Skip to content
Post Views: 1,942
ஜதி தரும் அமுதம்
அத்தியாயம் – 18
Advertisement
Advertisement
வைஷ்ணவி தேவி கங்கா தேவியாக வெண்மை நிற உடை அணிந்து, வெண்கற்களான ஆபரணங்கள் அணிந்து அசல் உண்மையான கங்கா தேவி போல் மேடை ஏறினாள்,
Advertisement
அவளின் பின்னாடி உள்ள திரையில் பொங்கி வரும் கங்கா தேவியின் படங்களையும்,, நதி ஆகாயத்தில் பாய்ந்து ஓடவது போல காட்சி ஒளிபரப்பாக..
Advertisement
வைஷு கங்கை நதி பாய்வது போல அழகாக நதி போல் உடலை மெல்ல வளைத்து நடனமாடினாள்..
இங்கே பூமியில் பகீரதன் என்று மன்னன் தன் முன்னோர் சாபம் நீக்க,, கங்கா தேவியை பூமிக்கு வர வேண்டும்,, அந்த நீரில் தன் முன்னோர்களின் அஸ்தியை கரைத்து அவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்க வேண்டும் என்று எண்ணி.. கங்கா தேவி பூமிக்கு வர வேண்டும் என்று கடும் தவம், பல ஆண்டுகளாக இருக்க..
அதை பார்த்து மனம் இறங்கிய கங்கா தேவி பூமிக்கு வந்து, பகீரதனிடம், “என்னால் பூமிக்கு வர முடியாது, , நான் வந்தாள் என் வேகத்தை பூமி மாதாவாள், தாங்க முடியாது,” என்று கூற.
பகீரதன் “தன் முன்னோர்கள் சாப விமோசனம் பெற, கண்டிப்பாக நீங்கள் வர வேண்டும் கங்கா மாதா” என்று மண்றாடி கேட்க..
“நான் பூமிக்கு வந்தாள், என்னுடைய அதிவேக ஆற்றலால் பூமிக்கு பல விபரீதம் நடங்கும், பூமி பிளக்கும், மலைகள் கூட வெடித்து சிதறலாம்.. இது போல என் வேகத்தை தாங்க முடியாமல் நாட்டு மக்களுக்கு கூட துன்பம் வரலாம், என்னால் பூமிக்கு வர முடியாது” என்று கூறி சென்று விட..
பகீரதன் தன் முன்னோர் சாபத்தை கண்டிப்பாக நீக்கி பாவ விமோசன் போக்க. மீண்டும் கடும் தவம் இருக்க..
விஷ்ணுவும், தேவர்களும், பல முனிவர்களும் அவன் தவத்தை தங்கலால் நிறைவேற்ற உதவி செய்ய முடியாது, கங்கா ஆற்றல் பூமிக்கு வரும் வேகத்தை தங்கலால் தடுத்து உதவி செய்ய முடியாது என்று கூறி விலகி விட..
பூமா தேவி பகீரதன் தவத்தை பார்த்து அஞ்சி, பார்வதியிடம் சென்று “சிவனிடம் சொல்லுங்கள் பூமிக்கும், அதில் வாழும் மக்களுக்கும் எதுவும் ஆகிவிடமால் காப்பற்றுங்கள் தேவி”.என்று வேண்கோள் வைக்க.. பார்வதி சொல்லியதும்..
பகீரதனின் பல வருட தவத்தை பார்த்து மனம் இறங்கி சிவன் அவன் பூலோகம் வர..
கங்கா தேவியும் வந்தார்.. சிவன் கங்கா தேவியிடம் பேச.. “என்னை யாராலும் கட்டு படுத்த முடியாது, நான் பூமிக்கு வந்தாள், பேர்ரழிவு உண்டாகும், என் ஆற்றலை பூமி தாங்க முடியாது” என்று ஆணவத்தில் பேச..
பூமா தேவி பயந்து போய் “என்னை காப்பாற்றுங்கள் சுவாமி” என்று சிவன் கேட்டு கொள்ள..
