Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஜதி தரும் அமுதம்

Jathi Tharum Amutham 14 1

ஜதி தரம் அமுதம்

அத்தியாயம் -14



Advertisement

Advertisement

Advertisement

  இந்திரா தேவிக்கு  மிக பெரும்  அதிர்ச்சி!… என் தம்பியா?..  என் கேஷவனா?. என்று அவரை நெருங்கி  வந்தவர், கேஷவனை அருகில் பார்க்க..

Advertisement

15  வயதில்  அவரை  பார்த்தது,,,..இப்போது  35  வருடத்துக்கு மேல்  ஆனாது. அவரின் தோற்றம்  முற்றிலும் மாறியிருக்க.. தன் 15 னைந்து வயது தம்பியை தேடியவர்… கண்டு கொண்டு,, “கேஷவா!… கேஷவா”  என்று சொல்லிக்கொண்டே கேஷவனின் அருகில் வந்தவர்.. “தம்பி” என்று அவரை அணைத்துக்கொண்டு  அழுதார் இந்திரா தேவி…

“டேய் கேஷவா, உன்னை சரியா பார்க்காம திட்டிட்டேனே, உன்ன எனக்கு அடையாளம் தெரியலடா.. என்னை  மன்னிச்சிரு தம்பி, டேய் கேஷவா, உன்னை திட்டி பேசிட்டேனே.. அக்காவை மன்னிச்சிருடா கேஷவா” என்றவர்..

தம்பியின் முகம் பார்த்து  எப்படி வளந்துட்டா கேஷவா,”, என்று அவரின் முகத்தை  தொட்டு, தோளை தொட்டு பார்த்தவர்..

“எப்படி இருக்கேடா,, அப்பா, அம்மா எப்படி இருக்காங்க,,  உனக்கு

 எத்தனை குழந்தைகள்? எனக்கு மூன்று பிள்ளைகள் டா”…என்றார்..

“எனக்கும்  மூனு பிள்ளைகள் கா,”..

“உனக்கு  மூனு பிள்ளைகளாடா??..”

“ஆமாக்கா,, இரண்டு பொண்ணு, ஒரு பையன்”..

“ரொம்ப சந்தோஷம்,”  என்றவர்..”ஏன்டா அக்காவை தேடி வரல? என்னை தேடி வந்து இருக்காலமே டா, ஏன்டா  என்னை தேடி வரல..? “.. என்று அழுதவரை..

“தேவிக்கா அழாத போதும், அப்பா, அம்மாவை   நீ  விட்டு போனதும். நம்ம  வீட்டில்   ரொம்ப கஷ்டபட்டாங்க,, நிறைய அழுதாங்க,, சரி கொஞ்ச நாள் கழிச்சு உன்னை பார்க்க வரலாமுன்னு நெனச்சேன்,, ஆனா நீ இரண்டு முறை வீட்டுக்கு வந்தும், உன்னை அவங்க வீட்டுக்குள்ள சேர்த்துக்கல.. திட்டி அனுப்பனது கேட்டு நான்  அம்மா, அப்பா கிட்ட சண்டை  போட்டேன்..

அவங்களுக்கு  நானும் அவங்கள விட்டு போயிடுவேன்னு பயம்,, சத்தியம்  வாங்கிகிட்டாங்க..  உன்கிட்ட பேசகூடாது, பார்க்க கூடாதுன்னு..  எனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க.”.. என்றதும்.

“ஆனா  என் மூனுபிள்ளைக  கிட்ட சொல்லி வச்சுயிருந்தேன், உங்களுக்கு ஒரு அத்தை இருக்காங்க  பேரு இந்திரா தேவி, நல்லா டான்ஸ் ஆடுவாங்கன்னு,, உன் ஞாபகமாக தான் என் சின்ன பொண்ணுக்கு வைஷ்ணவி தேவியின்னு பேரு வச்சேன்.. அவளும் உன்ன மாதிரியே நல்லா ஆடுவா,, அவ பண்ணுறது எல்லாம் உன்ன மாதிரியே இருக்குன்னு அம்மா, அப்பா சொல்லவாங்க.. முகஜாடை கூட உன்னமாதிரியே தான் பாரு”, என்றதும்..

