Skip to content
Post Views: 3,382
இதோ.. இதோ.. என் பல்லவி
அத்தியாயம் – 24
Advertisement
Final. 2
Advertisement
Advertisement
பல்லவியின் தந்தைதான் கதவை திறந்தார். முதலில் விக்ரமை அவருக்கு யார் என்று தெரியவில்லை. உத்து பார்த்தவர் “விக்ரம்” என்றார்..
Advertisement
விக்ரமை அணைத்துக்கொண்டு ஒரு பெண் நிற்பதை கண்டவர். விக்ரமிடம் பல்லவியா என்றார் கண்களாலே..
“ஆமாம்” என்றான் விக்ரம் தலையாட்டி..
தன் மகளா என்றவர் பல்லவியின் அருகில் வந்து “அடே பல்லவிமா அப்பாவை பாருடா” என்றார்..செல்லத்துரை…
பல்லவி விக்ரமை அணைத்துக்கொண்டு அழுவதை கேட்டவர்..
பல்லவியின் தோளை தொட்டு திருப்பியவர். “அப்பாவை மன்னிக்க மாட்டியாடா” என்றவரை..
“அப்பா” என்றவள் செல்லத்துரையை அணைத்துக்கொண்டு அழ..
“அடே பாப்பா அழாடா! அம்மாடி பல்லவி அழாத” என்றவர் மாப்பிள்ளை உள்ள வாங்க என்றார்..
அங்கிள் என்றவன் பின்னாடி நின்ற சுந்தரையும் பிள்ளைகளையும் காண்பிக்க.. மகளை அணைத்து இருந்தவர்.. மகளை அணைத்தவாறே “வாங்க உள்ள வாங்க” என்று சுந்தரை அழைத்தவர். பிள்ளைகளையும் பார்த்து உள்ள வாங்க பிள்ளைகளா என்று அழைக்க..
ஆஷிக்கும், சூர்யாவும் வர்றோம் தாத்தா.. என்று அனைவரும் உள்ளே வந்து ஹாலில் அமர. மகளை “வாடா” என்று அமர வைத்து விட்டு. “ஒரு நிமிஷம்” என்றவர்.
பைரவியின் அறைக்கு வர. பைரவி அப்போது தான் தூங்கி கண்முழித்து இருந்தார்..
“பைரவி வா உன்னை பார்க்க ஒருத்தங்க வந்து இருக்காங்க வா”.. என்று அழைக்க..
“யாருங்க என்னை பார்க்க வந்து இருக்கா”..
“வா வந்து பாரு” என்று செல்லத்துரை பைரவியை வெளியில் அழைத்து வர.
பைரவிக்கு இப்போது உடல் நலம், மனம் எல்லாம் குணமாகி இருந்தார்.. பல்லவி உயிரோடு இருக்கிறாள் என்று விக்ரம் சொல்லி சென்றதில் இருந்தே அனைவரும் பல்லவி உயிரோடு இருக்கிறாள். ஒரு நாள் கண்டிப்பாக வருவாள் என்று பைரவியிடம் சொல்லி அவரின் உடல் நலத்தை தேற்றியிருந்தனர்..
பைரவியை செல்லத்துரை அழைத்துக்கொண்டு ஹாலுக்கு வர.
பைரவி முதலில் பல்லவியை பார்க்கவில்லை..
நிறைய பேர் வந்து இருக்கிறார்கள் என்று அவர்களை பார்த்த பைரவி யாரோ உறவினர் போல என்று “வாங்க, வாங்க” என்று கைகூப்பி வரவேற்க.
மகளை பார்த்தவர். “பல்லவி, பல்லவி” என்றவர் வேகமாக மகளிடம் செல்ல..
தன் அம்மா தன்னை பல்லவி என்று உடனே எழுந்து நின்றவளின் தோற்றத்தை பார்த்தவர் மகளை அணைத்துக்கொண்டு “என் குலதெய்வமே வந்துட்டீயா” என்று மகளை அணைத்துக்கொண்டு அழுதார்..
