Skip to content
Post Views: 3,767
இதோ.. இதோ.. என் பல்லவி
அத்தியாயம் -23
Advertisement
Final -1
Advertisement
Advertisement
விக்ரம் அவனின் வீட்டுக்கு நுழைய, “ஏய் அவனை சுடு, சுடு அவனை சூட் பண்ணு” என்று பல்லவி கத்த..
Advertisement
ஆஷிக்கோ, “பல்லவிமா என்னை ரிவே பண்ணுங்க, என்னை கொள்ள வர்ராங்க” என்று கத்தினான்..
சூர்யாவோ “டேய் என்ன காப்பாத்துடா மூணு பேர் என்ன சுட வர்ராங்க, அம்மா என்னை ரிவே பண்ணு” என்றான்.
“இதோ.. வர்ரேண்டா, என்றான் ஆஷிக்.
பல்லவி ஆஷிக்கிடம் “டேய் ஆஷிக் உன் பின்னாடி பாரு ஒருத்தன் வர்ரான் பாரு என்றாள்..
அவன் பார்பதற்குள் அவனை எதிரி ஒருவன் சுட்டு விட..”டேய் என்னை சுட்டுடாங்கடா, என்றான். ஆஷிக்..
“சரிடா நான் பாத்துக்கிறேன்” என்று அனைவரும் சூட்டிங் கேம் விளையாட..
விக்ரமோ வீட்டிற்கு வந்து 5 நிமிடம் ஆனது. மூன்று பேரும் கேம் விளையாடிக்கொண்டு இருக்க.. இவனை யாரும் கண்டு கொள்ளாவே இல்லை.
சிவாக்குட்டி டி. வி பார்த்து கொண்டு இருந்தவள். விக்ரமை பார்த்து. ஓடி வந்து தகப்பனின் மேல் ஏறி. “டாடி எப்போ வந்தீங்க” என்றாள்.
“இப்போ தான்டா வந்தேன்” என்றவன். “நீ சாப்டீயா” என்றான்..
“உம் அப்பாவே சாப்பிட்டேன் சுந்தர் தாத்தா ஊட்டிவிட்டார்” என்றவள். “டாடி என் கூட யாரும் விளையாட வர மாட்டேங்குறாங்க. எப்போதும் சூட் பண்ணி விளையாடுறாங்க. இந்த பல்லவி அம்மா எனக்கு போனே தர மாட்டுறா. நீ இவளா டைவெர்ஸ் பண்ணு” என்ற மகளை பார்த்து சிரித்தான்..
மகள் தினமும், இவன் வந்தவுடனே சொல்லும் சொல்லை அப்படியே சொன்னவுடன்..
“ஏய் என்னடி” என்று விக்ரம் பல்லவியை பார்த்து கேட்க..
பல்லவி மகன்களோடு ப்பீரிபையர் கேம் விளையாடி கொண்டே. “உங்க டாடிக்கிட்ட சொன்னா நாங்க பயந்துருவோமா போடி சில்வண்டு” என்று சொன்னாள் கேம் விளையாடி கொண்டே..
“அம்மா உன் பின்னாடி, ஒரு வெள்ளைகாரன் வர்ரான் பாரு”.. என்றான் சூர்யா..”ஓகேடா கண்ணா அவனை அம்மா சூட் பண்ணுறேன் பாரு” என்று மூன்று பேரும் சேர்ந்து விளையாட..
“டாடி மம்மி போன் தரமாட்டுறா.. என்ற மகள் சொல்லவும்..
“ஏன் பல்லவி சிவாக்குட்டிக்கு போன் தர மாட்டுற” என்றான் விக்ரம்..
“ஏங்க அவ ஸ்கூல் போயிட்டு வந்து 2 ஹவர்ஸ் போன் பார்த்த. நான் இப்போ தான் பிள்ளைகளோடு கேம் விளையாடுறேனா. உங்க பொண்ணு பேச்ச கேக்காதீங்க”..என்றவள் மகளை பார்த்து.
