Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே

நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே – 14

“யாரை கேட்டுப் போய்ப் பேசுனீங்க உங்க இஷ்டத்துக்கு போய்ப் பொண்ணு கேட்டு உறுதி பண்ணுவீங்க அப்பறம் வேண்டாம்னு சொல்லுவீங்க இப்போ மறுபடியும் போய்ச் சம்மந்தம் பேசிட்டு வந்திருக்கீங்க என்னதான் நினைச்சுட்டு இருக்கீங்க” என்று கத்திக்கொண்டிருந்தான் மருதவேலு.

 

 



Advertisement

“நாங்க மொத தடவை போய்ப் பேசிட்டு வந்தப்போவே நீ சம்மதம் சொல்லியிருந்தா அந்தப் பிள்ளையை நீ அப்போவே கல்யாணம் கட்டியிருக்கலாம் நீதானே வேண்டாம்னு அந்தப் பொண்ணுகிட்ட போய்ப் பேசுன” என்றார் மயிலம்மா.

 

Advertisement

 

Advertisement

“நீங்க என்ன காரணத்துக்காக அந்தப் பிள்ளையை எனக்குக் கட்டிவைக்க நினைசீங்கன்னு உங்க மனசாட்சிக்கே தெரியும்” என்றான் காட்டமாக.

 

Advertisement

 

“சரிப்பா இப்போதான் நாங்க திரும்பப் பேசிச் சரிகட்டிட்டோமே” என்றார் மயிலம்மா.

 

 

“என்ன சரி கட்டுனீங்க இப்போவும் உங்க சுயநலம்தானே சித்ராவுக்காக… சரியா” என்றான் அவரைக் கூர்மையாகப் பார்த்து.

 

 

“என்னல்லாம் பேசுனீங்க அவளைத் திரும்ப அப்படி பேசமாட்டீங்கன்னு என்ன நிச்சயம் உங்களை நம்பி அவளைக் கொண்டுவர முடியாது” என்றான்.

 

 

“அதுக்கு… தனி குடித்தனம் போகப்போறியா?” என்றார் மயிலம்மா வேகமாக.

 

 

திரும்பித் தந்தையை பார்த்தவன் முகத்தில்  சலிப்பு  “நீங்கத் திருந்த மாட்டீங்க” என்றான் தாயை பார்த்து ஆயாசமாக.

 

 

“இப்போ என்ன தப்பா கேட்டுட்டேன்” என்றார் அவர்.

 

 

“நான் உங்கமேல எனக்கு நம்பிக்கை இல்லன்னு சொல்றேன், அப்படிலாம் நடக்காது உன்பொண்டாட்டி எனக்கு மருமக முழுமனசா அவளை ஏத்துக்குறேன்னு சொல்றியா இதுலேயிருந்தே தெரியல உனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கல”.

 

 

“நான் பழைய மாதிரி உழைக்கணும் எந்தக் கேள்வியும் கேக்காம காசைத் தூக்கி கொட்டணும் கல்யாணத்தை நடத்தி வெச்சுட்டா இவன் பழைய மாதிரியே மாறிடுவான் அப்படின்னு நினைப்பு அதான ஒரு மண்ணும் தேவையில்லை நான் இப்படியே இருந்துகிறேன்” என்றுவிட்டு வெளியேறிவிட்டான்.

 

 

ராமலிங்கம் மனைவியைப் பார்த்து “உன்னையெல்லாம் திருத்த முடியாது” என்றுவிட்டு சென்றுவிட்டார்,  யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருந்த மயிலம்மா மறுநாள் காலையே கணவனையும் அழைத்துக்கொண்டு மாசிலாமணி வீட்டிற்கு சென்றிருந்தார்.

 

 

அன்னம்மா மாசிலாமணி தம்பதியர் அர்த்தமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் “வாங்க” என்று அழைத்ததோடு உள்ளே சென்றுவிட்டார் அன்னம் வந்தவர்களுக்குக் குடிக்க தேநீரை வைத்துக்கொண்டிருந்தவர் மனம் முழுதும் கேள்விகள் வண்டாய் குடைந்தது.

 

 

‘என்னவாக இருக்கும் மீண்டும் சண்டையா இல்லை வேறு எதுவுமா’ என்று டீயை கொண்டுவந்து கொடுத்தவர் கணவனின் அருகில் நின்றுகொண்டார்,  மறுப்பு சொல்லாமல் வாங்கி குடித்ததிலே சமாதானமாகப் பேச வந்திருப்பதாகத் தோன்றியது.

