Skip to content
Post Views: 2,021
கரு சிலநாட்களில் வளற ஆரம்பித்தது.. வீ. பிக்கு வைஷுதான் எக்கு டோனேட் பண்ணினது தெரியாது.. யாரோ ஒரு பெண் என்று நினைத்து இருந்தான்..
சௌசன்யா ஒரு நாள் ஹாஸ்பெட்டலில் சோகமாக இருக்க. வீ.. பி அக்காவிடம் என்னவென்று கேட்டான்..
Advertisement
“அது எனக்கு எக்கு டோனேட் பண்ண பொண்ணுக்கு ரொம்ப வயித்து வலியாம் உடம்பு சரியில்லாம, ஹாஸ்பெட்டலில் அட்மீட் பண்ணி இருக்காங்க,, என்னால போக முடியாது நீ போய் அந்த பொண்ண பார்த்துட்டு எதாவது உதவி வேணுமானு கேட்டு செஞ்சிட்டு வர்ரீயா” என்றதும்..
Advertisement
“சரிக்கா” என்றவன்.. அந்த பெண் இருக்கும் அறை எண்ணை கேட்டு தெரிந்து கொண்டு அந்த அறைக்கு செல்ல..
Advertisement
அந்த அறையை திறந்துக்கொண்டு சௌமியா வெளியே வர..
Advertisement
சௌமியாவை பார்த்ததும் “என்னாச்சுமா உங்க சிஸ்டருக்கு” என்றான் வீ. பி..
“என் சிஸ்டருக்கு ரொம்ப முடியல சார்,, வயித்து வலிதாங்காமல் அழுகுற,, இரண்டு வாரமா அடி வயித்துல ஊசி போட்டாங்க,,, அவளுக்கு தாங்க முடியல.. எனக்கு உதவி பண்ண வந்தா. இப்போ அவ கஷ்டபடுறத என்னால பார்க்க முடியல.. பொண்ணாவே பிறக்க கூடாது சார்.. வலியும், வேதனையும் தான் மிச்சம்..என்று
கண்கலங்கியவள்.. 19 வயது பொண்ணு என் தங்கச்சி இந்த வயசுல இவ்வளவு வேதனை என்னால” என்று புலம்பியவளை பார்த்த வீ. பி..
“நான் பாக்கலாமா, உங்க தங்கச்சியை”.. என்றான்
“போய் பாருங்க சார்,, நான் ஒரு டெஸ்ட் ரிசல்ட் வாங்கனும், வாங்கிட்டு டாக்டரை பார்த்துட்டு வர்ரேன்,, நான் வர்ர வரைக்கும் இங்கே இருக்கீங்களா, என் தங்கச்சியை பார்த்துக்கிட்டு”..
“ஓகே நீங்க வர்றவரைக்கும் நான் இங்கேயே இருக்கேன்” என்றவன்.. ரூம் உள்ளே சென்றான்..
அப்பெண் படுத்திருப்பதை பார்த்தவன் பயந்து போனான்.. உடலை குறிக்கி, கைகளை வயிற்றில் வைத்து வலியில் முணங்கி கொண்டு இருந்தவளை பார்த்தவனுக்கு மனது வலித்தது..
அவள் பக்கத்தில் செல்ல செல்ல மனம் ஏனோ வலிப்பது போல் இருக்க, மெல்ல சென்றவன் அவள் முகத்தை பார்த்ததும் அதிர்ச்சியாகி “பொம்மா நான் பொம்மா நூவா” என்று அருகில் வர..
வைஷுவுக்கு மிகுந்த வலிக்கு லேசான மயக்கம் மருந்து குடுத்து தூங்க சொல்லி இருக்க..
அவளோ பாதி மயக்கத்தில், முணங்கி கொண்டு இருந்தவளிடம் வேகமாக சென்றவன். “பொம்மா நூவா ரா, நாக்கு தெரியாதே,” என்று புலம்பிய கொண்டே அவள் அருகில் அமர..
அவளோ வலியில் அவனின் கையை இருக்கமாக,, பிடித்து கொண்டாள். அவள் தன்னை இருக்காம பிடித்திருப்பதை உணர்ந்தவன்..
“பொம்மா வலிக்குதா பொம்மா” என்றான் வீ. பி…
“சௌவ்ம் வலிக்குது சௌவ்ம் ,, ஊசி வேண்டாம் சொல்லு,, சௌவ்ம் இந்த டாக்டர் கிட்ட. எந்தன ஊசி தான் போடுவாரு,,என்னால முடியல” என்று தன் அக்கா சௌமியா என்று நினைத்து “என் கையை பிடிச்சு புலம்புன வைஷு”…
நா பொம்மாவை இப்படி ஒரு நிலமையில தான் பார்க்கனுமா.. என்று கண்கலங்கியவன்..
