மனதில் அவள் இருக்கிறாளோ, இல்லையோ, அவளுக்கு சரியாகி இருக்குமா,, மீண்டும் சென்று பார்த்து விட்டு வரலாமா என்று ஆயிரம் முறை யோசித்தவன்,, ஒரு வேளை அவன் சென்று பார்க்கும் போது, அவள் இல்லை என்று தெரிந்தால் அதை கடந்து உன்னால வாழ முடியுமா, இப்படியே என் பொம்மாவை நினைத்தே வாழ்ந்து விடுகிறேன் என்று மனதை ஒருநிலை படுத்தி வாழ ஆரம்பித்தான் வீ. பி..
அவன் ஒன்றை நினைத்து வருந்த.. அதற்கு மேல் ஒன்று நடந்தது.. ராமும் சௌசன்யா காரில் சொல்லும் போது ஒரு விபத்தில் இருவரும் மோசமான நிலையில் அடிபட்டு ஹாஸ்பெட்டலில் சேர்த்திருக்க..
Advertisement
சௌசன்யாவுக்கு தலையில் சரியான அடி.. விபத்து நடத்தவுடன் அவள் மயக்கத்துக்கு சென்று விட்டாள்..
ராம் மனைவி சௌசன்யாவுக்கு குழந்தைக்கு ஏதும் ஆகாகூடாது என்று உயிரை கையில் பிடித்து வைத்திருந்தான்..
Advertisement
Advertisement
ராம் உயிர் போகும் தருவாயில்
வீ. பியின் கையை பிடித்துக்கொண்டு , சௌசன்யாவையும் அவன் குழந்தையையும் நன்றாக பார்த்து கொள்.. எனக்கு ஏதாவது ஆச்சுன்னா சௌசன்யாவை தனியா விட்டுடாத வீ. பி ,, அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையா அமச்சு குடு,, என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே,, ஒரு நர்ஸ் உள்ளே வந்து ராம்மிடம் உங்க மனைவிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு என்று சொல்ல..
Advertisement
ராம் சந்தோஷபட்டவர்,,”நான் அப்பா ஆகிட்டேன், என் குழந்தை,, என் குழந்தை என்று சந்தோஷப்பட்டவர் நீ பார்த்துக்கோ” என்றவரின் உயிர் மண்ணுலகில் இருந்து சென்று விட்டது…
வீ. பி க்கு ராமை நினைத்து அழுவத.. கோமாவுக்கு சென்று விட்ட சௌசன்யாவை நினைத்து அழுவத..
பிறந்த பச்ச குழந்தையை கையில் வைத்திருந்தவனின் மனம் சொல்லி அழுகு கூட யாருமில்லாம் தவித்து நிற்க, அவனின் பிஸ்னல் பிரண்டு ஆதித்யா விசயம் கேள்வி பட்டு ஓடி வந்தவன், நண்பனை அணைத்து கொண்டு ஆருதல் சொல்ல,, சன்று நேரம் கழித்து
வீ. பி யின் தாய், தந்தை வந்து விட,, கொஞ்சம் நிம்மதியானான் வீ. பி..
ஆதித்யாவுக்கு ஏற்கனவே சௌசன்யாவை பிடித்து இருந்தது.. அவன் காதல் சொல்லவதற்குள் ராமை விரும்பி சௌசன்யா திருமணம் முடித்தவளிடம், தன் காதலை சொல்லாமல் இருந்தவன்.. நண்பன் துயர் போக்க.. சௌசன்யாவை மறுதிருமணம் செய்யு கொள்ள விரும்புவதாக நண்பனிடம் சொல்ல…..
வீ. பிக்கு அதுவே சரி என்று பட..
சௌசன்யா கோமாவில் இருந்து,, வெளிவந்தது, கொஞ்சம் கொஞ்சமாக,, ராம் இறந்ததை சொல்லி, அவளை சமாதானம் பண்ணி,, ஹாஸ்பிட்டலில் இருந்து அவளை அழைத்து வந்தவன்,, யாழினியை அவளிடம் தரவே வில்லை.. சௌசன்யாவுக்கு, கையிலும், காலிலும் அடிப்பட்டு இருக்க அந்த காரணத்தை வைத்து, அவளிடம் குழந்தையை தராமல் இருந்தான்..
