Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதோ இதோ என் பல்லவி

Itho Itho En Pallavi 23 2

“விக்ரம்  மனைவியை  ஆசை தீற கொஞ்சி விட்டு அவளுக்கு  வயிற்றில் தடவ கீரிமை எடுத்துக்கொண்டு வந்தவன்.

“கட்டிலில்  வந்து படு பல்லவி” என்றான்.



Advertisement

“நீங்க தான் சோபாவுக்கு  தூக்கிட்டு வந்தீங்க,  இப்போ உங்க வேல  முடிஞ்சவுடனே  நான் எழுந்து போகனுமா  முடியாது” என்று சொல்லியவளை  மறுபடியும் தூக்கி சென்று கட்டிலில் படுக்க வைக்க.

Advertisement

“அது  அந்த  பயம் இருக்கனும் விக்ரம் தம்பி” என்றவள் விக்ரமை பார்த்து சிரிக்க..

Advertisement

“படுடி  ரொம்ப பேசுற வாயை. கடிச்சு வைக்கிறேன் இரு” என்றவன், அவளை நன்றாக படுக்க வைத்து, அவளின்  ஆடையில் வயிற்றின்  பகுதி தெரியும்  மாறு   தூக்கி விட்டு சரிபண்ணியவன். பல்லவியின்  பக்கத்தில் அமர்ந்து, அவளின் வயிற்றில் கீரீமை  எடுத்து  பூச, அவனின்  சிசுவோ  தகப்பன் கைப்பட்டு துள்ளி விளையாடா..

Advertisement

பல்லவி வலியில் “ஆவென்று”  சிணுங்கிய மனைவியை பார்த்தவன்.

“டேய்  குட்டிமா அம்மாவுக்கு வலிக்குது பாரு. நீங்க சீங்கிரம் வெளியில் வருவீங்களாம். நம்ம வெளியே வந்து  புட் பால் ஆடலாம் ஓகே வா. இப்பவே உங்க அம்மா வயித்துல  விளையாடதீங்க  அம்மா பாவம்ல டா குட்டிமா”  என்று  வயிற்றில் உள்ள பிள்ளையிடம் பேச, அது தகப்பனின் குரல் கேட்டு அமைதியாகி விட்டது. பல்லவியின் வயிற்றில் முத்தமிட்டு விலக.

“எனக்கு”  என்றாள் பல்லவி”..

 “உனக்கு தான் சோபாவிலே எல்லாம் முடிஞ்சது  இப்போ என்ன. என்றவனை தள்ளி விட்டவளை.

 பல்லவி “போதும், போதும்” என்று  சொல்லும் வரை  விட வில்லை விக்ரம்.

பல்லவி “போதும் ஆள விடுங்க சாமி” என்று தள்ளி விட்ட பின்னே விட்டான் பல்லவியை. இனி முத்தம் கேட்ப.

 கேட்பேன்  என்று தலையாட்டியவளின்.   தலையை வருடி விட. தன்னையும்  தனக்கு பிறக்க போகுற பிள்ளையை அக்கறையாக  பார்த்துக்கொள்ளும்  கணவனை பார்த்தவள். அவனின்  கன்னத்தில் ஆசையாக முத்தம் வைத்தாள்.

“இப்போ தூங்குறப்போ தான்  உனக்கு  புருஷன்  மேல  பாசம்  பொங்கி  வரும்” என்று    விக்ரம்  புலம்ப.

“அப்போ  எப்போ  பாசம் பொங்கி  வரனும்  விக்ரம் டார்லிங்” என்று சிரிக்க..

“போடி  வாய்  பேசாம  தூங்கு, அப்பறம்  இங்க  வலிக்குது விக்ரம். அங்க  புடுச்சுகிச்சு விக்ரமுன்னு  கத்துவ போடி”  என்றான்.

அவளோ புலம்பு கணவனை  பார்த்து மறுபடியும் சிரிக்க..

“என்  புலம்பல்  உனக்கு சிரிப்பா போச்சுல”…

“இப்போ  என்ன வேணும்  உங்களுக்கு”  என்ற மனைவியை.

“எனக்கு ஒன்னும் வேண்டாம்,  தூங்கு. எனக்கு தேவைனா உன்னை எடுத்துக்க தெரியும் படுடி” என்றவன், கை கழுவி வந்தவன்..

