Skip to content
Post Views: 1,704
ஜதி தரும் அமுதம்
அத்தியாயம் – 24 Final
Advertisement
Advertisement
மகள் போன் பேசியதும் சந்தோஷமாக அவர்கள் இருக்கும் இடத்துக்கு வந்து கொண்டிருந்தான் வீ. பி.
Advertisement
அவன் அந்த ஹோட்டல் பக்கத்தில் வரும் போதே ஏதோ சரியில்லை, விபரீதம் நடந்து உள்ளது, என்ற உணர்வு தோன்ற ஒரு பயத்தோடு தான் அவ்விடம் வந்து சேர்ந்தான் வீ. பி..
Advertisement
அவனை விபத்து நடந்த இடத்துக்கு அனுமதிக்க வில்லை போலிஸ், எப்படியோ அவர்களிடம் இருந்து தப்பித்து விபத்து நடந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான் வீ. பி.. வைஷுக்கு போனில் அழைக்க, போன் எடுக்க படவில்லை. வைஷுவுக்கு, மீண்டும், மீண்டும் முயற்சிக்க போன் எடுக்கப்படாமலே இருக்க..
ஏதோ ஆபத்து என்று நினைத்தவன் வைஜுவை தேடி வந்து கொண்டு இருந்தான்.
ஆனால் வைஷு அந்தரத்தில் தன் மகளோடு தொங்குவாள் என்று நினைக்கவில்லை வீ. பி.
வைஷு அந்தரத்தில் தொங்குவதை பார்த்த நொடி இவர்களை எப்படி காப்பாற்றுவது என்று நினைத்தவன். பக்கத்தில் நின்று கொண்டு இருந்த பயர் வண்டியை ஸ்டாட் பண்ணியவன் இவர்கள் தொங்கி கொண்டு இருக்கும் இடத்திற்கு கீழே நிப்பாட்டி வண்டியின் மேலே ஏறி “வைஷு குதி, குதி” என்று வீபி கத்த..
கணவனின் குரல் கேட்டு கீழே பார்த்தவள். அவன் வண்டிக்கு மேலே நிற்பதை பார்த்து, இருவருக்கும் கொஞ்சம் இடைவேளை மட்டுமே இருக்க..
மகளிடம் “உங்க நானாவை பாரு” என்றாள்.
யாழினி கண் முழித்து கீழே பார்க்க வீ,பி நின்று இருக்க.
“நானா” என்றாள்.
” வா பங்காரம், கீழே வா நானா புடிச்சிக்கிறேன் ” என்று கூற..
வீ. பிக்கு உதவி பண்ண சில பயர் மேன்களும் வர.
பெரிய ஏணி உதவியோடு, முதலில் யாழினியை , வைஷுவின் கயிறில் இருந்து பிரித்து, வீ. பியிடம் யாழினியை ஒப்படைக்க..
மகளை அணைத்து கண்ணீர் விட்டான் வீ. பி..
“நானா, நானா” என்று வைஷு வந்ததையும், அவர்கள் பேசிக்கொண்டு இருக்குபோது, சஞ்சனா தன்னை ஐந்தாவது மாடி அறையில் பூட்டி வைத்ததையும்.. தீ பிடித்து அவள் பயந்தது, முதல் வைஷு வந்து காப்பாற்றியதை தன் நானா விடம் யாழினி ஒவ்வொன்றையும் விடாமல் சொல்ல..
மனைவி செய்த செயலில் வியந்தவன், தன் பொம்மாவை பார்க்க.. பயர் மேன் உதவியோடு கீழே பத்திரமாக இறங்கிக் கொண்டு இருந்தாள்..
மகளை அணைத்து வைத்து கொண்டு கீழே இறங்கினான் வீ. பி.
வைஷு பண்ணியதை நினைத்து கோபப்படுவதா?. இல்லை தன் உயிரை பெரியதாக நினைக்காமல், யாழினியை காப்பாற்றியதை நினைத்து சந்தோஷபடுவதா?.. அதுவும் இரட்டை பிள்ளைகளை சுமந்து கொண்டு, அவள் உயிரை கொடுத்து மகளை காப்பாற்றி இருக்கிறாள், எந்த மாதிரியான பெண் இவள் என்று தன் மனைவியை பார்க்க..
வைஷுவை காப்பாற்றிய பயர் மேன், அவள் செய்த செயலில் வியந்து “என்ன நடந்துச்சுமா, உன் ஆடை ஏன் இப்படி இருக்கு” என்று கேட்க.