அவனும், இந்திரா தேவியும் யாழினியை பார்த்துக்கொள்ள.. இவளிடம் யாழினியை தர வில்லை..
சௌசன்யா இதற்கு மேல் முடியாது என்று குழந்தையை அவளிடம் தர கேட்க, என் குழந்தை நான் பார்த்துக்கிறேன் என்றவன்.. ஆதித்யா திருமண செய்ய அவளை கேட்க..
என்னை சாக சொல்லு செத்துடறேன், என்று கூற..
நீ சாகாத, உன்னை 5வருஷமா நெனச்சிட்டு இருக்கான் பாரு அவன், சாகட்டும்,, நீ ஆசை பட்டேன்னு உனக்கு எல்லாம் செஞ்சேன் பாரு,, என்னை நீ தான் கொல்ல போற.. என்று அவளிடம் 6, 7 மாதம் சண்டை போட்டு ஆதித்யாவுடன் திருமணத்தை நடத்தி அவளை அவன் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தான்..
தனக்கு யாழினி மட்டும் போதும் என்றிருந்தவன்.. பிரகாஷ் வீடியோ காலில் அன்று வைஷு காண்ப்பித்ததும் தான் புத்துயிர் பெற்றவன்.. உணர்ந்தவன்.
எப்படியே வைஷுவை தன்னோடு சரிபாதி ஆக்கி இருந்தான்..
இன்று வைஷுவிடம்,, அவளை ஹாஸ்பெட்டலில் பார்த்தது முதல்.. சௌசன்யாவையும், ராமையும் பற்றி சொல்லி முடிக்க..
வைஷு தலையில் கைவைத்து அமர்ந்திருந்தாள்..
அவளுக்கு ஒரு அதிர்ச்சி, இருந்தாள் பரவாயில்லை அடிக்கு மேல் அடிவிழுந்தாள் பாவம் அவள் என்ன தான் செய்வாள்..
வைஷுவுக்கு எப்படி வீ. பியிடம் பேசுவது, நடந்து கொள்வது.. என் பொண்ணு 10 வருஷம் அம்மா இல்லாமல் வாழ்ந்திருக்கிறாள்.. “ஐயோ” என்று தலையை பிடித்தவள்.. வீ. பியை நிமிர்ந்து பார்க்க வில்லை, கோபமா, அழுகையா, அவளை அவளால் கன்ரோல் பண்ண முடியாவில்லை..
“நான் போறேன்” என்று எழுந்தவளை.
“எங்கே போற பொம்மா”..
“நான் போறேன்” என்று மீண்டும் சொல்லி விட்டு, அவனிடம் இருந்து விலகி சொல்ல பார்க்க..
“வைஷு நா பொம்மாலு, எதுவுண்ணாலும் என்கிட்ட சொல்லு, காட்டு என்னை தண்டிக்கனுமா,, தண்டனை கொடு, அடிக்கனுமா அடி வாங்கிக்கிறேன்.. அழுகனுமா அழு.. இப்படி அமைதியா இருக்காதே, அது உனக்கு நல்லது இல்ல” என்றான் வீ. பி….
அவளோ “என்னால முடியல, பிலிஸ் என்னை விடுங்க” என்றாள்..
“பொம்மா, இங்கேபாரு, என்னை பாரு” என்றான் அவளோ அவனை பார்க்க முடியாது என்பது போல் குனிந்து இருந்தவளிடம்.. “சரி நீ இங்கேயே இருந்து, என்னவேனா பண்ணு. உன்னை வெளியே விட மாட்டேன்” என்றான்..
“வீ. பி சார் நான் என் கண்ரோலுல நான் இல்லை, எனக்கு பழய படி சில குரல் என் காதில் கேட்குது.. உங்களை நான் திட்டிருவேன்,, இல்லை உங்களை கஷ்டபடுத்துற மாதிரி ஏதாவது பேசியிருவேன் சாரி ” என்றவள் .. அவனை கடந்து அந்த ரூம்பை விட்டு வெளியே போக பார்க்க..