“பல்லவி இந்த அம்மாவை பாக்க இப்ப தான் தோணுச்சு. என்னை மன்னிச்சுருடா”, என்று அழுதவரை..
“அம்மா வேண்டாம்மா அழாத” என்றாள்…
“பல்லவி வந்துட்டீயா இந்த அம்மா கிட்ட வந்துட்டீயா” என்று கத்தி அழுது கொண்டே மகளை அணைத்தவர்..
அவளின் மேடிட்ட வயிரை பார்த்து. “மாசமா இருக்கீயா பல்லவி எத்தனை மாசம்” என்றார்..
“7 வது மாசம் மா ” என்றவள்… அணைத்துக்கொண்டவர்..
“ரொம்ப சந்தோஷம் டா” என்றவர்..
“உன் வீட்டுகாரர்” என்று கேட்க..
விக்ரமை கை காண்பித்தாள்…
“மாப்பிள்ளை என்னை மன்னிச்சிருங்க மாப்பிள்ளை” என்றார்..
“ஐயோ அத்தை வேண்டாம்” நீங்க நல்லா இருக்கீங்களா அது போதும்” என்றான்.. விக்ரம்..
“நான் நல்லா இருக்கேன் மாப்பிள்ளை”…
பைரவி சுந்தரை பார்த்து “உங்க அப்பாவா மாப்பிள்ளை” என்றார்..
விக்ரம்”ஆமாம் அத்தை என்று சொல்ல.. “வாங்க சம்பந்தி” என்றாள்..
அதற்குள் செல்லத்துரை பெரியவர்களுக்கு காபி டி என்று கொண்டு வந்து கொடுக்க..
பைரவி பிள்ளைகளை பார்க் “அம்மா இவன் என் முத்த பையன் சூர்யா. இவன் இளயவன் ஆஷிக். இவ எங்க செல்லகுட்டி சிவகாமி என்று அறிமுகம் படுத்தி வைகாக..
அப்படியா என்றவர்.. 10 வயதில் பிள்ளைகளா என்று பார்த்தவர்.
சிவாவை பார்த்து பாட்டி கிட்ட வர்ரீயா பாட்டி உனக்கு ஐஸ்கிரீம் தர்றேன்னு என்க.
“வர்ரேனா என்றாள்.. ஆஷிக்கையும் சூர்யாவை அழைத்து கொண்டு. குளிர் சாதனபெட்டியில் இருந்து ஐஸ்கிரீமை எடுத்து பிள்ளைகளிடம் தர.. எல்லாரும் ஒன்றை எடுத்து கொண்டு வர. சிவா மட்டும் எனக்கு ரெண்டு வேணும் பாட்டி என்று கேட்டு வாங்கியவள். சுந்தரின் அருகில் வந்து இந்தா தாத்தா சாப்பிடு என்று ஐஸ்கிரீமை தர..
எனக்கு வேண்டாம்மா நீ சாப்பிடு என்று அவளிடமே ஐஸ்கிரீம் தர.. அதை எடுத்துக்கொண்டு வந்தவன் “டாடி நீங்க சாப்பிடு” என்று ஐஸ்கிரீமை தர…
“நீயே சாப்பிடுடா” என்றான் விக்ரம். பல்லவியிடம் இரண்டு ஐஸ்கிரீமை காண்பித்தவள். “மம்மி பாத்தியா டு ஐஸ்கிரீம்” என்று பல்லவிடம் அழகு காட்ட..
பல்லவி சிரித்து விட்டு “கோல்டு பிடிக்க போகுது சிவா” என்றாள்..
“டாடி மம்மி திட்டுறா”…என்ற மகளிடம்.
“பல்லவியம்மாவை இன்னைக்கு ஒரு நாள் விட்டுடலாம்.