“அடியேய் உங்க டாடி காலையில் ஆபிஸ் போயிடுவாரு, நீ என் கிட்ட தான் இருக்கனும். உங்க டாடியை பார்த்தவுடனே கம்பிளைன்டு பண்ணுற போடி. போனை தர முடியாது”…
“டாடி” என்று அழுத மகளை இருடா செல்லம் என்று இன்டர் நெட்டை ஆப் பண்ண.. “டாடி இன்டர் நெட்டை ஆன் பண்ணுங்க” என்று ஆஷிக்கும், சூர்யாவும் தகப்பனிடம் கேட்க…
விக்ரம்மோ “முடியாது” என்று சொல்ல..
“ஏய் குட்டி சிவகாமி வாடி” என்றாள் மகளை..
“ஏய் ஏன்டி, எங்க அம்மாவை திட்டுற” என்று மகளை தூங்கி தோளில் போட்டுக் கொண்டான் விக்ரம்..
சிவாக்குட்டிக்கு சிரிப்பு தாங்கமுடியால “போச்சு கேம் போச்சு, டாடி ஆப் பண்ணிட்டாரு” என்று சிரிக்க..
உள்லறையில் இருந்து வெளியே வந்த சுந்தர். “என்னாச்சு யாரு வொய்பையை ஆப் பண்ணது” என்று வெளியே வர..
“அப்பா நான் தான் இவங்க கேம் விளையாடுறாங்கன்னு நெட்டை ஆப் பண்ணேன்,” என்றான்..
“என்ன விக்ரம்? இப்படி பண்ணிட்ட என்னை ஒருத்தன் கொன்னுட்டான் தெரியுமா, கேம் எவ்வளவு நல்லா போச்சு. இன்னைக்கு நான் ஜெயிச்சு பாயிண்ட் எடுக்கலாமுன்னு நெனச்சேன். இப்படி பண்ணிட்டீயே” என்று வருத்தப்பட..
“அப்பா! நீங்களுமா” என்று விக்ரம் கேட்க..
“நீயும் விளையாட வா விக்ரம். கேம் ரொம்ப நல்லா இருக்கும்” என்று சுந்தர் சொல்ல..
“போங்கப்பா நானும் என் பொண்ணும் கேம் விளையாட மாட்டோம் இல்லடா” என்று மகளை கேட்க.”ஆமாம் டாடி” என்றாள் சிவா..
“நீங்க குளிச்சுட்டு வாங்க சாப்பிடலாம்” என்றாள் பல்லவி…
“இப்பா தான் நான் உன் கண்ணுக்கு தெரியுறேனா பல்லவி” என்றான்..
பிள்ளைகளை பார்த்த விக்ரம் “நீங்க எல்லாம் சாப்டீங்களா” என்று கேட்க..
“நாங்க எல்லாம் அப்பவே சாப்பிட்டோம் டாடி என்று பிள்ளைகள்” சொல்லிவிட்டு. நாங்க இரண்டு பேரும் தாத்தா கூட படுக்க போறோம் என்று ஆஷிக்கும், சூர்யாவும் சுந்தரின் அறைக்கு செல்ல..
விக்ரம் மகளிடம் தன் போனை விளையாட கொடுத்து விட்டு. குளிக்க சென்றான்..
விக்ரம் போனில் வீடியோ பார்த்து கொண்டு இருந்த மகளை பார்த்த பல்லவி “இப்போ உனக்கு சந்தோஷமா டி” என்று மகளை திட்ட..
“டாடி”! என்று கத்திய மகளிடம் குளித்துவிட்டு வந்த விக்ரம் “என்னடா” என்று கேட்க..
“அம்மா திட்டுறா” என்றாள்.. “ஏய் என்னடி என் பொண்ண திட்டுற உன்னை மலேசியா பேக் பண்ணி இருவேன்” என்று மிரட்ட…
“முதல்ல அத செய்ங்க எனக்கு வாப்பையும் பாங்கனும் போல இருக்கு” என்று விக்ரமை பார்த்து சொல்லி விட்டு பிள்ளைகளுக்கு பால் எடுக்க சென்றாள்..
அனைவருக்கும் பாலை சூடு பண்ணி எடுத்து கொண்டு வந்தவள். மகளிடம் “ஏய் வாயாடி இந்தாடி குடிச்சுட்டு போன் பாரு” என்று பாலை மகளின் முன் வைத்து விட்டு சென்றவள்.