 

 

மாசிலாமணியாக ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை “அன்னைக்கு ஏதோ கோவத்துல பேசிட்டா அவசரக்காரி நீங்க எதுவும் மனசுல வெச்சுக்காதீங்க பிள்ளைங்க ரெண்டு பேருக்கும் மனசுக்கு பிடிச்சு போச்சு நாம பாத்து பேசி முடிவு  செஞ்ச சம்மந்தம் இதுதான் முடியணும்னு இருக்க போல அதான் ரெண்டு பக்கமும் விடாம இழுத்து பிடிக்குது  மேற்கொண்டு பேசுவோமா” என்றார் ராமலிங்கம்.

 

 

மனைவியைத் திரும்பிப் பார்த்த மாசிலாமணி “எனக்கு ரெண்டு பொண்ணுங்களும் ஒண்ணுதான் ஆனாலும் காமாட்சி எங்க அம்மாமாதிரி உருவத்திலயும் சரி குணத்திலயும் சரி,  முழுசா பிள்ளை பேரைச் சொல்லிக்கூட கூப்பிட்டதில்ல எப்போவும் ஆச்சிதான்”.

 

 

“பிள்ளைமேல கொஞ்சம் பாசம் அதிகம் வெச்சிட்டேன் அது கண்ணு கசக்குறதை பாக்கமுடியல ஏதாவது தப்பு செஞ்சிட்டு அதனால வருத்தப்பட்டாகூட செஞ்ச தப்புக்கு தண்டனையா ஏத்துக்கனும்னு கூட மனசை தேத்தியிருப்பேனோ என்னவோ ஆனா ஆச்சி தங்கம்… என் சொல்லுக்கு மறுசொல்லு சொல்லாம வளந்த பிள்ளை அது மனசால ரொம்ப வேதனை அனுபவிச்சிடுச்சு அன்னைக்கு நீங்க விட்ட வார்த்தைகள்…”  என்றவர் கொஞ்சம் அமைதி காத்தார்.

 

 

ராமலிங்கம் மனைவியை முறைத்தார் “கொஞ்சம் நம்ப்பிக்கை கொறஞ்சிருக்கு பயமும் கூடியிருக்கு கல்யாணம் முடிஞ்ச பின்னாடி இந்த மாதிரி நடந்தா என் பிள்ளை அதைத் தாங்காது மறுபடியும் இந்த வார்த்தைகள் வராதுன்னு என்ன நிச்சயம்” என்றார்.

 

 

மயிலம்மாவிற்கு உள்ளுக்குள் அவ்வளவு ஆத்திரம் “இவர் மகளை இவர் ஒழுங்காக வளர்க்காமல் என்கிட்டே என்னமோ வியாக்கியானம் பேசிட்டு இருக்கார் எல்லாம் இவனைச் சொல்லணும் இவன் ஒழுங்கா இருந்தா இதுங்ககிட்ட இப்படி எனக்கு நிக்கவேண்டிய அவசியம் வருமா” என்று கருவிக்கொண்டிருந்தார்.

 

 

“தப்புதான்… உங்க பக்கம் இருக்குற பயமும் நியாயம்,  எங்களை நம்பலனாலும்  வேலுவை நம்பி உங்க பொண்ணை கொடுங்க நல்லா பாத்துப்பான்” என்றார் ராமலிங்கம்.

 

 

“அவர் மட்டும் இல்லையெங்க நீங்களும் சேர்ந்துதானே குடும்பம் என் மகளை உங்க குடும்பத்துக்குத்தானே அனுப்புறேன்” என்றார் மாசிலாமணி.

 

 

அவருக்கும் அது புரிந்தது இனி அனைத்தும் மனைவி பேசும் விதத்திலேயே உள்ளது என்று மயிலம்மாவை திரும்பிப் பார்த்தார் ராமலிங்கம்.

 

 

“ஒருதடவை அப்படி நடந்ததால அப்படியே இருக்கனும்ன்னு இல்லையே இந்த ஒருதடவை மறந்துடுங்க உங்க பொண்ணுக்கு எங்க வீட்ல எந்தக் குறையும் இருக்காது” என்றார் மயிலம்மா.

 

 

சில நொடிகள் யோச்சித்த மாசிலாமணி மனைவியைத் திரும்பிப் பார்க்க “சரி” என்பதாகக் கண்ணசைத்தார் அவர் “ஒருதடவை உங்க மகனோடும் பேசிக்குறோம் அப்புறமா முடிவு செய்யலாமே” என்றார் அவர்.

 

 

“சரி” என்று ஒத்துக்கொண்டவர்கள் திரும்பிவந்திருந்தனர் அதைக் கேள்விப்பட்டுதான் காட்டு கத்தலாகக் கத்திக்கொண்டிருந்தான் மருதவேலு.