துடித்து போனார் இந்திரா தேவி,, என் கேஷவன்  மகளையா நான் பேசுனேன்,, என் தம்பிமகளை எப்படியெல்லாம்  திட்டி பேசி இருக்கேன்”,, என்றவர்..

“நான் அத்தையின்னு அவளுக்கு தெரியுமா” என்று கேஷவனை பார்த்து கேட்க..

“ஊம் தெரியும் கா,, நீ பரதநாட்டியம் ஆடுனமாதிரி  இருந்த போட்டோவை பெருசு பண்ணி அவ ரூம்புல மாட்டி வச்சு இருக்கா”… என்றதும்…

என்னை அடையாளம் தெரிஞ்சும் ஏண்டி என்கிட்ட  சொல்லல்ல என்று நினைத்தவர்,, சொல்ல நீ எங்கே இடம் தந்த என்ற மனதை திட்டியவர்..

 வைஷ்ணவின்  அருகில் வர..

வைஷ்ணவி கண்ணீல் வந்த கண்ணீரை சுண்டி விட்டவள், அமைதியாக நின்று  இருக்க..

இப்போது தான் இந்திரா தேவிக்கு ஞாபகம் வந்தது.. முதல் முதலில் இந்த வீட்டில் என்னை அவள்  பார்த்து சந்தோசமாக  சிரித்தது, இவர் முறைத்ததை பார்த்து அமைதியாக இருந்தவளையும்.. அன்று தியேட்டரில் இவளை பார்த்ததும், இவரை பார்த்த சந்தோஷத்தில் அவள் கண்கள் விரிந்ததை இப்போது நினைவு படுத்தியர்.. அவள் என் அத்தை என்று  உரிமையோடு சிரித்து இருக்கிறாள்… நான் தான் தப்பு, தப்பா நெனச்சு  இருக்கேன்….

என்ற இந்திரா தேவி வருத்தப்பட்டு  வைஷுவின் அருகில் வந்து,,”என்னை பாருடி”  என்றார்.. குனிந்து இருந்தவளிடம்..

நிமிர்ந்து பார்த்தவளிடம்..

“என்னை உனக்கு ஏற்கனவே, உன் அத்தையின்னு தெரியுமா?”….

“தெரியும்”  என்பது போல் தலையாட்ட..

“அப்புறம்  ஏன்டி என்கிட்ட சொல்லல்ல”  என்று கதறி அழ…

வைஷு வந்த கண்ணீரை உள்ளே இழுத்துக்கொண்டு கல் போல் நிற்க..

“கேஷவா  உன் பொண்ணை  நான் கண்ட படி பேசிட்டேன்டா, என்னை, என்னை” என்று அவர் கன்னத்தில் அவரே அடித்து கொள்ள..

“அத்தை”  என்று வைஷு அவரின்  கையை  பிடித்துக்கொள்ள..

“என் செல்லம் உன்னை நான்  அடிச்சிட்டேன்னடா,, உன்ன என்னவெல்லாம் பேசியிருக்கேன்,,   இந்த அத்தையை மன்னிச்சிரு” என்று அவளின் கையை பிடித்துக்கொண்டு மன்னிப்பு கேட்டு அழ..

அவளோ அமைதியாக இருக்க..

அவளின் கன்னத்தை பிடித்து கொஞ்சியவர்,, “அப்படியே என்  ஜாடையில் இருக்க”.. என்றவர்… அவளை அணைத்துக்கொள்ள..

வைஷுணவி தேவி , இந்திரா தேவியை அணைக்கவும் இல்லை.பேசவும் இல்லை, தம்பி மகளை தலைகோதியவர்  நெத்தில்  முத்தமிட்டு,தோள் அணைத்துக்கொண்டார்,,

சௌசன்யா தூங்கி எழுந்து வெளியே  வர..

