Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஜதி தரும் அமுதம்

Jathi Tharum Amutham 17 1

ஜதி  தரும் அமுதம்

அத்தியாயம் -17



Advertisement

Advertisement

  சௌசன்யாவுக்கு  தண்ணீர், பால்  அருந்தியது உடம்பிற்கு  ஒத்து கொல்லாமல் அனைத்தும்  வெளியே வர..

Advertisement

“வைஷு வாந்தி வருது”  என்று சொல்லி முடிக்கும் முன் சௌசன்யாவுக்கு வாந்தி வர..

Advertisement

டக்கென்று  தன் இரண்டு கையை சேர்த்து  சௌசன்யா முன் நீட்ட.

அதில் வாந்தி எடுத்து இருந்தாள்..

இந்திரா தேவி கதவை திறக்கும் போது, சௌசன்யா வாந்தி  எடுப்பதும், அதை வைஷு கையால் பிடித்ததையும்  பார்த்தவர்  அதிர்ச்சியாக நிற்க..

நான்  கூட  இது  எல்லாம் செய்ய மாட்டேன்னே என் மகளுக்கு என்றே தோன்ற..

“என்னாச்சு” என்று கேட்டுக்கொண்டே  மகளிடம் வர..

வைஷு கைகழுவி  தன்னை  சுத்தம்  பண்ணி கொண்டு,, சௌசன்யாவுக்கு  தண்ணீர் எடுத்துக்கொண்டு  வந்தவள்  அவள்  வாயை துடைத்து விட…

இந்திரா  தேவி வைஷுவை  நன்றியோட  பார்த்தவர்.. இவளை என்னவெல்லாம்  பேசினேன்,,  அதை எல்லாம் மறந்து என் மகளை எப்படி பார்த்துகொள்கிறாள்.. என்று “வைஷு” என்று அவளை இந்திரா தேவி அணைத்து கொண்டார்.

வைஷு  அவரை அணைக்காது அப்படியே நிற்க.. தம்பி மகளின் கன்னத்தை பிடித்து முத்தம் கொஞ்சியவர், ஞாபகம்  வந்தவராக,,

மருமகளிடம்  “வைஷு  உன்  அப்பா, அம்மா, தாத்தா ,பாட்டி  எல்லாரும்  வந்து   இருக்காங்க  வா”  என்று கூற.

அவளோ! பயந்தவள் போல அதிர்ச்சியாகி நிற்க..

மருமகளை “வா” என்றவர்.. சௌசன்யாவின்   குழந்தையை தூக்கிக்கொண்டு  வெளியில் வர..

வைஷு தன் தாத்தாவை எப்படி எதிர் கொள்ள வென்று திரு, திரு வென  முளித்துக்கொண்டே  வெளியில் வர..

நாகில்லி இந்திரா தேவியின் பெற்றோரை  “வாங்க, வாங்க” என்று அனைவரையும் வருவேற்றவர்.. “விஜெய்”  என்று மகனை அழைத்து “இது உன் தாத்தா பாட்டி, மாமா, அத்தை” என்று அறிமுகம் படுத்தி வைக்க..

தன்  தாத்தா  பாட்டி காலில் விழுந்து எழந்தவனை … “நல்லா  இருப்பா”  என்று பேரனை வாழ்த்தினார்கள். வயதானவர்கள்.. வைஷுவின்  பெற்றோரின் காலில் விழ சென்றவனை. வேண்டாம் என்று வைஷுவின் பெற்றோர் தடுக்க..

இந்திரா தேவி குழந்தையை  தன் தாயிடம்  தர..

அவரால் நின்று கொண்டு குழந்தையை வாங்க முடியாததால் அமர்ந்து  கொண்டு கொல்லு பேத்தியை வாங்கி கொண்டார்…

நாகில்லி மனைவியை பார்க்க, இந்திரா தேவியின் முகத்தில் அத்தனை சந்தோஷம்,,.. “கேஷவா பாரு என் பேத்தியை”  என்றார்..

கேஷவன் மனைவியோடு  சேர்ந்து குழந்தையை பார்க்க..

தம்பியின் கையில் தன் பேத்தியை கொடுத்தார் இந்திரா தேவி..

ஆதித்தாவிடம் “மாப்பிள்ளை என் அம்மா, அப்பா, தம்பி, தம்பியோட மனைவி”  என்று தன் குடும்பத்தை அறிமுகம் படுத்திய வைத்தார்..