 

 

“நான் பேசமாட்டேன்” என்று முறுக்கிக்கொண்டு வெளியில் சென்றான் மருதவேலு.

 

 

தன் முன் அமர்ந்திருந்தவனை முறைத்துக்கொண்டிருந்தாள் காமாட்சி “என்ன ராணியம்மா” என்றான் மெல்லிய சிரிப்போடு.

 

 

“ஏன் இப்படி செய்றீங்க” என்றாள் ஆயாசமாக “ஏன் அப்பாக்கு பேசல” என்றவள் விழிகள் கலங்கியது.

 

 

அவள் கரத்தைப் பற்றியவன் “ஏன் உங்களைக் கட்டிக்க விருப்பம் இல்லாம காரணம் சொல்றேன்னு நினைக்கிறீங்களா” என்றான்.

 

 

“இல்ல” என்று வேகமாக மறுத்தாள்.

 

 

“அப்புறம் என்ன… ஒரு காரணத்தோடுதான் செய்றேன் இதுகாவெல்லாம் உன் மாமியார் மனசு மாறி உன்னை முழுசா ஏத்துக்க வாய்ப்பில்லை என்ன கொஞ்சம் அனுசரணையா நடக்க வாய்ப்பிருக்கு, ஒரே வீட்டில ஒண்ணா இருக்க போறோம் ஆரம்பத்தில இருந்தே முட்டிகிட்டு இருந்தா நல்லா இருக்காது அவங்க கொஞ்சம் யோசிக்கட்டும்” என்றவன்.

 

 

“என் மாமனார்கிட்ட பேசமாட்டேன்னு நான் எப்போ சொன்னேன்” என்றான்.

 

 

“இல்ல… மாமா சொன்னாரே” என்றாள் ராமலிங்கம் அவளிடம் பேசியதை வைத்து.

 

 

“அது அவங்களுக்கு சொன்னது அன்னைக்கே என் மாமனார்கிட்ட பேசிட்டேன்,  நான் என்னைக்கு சொல்றேனோ அன்னைக்கே கல்யாணத்துக்கு நாள் குறிச்சுடுங்கன்னு சொல்லிட்டேன்”.

 

 

“உங்களுக்கு என்னைய கட்டிக்க ஒன்னும் தயக்கமில்லையே நல்லா யோசிச்சுக்கோங்க படிக்காதவன் வெறும் ட்ரைவர் அப்பறம் பாக்க வேற ரவுடி மாதிரி இருக்கேனாம் உங்க அத்த பெத்த அந்த அரவிந்தசாமிவேற  சொல்லியிருக்கன்” என்றான் தாடியை தடவிக்கொண்டு.

 

 

இபோழுது அவனை இன்னும் நன்றாக முறைத்தவள் தோள்பட்டையில்  முகத்தை இடித்து வெட்டிக்கொண்டு “அரவிந்தசாமியாம் அரவிந்தசாமி ஆளும் மண்டையும்” என்று முனகிக்கொண்டே சென்றாள் அவன் சிரிப்பொலி அவளைத் துரத்த இதழில் உறைந்த புன்னகையோடு வண்டியை எடுத்தாள் காமாட்சி.

 

 

மூன்று மாதத்தில் மகனைப் பேசிப் பேசியே கரைத்துவிட்டதாக நினைத்துச் சம்மந்திக்கு அழைத்துப் பேசி உடனே திருமணத்திற்கு நாள் குறித்துவிட்டார் மயிலம்மா.

 

 

அவர் திருந்திவிட்டதாக மற்றவர்கள் நினைத்தால் அதற்க்கு அவர் பொறுப்பல்ல இபோழுதே மகளுக்கு ஐந்தாம் மாதம் நடக்கிறது ஏழாம் மாதம் வளைகாப்பு நடத்தி அழைத்துவர வேண்டும் தலைக்கு மேல் செலவுகள் கிடக்க மற்றதையெல்லாம் தூக்கி பரணில் போட்டுவிட்டார்.

 

 

ஆரஞ்சு நிறத்தில் அடர் பச்சை பார்டர் வைத்த கல்யாணப்பட்டில் கண்ணை நிறைத்தாள்  காமாட்சி,  பெரிதாக மண்டபம் பிடித்து மகளுக்கு நிறைவாகத் திருமணத்தை நடத்தியிருந்தார் மாசிலாமணி.

 

 

மூத்த மகளுக்கு இப்படி செய்ய இயலவில்லை அரவிந்தோடு திருமணம் நடந்தபோது அவளுக்கான நகைகளைக் கொடுத்துவிட்டார் பாத்திர பண்டம் வேண்டாம் என்று அரவிந் கூறியிருக்க பணமாகவும் கொடுத்துவிட்டார்.