“நாளைக்கு  காலையில் ஹாஸ்பெட்டல் போகனும் பல்லவி”  என்றான்.

“சரி விக்ரம்”  என்றவள்  கணவனை அணைத்து கொண்டு தூங்கினாள்..

காலையில் இருவரும்  எழுந்து ரெடியாகி  பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பி விட்டு,  இவர்கள் இருவரும்  ஹாஸ்பெட்டல்  சென்றனர்.. பல்லவிக்கு அனைத்து  டெஸ்டுகளும்  எடுத்துவிட்டு, பேபியை ஸ்கேன்  பண்ணி பார்த்த டாக்டர்.

“நல்லா மூமெண்ட்  விக்ரம்  பேபிக்கு,  என்றவர் பல்லவியும்  நல்லா இருக்காங்க” என்றார் டாக்டர்..

“இப்போ  எத்தனை வீக்  முடிஞ்சுருக்கு  டாக்டர், இன்னும் எத்தனை வீக் டெலிவரிக்கு இருக்கு” என்றான் விக்ரம்..

“இப்போ பல்லவிக்கு 29  வீக் நடக்குது. 40 து வீக் தான் டெலிவரி ஆகும்” என்றார்..

“ஓகே  டாக்டர்”  என்று பல்லவியை  அழைத்துக்கொண்டு   ரூம் வெளியே வந்தவன்,. விக்ரம் பல்லவியிடம்”இங்கே  இரு பல்லவி  நான்  ஹாஸ்பெட்டல்  பில் பே பண்ணிட்டு. மெடிசன்  வாங்கிட்டு  வர்ரேன் என்று  சென்றான்..

பல்லவி வேடிக்கை  பார்க்க. அங்க  ஒரு  இந்தியா பெண்  மேடிட்ட வயிறுடன  கைநிறைய  வளையல்  அணிந்து  அமர்ந்து இருந்தாள். பக்கத்தில்  அந்த பெண்ணின் கணவன், அவளின் அம்மா போல் 50 வயதுக்கு மேல் உள்ள  ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார்..

அந்த கர்பிணி பெண்ணை டெலிவரி அழைத்து    வந்தது  போல் தெரிந்தது. அந்த பெண்ணின் கணவரும், அவளின்  அம்மாவும் அந்த பெண்ணுக்கு முதுகை பிடித்துவிட. கை கால்களை  அமுக்கி விட்டு கொண்டு இருந்தனர்..

நர்ஸ் வந்த  அந்த கர்பமான பெண்ணிடம் “பெய்ன் இருக்கா” என்றாள்.

“உம் கொஞ்சமா தான் பெய்ன் இருக்கு”   என்றாள்.

“ஓகே  நல்லா நடங்க அதிகமா  பெய்ன் வந்த சொல்லுங்க” என்று சென்று விட்டாள் அந்த நர்ஸ்..

அந்த கர்பமான பெண்  “என்னால நடக்க முடியாது” என்று சொல்ல.. அவளின்  அம்மா “நல்லபடியா  குழந்தை பிறக்க  வேண்டாமா வா எழுந்திரு நட”  என்று அவளின் அம்மா  அவளை எழ வைத்து நடக்க வைக்க.

அந்த  கர்பமான பெண்ணின் கணவன் அவளை ஒருபக்கம் பிடித்துக்கொள்ள, இன்னொரு பக்கம் அவளின் அம்மா தாங்கி கொள்ள. அந்த பெண் வலியில் முணங்கி கொண்டே நடந்து கொண்டு  இருந்தாள்..

விக்ரம் வந்து பல்லவியை பார்க்க. அவளோ அங்கே நடந்து கொண்டு இருந்தவர்களை பார்த்து  இருந்தாள்.

“பல்லவி  போலாமா”  என்றான்  விக்ரம்..

“உம்” என்றவள். கணவனுக்கு  தெரியாமல் அவளின்  கண்ணீரை துடைத்து. விக்ரமோடு காரில் ஏற..

பல்லவியின்  முகத்தை வைத்தே விக்ரம் கண்டு பிடித்து விட்டான். அவள்  இப்போது  எதற்கு கண்கலங்கி  ஏங்குகிறாள்  என்று நினைத்தவன். அதற்கு உண்டான வேலையை  பார்க்க தொடங்கினான்..