அவளை அந்த அறையை விட்டு போக முடியாத படி பிடித்துக்கொண்டவன்..
“நீ இப்போ வெளியே போனா, உனக்கு தான் கஷ்டம்” என்றவன்..கதவை உள்ளிருந்த படியே பூட்டி சாவியை அவன் வைத்து கொண்டான்..
“உன் கோபம் குறைந்ததும், நார்மல் ஆகிட்டு வெளியே போ”.
என்றான்.
வைஷுவின் காதில் வீ. பி கெட்டவன், உன்னை ஏமாத்திட்டான், யாழினி விசயத்தை உன்கிட்ட இருந்து மறச்சிட்டான்,, அவன் கெட்டவன் அவனை அடி, சண்டை போடு,, என்று அவளுக்கும் மட்டும் ஒரு குரல் நீண்ட வருடம் கழித்து கேட்க..
“இல்லை என் வீ. பி சார் கெட்டவரு இல்லா” என்றவள்..
அவளின் கையை சுவரில் தட்ட ஆரம்பித்து இருந்தாள்.. மீண்டும் ஒரு குரல் ‘அவன் கெட்டவன் இங்கே இருந்து போ’ என்று சொல்ல..
தன் காலை தரையில் டம். டம் என்று சதி சேர்த்து தட்ட ஆரம்பித்தாள்.. குரலில் சத்தம் கொஞ்சம் குறைவது போல தெரிய,,
இரண்டு கையையையும் வேகமாக தட்டிக்கொண்டே சுற்றினாள், அவள் கால் கீழே சத்தம் வரும் மாறு காலை தட்டி கொண்டு, இரண்டு கையையும் தட்டிக்கொண்டு வேகமாக சுற்றினாள்..
வீ. பிக்கு புரிந்தது அவளின் கோபத்தை குறைக்க.. மனது அமைதி பெற இத்தகைய நடனம் சிலர் தன்னை வருத்திக்கொண்டு ஆடுவார்கள் என்று கேள்வி பட்டிருந்தான்.. இன்று வைஷு ஆடுவதை முதல் முதலில் பார்த்தவன்.. தன் கோபத்தினால் அடுத்தவரை கஷ்ட படுத்தாமல், தனக்கு தானே தண்டனை கொடுத்துக் கொல்லும் நடனம் இது..
வைஷு வேகமாக சுற்றியதை பார்த்து வீ. பிக்கு உள்ளுக்குள் பயம் வர.. அவள் சரியாகி விடுவாள் என்று அவளையே பார்த்திருந்தான்.
அவளின் ஆட்டத்தின் நேரம் நீண்டு கொண்டே போக..
பயந்து போனவன் “பொம்மா, போது பொம்மா” என்று அவளின் அருகில் வர..
அவன் சொல்வதை காதில் வாங்காதவள் இன்னும் வேகமாக ஆடா..
இதுக்கு மேல விட்டால், இவள் தாங்க மாட்டாள் என்று. அவளை பின்னாடி இருந்து தூக்க வர..
ஒரே தள்ளில் அவனை தள்ளி விட்டவள்.. மீண்டும் ஆட.. பயந்து போன விஜயேந்திரன்.. அவளின் கால் கீழே பார்க்க..
அவளின் கொலுசின் முத்துகள் கீழே சிதரி அவளின் காலை பதம் பார்த்திருக்க.. அவளின் காலில் இருந்து இரத்தம் வருவதை பார்த்தான்..
இரத்தம் வருவதை கூட உணராது ஆடிக்கொண்டு இருந்தவளை..
தன் மொத்த பலத்தை கொண்டு அவளை பின்னிருந்து தூக்கியவன் அவளை ஆட்டத்தில் இருந்து வெளியே கொண்டு வர.
அவனிடமிருந்து விலக முடியாத படி அவன் அவளை உடும்பு போல் பிடித்து இருக்க..
வைஷு அவனிடம் போரட முடியாமல் துவண்டு போய். கை கால் வலுவிழந்தது போல் உணர்ந்தவள்.. அவளுக்கு அந்த குரல் சத்தம் கேட்காமல் இருக்க..