல விருப்பம் இல்ல, அப்பறம் உங்க இஷ்டம்” என்றான் முபாரக்…
வாஜிதா பானு தான் ஆபிதாவை “எழுந்துரு ஆபிதா அழாத கண்ணை துடை” என்றவள்.. அக்காவுக்கு கண்ணை துடைத்து விட.
ஆபிதாவுக்கு எழுந்து நிற்க முடியவில்லை ஏதோ கண்கள் இருட்டுவது போல் தெரிய, “ஆஷிக்” என்று மகனை அழைத்தவள் கீழே சரிய போக விக்ரம் ஆபிதாவை பிடித்து கொண்டான்..
என்ன ஆச்சு என்று அனைவரும் ஆபிதாவின் பக்கம் வர.. ஆபிதா மயங்கி இருந்தாள்.. “பல்லவி, பல்லவி” என்று விக்ரம் ஆபிதாவின் கன்னத்தை தட்ட, சுயநினைவு இல்லாமல் மயங்கி இருக்க…
வாஜிதா தண்ணீர் கொண்டு வந்து விக்ரமிடம் தர..
விக்ரம் பல்லவியின் முகத்தில் தண்ணீர் தெளித்து பார்க்க, பல்லவி எந்த ஒரு அசைவு இல்லாமல் இருக்க..
ஆஷிக் தான் “அம்மா காதில் இருந்து இரத்தம் வருது ” என்று சொல்ல.. பதறி போன அனைவரும். ஆபிதாவை ஹாஸ்பெட்டலில் சேர்த்தனர்..
ஆபிதாவை ஹாஸ்பெட்டலில் சேர்க்க காரில் வரும் பொழுது ஆபிதாவில் காதில் இரத்தம் வந்து கொண்டே இருக்க, விக்ரம் “பல்லவி, பல்லவி” என்று அவனின் கைகுட்டையை வைத்து துடைத்து கொண்டே வந்தான். இரத்தம் காதில் இருந்து வருவது சரியில்லையே என்றே மனதில் தோன்ற. ஹாஸ்பெட்டல் வந்து சேர்ந்தனர்..
ஆபிதா ஐ , சி, யூ வில் இருந்தாள்..
டாக்டர் ஆபிதாவை செக் பண்ணி பார்த்து விட்டு. என்ன செய்ய வேண்டும் என்று நர்சிடம் சொல்லி விட்டு வெளியே வந்தார்.
முபாரக்கை பார்த்து டாக்டர் கண்ட படி திட்ட..
அனைவரும் என்ன என்பது போல் பார்த்தனர்..
மஹாமுது டாக்டரிடம் வந்து என்னாச்சு ஆபிதாவுக்கு, ஏன் முபாரக்கை திட்டுறீங்க என்றார்..
“6 மாசம் முன்னாடி ஆபிதாவுக்கு செக்கப் பண்ண, முபாரக் ஆபிதாவை கூட்டிட்டு வந்தார்.. அப்பவே நான் முபாரக்கிட்ட சொன்னேன் ஆபிதாவுக்கு நல்லா படியா குணம் மாகிட்டே வருது. புதுசா ஒரு டேப்லெட் ஒன்னு குடுத்து போட சொன்னேன், இந்த டேப்லெட்டை ஆபிதாவுக்கு போட்டா பழயது எல்லாம் ஞாபகம் வந்துருமுன்னு சொன்னேன்.
முபாரக் ஆபிதாவுக்கு பழயது எல்லாம் ஞாபகம் வரவேண்டாம், இந்த டேப்லெட்டை தரவேண்டாமுன்னு சொன்னாரு.
நான் அப்பவே இவர் கிட்ட சொன்னேன்.. ஆபிதாவுக்கு குணமாகி பழயது ஞாபகம் கொஞ்சம், கொஞ்சமா வரும் போது இந்த டேப்லெட்டை அவங்க கண்டிப்பா சாப்பிடலன்னா, அவங்களுக்கு நினைவு வர முடியாம, மூளையும் அவங்க நினைவுகளும் போராடி, மூளைக்கு போற இரத்தம் அதிகமா போகும் போது பெரிய பிரச்சனை வருமுன்னு.
இவர் நான் சொன்னத கேட்காமல் இருந்துருக்காரு, ஆபிதாவுக்கு அந்த டேப்லெட்டை தரல. அதனால தான் ஆபிதாவுக்கு காதில் இருந்து இரத்தம் வருது. மூளைக்கு போற இரத்தம் போக முடியாம காதில் இருந்து இரத்தம் வருது,.
இந்த இரத்தம் வர்ரது நின்னாதான் சொல்ல முடியும்..ஆபிதாவுக்கு காதில் இருந்து வரும் இரத்தம் நிக்கனும், அப்பதான் உயிர் பிழைக்க முடியும், இல்லனா கஷ்டம் என்றவர்..
இப்போ பேஷன்ட் கோமால இருக்காங்க, இரத்தம் நின்னு இரண்டு நாள் கழிச்சா தான் நினைவு வரும்”.. முபாரக் பார்த்த டாக்டர் “ஆபிதாவுக்கு எது ஆனாலும் அதுக்கு நீங்க தான் காரணம்” என்றார்..
மஹாமுது முபாரக்கின் சட்டையை பிடித்து அடித்தார். “டாக்டர் என்ன சொல்லிட்டு போறார் பாரு, எல்லாம் உன் சுயநலம், நீ எல்லாம் என் பிள்ளையா ஆபிதா உயிரோட விளையாடி இருக்க”..
“அது , அது வாப்பா ஆபிதாவுக்கு இப்படி ஆகுமுன்னு நான் நினைக்கல, பழயது ஞாபகம் வரகூடாதுன்னு தான் நான் நெனச்சேன், இப்படி ஆகுமுன்னு நான் எதிர் பாக்கல” ஆபிதா சாரி ஆபிதா என்று முபாரக் அழ..
” வேற என்ன எதிர் பாத்தீங்க” என்று ஷேக்தாவுத் முபாரக்கை பார்த்து கேட்டவர். “அங்கே பாருங்க” என்று காண்பிக்க.. விக்ரம் தலைமீது கைவைத்து கண்ணீரோடு அமர்ந்து இருந்தான். டாக்டர் முபாரக்கிடம் ஆபிதாவை பத்தி அனைத்தையும் சொல்ல, உடைந்து போனான் விக்ரம்..
“வாப்பா நான் பண்ணுனது தப்பு தான்”, என்றான் முபாரக்..
error: Content is protected !!