 

 

இபோழுது காமாட்சியின் திருமணத்திற்கு மண்டபம் உணவு என்று செலவு செய்த அதே தொகையை மீனாவின் பெயரில் போட்டுவிட்டார் அவர் நல்ல தந்தையாக எந்தப் பாரபட்சமும் இல்லாமல் நடந்துகொண்டார் மகள் மட்டுமே பொய்த்துப்போனாள்.

 

 

“உங்க மக வசதியா வாழ்ந்தவ அதனால  பிரிட்ஜ், துணிதுவைக்குற மிஷின் பண்டம் பாத்திரம் இதெல்லாம் வாங்கிடுங்க”  என்று ஒரு பெரிய லிஸ்ட்டை அவரிடம் கொடுக்க அதை அப்படியே வாங்கி தன் சட்டை பையில் வைத்துக்கொண்டான் வேலு.

 

 

“என் வசதில வாழ என் பொண்டாட்டிக்கு தெரியும் அப்படியே தேவை இருந்தாலும் அவ ஆசைப்படுறதை என் சம்பாத்தியத்துல வாங்கி கொடுக்குறேன்” என்றவன்.

 

 

“அதுக்காக உங்க மகளுக்குச் செய்யக் கூடாதுன்னு இல்லமாமா உங்களுக்குச் செய்ய வேண்டிய நேரம் வரும் அப்போ நிறைவா செய்ங்க” என்றான் அவருக்கும் எதுவோ புரிய சந்தோஷமாகவே ஒப்புக்கொண்டார்.

 

 

மீனாவும் அரவிந்தனும் பிள்ளைகளோடு வந்திருந்தனர் கணவனுக்குப் பயந்து யாரிடமும் வாயையே திறக்கவில்லை, கட்டிக்கொண்டு போனபோது இருந்தபோல அல்ல அவனுக்கு வாய் பேசும் முன் கைப்பேசியது, உறவுகள் வாயில் விழுந்து எழுந்துகொண்டுதான் இருந்தாள்.

 

 

“அம்மா இந்த ரௌடி பயதான் என்னைய அன்னைக்கு அடிச்சான் தேடி தேடி இவனைத்தான் புடிசீங்களா மாப்பிள்ளையா” என்று தாயிடம் கத்திக்கொண்டிருந்தான் ரகு.

 

 

“அவர் ரௌடியும் இல்ல உன்னை அன்னைக்கு ஆள் மாத்தியும் அடிக்கல அவர் கட்டிக்க இருந்த பொண்ணுகிட்ட நீ பிரச்னை செஞ்ச அதான் உன்ன கொஞ்சம் கவனிச்சு அனுப்பினார்,  எங்க அம்மா எப்போவும் ஒன்னு சொல்லுவாங்க ஒழுக்கமா வீட்ல  வளராத பிள்ளை ஊருல அடிவாங்கிச் சாவும்னு இன்னைக்கு நீயும் அப்படிதான் இருக்க” என்றார் முத்துலட்சுமி  வேதனையோடு.

 

 

சித்ராவுக்கு கொஞ்சம் மனசுணக்கம்தான் காமாட்சியின் செல்வச்செழிப்பை வைத்து “இந்த அண்ணன் வேணும்னே மொத தடவை இந்தக் கல்யாணத்தை நிறுத்துற மாதிரி நடிச்சிருக்குமா,  எங்க இது எல்லாத்தயும் எனக்கே குடுத்துடுவியோன்னு அப்போ வேண்டாம்னு சொல்ற மாதிரி சொல்லிட்டு இப்போ நடத்திகிச்சு” என்றாள் தாயிடம்.

 

 

“நீயெல்லாம் மனுஷ ஜென்மமா அவன் ஆசையா கட்டின வீட்டையும் வித்து அவன் சம்பாத்தியத்தையும் போட்டு எந்தக் குறையும் இல்லாமதானே உன் கல்யாணத்தை நடத்தினான் ச்சி எவ்ளோ நன்றி கெட்ட ஜென்மம் நீங்க” என்று வெறுப்பாகப் பேசிச் சென்றார் ராமலிங்கம்.

 

 

“ராணியம்மா கல்யாணத்துக்கு நான் எப்படி வரணும் இதே ரௌடி கெட்டப் போதுமா இல்ல ஹீரோ மாதிரி வரணுமா” என்றிருந்தான் மருதவேலு காமாட்சியிடம்.

 

 

“எப்படிவேனா வாங்க நீங்க வந்தா போதும்” என்று பட்டென்று சொல்லியவள் “நீங்க இப்போவே ஹீரோ தான்” என்றாள் மெல்ல.