தன் தாய் வைஷுவை அணைத்து நின்று இருப்பதை பார்த்தவள்,, என்னாட இது நான் பார்க்குறது கனவா? இல்லை நிஜம்மா என்று கண்களை நன்கு துடைத்து  பார்க்க,, இந்திரா தேவி வைஷுவை அணைத்திருப்பதை பார்த்து அவர்கள் அருகில் வர..

மகளை பார்த்த இந்திரா தேவி,, இங்கே வா சௌசன்யா “இவன் என் தம்பி கேஷவன்,, வைஷுவோட அப்பா”  என்று அறிமுகம் படுத்தி வைக்க..

“வாங்க மாமா”  என்று கேஷவனை பார்த்து கூற..

அக்கா மகளை பார்த்து தலையசைத்தார்  கேஷவன்..

” உன்  முதல் பொண்ணக்கா,?”. என்று இந்திரா தேவியிடம் கேட்க..

“இல்ல கேஷவா,  இவ ரெண்டாவது , முதல்ல  ஒரு பையன் அவன் வெளிநாடுல வேலை செய்யுறான்.. இவ ரெண்டாவது,, மூனாவது தான் உன் மருமகன் விஜயேந்திரன் உனக்கு தெரியுமே”,, என்று  வீ. பி சுட்டி  காட்டி பேச,,

“ஏற்கனவே எனக்கு மாப்பிள்ளையை  தெரியும் கா,,உன் மகன்னு நினைக்கல,,உன்னை பாக்கனுமுன்னு ரொம்ப நாளா நெனச்சிட்டு இருந்தேன்.. கடைசியில  நான்  நினைச்சா மாதிரி எல்லாரும் ஒன்னா சேர்த்துட்டோம்.”…

இந்திரா தேவிக்கு  மனது நிறைந்து   இருந்தது,, அவரிடம் எல்லாம் இருந்தும் ஏதோ தன் வாழ்வில்  குறைவது போல் தெரிய.. இன்று தம்பியை பார்த்தும் தனக்கு எல்லாம் கிடைத்தது போல் உணர்ந்தார்…

எத்தனை நாள் தன் அம்மா, அப்பாவை பார்க்க முடியவில்லையே  என்று மிகவும் வருந்தியிருக்கிறார்.. தன் தாய் வீடு சொந்தம் தனக்கு இல்லாமல் போயி விட்டதே என்று எத்தனை நாள் வருந்தி  அழுது  இருக்கிறார்,, இன்று அனைத்தும் கிடைத்தது போல் உணர்ந்தவர்..

விஜயேந்திரனை  பார்த்து,, “அப்பாவுக்கு போன் போட்டு வர சொல்லு” என்றார்..

அக்காவும்  தம்பியும் பழய கதைகள் எல்லாம் பேச..

சௌசன்யாவுக்கு  பசியெடுக்க.. சோர்ந்து போய்  அமர்ந்து இருந்தவளை பார்த்த வைஷு..

“அண்ணி  நீங்க  சாப்பிடுங்க,, லஞ்சு  டைம் ஆச்சு  இன்னும் நீங்க  மதியம் சாப்பிடல தானே'” என்று அவளை சாப்பிட அழைக்க..

“ஊம்.. சாப்பிடனும் வைஷு, உங்க அப்பாவையும்  கூப்பிடு, எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்” என்று அழைக்க…

அப்போது  தான்  நேரம் பார்த்த

இந்திரா தேவி  மதியம் நேரம் யாரும்   இன்னும் சாப்பிடலை  என்று  நினைத்து “கேஷவா வா சாப்பிடலாம்” என்று அழைக்க..

“அக்கா  மச்சான் வரட்டும், சேர்ந்து சாப்பிடுவோம்” என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே

நாகில்லி  வந்து விட..

 “என் தம்பி கேஷவன்”  என்று  கணவரிடம் அறிமுகம் படுத்தி வைக்க…

அவரை பார்த்தது எழுந்து நின்ற கேஷவனை “வா   கேஷவா”  என்று அணைத்துக்கொண்டார்  நாகில்லி..

