Skip to content
Post Views: 1,942
அவனிடம் ஒட்டிக்கொண்டே வைஷு பால் அருந்த..
“ரொம்ப டயடா தெரியுற தூங்கலாமா” என்றவுடன் பெட்டை பார்க்க..
“இது என்ன? சிங்கில் பெட் இதில் எப்படி நம்மா ரெண்டு பேரும் படுக்குறது?”…என்ற புலம்பியவளை..
Advertisement
“இப்படி தான் தூங்கனும் வா” என்று அவளை தூக்கிய படியே பெட்டில் சரிய…
Advertisement
“பாவா ரெண்டு பேருக்கு பத்தாது,, நீங்க நல்லா படுங்க, நான் கீழே பெட்சீட் போட்டு தூங்குறேன்”..
Advertisement
“ஒன்னும் வேணாம் இப்படி தூங்குடி”, என்றவன்.. அவளை அணைத்தவாறே சிறிது நேரத்தில் தூங்கி விட.. வைஷுவும் தூங்கியிருந்தாள்..
Advertisement
திடிர்றென்று முளிப்பு வந்தவள் சௌசன்யா அறைக்கு செல்ல.. சௌசன்யாவும் ஆதியும் நன்றாக தூங்க…
குழந்தை முளித்து சினுங்கி கொண்டு இருக்க.
குழந்தையை தூக்கி கொண்டவள்.. குழந்தைக்கு கொடுக்க பால் பௌடரை தண்ணீரையும் எடுத்து கொண்டு அவர்கள் ரூம் வந்தவள் குழந்தை பால் கலக்கி கொடுத்துவிட்டு குழந்தையிடம் “அத்தைடா உன் அத்தை” என்று பேச..
வீ. பி அந்த சிறு சத்தத்தில் முளித்து கொண்டவன்…
வைஷுவை பார்க்க அவளோ குழந்தையை கொஞ்சிக் கொண்டு இருப்பதை பார்த்து சிரித்தவன்..
“வா” என்று வைஷுவை அழைக்க..
“உன் மாமா கிட்ட போலாமா” என்று குழந்தையிடம் அனுமதி கேட்டு செல்ல..
குழந்தையோடு தன் மனைவியை சேர்த்து அணைத்தவன்..
“எப்போ தூக்கிட்டு வந்த?”..
“இப்பதான், ஏதோ தோணுச்சு அண்ணி ரூம் போனேன்.. அவங்க ரெண்டு பேரும் நல்லா தூங்குறாங்க.. இவ பசிக்கு சினுங்குனா தூங்கிட்டு வந்துட்டேன். பால் குடிச்சிட்டு முளிச்சு, முளிச்சு என்னை பார்க்குறா”.. என்றாள்..
கட்டிலிலை சுவர் ஒட்டி போட்டவன்.. “படு வைஷு”. என்றதும்.
குழந்தையை சுவர் ஒட்டி படுக்க வைத்தவள், வீ. பிக்கு இடம் விட்டு படுத்துக்கொள்ள..
வைஷுவை அணைத்தவாறே படுத்தவன் “என் சக்கர கட்டி” என்றவன் அவளின் காதில் முத்தமிட்டு கடிக்க..
“வலிக்கு பாவா” என்றாள்..
“நீ செய்யுற எல்லாம் பார்த்தா, என்னால மூனு மாசம் காத்து இருக்க முடியாதுண்ணு தான் தோணுது..றா, நான் என்ன பண்ண” என்றான் அணைப்பை கூட்டி…
“பாவா எனக்காக, என் பாவால,” என்று செல்லம் கொஞ்ச..
“முடியாது டி, நீ ஏன் டி இவ்வளவு நல்லவளா இருக்கா” என்றான்..
“என்ன சொல்லுறீங்க பாவா, எனக்கு புரியல?”.. என்றவளை…
“அது புரியாமலே இருக்கட்டும் நீ தூங்கு”… என்றவன்.
அவளின் மேல் கையை போட்டு அணைத்துக்கொண்டு கண்மூடிக்கொள்ள..
வைஷு தன் கையணைப்பில் குழந்தையை மெல்ல அணைத்தவாறே வைத்திருந்தவள், மெல்ல தூங்க…
விடியற்காலை சௌசன்யா கண்முளித்து குழந்தையை பார்க்க, குழந்தை இல்லாததை கண்டு ஆதியை எழுப்பி,, “வைஷுகிட்ட பாப்பா இருக்காளாயின்னு பாத்துட்டு வாங்க” என்று கூற..