 

 

அவனிடம் அமைதி “தூங்குங்க ராணியம்மா நாளைக்கு அந்த வாய்ப்பெல்லாம் தரமாட்டேன்” என்று சொல்லியவன் அழைப்பைத் துண்டித்தான்,  அவன் சொல்லியதின் அர்த்தம் புரிந்தவள் தலையணையில் முகம் புதைத்தாள்.

 

 

மறுநாள் மணமேடை ஏறியவள் விழிகள் ரசனையில் விரிந்து ஒளிர்ந்தது கொஞ்சம் அடர்த்த தாடி அவனுக்கு ஒரு அழகென்றால் ட்ரிம் செய்த தாடியோடு முறுக்கு மீசையோடு வேட்டி சட்டையில் அமர்ந்திருந்தவன் அவளுள் குறுகுறுப்பை ஏற்படுத்தினான்.

 

 

அவளின் கையை அழுத்தமாகப் பற்றி வீட்டிற்குள் நுழைந்தவன் மனதில் அப்படியொரு நிறைவு,  இருக்கும் இரண்டு அறைகளில் ஒன்றில் அவளை ஒளித்து வைத்துவிட்டனர் அவன் கண்ணில் காண்பிக்காமல்,  கண்ணுல காமிங்கடா என்று புலம்ப வைத்துவிட்டனர் அவனை.

 

 

சில வெளியூர் சொந்தம் மட்டும் இங்கேயே தங்கிக்கொண்டனர் அவர்களுக்கு வெளியில்  தங்க ஏற்படு செய்திருந்தபோதும் மயிலம்மாதான் மகனின் கவனத்தை கவராமல் இன்னைக்கு ஒருநாள்தானே எதுக்கு அலைச்சல் என்று தங்கவைத்தார்.

 

 

“என் வீட்ல என் சொந்தம் தங்கக்கூடாதா” என்று மறுப்பு சொன்ன கணவனைக் கடித்து குதறினார்,  இருக்கும் இரண்டு அறைகளில் ஒன்றில் முதலிரவுக்கு தயார் செய்திருக்க அடுத்திருந்த அறை இதனோடு ஒட்டியே இருக்கும்,  அதன்பிறகு சிறிய ஹால் மற்றும் கிட்சேன் இதில் அனைவரும் இங்கேயே தங்கினால் எங்கிருந்து மகன் மருமகளை கொஞ்ச.

 

 

மருமகளை விட மகனைத்தான் தவிக்கவிடுகிறோம் என்று புரியவில்லை, ராமலிங்கம் எவ்வளவோ முயன்றும் அவரால் அவர்களை அனுப்பமுடியவில்லை பரிதாபமாக மகனைப் பார்த்தவர் மனைவியை ஒன்றும் சொல்ல முடியாமல் பல்லைக் கடித்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டார்.

 

 

மருதவேலு தாயை அழுத்தமாகப் பார்த்துநின்றான் “நம்ம வீட்டு கல்யாணத்துக்கு வந்தவங்கபா வெளில போகச் சொல்லவா முடியும்” என்றார்.

 

 

முதல் நாளே தொடங்கிவிட்டாரே என்று கவலையானது அவனுக்கு அவரை ஒன்றும் சொல்லாமல் அறைக்குள் சென்றான், சில நொடிகளுக்குப் பிறகு மெல்லிய கொலுசொலி அந்த அறையின் வாயிலை நிறைத்தது அவள்தான் என்று தெரிந்தாலும் திரும்பாமல் ஜன்னலின் பக்கம் திரும்பி நின்றிருந்தான்.

 

 

அறையின் கதவை அடைத்துத் தாழிட்டவள் பால் சொம்பை டேபிளில் வைத்துவிட்டு அவனை நெருங்கினாள் “என்னாச்சு” என்றாள் அவனிடம்,  மெல்ல திரும்பி அவளைப் பார்த்தான் இளம் ரோஜா வண்ண சில்க் புடவை கட்டியிருந்தாள் மிதமான ஒப்பனை காலையில் அவன் கட்டியிருந்த தாலியோடு  தலை நிறைய மல்லி என்று அத்தனை அழகாக நின்றிருந்தாள்.

 

 

ஒரு பெருமூச்சை வெளியிட்டவன் நெற்றியை தயக்கமாக நீவிக்கொள்ள அவனை நெருங்கியவள் மெல்லிய புன்னகையோடு “பரவாயில்ல இன்னைக்கு நாம ரெண்டு பேருமே தூங்கிடலாம்” என்றாள் மிக மிக மெல்லிய குரலில்.