சுந்தருக்கு, ஆஷிக், சூர்யா மூன்று பேருக்கும் பாலை குடுத்து விட்டு வந்தாள்.
சுப்பராம்மையா இரண்டு நாட்களாக சமையல் வேலைக்கு வர வில்லை. உடல் நலம் சரியில்லை என்பதால். அதனால் பல்லவிதான் இன்று சமைத்து இருந்தாள். இன்று பிள்ளைகள் கேட்டார்கள் என்று சிக்கன் பிரியாணி சமைத்து இருந்தாள்..பிள்ளைகள் ஆசையாக உண்டு இருந்தார்கள்.
கணவனுக்கு பிரியாணியை சூடு பண்ணி எடுத்து கொண்டு டைனிங் டேபளின் வைத்துக்கொண்டு இருந்தவளை பார்த்த விக்ரம்..
“நீ சும்மா ஒரு இடத்துல உட்கார மாட்டீயா பல்லவி, நான் எடுத்து போட்டு சாப்பிட மாட்டேனா, உட்காருடி” என்று ஒரு அதட்டல் போட..
நீ பாட்டுக்கு பேசு என்பது போல. விக்ரமுக்கு சாப்பிட அனைத்தையும் தட்டில் எடுத்து வைத்தாள்..
“ஏன் டி காது கேட்காத, திட்டுறேனே கோபம் வரலீயா”,..
“நீங்க திட்டி எனக்கு கோபம் வருது, காமெடி பண்ணாதீங்க விக்ரம்” என்றவளை ஆசையாக பார்த்திருந்தான்.
பல்லவி ஒரு பெரிய கிளாசில் பால் எடுத்து கொண்டு வந்து சேரில் அமர்ந்து கொண்டு பருக..
விக்ரம் மனைவியை பார்த்து க்கொண்டே சாப்பிட்டவன். “சூப்பரா இருக்குடி பிரியாணி” என்று பல்லவி சமைத்ததை ரசித்து சாப்பிட. “இன்னும் கொஞ்சம் போடவா” என்று கேட்டவளை. “போதும் பல்லவி நைட்டு ரொம்ப சாப்பிட வேண்டாம்” என்றான்..
“டாடி எனக்கு தூக்கம் வருது ” என்று சிவா விக்ரமிடம் சொல்ல.
“வாடி தூங்கலாம்” என்று பல்லவி அழைக்க..
“நீ வேண்டாம் போ. டாடி தான் எனக்கு வேணும்” என்றவளை.
“போடி நாளைக்கு மம்மி சாக்கி வேணும். மம்மி பிஸ்கட் வேணுமுன்னு வருவல அப்போ வச்சுக்கிறேன்” என்றவளை. “பல்லவி”! என்று விக்ரம் ஒரு அதட்டல் போட..
பல்லவி மகளை முறைத்து விட்டு சென்றவள்..
“ஒன்னும் சொல்ல கூடாது உங்க மகளை”..
“டாடி மம்மி திட்டுற”.. என்ற மகளை தூக்கியவன்.
“நீ வாடா செல்லம் நம்ம தூங்குவோம்” என்று அறைக்கு சிவகாமியை தூக்கி சென்றான்..
பல்லவி வீட்டில் உள்ள அனைத்து லைட்டையும் ஆப் பண்ணிவிட்டு, வீட்டை பூட்டி விட்டு, பெட்ரூம்பிற்கு நுழைய, விக்ரம் மகளுக்கு கதை சொல்லி தூங்க வைத்துக்கொண்டு இருந்தான்..
பல்லவி உடல் கழுவி, வேற உடை மாற்றி விக்ரமிடம் வர.
சிவாவை தட்டி கொடுத்துக்கொண்டு இருந்தவன். மகள் நன்றாக தூங்கிய விட்டாள் என்று தெரிந்து பின் பல்லவியை பார்த்தான்.
அவளோ கணவனை முறைக்க.
“என்னடி முறைப்பு” என்றவன்.
கட்டிலில் இருந்து எழுந்தவன். பல்லவியை அலேக்காக தூக்கிவிட்டு பெட் பக்கத்தில் உள்ள சோபாவில் மனைவியோடு அமர..
“போங்க” என்று தள்ளிய பல்லவியை.