உன் மம்மி அவங்க மம்மி வீட்டுக்கு வந்து இருக்க. அதனால நீ பைரவி பாட்டி கிட்டசொல்லு, அம்மா திட்டுனா.”என்றான் விக்ரம்..
“ஓஓஓ… பல்லவியோட மம்மி, பைரவி புது பாட்டியா”..என்ற மகளிடம்.
“உன் மம்மியோட டாடி என்று செல்லதுரை காண்பிக்க”…
“ஓ பல்லவி மம்மி. டாடி தாத்தா வா என்றாள்..
பைரவி சிவாக்குட்டிக்கு பெரிய சாக்லேட்டை தர. “ஐ” என்றவள் சாக்லேட்டை வாங்கி கொண்டு “தாங்யூ பாட்டி” என்று சொல்லி விட்டு
“விக்ரமனின் மடியில் அமர்ந்து கொண்டு பல்லவியை பார்த்து, “பாத்தீயா” என்று பெரிய சாக்லேட்டை காண்பித்தவள். வேகமாக சாப்பிட. “பல்லுயெல்லாம் ஓட்டையா ஆக போகுது” என்றாள் பல்லவி..
“டாடி மம்மி” என்றவளை. “நீங்க சாக்கி சாப்பிட்டு பிரஸ் பண்ணிடுங்க” என்றான் மகளிடம்..
“சரிப்பா” என்றாள் சிவாக்குட்டி.
பல்லவி வந்தது தெரிந்து சில உறவுகள் வந்து பல்லவியை பார்த்து விட்டு செல்ல. பல்லவியின் அக்கா வந்து தங்கையை பார்த்து கட்டி கொண்டு அழுதவளை யாரும் சமாதானம் பண்ணமுடியவில்லை..
தங்கையை உயிரோடு பார்த்தவளுக்கு தாங்க முடியாதா சந்தோஷம். அதுவும் தங்கையின் மூன்று பிள்ளைகளையும் பார்த்து சந்தோச பட்டவள். ஆஷிக்கையும், சூர்யாவையும் பார்த்து சந்தேகம் வந்தாலும் அவளிடம் எதுவும் கேட்க வில்லை..
செல்லத்துரை சுந்தரையும், விக்ரமையும் மாடியில் உள்ள அறையில் தங்க வைத்து உணவு குடுத்து பார்த்துக்கொள்ள. பல்லவி அவளை பார்க்க வந்தவரிடம் பேசியே சோர்ந்து போனால்..
அனைவரும் சென்றவுடன் பைரவி சூர்யாவையும், ஆஷிக்கையும் பற்றி கேட்க.. பல்லவி அனைத்தையும் சொல்ல.
பல்லவி சொன்னதை கேட்டவர். அந்த இருபிள்ளைகளுக்கு தாய் இல்லை தந்தை இல்லை என்று தெரிந்து கொண்டவர்.. “சின்ன வயசுல அந்த பிள்ளைகளுக்கு எவ்வளவு கஷ்டம். நீ உன் பிள்ளைகளை விட, அந்த இரண்டு பிள்ளைகளையும் நல்லா பாத்துக்கனும்” என்றார்..
பல்லவி பைரவியிடம் சரிம்மா என்றாள்…. ஜோதி தங்கையிடம் பேசிக்கொண்டே உணவை ஊட்டி விட.. இருவருக்கும் பேச நிறைய விசயங்கள் இருந்தன….
பல்லவி சாப்பிட்ட உடன். தாயின் மடியில் படுத்த விட. பைரவி மகளின் தலைகோதி விட்டு விட்டு கொண்டே. “மேல ரூம்புல போய் படு பல்லவி மாப்பிள்ளை இரண்டு முறை வந்து பார்த்துட்டு போனார். ரூம்புக்கு போமா காலையில் பேசுவோம்” என்றார்..