 

 

அதில் அவனுக்கே வெக்கம் வந்துவிட அவளைத் தன்னோடு சேர்த்து இறுக்கமாக அனைத்தவன் “சாரி” என்றான் அவள் செவிகளில் அவன் மார்பில் இன்னும் அழுத்தமாகப் புதைந்தவள் “ஐ லவ் யூ” என்றாள் காற்றான குரலில்.

 

 

அவன் உடலில் ஒரு சிலிர்ப்பு “ராணியம்மா இன்னொரு தடவை சொல்லுங்களேன்” என்றான்.

 

 

அவள் “ஐ” என்று தொடங்கும்போதே அவள் முகத்தை நிமிர்த்தி அழுத்தமாக இதழ் பதித்திருந்தான் நீண்டுகொண்டே சென்ற இதழனைப்பில்   மூச்சு முட்டிப் போனது பெண்ணிற்கு அவளிடமிருந்து கொஞ்சமாக அவன் விலக இழுத்து இழுத்து மூச்சு விட்டுக்கொண்டாள் காமாட்சி.

 

 

அவன் குறும்பாகச் சிரிக்க அவனைத் தள்ளிவிட்டுத் திரும்பியவளின் நீண்ட பின்னல் அவன் கையில் “அவுச்” என்றவள் திரும்ப அவளைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு கட்டிலில் அமர்ந்தவன் அவளை மடியில் அமர்த்திக்கொண்டு விட்டதை மீண்டும் தொடர்ந்தான்.

 

 

“நின்னுட்டே கிஸ் அடிக்க முடியல ஏன் ராணியம்மா இன்னும் கொஞ்சம் வளர்ந்திருக்கலாம்ல” என்றவனின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் நீண்ட ஒரு இதழ்முத்தம்,  ஒருகட்டத்தில் முடியாமல் அவன் மார்பில் வேகமாக அடிக்கத் தொடங்கினாள் காமாட்சி அவனுக்கே பாவம் தோன்ற அவளைக் கட்டிலில் அமர்த்தி மடியில் படுத்துக்கொண்டான்.

 

 

அவள் மடியில் தலை சாய்த்து படுத்திருந்தவன் தலைமுடியை அவள் கோதிக்கொண்டிருந்தாள்,  அவன் விழிகள் அவள் முகத்தை விட்டு நீங்காமலே இருக்க முகம் சிவந்தவள் “ஏன்… ஏன் அப்படி பாக்குறீங்க” என்றாள்.

 

 

“என் ராணியம்மா எவ்ளோ அழகு அதை ரசிக்கிறேன்” என்றவன் விரல்கள் அவள் முகத்தில் கோலம் வரைந்தது.

 

 

“ஒரு வீடு கட்டணும் ராணியம்மா நமக்குன்னு ஒரு வீடு கொஞ்சம் பெருசா நிறைய சொந்தகாரங்க வந்தாலும் நம்மள தொல்லை பண்ணாத அளவுக்கு இடம் விட்டு ஒரு வீடு” என்றவனை பார்த்து அவள் சிரிக்க அவனும் சிரித்தான்.

 

 

“அவ்ளோ பெருசா இல்லனாலும் நமக்குன்னு ஒரு வீடு வேணும் தாத்தா பாட்டி வீட்டை விட்டு வெளில வந்து வாடைக்குன்னு தங்க ஆரம்பிச்ச நாளுல இருந்து மனசுல அந்த ஆசை விதையா விழுந்துடுச்சு” என்றான் அவளுக்குப் புரிந்தது அன்று கோவிலில் அவன் அமர்ந்திருந்த நிலை அவளுக்கு இப்பொழுதும் நினைவில் நிற்கிறதே.

 

 

“கண்டிப்பா கட்டலாம் நீங்க ஆசைப்படுற மாதிரி பெரிய வீடு” என்றாள்.

 

 

 

“ஹ்ம்ம்”  என்றவன் அவள் மடியிலிருந்து எழுந்து கட்டிலின் ஓரம்  படுத்துக்கொண்டு அவளை உள்ளே படுக்கவைத்தான் பிறகு அவளை அனைத்துக்கொண்டவன் “தூங்க முடியுமா” என்றான்.

 

 

அவள் புரியாமல் பார்க்க “இல்ல இவ்ளோ நாள் தனியா தூங்கியியிருப்ப இப்போ இப்படி…” என்றவன் இழுக்க.

 

 

“பிடிச்சிருக்கு” என்றவள் அவனோடு இன்னும் ஒன்றினாள் இருவருக்குமே அப்படியொரு உறக்கம்,  மயிலம்மாவிற்குத்தான் உறங்கா இரவாகிப்போனது மகன் சண்டை போடாமல் அமைதியாகப் போனதை பற்றியே யோசித்துக்கொண்டிருந்தார்.