ஆதியின் அம்மா, இந்திராதேவியை பார்த்து  “உங்க  குடும்பத்தை  பார்த்தவுடன், உங்களுக்கு 10  வயது கம்மியானது போல் ஆகிட்டீங்க  சம்பந்தியம்மா.. என்றார்.

“எல்லாம் என் மருமகள் வைஷூ வந்த  நேரம்”என்று வைஷுவை  பார்த்து சொல்ல..

வைஷுவுக்கு அவள் தாத்தா பாட்டியிடம்  எப்படி பேச, மன்னிப்பு கேட்க என்று அவர்களின் முகத்தை பார்த்து  நிற்க..

ஆதி அம்மா தான் பேச்சை  ஆரம்பித்தார்,,..

“அது  தான் எல்லாரும் ஒன்னா சேர்ந்துட்டீங்களே  வீ. பிக்கும், வைஷுவுக்கும் ரிஷப்சன் வச்சுடலாமே, என்கிட்டேயே  நிறைய பேர் கேட்டாங்க, வீ. பி  யாருக்கும்  தெரியாம கல்யாணம் பண்ணத பத்தி,..இப்பதான் நம்ம  ஒன்ன இருக்கோமே  இத  பத்தி பேசிடலாம்”   என்று கூற..

இந்திரா தேவி “சௌசன்யா  வீட்டுக்கு வரட்டும், சம்பந்தியம்மா. நல்லா நாள் பார்த்து ரிஷப்சன் வைக்கலாம்”… என்றார்..

அனைவருக்கும்   இந்திரா தேவி பேசுவதே சரி என்று தோன்றியது..

ஆதியின்  அம்மா கிரிஷ்சை  அழைத்துக்கொண்டு  அவர் இல்லம் சென்று விட கிளம்பும்

முன்.. வைஷு விடம்  சென்று  என் மருமகளையும், பேத்தியையும் நல்லா   பார்த்துக்கோ”  என்று கூற.

“சரிம்மா”   எனறு

அவர் பாதம்  பணிய..

“நல்லா இருமா”… என்றவர்.

“நீ  வந்த  நேரம், எல்லாம் நல்லதாவே நடக்குது,  வீ. பி யின் குடும்பம் இன்னும்  நல்லா இருக்கும் பாரு”என்றவர்..

வைஷுவின்  பெற்றோரையும், தாத்தா,  பாட்டியையும்  பார்த்து “நல்லா  வளத்து வச்சு  இருக்கீங்க பொறுப்பான  பிள்ளை” என்று  வைஷுவை  பத்தி சொல்லி விட்டு சொல்ல..

இதைவிட என்னவேணும் வைஷுவை பெத்தவர்களுக்கும் வளத்தவர்களும்…

வைஷு தாத்தாவை   பயந்த படியே பார்த்து  நிற்க..

இவ்வளவு நேரம் பேத்தியை  நிமிர்ந்து  பார்க்காதவர், பேத்தியை பார்த்து “வா”  என்பது போல கை நீண்ட.

கிருஷ்ணப்பா  சொன்னதும்  ஓடி  வந்தவள்.. தாத்தாவின் முன் மண்டியிட்டு “தாத்தையா   என்னை மன்னிச்சிருங்க”  என்று அவரின் கையை பிடித்து கண்கலங்க…

“வாடா வைஷு” என்று அவரின் பக்கத்தில்  அமர வைக்க..

“உங்க கிட்ட   பொய் சொல்லிட்டேன்  தாத்தா, என் சூழ்நிலை” என்று மருகி அவரின் தோள் சாய்ந்து  குழுங்கி அழ..

அவள் அழுவதை பொறுக்க  முடியாமல் , வீ. பி   வைஷுவின்  அருகில் சென்று.

“அவளை  ஒன்னும்  சொல்லாதீங்க  தாத்தா, நான் தான் அவளை  மிரட்டி கல்யாணம் பண்ணேன், அவ மேல எந்த தப்பும் இல்ல”,,    என்றவனை..

தோளில்  தட்டிய கிருஷ்ணப்பா  “பரவால  என் பேத்தி அழுததும் உன்னால தாங்க முடியாம என்கிட்ட வந்து பேசிட்ட… என்  பேத்தியை  நல்லா பாத்துக்கோ”…என்றார்.

வைஷு  கணவனை நிமிர்ந்து பார்க்க நான் இருக்கிறேன் என்றான் கண்சிமிட்டி..

அனைவரும் சகஜமாக  பேசி இந்திரா தேவி இல்லம் கிளம்ப..