அவளோ இங்கே நடந்ததை அனைத்தையும் கூறி. மகளை எப்படி காப்பாற்றினேன், என்று கூறியவள்.. தன் மேல் தீ பட கூடாது என்று கனாமான ஆடையை தன் மேல் சுற்றி தண்ணீரை ஊற்றி கொண்டதாக சொல்ல..
அந்த இரு பயர் மேன்களும் அவள் சொல்லியதை கேட்டு பாராட்டி.. “இப்படி தான் இருக்க வேண்டும்” என்று கைகொடுத்து விட்டு செல்ல..
சஞ்சனாவும், பத்ரியும் வந்து சேர்ந்தார்கள்..
வீ. பி ஒரு வார்த்தை கூட பேசவில்லை வைஷுவின் கோலம் கண்டு … தன்னை சுற்றி ஏதோ, தோ துணியை வைத்து கட்டி இருந்தாள், அவள் முகத்தையே வீ. பி பார்க்க..
வைஷு வீ. பி தன்னை அடித்து விடுவானோ.. என்று பயந்து அவன் முகத்தை பார்க்க வில்லை..
சஞ்சனா வைஷுவை தொட்டு தடவி ” உனக்கு ஒன்னும் இல்ல தானே வைஷு” என்றாள்..
வைஷு இல்லை என்றதும்.. அவளை கட்டி அணைத்துக்கு கொண்டு அழுதாள் சஞ்சனா..
பத்ரி தன் அக்காவின் கைகளை பிடித்துக் கொண்டான் கண்கலங்கி..
சஞ்சனா மீண்டும் “நீ நல்லா இருக்கீயா, உனக்கும் ஒன்னும் ஆகல தானே”..
“இல்லை” என்றாள் மீண்டும்..
“என்ன மாதிரியான பொண்ணு நீ வைஷு.. ஹப்பா!, பயப்படாம குதிக்குற, ஏறுற,, இறங்குற,, அதுவும் வயித்துல இரட்டை பிள்ளைகளை வச்சு கிட்டு,, சத்தியாம உன்ன மாதிரி என்னால முடியாது,, யூ ஆர் கிரேட் மதர் வைஷு”.. என்றாள்..
“நான் ஒன்னும் பண்ணலை, நீ ஓவரா பேசி என் புருஷனை, ஏத்தி விட்டுடாத, “…
“இது ஓவரா, நீ பண்ணது சதாரணமான விசயம் இல்ல, வைஷு?”..
“நீ சொல்லுற மாதிரியெல்லாம், நான் ஒன்னும் பெருசா பண்ணல, ஒரு கயிறை பிடிச்சி கிட்டு என் பொண்ணை காப்பாத்துனேன், அவ்வளவு தான்”….
அம்மாடி என்று வாயில் கைவைத்தவள்..”நீ வீ. பிக்கு சரியான ஜோடி தான்,” என்றாள்..
வைஷு சஞ்சனாவின் கைபிடித்து “என் பொண்னை, என் கிட்ட கொடுத்துடு ” என்று கூற..
ஒரு நிமிடம் யாழினியை பார்த்தாள் சஞ்சனா.. யாழினி அட்டை பூச்சிபோல வீ. பி அணைத்து கொண்டு இருப்பதை பார்த்தவள்.. இவர்கள் தன்னை விட யாழினியை நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்று நம்பிக்கை வர..
வைஷுவை பார்த்து கண்களை துடைத்து கொண்டு “நீயே வச்சுக்கோ யாழினியை” என்றாள் கண்கலங்கி..
வீ. பி ஆச்சரியமாக சஞ்சனாவை பார்க்க..
“தாங்யூ சஞ்சனா” என்றாள் வைஷு..
“இனிமே எனக்கு எந்த வருத்தமோ பயமோ இல்லை.. உன்மேல நம்பிக்கை வந்துடுச்சு, நீ கண்டிப்பா யாழினியை நல்லா பாத்துப்பா, பாத்துக்கோ, நான் எப்பையாவது வந்தா யாழினியை என் கண்ணுல காட்டு அது போதும்”.. என்றவள்… ஒரு நிமிடம் யாழினி பார்த்து விட்டு கிளம்பி விட்டாள்..
பத்ரி அக்காவுக்கு எழுந்து நிற்க உதவி பண்ணிக்கொண்டு இருந்தான்… அவள் மேல் அணிந்திருந்த ஆடைகளை நீக்கி, அவளை நார்மலாக ஆக்க..
கணவன் முகத்தை பார்க்க முடியாமல், வைஷு பயந்து தலை குனிந்திருக்க..