 

 

காலை ஆறரைக்குமேலே விழிப்பு வந்தது காமாட்சிக்கு இப்பொழுதும் தன்னை அனைத்துக்கொண்டே படுத்திருப்பவனை ரசனையாகப் பார்த்திருந்தாள் மெல்ல அவனிடமிருந்து விலகி எழ “டைம் என்ன” என்றான் அவளிடம்.

 

 

அவன் எப்பொழுதோ எழுந்துவிட்டான் என்றாலும் அப்படியே படுத்திருந்தான் “ஆறரை” என்றாள் அவள்.

 

 

“ஹ்ம்ம்” என்றவன் “குட் மார்னிங்… ரொம்ப அழகான மார்னிங்” என்றவனை பார்த்துச் சிரித்தவள் “அப்படி என்ன அழகான மார்னிங்” என்க.

 

 

“அழகான ஆசைப்பட்ட பொண்டாட்டி இப்படி அணைப்புல இருக்குற முதல் விடியல் இல்லையா வாழ்க்கைல எவ்ளோ காலைவேளை இப்படி வந்தாலும் இது கொஞ்சம் ஸ்பெஷல்,  அப்புறம் வாழ்க்கை ஓட்டத்துல வேற நல்ல நல்ல காலை வேலைகளும் வரலாம் ஆனா இது நாம ஒண்ணா இருக்குற முதல் நாள்” என்றான் ரசித்து அவன் பேசுவதை இதழில் உறைந்த புன்னகையோடே கேட்டிருந்தாள் காமாட்சி.

 

 

முதலில் அவள் குளித்து முடித்து வர அவன் குளிக்கச் சென்றான் அதற்குள் கட்டிலை சுத்தம் செய்த்திருந்தான்  பூக்களை அவன் ஒரு ஓரமாகக் கூட்டி வைத்திருக்க அதை ஒரு கவரில் போட்டவள் கட்டில்விரிப்பை பார்த்தாள்.

 

 

அன்னம்மா சொல்லியே அனுப்பியிருந்தார் “ஆச்சி தூங்கி எழுந்ததும் போர்வையை எல்லாம் தொவச்சிடனும் அவங்க சொல்றமாதிரி வெச்சுக்க கூடாது” என்று அதெல்லாம் கணவன் மனைவியாகச் சேர்ந்து இருந்தால் தான் என்று அவளுக்கும் தெரியும் என்றாலும் தங்கள் அந்தரங்கத்தை ஏன் வெளியில் இருப்பவர்களுக்குப் பேசு பொருள் ஆக்க வேண்டும் என்று எண்ணியவள் அனைத்தையும் சுருட்டி கையில் எடுத்துக்கொண்டு மெல்ல கதவைத் திறந்து எட்டி பார்த்தாள்.

 

 

சமையல் வேலை நடந்துகொண்டிருந்தது ஆளுக்கு ஒரு வேலை பார்த்துக்கொண்டிருந்தனர் அங்கிருந்தோர்,  எடுத்ததை அறையின் மூலையிலே வைத்தவள் மாமியாரிடம் சென்று “அத்த” என்றழைக்க திரும்பிப் பார்த்தவர் கடிகாரத்தையும் பார்த்தார்.

 

 

அதையெல்லாம் அவள் கண்டுகொள்ளவில்லை “பெட்ஷீட் எங்க தொவைக்கணும்” என்றாள் தயக்கம் வெக்கம் ஒன்றும் இல்லாமல் தன்னிடம் பேசுபவளை கூர்மையாகப் பார்த்த மயிலம்மா பின்னில் கைக்காண்பித்தார்.

 

 

“சரி” என்றவள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு சென்றாள், அவள் துவைக்கும்போதே அங்கு வந்தவன் “ஏய் ராணியம்மா என்ன செய்றீங்க” என்றான்.

 

 

“இல்ல இதெல்லாம் சும்மா… தொவைக்கணும்” என்றாள் அவனை நிமிர்ந்து பார்க்காமல் அவனுக்கும் புரிந்தது “நகரு” என்றான்.

 

 

“இல்ல…” என்றவள் இழுக்க “அட நகருங்க ராணியம்மா” என்றவன் சட்டென வேலையை முடித்துவிட்டான்,  பொண்டாட்டிக்கு துணி துவைக்குறான் என்று மயிலம்மாவால் சண்டை போட முடியாது ஏனென்றால் இதை அந்த வீட்டில் அவன் பல முறை செய்திருக்கிறான்.