ஆதி வீ. பி இருக்கும் அறையை மெல்ல தட்டி பார்த்தான்,, சத்தம் வரமால் இருக்க.. மெல்ல கதவை திறந்து பார்க்க..
தன் குழந்தையோடு மூன்று பேரும் சேர்ந்து அணைத்து தூங்குவதை பார்த்தவன்.
கதவை மூடிவிட்டு வந்தவன், சௌசன்யாவிடம் பார்த்ததை சொல்ல..
மெல்ல சிரித்துக்கொண்டவள்.. “நல்ல பொண்ணுல வைஷு”என்றாள்..
“ஆமாம் வீ. பி குணத்துக்கு ஏற்ற மாதிரி” என்று இருவரும் ஒரே மாதிரி சொல்ல…
வைஷு குழந்தை சினுங்கவும்.. குழந்தை தூக்கி கொண்டு வந்து சௌசன்யாவிடம் கொடுத்தாள்…
டாக்டர் வந்து சௌசன்யாவை செக் பண்ணி பார்த்து விட்டு.. “நார்மல் டெலிவரி தானே, நல்லா இருக்கீங்க ஈவ்னிங் கிளம்பலாம்” என்று சொல்லி விட..
மதியமே சௌசன்யா இந்திரா தேவி இல்லம் வந்து இருந்தாள்..
யாழினியும். கிரிஷ்சும் குழந்தையை பார்த்து பாப்பா, பாப்பா என்று சுத்தி, சுத்தி வர..
இந்திரா தேவியின் வீட்டில் நிறையா பேர் இருக்க,, சௌசன்யாவின் குழந்தையை அவர்களே பார்த்துக்கொள்ள.. தாயிடம் பசியாற மற்றும் சென்று வந்ததது குழந்தை..
ஒரு வாரம் மகளோடு இருந்து விட்டு இந்திராதேவியின் குடும்பம் அவர்கள் இல்லம் சென்றனர்..
வீ. பிக்கும், வைஷுவுக்கு ரிஷப்பசன் வைக்க நல்ல நாள் பார்க்க.. இந்த மாதம் வளர்பிறை இல்லை அடுத்த மாதமும் சரி இல்லை என்று, மூன்றாவது மாதம் ஒரு நல்ல நாள் பார்த்து கூறிவிட…
வீ. பிக்கு எனக்கு எல்லாம் இன்னும் மூனுமாசம் கழிச்சித்தான் போல என்று மனசை தோற்றிக்கொண்டான்..
இந்திரா தேவி மகளை பார்த்து கொள்ள..
வைஷு அகாடமியில் உள்ள வேலைகளை பார்த்துக்கொண்டாள்…
சொர்ணமுகி உள்ளுர், வெளியூர் நடன போட்டிக்கு டான்சரை தேர்வு செய்து அனுப்புவது, என்று வேலைகள் நிறைய இருக்க”,
வைஷு சொன்னது போல. நம்பர் ஒன் அகாடமி போட்டிக்காக நல்லா டான்சரை தேர்வு செய்து அனுப்பி வைத்து இருந்தார் சொர்ணமுகி..
வைஷு முழு மூச்சாக, 2 ,1/2 மாதம் கழித்து தொடங்க விருக்கும் நடன போட்டிக்காக நடன கலைஞர்களை தேர்வு செய்து, மொத்தம் எந்தனை போட்டிகள், எந்தனை நடன போட்டிக்கு எத்தனை பேரை தேர்வு செய்வு, எந்தெந்த பிரிவுகள், அதற்கு ஏற்றார் போல டான்சரை தேர்வு செய்து, என வேலை வரிசை கட்டி அவளுக்கு இருக்க.. தீவிரமாக வேலை பார்த்துக்கொண்டு இருந்தாள் வைஷு..
நம்பர் ஒன் அகாடமி விருது பேர.. மொத்தம் 25 நடன போட்டி நடைபெறும்.. அதில் சிறியவர்களுக்கான போட்டிகள். பெரியவர்களுக்கான போட்டிகள்.. தனி, தனியா ஆடுவது,, ஜோடி நடனம், குழு நடனம் என, நிறைய போட்டிகள் இருக்க.. கடைசியில் மூன்று முக்கியமான போட்டி நடைபெறும், அதில் வெற்றி பெறுபவறே நம்பர் ஒன் என்ற அகாடமி விருதை வாங்குவார்கள்..
