Skip to content
Post Views: 1,542
“உனக்கு அறிவே இல்ல, முதல்லே சொல்லமாட்டீயா?” என்று அவளை கண்டபடி நீண்ட நேரம் திட்ட ..
“போதும் வலிக்குது” என்றவள், கண்மூடி சேரில் சாய..
Advertisement
பத்ரியை “யாழினியோடு கீழே வா” என்று வீ. பி போனில் அழைக்க..
Advertisement
பத்ரி வைஷுவின் கையை பார்த்து விட்டு, “பெரிய அடி மாதிரி தெரியுது மாமா,, உடனே ஹாஸ்பெட்டல் போகனும்” என்று கூற..
Advertisement
அதற்கும் வைஷுவை திட்டிக்கொண்டே காரில் ஏற்றினான் வைஷுவை..
Advertisement
ஹாஸ்பெட்டல் வரும் வரை வைஷுவை வீ. பி திட்ட..
வைஷு ஒரு வார்த்தை கேட்க பேசவில்லை. அமைதியாகவே வர..
பத்ரி தான் ஏன் கா, மாமா திட்டுறாரு உனக்கு கோபம் வரலீயா.. சும்மா இருக்க?”..
“அவர் என் நல்லதுக்கு தானே சொல்லுறாரு,, தப்பு இல்லை, என் பாவா தானே திட்டுனா திட்டுறாரு, கேட்டுக்குறேன்” என்றவள் கண்ணை மூடி கொள்ள.. பத்ரி சிரித்துக்கொண்டான்,, அக்காவையும், மாமாவையும் பார்த்து..
பெரிய கட்டோடு ஹைதரபாத் வீடு வந்து சேர்ந்தாள் வைஷு.. இந்திரா தேவி பேத்தியை பார்த்ததும், கட்டி அணைத்து அழுது விட..
“அம்மம்மா” என்று நீண்டா நாட்களுக்கு பிறகு பேத்தி கூப்பிட்டவுடன் பேத்தியை அணைத்து கொண்டு கதறி அழுதார்…
மருமகளை கையில் கட்டோடு பார்த்ததும்,, “ஏன்டா, வைஷுமா பார்த்து பண்ணி இருக்க கூடாதா. எனக்காகவா வைஷு” என்றதும்.. “நமக்காக யாழ் கண்டிப்பா வேணும்” என்றாள் வைஷு..
வைஷு வந்தது தெரிந்து. அவளை பார்க்க சொந்த பந்தம் அனைவரும் வந்திருக்கா..அவர்களுக்கு பதில் பேசி சோர்ந்து போன மனைவியை தன் அறைக்கு தூக்கி செல்ல.
“டேய் அவ கையில தானே அடி பட்டு இருக்கு. காலுல இல்ல” என்று சௌசன்யா சிரிக்க..
அக்காவை பார்த்து முறைத்தவன். “தெரியும்” என்று சொல்லி அவன் அறைக்கு வைஷுவை தூக்கி சென்றான்..
முதலில் அவளை ஓய்வு அறைக்கு அழைத்து சென்று வந்தவன்.. அவள் கையில் ஒரு பெரிய டம்புளர் சூஸ்சை கொடுத்து குடிக்க சொன்னான். அவள் குடித்ததும் “படுத்துக்கோ”. என்றான்
அவள் படுக்க கஷ்டபடுவதை பார்த்தவன், அவளை திட்டி கொண்டே, அவள் படுப்பதற்கு உதவி செய்து படுக்க வைக்க..
திட்டிய வாயை தன் இதழால் மூடியவள். அவனுக்கு வலிக்கும் படி முத்தமிட்டு விலகி.. “என்னை திட்டுனா இப்படித்தான் இனி பனிஷ்மென்ட் தருவேன்”.. என்று வீ. பியை முறைத்து பார்க்க..
“ஏய்” என்றான் கோபமாக..
“என்ன ரொம்ப ஓவரா பேசுறீங்க, நான் என்ன வேணுமுன்னே கையை ஒடச்சி வந்து படுத்து இருக்கேனா சும்மா, சும்மா என்னை திட்ட கூடாது யாழினிக்காக தானே செஞ்சேன்”..
“அதுக்காக கையை உடச்சிக்குவீயா நீ?”…
“அந்த நேரத்துல தெரியல பாவா, யாழினியை காப்பாத்தனும் அந்த வேகத்துல கையை உடச்சிக்கிட்டேன்”..