வீ. பி பத்ரி இடம் யாழினியை தந்து “ரூம்புக்கு போங்க” என்று கூற…
“சரி மாமா” என்றவன்,, யாழினியை தன் தோளில் சுமந்து கொண்டு ரூம் செல்ல..
வைஷு பேச முடியாமல் தயங்கி நிற்க.. தன் பொம்மாவை அப்படியே தூங்கிக்கொண்டான் வீ. பி.
பத்ரி திரும்பி பார்த்து சிரித்துக்கொண்டே ரூம் செல்ல..
வைஷுவுக்கு பயம் எங்கே தன்னை மீண்டும் தாத்தா வீட்டில் விட்டு, விடுவானோ என்று பயந்தவள்..
தன்னை அடித்து விடுவானோ, எங்கே தூக்கி செல்கிறார் என்று பயந்து விட்டு, “சாரி பாவா, சாரி பாவா” என்று பயந்து கொண்டே கூற.. அங்கே உள்ள ஒரு பூங்காவில் மரத்தடியில் கீழே உள்ள சேரில் வைஷுவை கட்டி அணைத்தவாறே அமர..
வைஷு ஒரு நிமிடம் அமைதியாக இருக்க,, வீ. பியின் இதயதுடிப்பது அவளுக்கு கேட்டது…
“பாவா , சாரி பாவா, இனிமே இப்படி பண்ண மாட்டேன் பாவா,, என்னை தாத்தா வீட்டிலில் விட்டுடாதீங்க, பிலிஸ் பாவா” என்று அழ…
“ஏய் பொம்மலு” என்று நிமிரிந்து பார்த்தவனின் கண்களில் கோபம் இல்லாமல், காதல் டன், டன்னாக தெரிய…
“அப்பாடா கோபம் இல்லையே”?..
“அது இருக்கு நிறைய, அத விட நீ பண்ணுனது, முடியலடி நான் கூட யாழினிக்காக இத பண்ணி இருக்க மாட்டேன், நீ உன் உயிர பெருசா நினைக்காம ஏன்டி இப்படி பண்ண”?….
வைஷுவுக்கு அப்பாடா என்று இருந்தது,, “அது எனக்கு இரண்டு நாளா மனசே சரியில்ல பாவா, யாழினிக்கு ஏதோ தப்பா நடக்க போகுற மாதிரி ஒரு பீல்.., என் பிரண்ட் ஹேமா என் கண்முண்ணே பயர் ஆகி கஷ்ட பட்டு இறந்து போனா,, நான் எப்படி என் யாழினியை தனியா விடுவேனா?.. முடிஞ்ச அளவுக்கு காப்பாற்ற தான் பார்பேன்”…. என்றவள் கணவனை அணைக்க கையை அசைக்க, அவளின் கையை அவளாலே அசைக்க முடியவில்லை..
கையில் வலி பயங்கரமாக இருக்க.. கையை பார்த்தாள் வைஷு, கைவீங்கி இருக்க.. அவளுக்கு தெரிந்தது கையில் பலமான அடிபட்டு இருக்கு என்று.. கையில் வலி என்று வீ. பி யிடம் சொன்னால் திட்டுவானே…
என்று வலியை மறைத்து அமைதியாக இருக்க.
“தாங்யூ பொம்மா, நா பொம்மலு” என்று மனைவிக்கு முகத்தில் முத்தம் மழை பொழிய.. ஆரம்பித்து இருந்தான் வீ. பி…
“பாவா நம்ம வெளியில இருக்கோம்”..
“ஏய் இருட்டா இருக்கு யாரும் பார்க்க மாட்டாங்க” என்றான்..
அவளை ஆசை தீரா முத்தமிட்டு விலக.. வீ. பி விலகியதும் அவன் நெத்தி முட்டியவள் “கோபம் இல்லையா பாவா”..
வீ. பி வைஷுவின் இடுப்பை பிடித்து தன்னோடு வளைத்து வைத்துக்கொண்டவன்..
“இல்ல பொம்மலு” என்றான்..
“எனக்கு உங்ககிட்ட ஒன்னும் சொல்லனும் பாவா”..
“என்ன பங்காரம் சொல்லு” என்றவன் அவளின் கன்னத்தில் முத்தமிட்டவாறே கேட்க..
“அது என் கை ரொம்ப வலிக்குது, ஹாஸ்பெட்டல் போகனும்” என்றவுடன் வைஷுவின் கையை வீ. பி பார்க்க.
கை நன்றாக வீங்கி இரத்தம் உரைந்து போய் இருக்க.. “என்னடி பண்ண? எப்படி ஆச்சு?” ஆரம்பித்து விட்டான் வீ. பி.
error: Content is protected !!