எப்போதும் 10 அகாடமிகள் மற்றும் பங்கு கொள்ளும் போட்டியில் இந்த வருடம் புதிதாக இன்னும் மூன்று டான்ஸ் அகடாமி சேர்த்து உள்ளனர்..
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு ஊரில் நடைபேற, இந்த வருடம் ஊட்டியில் நடைபெற உள்ளது…
வைஷு சிறியவர் பிரிவில் யாழினியை தனியாக ஆடுவதற்கு பயிற்சி கொடுத்துக்கொண்டு இருந்தாள்..
வைஷுவும் முக்கியமான இரண்டு போட்டிகளில் நடனம் ஆட உள்ளதால் அவளுமே நடனம் பாட்டு செலக்சன், என ரொம்ப பிசியாக இருக்க..
வீ. பி தான் பாவம். அவன் வேலை முடித்து இரவு வரும் போது.. வைஷுவும் யாழினியும் நன்றாக தூங்கி விட.. அவர்களை தொந்தரவு பண்ணாமல் உண்டு விட்டு மனைவியை அணைத்து படுக்க..
அவன் அணைத்ததும் “பாவா” என்பவள், பிறகு அசதியில் தூங்கிவிட… அவள் நினைத்தாலும் அவளால் எழுந்து கொள்ள முடியாத உடல் வலி…
அடுத்தநாள்.. நடன கலைஞர்ரோடு போட்டிக்கு சில நடன ஸ்டெப்பை மாற்றி சொல்லி கொடுத்துக்கொண்டு இருந்தாள் வைஷு…
சொர்ண முகி பரபரப்பாக வந்தவர்.. “வைஷு எனக்கு இப்போ நல்லா ஆடுற, ஒரு பீமேல் டான்சர் வேணும்” என்று கூற..
“என்ன மேம் ஏன் இவ்வளவு அர்சென்ட்?”..
“”ஒரு இக்கட்டான சூழ்நிலை வைஷு,, ஒரு டான்சரை அனுப்பு” என்று கூற..
“என்ன போட்டி மேம்?”..
“போட்டி எல்லாம் இல்ல வைஷு நாளைக்கு நம்ம வேமுலவாடா இராஜேஸ்வரி சிவன் கோவில் கும்பாபிஷேகம், அதுக்கு நாளைக்கு நைட் புல்ல நம்ம டான்ஸ் கச்சேரி தான்..
மெய்னா ஒரு டான்ஸ் ஆடுற பெண்ணுக்கு காலுல அடி, டான்ஸ் ஆட முடியாது, அதனால தான் நல்லா டான்ஸ் ஆடுற பொண்ணா அனுப்பி வை” என்று கூற..
“மேம் இப்போ போட்டிக்கான பயிற்சி போயிட்டு இருக்கு,, இதில் யார அனுப்ப,, அவங்க கன்பூஸ் பண்ணி கிட்ட, என்ன பண்ணுறது, என்ன மாதிரியான டான்ஸ் இது மேம்?”..
சொர்ண முகி டான்ஸ் பத்தி சொல்லியதும்..
“நான் பண்ணுறேன் மேம்” என்றதும்..
சாக்கான சொர்ணமுகி.
“வைஷு இது ஜோடி சாங்,, நம்ம மதன் சார் கூட ஆடனும், நீங்க எப்படி அவர் கூட… சேர்ந்து …. வீ. பி சார்” என்று இழுக்க..
“மேம் இது டான்ஸ், வீ. பி சார் ஒன்னும் சொல்ல மாட்டார், நான் இப்பவே பயிற்சிக்கு வர்ரேன்” என்றவள்..
இப்போது பார்த்துக்கொண்டு இருந்ததை, இன்னொரு டான்சரிடம் ஒப்படைத்து விட்டு சொர்ணமுகியிடம் சேர்ந்து மதன் சார் ரூம் வர…
மதன் சார் 50 வயதுடையவர்.. மிகவும் பொருமையானவர், நிறைய போட்டிக்கு டான்ஸ் சொல்லி கொடுப்பவர்..
வைஷுவுக்கு அவரின் திறமையின் மீது ஒரு பற்று உண்டு..
இன்று அவர் கூட சேர்ந்து ஆடுவது என்பது அவள் பாக்கியமே என்றே நினைத்தாள்..