பல்லவிக்கு மனம் நிறைந்து இருந்தது. சந்தோசமான வாழ்க்கை எல்லாம் கிடைத்து விட்டது போல ஒரு உணர்வு. அப்பா, அம்மா கூடபிறந்தோர். நல்ல கணவன், அழகான பிள்ளைகள், பாசம் காட்ட சுந்தர், மற்றும் மலேசியாவில் உள்ளவர்கள், தன் மேல் பாசம் வைத்திருக்கும் அனைவரும் தன்னுடன் இருக்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டவள், கணவன் இருக்கும் அறைக்கு வர.
விக்ரம் லாப்டாப்பில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தான்..
இவளை திரும்பி பார்த்தவன் “பரவாயில்லையே வந்துட்ட, நீ இன்னைக்கு என்கிட்ட வரமாட்டேன்னு நெனச்சேன், உங்க அம்மா கூட தூங்கலையா நீ” என்றான்..
அவன் கேட்டதுக்கு பதில் சொல்லாமல் வந்தவள், பின் இருந்து விக்ரமை அணைத்து கொள்ள..
“ஏய் என்னடி புருஷன் மேல பாசம் வந்துருச்சு போல”..என்றான் விக்ரம்.
“புருஷன் மேல பாசம் இல்ல அதுக்கும் மேல உயிரையே வச்சு இருக்கேன்”…
“அப்படியா உன் உயிர் என்கிட்ட இருக்க, அப்போ ஓகே உன் உயிரை நான் பத்திரமா பார்த்துக்கிறேன்” என்றான்..
“தாங் யூ அத்தான்” என்றவளை..
“இது என்னடி புதுச அத்தான்னு கூப்பிடுற” என்றான்..
“அது அம்மா சொன்னாங்க புருஷன் பேர சொல்லி கூப்பிட கூடாதாம், அப்படி கூப்பிட்ட ஆயுசு கம்மியாம். அதனால என்னை அவங்க மாமா, மச்சான் இல்ல வேற மாதிரி கூப்பிட சொன்னாங்களா. எனக்கு இந்த அத்தான் தான் புடிச்சுருக்கு. எப்படி இருக்கு இந்த அத்தான் என்று பேரு” என்றவளை..
“விக்ரமை விட இது ரொம்ப கிக்கா தான் இருக்கு” என்றான்.
பல்லவி மறுபடியும் இங்கே வந்ததுக்கு நன்றி சொல்ல..
“புருஷனுக்கு யாராவது நன்றி சொல்லுவாங்களா” என்றான்..
“நான் சொல்லுவேன்” என்றவள்.. விக்ரமனின் முகம் முழுவதும் முத்தமிட்டவள் ஒரு, ஒரு முத்தத்திற்கும் நன்றி, தாங்யூ சொல்ல..
“இப்படி சொன்னா, நீ எவ்வளவு தாங்யூ வேணா சொல்லு என்றவனை.. ஆசையாக அணைத்துக்கொண்டவள்..
“உங்களுக்கு எப்போ என்னை இங்க கூட்டிட்டு வர தோணுச்சு”..
“உன்னை போன மாதம் செக்கப்புக்கு ஹாஸ்பெட்டல் கூட்டிட்டு போனேன் தானா.. அப்போ அங்க இருந்த மூணு பேர பாத்து. நீ உன் அம்மாவ நெனச்சி அழுத தானா” என்றான்..
“ஆமாம்” என்று தலையாட்டியவளிடம். “என்கிட்ட சொல்ல மாட்டீயா பல்லவி, உன் அம்மாவை பாக்க போகனுமுன்னு சொன்னா கூட்டிட்டு வர போறேன்”..
“இல்ல விக்ரம் சாரி அத்தான் எனக்கு அம்மா ஞாபகம் வந்து இருந்தாலும், அவங்க பண்ணத என்னால ஏத்துக்க முடியல, கோபம் அதனால தான் உங்ககிட்ட சொல்லல்ல இருந்தாலும், நீங்க நான் நெனச்சத எப்படி கண்டு பிடிச்சீங்க” என்றாள்…
error: Content is protected !!