சுந்தர்  மருமகளிடம்  “நம்ம குல தெய்வம் கோவிலுக்கு போகலாமா பல்லவி”  என்றார்..

“போலாம்  மாமா, அந்த கோவில்  எங்க இருக்கு மாமா” என்றாள்..

“அது  பெங்களூருல  இருக்குமா. எங்க குல தெய்வம் பேரு சௌடாம்பிகா அம்மன். நாங்க போயி ரொம்ப  வருஷம் ஆச்சுமா. இப்போ  நம்ம எல்லாரும் நல்லா இருக்கோம். உனக்கு குழந்தை வேற பிறக்க போகுது. இந்த  நேரத்துல குல தெய்வத்தை  பார்த்து. வேண்டி  நன்றி சொல்லிட்டு  வரலாமுன்னு  நினைக்குறேன். உன்னால  டிராவல் பண்ண முடியுமா”  என்றார்  சுந்தர்..

“நான்  நல்லா  இருக்கேன் மாமா. நம்ம  எல்லாரும் போலாம்” என்றவளின் நினைப்பு  இந்தியா என்றது அவளுக்கு திருச்சியில் உள்ள அவளின் குடும்பம், அம்மா பைரவி  ஞாபகம் வந்தது..

விக்ரம் அன்று  வேலை முடித்து வீடு வர..

சுந்தர் மகனிடம்  பெங்களுரில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு  போலாம்  என்று சொல்ல..

“இப்போ  வேண்டாம் பா, பல்லவிக்கு  குழந்தை பிறக்கட்டும்.  அப்பறம் கொஞ்சம் மாசம் கழிச்சு  போலாம் என்றான்..

சுந்தர்  “அப்படியா  பல்லவிக்கு  கஷ்டமாக இருக்குமா”  என்றார்..

“மாமா  அதெல்லாம்  ஒன்னும்  இல்ல  நான் நல்லா தான்  இருக்கேன். நாம  எல்லாரும்  போலாம், குல தெய்வம் வழிபாடு  ரொம்ப முக்கியம் மாமா. நம்ம குடும்பத்துக்கு  நல்லது” என்றாள்..

சுந்தர்  மகனை பார்க்க. அவரை  பார்த்த விக்ரம்  பல்லவிக்கு  தெரியாமல்  சுந்தரை  பார்த்து கண்ணடித்தவன் கட்டவிரலை  தூக்கி  காட்ட..

மகனை பார்த்து  சிரித்தார் சுந்தர்..

விக்ரம்  குடும்பம் தன் குலதெய்வம்  கோவிலுக்கு தனி விமானத்தில்  பெங்களுர்  வந்து சேர்ந்தது..

அன்று  முழுவதும்  ஓய்வு  எடுத்து  விட்டு மறுநாள்  விக்ரம் குடும்பம் பெங்களுரின் உள்ள  சௌடாம்பிகா  அம்மன்  கோவிலுக்கு சென்றனர்..

பல்லவியும்  சிவாக்குட்டியும்  ஒரே நிறத்தில்  உடை அணிந்து இருந்தனர். பல்லவி பட்டு புடவையில்  இருந்தாள்..

ஆண்கள் அனைவரும் வேஷ்டி சட்டையில்  இருக்க..

அனைவரும் ஒன்றாக கோவிலுக்குள் நுழைய. சுந்தருக்கு மனைவியோடு இந்த கோவிலுக்கு  வந்தது ஞாபகம் வர. இப்போது  மகன் குடும்பமாக  குலதெய்வம்  கோவிலுக்கு  வருவதை  பார்த்து  சந்தோஷப்பட்டார்..

ஐயர் வந்து வாங்க, வாங்க என்று இவர்களை   கோவிலில் உள்ளே அழைத்து சென்றார்.. பூஜை பண்ண அனைத்தையும் ரெடியாக  வைத்து இருந்தார்..

விக்ரம் ஒரு பெரிய பேக்கை ஐயரிடம்  தர. ஐயர் அதை வாங்கி கொண்டு  கருவறைக்கு சென்றவர்.

விக்ரம் பூ. பழம் மாலை  என்று அனைத்தையும்   வாங்கி வந்திருந்தான்.