“நீ வந்தது ரொம்ப சந்தோசம் பா” என்றவர் அவரிடம் நலம் விசாரித்து விட்டு அனைவரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட..

இந்திரா தேவி  தம்பிக்கு  பார்த்து, பார்த்து பரிமாற,, இருவரும் பேசிக்கொண்டே  சாப்பிட..

நாகில்லி மனைவியின்  முகத்தில்  புதிதாக வந்த புத்துணர்வை பார்த்தவாறு உண்டார்..

 அவர் , அவர் மனைவிக்கு அனைத்தையும் செய்தாலும்,, பிறந்த வீட்டினரை பார்த்தும் பெண்களுக்கு எவ்வளவு  சந்தோஷம்,, என்று பார்த்தவர்..

இவ்வளவு நாள் தன் மனைவிக்கு இந்த சந்தோஷத்தை ஏற்படுத்தி  கொடுக்க வில்லையே  என்று மனதில் வருந்திக்கொண்டார்..

அனைவரும் உண்டு முடிக்க.. தம்பிக்கு வீட்டை சுற்றி  காண்பித்துக் கொண்டிருந்தார் இந்திரா தேவி..

சௌசன்யா  உண்டு முடித்து அவள் அறைக்கு சென்று விட..

நாகில்லி  சற்று ஓய்வு  எடுக்க அவர் அறைக்கு சென்று விட்டார்…

வீ. பி வைஷுவை “வா”  என்று அவன் அறைக்கு இழுத்து வந்தவன் கதவை  தாழ்போட்டு..

“வைஷு என்னை உனக்கு,  உன்  அத்த பையன்னு   ஏற்கனவே தெரியுமா?””.. என்றதும்…

“தெரியும்” என்பது போல் தலையாட்ட ,,

“அப்போ  ஏண்டி, என்கிட்ட முன்னாடியே சொல்லல்ல?” என்றான்  கோபமாக..

“என்ன  சொல்லனும்”..

“ஏய் உனக்கு எப்போ அம்மா உன் அத்தையின்னு  தெரியும்”…

“இங்க  டான்ஸ் கிளாஸ் வந்த மறுநாள்,, ஆபிஸ் ரூம்பில் அத்தை போட்டோ பார்த்தேன் , அப்போ தெரியும்”…

“அப்போ  ஏன்டி என்கிட்ட, அம்மா தான் என் அத்தையின்னு சொல்லல்ல”…

“உங்க கிட்ட அப்போ சொல்ல நீங்க எனக்கு யாரு,, நான்  ஏன்  உங்க கிட்ட சொல்லனும்,  எனக்கு யாழினி மட்டும் தான், இந்திரா தேவி பேத்தியின்னு  தெரியும், அதான் அவளிடம் நெருங்கி பழகினேன்,, உதவி செஞ்சேன்.. யாழினிக்காக தான் உங்க வீட்டுக்கு வந்தேன்,, உதவி பண்ணேன்  உங்க அம்மாவுக்கு அது பிடிக்கல,,  அதான்  உங்க கிட்ட இருந்து விலக பார்த்தேன்..

அவங்க என்கிட்ட நல்ல படியா பேசி இருந்தா, உங்க தம்பி பொண்ணுயின்னு அவங்க கிட்ட சொல்லி  இருப்பேன்”  என்றதும்.

“அப்போ, அப்போ”  என்று  வீ. பி ஏதோ சொல்ல வர..

“சொல்ல வர்றத  தெளிவா சொல்லுங்க” என்றவள்.. கட்டிலில் சென்று சாயந்து அமர..

“அப்போ என்னை உன் அத்தை பையன்னு தெரிஞ்சு தான்  என்னை  கல்யாணம் பண்ணீயா?”… என்றான்..

அவன் அருகில் வந்தவள் அவனை முறைத்து அவனின் சட்டையை பிடித்து இழுத்தவள்..