சிவன் கடும் கோபம் கொண்டு கங்கா தேவி இடம், “நீ பூமிக்கு வா, நான் பார்த்து கொள்கிறேன்” என்று கூற.
கோபம் கொண்ட கங்கா தேவி பூமிக்கு அதிவேக மாக தண்ணீர் போல பூமிக்கு வர.. சிவன் தன் ஜட முடியால் கங்கா தேவியை சுருட்டி தன் தலையில் கங்கா தேவியை சிறை பிடிப்பது போல கட்டி வைத்து கொண்டார்.
கங்கா தேவி சிவனின் ஆற்றலை கண்டு வியந்தவர்.. தான் எவ்வளவு பெரிய ஆற்றல் உள்ளவள் என்னையே அடக்கி விட்டாரே. ஈசனுக்கு எவ்வளவு சக்தி இருக்க வேண்டும். என்று நினைத்து கங்கா தேவியின் ஆணவம் அழித்து ஈசனிடம் மன்னிப்பு கேட்க..
அதில் மனம் இறங்கிய சிவபெருமான், தன் தலையை பிடித்து வைத்திருந்த கங்கா தேவியை தன் முடியில் இருந்து ஒரு முடியை மட்டும், பிரித்து விட..
பூலோகத்தில் கங்கா தேவி மென்மையாக பாய தொடங்கினார்.. பகீரதனின் முன்னோர் சாபம் விலகியது..
இக்கதையை நாடகவடிவில் வைஷீவும் அவர் குழுவினரும், நடனம் ஆடிக்கொண்டே நடித்து காட்ட.
கங்கா தேவி ரூபத்தில் இருந்த வைஷு பகீரதனிடம் பேசிவிட்டு சென்றவள்..
பின்பு ஈசன் அழைப்பை கேட்டு பூமிக்கு வந்த ஈசனை தன் கணவனின் ரூபத்தில் பார்த்து வைஷு முதலில் அதிர்ச்சியாகி நின்றவள்.. என் பாவா?…
அதுவும் ஈசன் புகைவடிவில் பகீரதனிடம் முன் வந்து பேசுவதை பார்த்து உண்மையில் ஈசனே தன் கண் முன் வந்து நிற்பது போல் தோன்ற கணவனை ஈசன் வேஷத்தில் பார்த்து இன்ப அதிர்ச்சியில் நின்றவள். பின்பு இருக்கும் இடம் அறிந்து, அவளின் வேஷத்தில் கோபம் கொண்ட கங்கா தேவி போல் நடிக்க தயாராக..
சிவன் வேஷத்தில் இருந்த வீ. பி, வைஷுவை நிமிர்ந்து கூட பார்க்க வில்லை..
பகீரதனின் கோரிக்கையை கேட்டு. கங்கா தேவியை நிமிர்ந்து பார்க்க.
“என் ஆற்றலை யாராலும் தடுக்கு முடியாது”.. என்று கங்கா தேவி கூற.
வீ. பி கங்கா தேவியாக நின்ற மனைவிடம் “உன் ஆற்றலை என் மீது காட்டு பார்க்கலாம் கங்கா” என்று கூற..
பின் திரையில் பெறும் சத்தத்தோடு, இடி இடிக்கும் சத்தம்,மின்னல் போல் வெளிச்சம், என்று தோன்ற, பின்பு . பெரிய சத்ததோடு திரையில் வீடியோவா கங்கா தேவி பூமிக்கு வருவது போல காட்சி வர..
வீ. பி தன் ஜட முடியை விரித்து நடனமாடி.
ஆகாயத்தில் இருந்த வந்த கங்கா தேவி தன் ஜடமுடியை வைத்து அடக்குவது போல் , விரித்து ஜடமுடியோடு கங்கா தேவியை தன் தலை முடியில் ஈசன் வைத்துக்கொள்ள.. ஈசனின் ஆற்றலில் பார்த்து பயந்தவள். நான் பெரிய பல சாலி என்ற
கர்வம் அழிந்து. கங்கா தேவி ஈசனிடம் மன்னிப்பு கேட்டு
கங்கா மன்னிப்பு ஈசனின் பாதம் பணிந்து நன்றி சொல்லி. விட்டு வைஷு நடனம் ஆட..