ஐயர் அனைத்தையும் சௌடாம்பிகாவுக்கு  படைத்து. பூ மாலையை அம்மனுக்கு  அணிவித்து. ஒரு பெரிய தாம்பளத்தில்  தேங்காய்  பூ, பழம் என்று எடுத்து வந்தவர் அனைவரையும் அந்த  தட்டில் கை வைக்க  சொல்ல. அனைவரும் அந்த தட்டில் கைவைக்க. சுந்தர்  ஒரு சின்ன பாக்சை திறந்து  அதில் இருந்த தாலி ஜெயினை எடுத்தவர். அந்த தட்டில் வைத்தவர். “அம்மன் பாதத்துல வச்சு கொடுங்க”  என்று ஐயரிடம் சொல்ல.

அவரும் “சரிங்க  கொடுங்க”  என்று அந்த தாலியை வாங்கி தட்டில் வைத்து அம்மன் முன் வைத்து பூஜை செய்து  தீபாரதனை கட்டியவர். அதை  எடுத்து  கொண்டு வெளியில் வந்து அனைவரிடமும் கற்பூர தட்டை நீட்ட.

அனைவரும் கற்பூர தட்டை தொட்டு வணங்கினர்..

மீண்டும் ஐயர் கருவறை சென்று தாலிக்கு பூஜை செய்து அம்மன் கையில் வைத்து  எடுத்து வந்தவர். விக்ரமின்  கையில் கொடுத்தார்..

பல்லவிக்கு  என்ன செய்வதென்றே  தெரிய வில்லை. ஒரு நெகிழ்ச்சியான  தருணம். தாலியை பற்றி  அவள் நினைக்கவே இல்லை. ஆனால் தாலியின்  பெருமையை  பற்றி அவளுக்கு தெரியும். ஒரு பெண்ணுக்கு தாலி எவ்வளவு முக்கியம் என்று தெரிந்தவளின் கண்ணீல்  இருந்து  வரும்  கண்ணீரை  கட்டு படுத்திக்கொண்டே  நின்று இருந்தாள்.

விக்ரம்  ஐயர்  கொடுத்த   தாலி ஜெயினை  வாங்கி  பல்லவியை  பார்த்து “கட்டலாமா  பல்லவி  மேடம்”  என்றான் விக்ரம்.

அவள் அமைதியாக நிற்க.

“மேடமுக்கு ஓகே வா”  என்று மறுபடியும் கேட்க.

பல்லவிக்கு  பழைய  நினைவு வந்தது. விக்ரமை பார்த்த முதல் நாள் அன்று  விக்ரமிடம்  உங்க  மேடம், உங்க வெய்ப்  என்று சொல்லியதை  ஞாபகம் வைத்துள்ளான்,   இன்று  தன்னை  மேடம்  என்று அழைத்து  கிண்டல் பண்ணுகிறான்  என்று  நினைத்தவள்..

“மேடமுக்கு   எப்போதும்   ஓகே தான்” என்றாள்..

பல்லவியை  பார்த்து கண்ணடித்து சிரித்தவன். தாலி ஜெயினை பல்லவியின் கழுத்தில்  அணிவித்தவன். “மேடம்    ஹாப்பியா”..?

“மேடம்  ரொம்ப  ஹாப்பி விக்ரம்”என்றாள் அவனை போலவே..

ஐயர் பிள்ளைகளிடம் பூக்களை  கொடுத்து இருவரின் மேலே போட சொல்ல. அதே  போலவே  பிள்ளைகளும்  விக்ரம் மேலேயும், பல்லவி மேலேயும் பூக்களை தூவினர்..

 இங்கே நடந்ததை போட்டாவாக ஒருவர்  எடுத்துக்கொண்டு  இருந்தார்..

பல்லவி  இதை  அனைத்தையும்  பார்த்தவள்.”இது எல்லாம் உங்க  ஏற்ப்பாடா  என்கிட்ட ஏன் சொல்லல்ல”  என்றாள்..

“சொல்லி இருந்த  இவ்வளவு சந்தோஷ பட்டு இருப்பீயா” என்றான்..

“இல்லை”  என்று தலையாட்ட.

“இதுக்கு தான் என் பொண்டாட்டிக்கு  குட்டி சர்பிரைஸ்” என்றான்..