“அதுக்காக” என்று வைஷுவை மீண்டும் வீ. பி திட்ட.
இவர் அடங்கமாட்டார் என்று நினைத்தவள்,, அடிபடதா கையால் வீ. பி யின் சட்டை காலரை பிடித்து இழுத்து அவனை முத்தமிட முயற்சி பண்ண போக..
இந்த தடவை வீ. பி உஷாராகி “என்னடி வேணும் உனக்கு” என்று அவளின் அருகில் வர..
“பாவா” என்றதும்..
“உனக்கு கொலுப்பு கூடாத்தான், கையை ஒடச்சி படுத்து கிட்டு ரொமான்ஸ் பண்ணுற, நேரமாடி?..” என்று வைஷுவின் அருகில் வந்து படுக்க..
அவனை இருக்காக அணைத்துக்கொண்ட வைஷு, “இப்படியே இருங்க பாவா, கை வலிக்குது” என்று அவனிடம் ஒன்றியபடியே வலியில் முணங்க..
அவளை அணைத்து மெல்ல தட்டிக்கொடுக்க..
வலியில் முணங்கியபடியே தூங்கிவிட்டாள், வைஷு..
வீ. பி அவளை விட்டு விலகவே இல்லை அவனும் அவளை அணைத்தபடியே தூங்கிவிட..
கணவன் அணைப்பிலே தூங்கி எழுந்தவள்.. அவன் அருகில் இருப்பது இதமாக இருக்க..
வீ. பி முகத்தை வருடி விட்டு அழகு பார்த்தவளை.
“நான் முளிச்சாச்சு வைஷு”.. என்றவன் கண்திறந்து பார்க்க..
“கொஞ்சம் நேரம் என் புருஷனை கொஞ்ச விடுறீங்களா? உங்களை யாரு எழுந்துக்க சொன்னது” என்று பொய் கோபம் கொண்டவளை..
இதழ் ஒற்றி எடுத்தவன்.. “வாய் ரொம்ப கூடிப்போச்சு, ரொம்ப பேசுறா,,”…
“ஆமாம் வாய் மட்டுமா கூடிப்போச்சு? எல்லாம் தான் கூடிப்போச்சு,, அதை ரசிக்க தான் ஒருத்தருக்கு நேரம் இல்ல இப்போ”..
“ஆமாம் டி நீ மாசம், மாசம் ஒரு பிரச்சனை பண்ணிட்டு வருவா,, அதை நினைக்குறதா. இல்லை இவ என்ன பண்ண போறாளோ அந்த டென்சனுல இருக்குறதா இதுல…. நான் உன்னை கவனிக்காம தான் அம்மணி ரெட்ட பிள்ள பெத்துக்க போறீயா,?” என்றான்..
“கோபப்படாதீங்க பாவா,” என்றவள்..
“யாழினி வந்தது ஹாப்பியா பாவா?”..
“அத சொல்லனுமாடி நா பொம்மலு,, எல்லாம் உன்னால.. நீ உன்ன பாத்துக்கோ எனக்கு அது போதும், சரியா” என்றவன்…
“ஆமாம், நீயே இப்படி பண்ணுற.. இத பாத்துட்டு உன் வையித்துல வளருற நம்ம பிள்ளைகள். வெளியில் வந்தா என்னடி பண்ணுவாங்க?”..
“நான் பில்டிங்குல இருந்து குதிச்சேன்.. என் பிள்ளைகள் எலிகாப்டருல இருந்து குதிப்பாங்க”.. என்றாள் அவனிடம் ஒன்றியபடியே..
“உன்ன வச்சே என்னால சாமாளிக்க முடியல. இன்னும் ரெண்டு குட்டீஸ்” என்று புலம்பியவனை. பார்த்து சிரித்தவளை. ஆசையாக அணைத்துக்கொண்டான் வீபி…
வைஷுவுக்கு கை கட்டு பிரிக்கும் வரை அவளோடவே இருந்தான் வீ. பி.. வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்துக்கொண்டான்.. யாழினி தன் தாயை பிரிவதே இல்லை.. எப்பொழுதும் “மீ,,மீ” என்று வைஷுவிடம் பேசிக்கொண்டே இருப்பாள்.. நாட்கள் மாதங்களாக செல்ல..