 

 

மயிலம்மா மகனை முறைத்துக்கொண்டிருந்தார் அவனும் தாயை அழுத்தமாகப் பார்த்துக்கொண்டே சென்றான்,  காலை உணவு முடிந்து உறவுகள் அனைவரும் சென்றுவிட்டனர் சித்ராவும் கணவனும் காலையிலே வந்திருந்தனர்.

 

 

காமாட்சி சாதாரணமாகவே பேசினாலும் சித்ரா அவளை எடை போடும் பார்வையோடு பேசினாள் “மாப்ள நீங்க வேலை செய்ற அந்த ஆபிஸ்லதான் ராணியம்மாவும் வேல செய்றாங்க” என்றான் மருதவேலு வாசனிடம்.

 

 

அதில் அண்ணனைத் திரும்பிப் பார்த்த சித்ரா “என்னண்ணா உன் பொண்டாட்டிதானே இவ்ளோ மரியாதையா பேசுற” என்றாள் நக்கலாக.

 

 

“ஏன் என் பொண்டாட்டி எல்லார் முன்னாடியும் என்னை வாடாப் போடான்னா கூப்பிடுறாங்க, எங்களுக்குள்ள எப்படி வேணா இருக்கும் அதை எல்லாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே பொண்டாட்டிக்கு மரியாதை குடுத்தா என்ன தப்பு” என்றான்.

 

 

அவள் அமைதியாகிவிட்டாள் ‘அப்பா தன்னை மறந்துவிட்டார்கள்’ என்று வாசன் நிம்மதி பெருமூச்சு விட “நீங்கச் சொல்லுங்க மாப்ள நீங்க என்ன போஸ்ட் அங்க” என்றான் மருதவேலு.

 

 

“அப்படியே சொன்னாலும் அவங்களுக்கு தெரியுமா அண்ணா இவங்க இப்போதான் சேர்ந்திருக்காங்க அவர் எவ்ளோ வருஷமா வேலை செய்றார் இவங்களால அவரைப் பாக்கக்கூட முடியுமோ என்னவோ” என்றாள் சித்ரா.

 

 

அதில் தங்கையைத் திரும்பிப் பார்த்தவன் “எவங்களை?” என்றான் கோபமாய்.

 

 

அதில் அவள் கொஞ்சம் தடுமாற “அது யாரு உனக்கு” என்றான் கூர்மையாக.

 

 

“அண்ணி” என்றாள் மெல்லிய குரலில்.

 

 

“ஆனா உன் வாயில இருந்து அப்படியொரு வார்த்தையே வரலையே” என்றான் இன்னும் வார்த்தையில் அழுத்தத்தைக் கூட்டி அவள் ஒருவித பதட்டத்தோடு தாயை பார்த்தாள்.

 

 

“அது சட்டுனு அவளுக்கு வரல அதுக்கு எதுக்கு இவ்ளோ…” என்றவர் வார்த்தை மகன் தன் மேல் வீசிய கண்டனப்பார்வையில் அப்படியே  நின்றது.

 

“நீங்க எந்தச் செக்டார் அண்ணா” என்றாள் காமாட்சி.

 

 

“அது…” என்றவன் ஒன்றின் பெயரைச் சொல்ல “ஓஹ்” என்றாள் அவள்.

 

“நீங்க எதுலன்னு சொல்லுங்க ஒரே எடத்துல வேலை செய்றீங்க எதுவும் தேவைன்னா மாப்பிள கிட்ட கேக்கலாம்” என்றான் மருதவேலு, அவனுக்கு அவர்கள் ஆபீஸ் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது இப்பொழுதைய கார்ப்பரேட் கம்பெனி என்பது பல கிளைகள் கொண்ட ஆலமரம் போல.

 

 

 

ஒரே கம்பெனியின் உள்ளே பலதரப்பட்ட டீம் அதற்குள்ளே பலதரப்பட்ட வேலை என்று பறந்து விரிந்து கிடக்கும்,  அவள் வாசனை பார்த்து “ஹெச். ஆர் டிப்பார்ட்மெண்ட் அக்கவுண்ட்ஸ் அண்ணா” என்றாள்.

 

 

வாசன் முகம் மெல்ல மாறியது பதட்டத்தை மறைத்தான் மற்றவர்கள் கவனிக்கவில்லை என்றாலும் அதைக் காமாட்சி கவனித்தாள்  அவள் முகம் யோசனையானது.

 

 

“உங்க முழு பேரே வாசன் தானா அண்ணா” என்றாள் காமாட்சி சாதாரணமாக.

 

 

அதில் கணவனை முந்திக்கொண்டு “கீர்த்திவாசன்” என்றாள் சித்ரா “ஓஹ்” என்று புன்னைகைத்தாள் காமாட்சி,  வாசன் மனைவியை முறைத்துக்கொண்டிருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!