இந்திரா தேவி சௌசன்யாவுடன்   ஹாஸ்பெட்டலில்  நான் இருக்கிறேன்  என்று சொல்ல…

வைஷு முதல் முதலாக அத்தையிடம்  பேசி இருந்தாள்..

“நீங்க  வீட்டுக்கு போங்கத்தை, நான்  அண்ணியையும், குழந்தையும் பார்த்துக்கிறேன்”… என்றதும்..

“இல்லடா  நீ தான் இவ்வளவு நேரம் சௌசன்யாவை  பார்த்தது  போதும், நீ கிளம்பு  நான் பாத்துக்கிறேன்” என்றார் இந்திரா தேவி..

“இல்லை  அத்தை நீங்க தான்   ரொம்ப நேரம் டிராவல் பண்ணி வந்து இருக்கீங்க, இன்னைக்கு வீட்டுக்கு போயி நல்லா தூங்கிட்டு காலையில்  வாங்க,, தாத்தா, பாட்டி வந்து இருக்காங்க.. நீங்க அவங்களை நம்ம  வீட்டுக்கு கூட்டிட்டு போன மாதிரி இருக்கும்”  என்று கூற..

அவள் சொல்வது  சரி என்றே தோன்ற,, இந்திரா தேவி  மகளை பார்க்க.. “நீங்க  போங்கம்மா,, வைஷு  இருக்காள என்னை அவ பாத்துப்பா”  என்று  கூற…

மகள் சொல்லியதும் வைஷுவிடம் மகளை பாத்துக்கோ  என்று சொல்லி  விட்டு , அவர்கள்  இல்லம் வந்து சேர்ந்தவர்…

கிருஷ்ணப்பாவுக்கு  இந்திரா தேவியின் இல்லத்தை பார்த்தே, மகள்   எப்படி வாழ்க்கிறாள் என்று புரிந்து கொண்டார்…

இந்திரா தேவி தன் குடும்பத்தை நன்றாக  வரவேற்று, தங்க வைத்து. உபசரித்து, உணவு உண்ண வைத்து தூங்க அனுப்பி  வைத்து விட்டு  அவர் அறைக்கு வர..

நாகில்லி  அவரது கனிணியில் வேலை பார்த்துக்கொண்டு இருக்க.

மனைவியை கண்டு  கொள்ளவில்லை நாகில்லி…

அவர் வேலை அவர்  பார்த்துக்கொண்டே  இருக்கா..

இந்திரா தேவி பேச வந்ததும், அவரிடம் பேசாமல் லேப்டாப்பை மூடி வைத்து நாகில்லி  பேசாமல் படுத்து  தூங்கி விட..

நாகில்லியை   பார்த்து வருந்தபட்டுக்கொண்டே இந்திரா தேவியும்  தூங்கிவிட..

மருத்துவ  மனையில்  சௌசன்யாவுக்கு  உணவை  ஊட்டி விட்ட வைஷு,, அவளை ஓய்வு அறைக்கு அழைத்து சென்று  வந்தவள்,, குழந்தை சிணுங்கவும் குழந்தை பசியாற்ற   சௌசன்யாவிடம்  குழந்தையை குடுத்து விட்டு,, குழந்தை பசியாற்றியதும் தூங்கி விட..

ஆதி “இனி நாங்க பாத்துக்கிறோம் நீங்க  இரண்டு பேரும் வீட்டுக்கு போங்க”  என்று கூற.. இருவரும் போக முடியாது என்று   கூற..

சரி பக்கத்தில் அறையை அவர்களுக்கு என்று ஏற்கனவே புக் பண்ணி  இருக்க.. அங்கே சென்று இருவரையும்  தூங்கி வர சொன்னான் ஆதி…

வீ. பிக்கு  வைஷு சோர்ந்து தெரிவதை பார்த்தவன் ஆதி சொல்வது   சரி என்றே தோன்ற..

வைஷுவை அழைத்துக்கொண்டு பக்கத்து அறைக்கு வந்தான்..

வைஷு குளித்தால் நன்றாக இருக்கும் என்றே தோன்ற..

மாற்று ஊடை இல்லை என்று யோசிக்க..

அவள் முன் ஒரு  கவரை நீட்டியவன்.. “குளிச்சிட்டு வா”  என்று கூற..

 கணவனை ஒரு  மெச்சுதல் பார்வை பார்த்தவள்.. குளித்துவிட்டு வர.. வீ. பி  அவளிடம்  சூடான பாலை  நீண்ட..

நீண்டி பாலோடா சேர்த்து அவனது கையையும் பிடித்துக்கொண்டவள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!