அனைத்து ஜீவனுக்கு, இயற்கைக்கு உணவாகி உயிரான கங்கா தேவியை மன்னித்தார் சிவன்..
கங்கா தேவி ஈசனை பார்த்து “கடும் புயல், மழை அனைத்தையும் பொறுத்து, காத்து, மக்களை காப்பாற்றுவேன் சுவாமி” என்று கங்கா தேவி பாடி ஈசனை சுற்றி ஆட..
“என் மக்களை நன்றாக பார்த்துக்கொள்ளும் ப்பிரியா கங்கை, உனக்கு என்ன வேணும்” என்று சிவன் பாட..
“எனக்கு எதுவும் வேணாம் சுவாமி” என்றவள் “இந்த உலகத்தை காக்கும் ஈசன் நீங்கள், உங்க தலைக்கு மேல் இருக்குற ஜடமுடியில் எனக்கு அரமனையாக வேண்டும் சுவாமி” என்று பாடி சிவனோடு ஆட….
“ஆனந்தம், ஆனந்தம்” என்று சிவன் பாட..
“நன்றி, நன்றி சுவாமி” என்று வைஷு வீ. பி யின் தலை மேல் அமர்வது போல் அவமேல் அமர,,..
பாட்டு முடிந்தது,, பின் திரையில் இதுவே ஈசன் தலை மேல் கங்கா தேவி இருக்கிறதற்கான காரணம், இதுவே உண்மை என்று, பின்னாடி ஒருவர் ஒலிபெருக்கி மூலம் பேச…
வீ. பியின் பின் கழுத்துக்கு மேல் அமர்ந்திருந்த, வைஷுவை வீ. பி பார்த்து மெல்ல சிரிக்க..
தன் கணவனை சிவனை பார்ப்பது போல் பார்த்தவளை, கீழே மெல்ல இறக்கி விட..
வைஷு இறங்கியதும் வீ. பியின் பாதம் பணிந்து, “ஆசிர்வாதம் பண்ணுங்கள் சுவாமி” என்று அவன் பாதம் பணிந்து கேட்க..
“எப்புடு சந்தோஷங்க இரு நா பொம்மா'” என்று ஆசி வழங்க..
இதை பார்த்து கொண்டிருந்தவர், கங்கதேவியும், சிவனையும் உண்மையாக பார்ப்பது போல் தெரிய.. அனைவரும் கை தட்டி பூக்களை தூவ.
இருவரும் தலைவணங்கி அதை ஏற்று கொண்டனர்.. கை தட்டல் அந்த இடம் முழுவதும் கேட்க.. இருவர் ஆடும் போது அனைவரும் அமைதியாக இருக்க.. ஆடி முடித்ததும், மக்கள் கத்தி அவர்களின் மகிழ்ச்சியை தெரிவிக்க..
வைஷுவும், வீ. பீயும் கைகூப்பி நன்றி சொல்லி விட்டு கீழே வர..
மக்கள் கூட்டம், செல்பி எடுக்க அலைமோத,, மீடியாகாரர்கள் வேற.. கேள்வி கேட்டுக்கொண்டு இவர்கள் பின் வந்து நிற்க,, வீ. பி வைஷுவை தன் கைவளைவில், வைத்துக்கொண்டே வெளியே உள்ள கார் பார்க்கிங் வந்தவன். வைஷுவை காரில் ஏற்றி விட்டு, இவனும் காரில் ஏறி கிளம்ப…
இருவருக்கும் அப்பாட என்று இருந்தது..
வீ. பி, சொர்ணமுகியிடம் “கூட்டம் அதிகமாக இருப்பதால், நாங்க கிளம்பிட்டோம், நீங்களும் கிளம்புங்க” என்றான்..
error: Content is protected !!