“நானா  உங்களை காருக் குள்ள இழுத்துட்டு  போய்  பேசு,, பேசு இன்னு சொன்னது, நானா  உங்களை கல்யாணம் பண்ண கேட்டது,, பண்ணது எல்லாம்  நீங்க,, எல்லாத்தையும்  சொல்லி  யாழினியை காட்டி என்னை மிரட்டி கல்யாணம் பண்ணிட்டு,, கேள்வி கேட்குறீங்களா?”… என்றாள்…

‘”ஏய்  பேச்ச மாத்தாத, உன் அத்த பையன்னு   நெனச்சு தான்  என்னை கல்யாணம் பண்ணீயா?.. இல்லை யாழினிக்காக என்னை கல்யாணம் பண்ணீயா?”..

“யாழினிக்காக   தான்.  அந்த பொண்ணு அம்மா  இல்லாம கஷ்டபடகூடாதுன்னு தான்  உங்களை கல்யாணம் பண்ணேன்”.

“சரி யாழினிக்கன்னு   வச்சுக்கலாம், நான் உன் அத்தை  பையன் இல்லாமா இருந்தா என்னை நீ கல்யாணம் பண்ணியிருப்பீயா? சொல்லு”… என்றான்..

“இதுக்கு  நான் உண்மையா சொல்லவா! பொய் சொல்லவா”…

“உண்மையை சொல்லு” என்றதும்..

“நீங்க என் அத்தை பையன்னு  தெரிஞ்சதால  தான் உங்களை கல்யாணம் பண்ணுனேன்,, அப்பறம் யாழினிக்காவும் தான், நீங்க யாரையாவது கல்யாணம் பண்ணி, யாழினி கஷ்டபடு வாண்ணு  நெனச்சு தான் உங்களை கல்யாணம் பண்ணேன் போதுமா”.. என்றதும்..

“அப்போ என் மேல பாசமே வரலயே..”?..

“அது  எப்படி சார் இரண்டு தடவை பார்த்த  ஒருவர் மேல பாசம் வரும்,,காதல் வரும்,, அப்போ உங்க மேல எனக்கு ஒன்னும் வரல”…என்று வைஷு சொன்னதும்..

வருந்திய முகத்தோடு இருந்தவனை பார்த்தவள்…

“இப்போ இருக்கு”  என்றதை காதில் வாங்காதவன்..

அவள் பாசம் இல்லை என்றதும் வருந்தியவன்.. இப்போ இருக்கு என்று சொன்னதும் அவனுக்கு கேட்காமல் கவலையாக  அமர்ந்து இருக்க..

அவனின் அருகில் வந்தவள் அவனை நெருங்கி நிற்க..

“போடி”  என்று அவளை சற்று தல்லி விட..

“எங்கே போக பாவா, என் பாவா நீங்க இருக்குற இடத்துல தானே நான் இருக்கனும்”. என்றதும்..

“என்னது பாவா!வா,, நான்னா?.” என்றதும்..

“நீங்க தானே என் பாவா,, பாவாவை பாவான்னு கூப்பிடாம  வேற  எப்படி கூப்பிடறது. சொல்லுங்க.”..

“இப்போ தானே கொஞ்சம் நேரம் முன்னாடி யாழிக்காக  கல்யாணம் பண்ணேன், என் அத்தைக்காக தான் சொன்னா?!.”

“அது கல்யாணத்துக்கு  முன்னாடி”..

“இது கல்யாணத்துக்கு அப்பறம், நீங்கதான் யாழினியை பத்தி எல்லாம் சொன்னீங்களே.. என்றதும்..

“அப்போ யாழினிக்காக போனா போகுதுன்னு,, என் மேல  பாசம் வந்துச்சா”  என்றதும்…

“இல்லை” என்றதும்..

வீ. பிஅவளை நிமிர்ந்து பார்க்க..

“எனக்காக 10 வருசமா  காத்திருந்தது, அப்புறம்  யாழினியை தனியா  பார்த்து, பார்த்து வளத்தது, அப்பறம் என் அத்த பையனும் கூட,  இன்னும் நிறைய காரணம் இருக்கு”…என்றவளை பார்த்து..

“அப்படியா”  என்றான்.. ஒரு புன்சிரிப்போடு .

 அவள்  “ஆமாம் என்று தலையாட்ட..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!