“வா கோவிலை  சுத்தி பார்க்கலாம்”  என்று  அழைக்க. ஐயர் “இருங்கோ ”  என்று அம்பாளின் கழுத்தில் இருந்த இரண்டு  மாலையை கலட்டி    எடுத்து வந்தவர், இருவரையும்  மாலை மாற்றி கொள்ள சொல்ல..

இருவரும் மாலை மாற்றிக்கொண்டு கோவிலை சுற்றி  வலம்  வந்தார்கள். பின்பு விக்ரமும்,பல்லவியும் சுந்தரின் காலில் விழுந்து ஆசிர் வாசம் வாங்கிக்கொண்டு ரூம் வந்து சேர்ந்தனர்..  ஒரு நாள் பெங்களூரில்  உள்ள  இடங்களை  சுத்தி பார்த்தனர். இன்னும் பெங்களுரில் பார்க்க  நிறைய இடங்கள்   இருந்தன.

மறுநாள் விக்ரம் அனைவரையும்   கூர்க் அழைத்து வந்திருந்தான்.. இரண்டு நாள்கள்  கூர்கை சுத்தி பார்த்து விட்டு. நாளைக்கு லண்டன் கிளம்பனும் பல்லவி என்றான் விக்ரம்..

பல்லவி  சிறிது நேரம்  யோசித்து. “சரி”  என்றாள்..

அனைவரும் லண்டன் செல்ல விமானத்தில் ஏறினார்கள். சிறிது நேரத்தில் விமானம்   தரை இறங்கியது.

“என்ன விக்ரம் எங்கே  வந்து இருக்கோம்” என்றாள் பல்லவி…

“இங்கே என் பிரண்டு  ஒரு தன் வீட்டுக்கு  வர சொன்னான்  வாங்க” என்று விக்ரம் காரில் அழைத்து செல்ல..

 பல்லவி எந்த ஊர் என்றே பார்க்க வில்லை காரில்  ஏறியவுடன் கண்மூடியே அமர்ந்திருந்தாள்..

“பல்லவி இறங்கு” என்றான் விக்ரம்..

“உம்”  என்று காரிலிருந்து  இறங்கி பார்த்தாள் பல்லவி.

விக்ரம் திருச்சியில் உள்ள  அவளின்  வீட்டுக்கு அழைத்து வந்திருந்தான்..

அந்த வீட்டை பார்த்து அதிர்ச்சியானவள். மறுபடியும் காரில் ஏற..

“ஏய் பல்லவி சொன்னா கேளு ஒரு வாட்டி  எல்லாரையும் பார்த்துட்டு போலாம்”   என்றான் விக்ரம்..

“என்னால  முடியாது விக்ரம்  நான் செத்து போனவள்  அப்படியே  இருந்துட்டு போறேன்”  என்றவள்.

“உங்கள யாரு இங்கே கூட்டிட்டு வர சொன்னது  வாங்க”  என்றாள்..

பல்லவியை  அடையாளம் கண்டு பிடித்த அந்த ஊர்காரர்  ஒருவர். “பல்லவி  நீயாமா உயிரோடாவா இருக்க. அப்போ  ஏன் உன் அம்மா நைட்டெல்லாம் பல்லவி வா, என்னை விட்டு  போயிட்ட  என்று  சொல்லி அழுவுறா. அவள பாத்துட்டு போமா”  என்று சொல்லி சென்றார்.

“பல்லவி”!  என்று விக்ரம்   ஒரு அதட்டல் போட. மெல்ல காரை விட்டு கீழே  இறங்கினாள்  பல்லவி.

அவள்   வீட்டில் வைத்த நித்திய  மல்லி செடியின் வாசம் வீட்டின் முன் வீச.

 அவன்  சென்ற போது எப்படி இருந்ததோ அப்படியே  இருந்தது பல்லவியின் வீடு.

அவளை அழைத்து கொண்டு கதவின் அருகே வந்தவன்.”கதவை தட்டு”  என்றான் விக்ரம்.

“இல்லை”  என்பது போல் தலையாட்டியவளை  அணைத்துக்கொண்டே. பல்லவியின்  வீட்டின்  காலிங் பெல்லை அழுத்தினான்… விக்ரம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!