“எங்கடி போக” என்றவன் பல்லவியின் கழுத்தில் முகத்தை புதைத்தான்..
“உங்க பொண்ணு கிட்டயே” என்றாள்..
“இப்போ பொண்ணோட அம்மாவ கொஞ்சுற டைம்” என்று பல்லவியின் காது மடலை உரச.
“ஆமாம் ஆமாம்” என்று சிரித்தவள் விக்ரமை அணைத்து கொண்டாள்..
“மாத்திரை சாப்டீயா பல்லவி” என்றான்..
“உம்” என்று முணங்க..
“தூங்கம் வருதாடி” என்று விக்ரம் பல்லவியிடம் கேட்க..
“இல்ல விக்ரம் பகல்ல நல்லா தூங்கிட்டேன்” என்றவளை..
“அப்போ, அப்போ” என்று விக்ரம் மனைவியிடம் சரசம் பேச..
“தள்ளி போங்க எப்போ பார்த்தாலும் இதே நினைப்பு தான்” என்று அவனை தள்ளியவளிடம்..
“உன்கிட்ட வேற என்னடி நினைப்பேன்” என்று மனைவியை அணைத்துக்கொண்டவன்..
பல்லவிக்கு நினைவு திரும்பி ஒரு மாதம் ஆக போகுது, ஒரு மாதமும் பல்லவியிடம் கோடி கதை பேசியிருந்தான் விக்ரம். இருவரும் இரவில் பேசி பேசியே களைத்து போகி தூங்குவார்கள். இருவரும் பேச ஆயிரம் விசயங்கள் இருந்தது.
இதில் ஒரு வாரம் பல்லவியை மலேசியா அழைத்து சென்று வந்திருந்தான் விக்ரம்.. மலேசியாவில் உள்ளவர்களிடம்
பல்லவி நன்றி தெரிவிக்க. கோபம் கொண்டவர் நீ எங்க வீட்டு பொண்ணு எதற்கு நன்றி சொல்லுற என்று சண்டைக்கு வர. பல்லவி இவர்கள் அன்பில் உருகி போனாள்..
மலேசியாவில் உள்ளவர்களுக்கு பல்லவிக்கு நினைவு வந்தது சந்தோஷமே.. அவர்கள் பல்லவியிடம் ஒன்றாக பேசி பழக. இவளும் அவர்களோடு ஒரு வாரம் இருந்துவிட்டு வந்தாள்..
பல்லவி தினமும் மஹாமுதுவிடமும், வாஜிதாவையும் போனில் அழைத்து பேசுவாள்.. வாஜிதாவும் பல்லவிக்கு போனில் அழைத்து கர்பகால தொந்தரவு பத்தி உடல் நலத்தை பற்றி பேசுவாள். “
முபாரக் வாரம் ஒரு முறை பல்லவியிடமும், ஆஷிக்கிடமும் பேசுவான்.
இந்த ஒரு மாத காலமும் விக்ரம் மனைவியிடம் இரவு வெகுநேரம் பேசுவான்.. பல்லவி இரவு முழுவதும் விக்ரமிடம் பேசிவிட்டு பகலில் தூங்குவாள்.. ஜெனிபிள்ளைகளை ஸ்கூலுக்கு அழைத்து செல்ல. பின்பு ஸ்கூல் முடிந்தவுடனே பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து வந்து பார்த்துக்கொள்ள.
பல்லவிக்கு ஓய்வு எடுக்க முடிந்தது..
பிள்ளைகள் பானுவை விட பல்லவியிடம் மிகவும் ஒன்றி இருந்தனர்.. பானு பிள்ளைகளிடம் கண்டிப்பு, அக்கரை என்று சற்று தள்ளி இருந்து தான் பார்ப்பாள். பல்லவியோ பிள்ளைகளோடு ஒன்றாக சேர்ந்து விளையாடுவது, சண்டைபோடுவது அவர்கள் தேவையை பூர்த்தி செய்ய என்று பிள்ளைகளோடு ஒன்றாக கலந்து இருக்கிறாள். பிள்ளைகளின் முகத்தை வைத்தே அவர்களுக்கு என்ன வேண்டும், என்ன நினைக்கிறார்கள் என்று ஒரே மாதத்தில் அறிந்திருந்தாள்…
error: Content is protected !!