அவளின் தலையை வருடி விட..
“நல்லா இருக்கு சௌம் அப்படியே செய்” என்றவள்.. அவனின் கையை இருக்கமாக பிடித்துகொள்ள..
“என்ன பொம்மா” என்றான்?..
“நான் பொம்மா இல்ல, சௌம் வைஷு, வைஷுணவி தேவி” என்றாள்,, கண்களை மூடியவாரே…
“சௌவ்ம்,… சௌவ்ம்.” என்றவள்.. “எனக்கு வயிறு வலிக்கு மருந்து போட்டு விடுறீயா” என்றாள்.
“ஊம்” என்ற வீ. பீ யின். கையை வைஷு அவளின் அடி வயிறு வறை கொண்ட சொல்ல..
சிறு சிறு தடுப்பு வீங்கியது போல உணர்ந்தவன்.. அவனின் கையை விலக்கி அவளின் வயிற்றை பார்த்தவன் துடித்துவிட்டான்,, எத்தனை இடத்தில் சிவந்து வீங்கி, இரத்தம் கன்றி, அதுவும் அடி வயிற்றில்,, “ஐயோ” என்று தலையடித்துக்கொண்டவன்.. “நா பங்காரம்,, சின்னா, இவ்வளவு கஷ்ட படுது,, எவ்வளவு வலிச்சிருக்கும் அதுக்கு நான் தான் காரணம், பொம்மா என்னை அடி”,, என்றவன் அவளின் கையால் தன்னை அடிக்க, வைத்தான்.. அவளோ “வேண்டாம் உங்களுக்கு வலிக்கும்” என்றவுடன்..
அவளை வாரி அணைத்துக் கொண்டவன்,, “ஐயோ எனக்கு தெரியாதே, என் பொம்மா, பொம்மா உன்னை கஷ்ட படுத்திட்டேனே பொம்மா” என்றான்… அவளை மெல்ல அணைத்தவாரு.. அவனுக்கு தெரிந்தது அவளுக்கு சுயநினைவு இல்லாமல் இருக்க. கண்முடியபடியே பேசிக்கொண்டு இருந்தாள்..
மறுபடியும் “வலிக்கு” என்று முணங்க..
“இதோடா” என்றவன். மருந்தை எடுக்க அவளை விலக்க பார்க்க.. அவளோ அவன் விலகுவதால் வலி அதிகமாவது போல் உணர்ந்தவள்..
“மருந்து வேண்டாம்” என்றவள். அவனை கழுத்தோடு கட்டிக்கொண்டு, “மருந்து வேண்டாம் இப்படியே இருக்கேன்” என்றாள்..
வீ. பி அவளின் முதுகை நீவி விட..
“சௌவ்ம், சௌவ்ம் நல்லா இருக்கு அப்படியே பண்ணு” என்றாள்..
வீ. பி அவள் சொல்வதற்கு எல்லாம் “ஊம்ம் பொம்மா ஊம்ம்” என்று சொல்லிக்கொண்டு இருக்க,,…
“நம்ம வானத்துல பறக்குறோமா” என்றாள்..
வீ. பி “ம்ம்” என்றான்..
“பறக்குற மாதிரி இருக்கு சௌவ்ம்,, அங்கபாரு,, அந்த டாம், செரியை பிடிக்க ஒடுது,, ஏய் பிடி, பிடி,” என்று சிரிக்க..
அவனுக்கு அவள் தோன்றுவதை எல்லாம் பேசுகிறாள், என்று நினைத்து அமைதியாக, அவளை தன் மடிமீது அணைத்த வாறே பேசிக்கொண்டிருக்க..
“என் லவ்லி சிஸ்டர்” என்றவள்.
வீ. பியின் கன்னத்தில் முத்தம் வைக்க..
சிரித்து விட்டான் வீ. பி,,, இப்படியாடி நம்ம முதல் முத்தம் இருக்கனம் என்று..
வைஷு வீ. பி முத்தம் கொடுத்து விட்டு,, “உனக்கு என் மேல பாசமே இல்ல, ஒரு முத்தம் கூட குடுக்க மாட்டேங்குற, பேட் சிஸ்டர்” என்றாள்..
“நான் உன் சிஸ்டர் இல்லடி உன் பாவா” என்றான்..
“பாவா, என் பாவா வா?”..
“ஆமாம் உன் பாவா தான்,, உன் பாவா உனக்கு முத்தம் கொடுக்கலாமா” என்றான்..