சொர்ணமுகி மதனிடம் வைஷு உங்க கூட டான்ஸ் ஆடுவாங்க என்று கூற..
முதலில் சாக் ஆனவர், பின்பு அவளிடம் இந்த நடனத்தை பற்றி சொல்ல..
வைஷு “கண்டிப்பாக நான் நல்லா பண்ணுவேன் சார்” என்று கூற..
ஒரு மணிநேரம் அந்த பாடலை விளக்கி ஒரு பெண்ணோடு சேர்ந்து ஆடி காட்டினார் மதன்..
வைஷு “ஒன்டர் புல் சார்” என்று கைதட்ட… “நோ” என்ற மதன்.
தன் னோடு ஆடிகாட்டிய பெண்ணிடம் வைஷுவுக்கு சொல்லி தருமாறு சொல்லி விட்டு, மதியம் உணவுண்ண சென்று ஒரு மணி நேரம் கழித்து வர..
வைஷு ஒரு மணி நேரத்தில் முழுபாட்டிற்க்கும் டான்ஸ் ஆடி கற்று முடித்திருந்தாள்..
மதன் வந்தூ பார்த்த போது வைஷு தனியாக அவளின் டான்சை ஆட..
ஆச்சரிய பட்டு போன மதன். அடுத்த இந்திரா தேவியாக முழு தகுதி வைஷுவுக்கு உள்ளது என்று மனதில் நினைத்தவர், அவளை பாராட்டி, சில முகபாவனைகளை மட்டும் அவளுக்கு பாடலுக்கு ஏற்றவாரு சொல்லிக் கொடுத்தவர்..
ரெடி ஸ்டாட் என்று வைஷுவோடு முழுபாடலையும் இருவரும் ஆடி முடித்தவர்..
“ஓகே வைஷு நாளைக்கு பார்க்கலாம்” என்று கூற.
அவர் பாதம் பணிந்த வைஷு “நல்லா வருவ” என்று வாழ்த்தி சென்றார்..
அனைவரும் அடுத்த நாள் சிவன் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர்.. நிகழ்ச்சி இரவு ஆரம்பமானது.. அனைவரும் ரெடியாகி நிற்க.. மதன் சார் இன்னும் வரவில்லை ஏன் என்று அனைவரும் பதட்டமாக இருக்க..
சொர்ணமுகி வந்தவர் “மதன் சார் வீட்டுல ஒரு டெத் அவரால வர முடியாது, நீங்க நிகழ்ச்சி தொடங்குங்க என்று கூற.. நடனம் ஆட ஒவ்வொருவராக செல்ல..
வைஷு சொர்ணமுகியிடம் “என் டான்ஸை ஸ்டாப் பண்ணியிரலாமா? மேம்” என்று கேட்க..
“இல்ல வைஷு,, மதன் சார் அவர் சீனியர் ஒருத்தரை அனுப்புறதா சொன்னார், அவரும் ரெடியாக போயிருக்காரு, உன் டான்ஸ் கண்டிப்பா நடக்கும்”..
“மேம் அந்த டான்சரை நான் பார்க்கலாமா?”..
“ஏன் வைஷு?””.
“மேம் இந்த டான்ஸை பத்தி தெரியும் தானே, இதுல மதன் சார் கேரக்டர் மெய்ன்,, அவர் சிவன் வேஷத்துல, பாதி டான்சுல வரணும்.. ஒரு வேல அவர் அனுப்பிய பையன் சின்ன பையனா இருந்து, சிவன் வேஷம் போட்டு வந்தா நல்லா இருக்காது..
ஒரு வாட்டி நான் அந்த டான்சரை பார்க்கணும்”…
சொர்ணமுகி வைஷுவை பார்த்து சிரித்து.
“டைமாச்சு நீங்க மேடைக்கு போங்க, உங்க கூட ஆடுறவரு, டான்ஸ் பாதியில தானே வருவாரு.. பயப்படமா போங்க, அவர் உங்கள விட வயசுல பெரியவர், தான் சிவன் வேஷத்துக்கு பொருத்தமா இருப்பாரு, போ, வைஷு” என்று மேடைக்கு அனுப்பினார்..
வைஷு மனசை திட படுத்தியவள், மேடைக்கு செல்ல.. அவள் முன் சிவன் வேஷத்தில் நின்றவனை பார்த்து அதிர்ச்சியாகி நின்றாள்..
error: Content is protected !!