“ஊம்…” என்று சொல்லவும்…
அவளின் முகத்தில் எண்ணில் அடங்கா முத்தம் வைத்தான்..
“பாவா போதும் எனக்கு தூக்கம் வருது”, என்றவள்.. மெல்ல துயில் கொள்ளும் முன், வீ. பி யின் கையை இருக்கமாக பிடித்திருந்தவள்..
“பாவா நான் தூங்கிட்டவுடனே என்னை விட்டு போக மாட்டீயே” என்று மெல்ல முணங்கி கொண்டு இருக்க..
அவளின் முகத்தை தன் கையில் ஏந்தியவன், “போக மாட்டேன் பொம்மா, எப்பையும் உன்னை விட்டு போக மாட்டேன்” என்றிருந்தான்..
சௌமியா வரும் சத்தம் கேட்டு மெல்ல அவளை படுக்க வைத்தான்.. ஆனால் வைஷு அவனின் கையை விடாமல் பிடித்திருக்க..
சௌமியா தங்கை வீ. பி கையை பிடித்திருப்பதை பார்த்து, “வயித்து வலியில உங்க கையை பிடிச்சிக்கிட்டா போல,, சாரி சார்” என்றவள், வைஷு பிடித்திருந்த கையை விலக்க,, “பாவா” என்று முணங்கினாள்,, வீ. பிக்கு அது நன்றாக கேட்க.. சௌமிக்கு அது புரியவில்லை..
வீ. பி வைஷுவை கண் நிறைய பார்த்தவன்,, “ஓகே பார்த்துக்கோங்க, ஏதாவது உதவி வேணுமுன்னா கேளுங்க” என்று சொல்லிவிட்டு சென்று விட..
வீ. பி இரண்டு நாட்களாக வைஷுவை தூரத்தில் இருந்து பார்த்து சென்று கொண்டு இருந்தான்.. வைஷு எப்பையும் தூக்கத்தில் தான் இருப்பாள்,, மூன்றாம் நாள் வீ. பி அவளை பார்க்க வர.. வைஷு அங்கு இல்லை,.. ஹாஸ்பெட்டலை விட்டு சென்றிருந்தாள்..
அவள் எங்கே போவாள் பெங்களூரு தானே, கண்டு பிடித்து விடலாம் என்று சௌசன்யாவை பார்க்க சென்று விட்டான்..
சௌசன்யாவுக்கு உடலில் செலுத்திய அணு குழந்தையாக வரல ஆரம்பித்தது..
ராம் அமைதியான குணம் கொண்டவர், சௌசன்யா நன்றாக பார்த்துக்கொண்டார்..
சௌசன்யாவுக்கு ஆறு மாதம் நடக்கும் போது குழந்தை நன்றாக இருப்பதாக மருந்துவர் சொல்ல..
வீ. பி வைஷுவை தேடி பெங்களூரு சென்றான்..
அவளின் வீட்டின் அருகே வந்தவன், அவளை டான்சர் வைஷு வீடு என்று விசாரிக்க..
இரண்டு பெண்களின் பேரை சரியா தெரியாதவர்.. அந்த இரண்டு பொண்ணுக்களும் டான்ஸ் ஆடுமே என்று கேட்க..
ஆமா என்றான் வீ. பி..
“நீங்க தேடி வந்த அந்த இரண்டு பொண்ணுல, ஒரு பொண்ணு சூசைட் பண்ணி செத்து போச்சு,, இன்னொரு பொண்ணு பைத்தியம் பிடிச்சு சீரியஸ்சா இருக்குன்னு சொன்னாங்க தம்பி” என்று சொல்லி அந்த மனிதர் செல்ல..
அவர் சொல்லியதை கேட்டவனுக்க,, நெஞ்சு வலியே வந்து விட்டது,, இறந்தது வைஷைவா இருக்குமோ,, இல்லை இருக்காது, அப்படி இல்லை என்றால்,, பித்து பிடித்து ஹாஸ்பெட்டலில் இருந்தாள்,, அதை பார்க்க உன்னால் முடியுமா,,
ஒரு வேலை அவள் இறந்து போயிருந்தாள்.. அடுத்த நிமிடம் எப்படி வாழ்வா?, என்று ஒரு மனம், சொல்ல,, ஒரு வேலை அவளுக்கு பித்து பிடித்து இருந்தாள், அவளை பார்த்த கணம் தன் நெஞ்சு வெடித்து விடுமோ. இதை என்னால பார்க்க முடியாது,, என்று உணர்ந்தவன்,, மனதை கல்லாக்கி கொண்டு ஐதராபாத் வந்தான்..
error: Content is protected !!