வைஷுவுக்கு கையில் அடிபட்டது சரியான உடன்.. மனைவிக்கு வளைகாப்பு வைத்திருந்தான் வீ. பி…
வளைகாப்பை மிக சிறப்பாக செய்ய ஏற்பாடு பண்ணி இருந்தான்.. தனக்கு கல்யாணமும் விமர்சையாக நடக்கவில்லை, ரிசப்பஷன் வைக்க முடியாமல் போனது ஆகவே மனைவி வளைகாப்பை மிக கோலாகலமாக செய்ய ஏற்பாடு பண்ணியிருந்தான்.. சொந்தம் பந்தம் எல்லாம் மண்டபத்துக்கு கிளம்பி இருக்க..
மகளையும், மனைவியையும் தேடி யாழினி அறைக்கு வந்தான் வீ. பி..
அழகு நிலை பெண்கள் ஏற்கனவே வைஷுவை ரெடி பண்ணிவிட்டு சென்று இருக்க…
மகளுக்கு தலையில் பூ வைத்து ரெடி பண்ணிக்கொண்டு இருந்தாள் வைஷு..
தன் இரு பங்காரத்தையும் பார்த்தவாறே வீ. பி உள்ளே வர..
“நானா நாங்க ரெடி” என்று சொன்ன மகளின் தலையை தடவியவன், யாழினியின் நெத்தியில் முத்தமிட்டு “அம்மம்மா கிளம்பிட்டாங்கள பாரு, எல்லாரையும் காருல ஏற சொல்லுட, நானா மீ யா கீழ கூட்டிட்டு வர்ரேன்” என்று கூற..
“ஓகே நானா” என்று பட்டு பாவடையை தூக்கிபடியே கீழே யாழினி ஓட..
“என்ன பார்வையே சரியில்லா,, காதல் பார்வையா இருக்கு” என்றாள் வைஷு கணவனை பார்த்து..
“இவ்வளவு அழகா இருந்த, காதல்பார்வை, காம பார்வை எல்லாம் தான் வரும் என்றான்.. அவளை நெருங்கி..
வைஷுவை அணைக்க வர..
“முடியல தானே” என்றவள்.. கணவனை பின்னால் இருந்து அணைத்து “தங்க பாவா, முத்து பாவா” என்று கொஞ்ச..
சிவப்பு வண்ண புடவையில் முழு அலங்காரத்துடன் இருக்கும் மனைவியை ரசித்து பார்த்தவன். அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன், அவளின் மேடிட்ட வயிறை அணைத்து முத்தமிட்டவன் “அம்மாவை கஷ்டபடுத்த கூடாது” என்று அவன் பிள்ளைகள் பேசிவிட்டு…. அவன் வாங்கி வந்த மெல்லிய ஜெயின் போல உள்ள தங்க ஒட்டியாணத்தை வைஷுவுக்கு மாட்டி விட்டவன், அவளின் வயிற்றை வருடி விட, அதில் உள்ள முத்துக்கள் சத்தம் எழுப்பின.. எழுந்து நின்றவன், “ஹாப்பியா பொண்ணடாட்டி”. என்றான்…
“வைஷு ரொம்ப ஹாப்பி” என்றவள்..
வீ. பியை அணைக்க, அவனை அணைக்க முடியவில்லை வயிறு இடிக்க.. முகம் திருப்பியவளிடம்..
“உன் பிள்ளைகள் பெருசா ஆகிட்டாங்க, இன்னும் கொஞ்ச நாள் தானேடா” என்று பின் இருந்த வைஷுவை அணைத்துக்கொண்டவன்…
அவளை கீழே அழைத்து செல்ல..
மகன் பட்டு வேஷ்டி சட்டையில், தன் கருவுற்ற மனைவியை தாங்கி பிடித்து அழைத்து வந்ததை பார்த்த பெற்றோருக்கு மனம் நிறைந்திருந்தது..
இந்திராதேவியை பார்த்து சிரித்த நாகில்லி “பிள்ளைகள் வந்தவுடன் சுத்தி போடு” என்றார்.. சரி என்பதாய் தலையாட்டியவர்..
குடும்பமாய் வளைகாப்பு நடக்கும் மண்டபத்துக்கு சென்றார்கள்..
வைஷு மண்டபத்தை பார்த்து அசந்துவிட்டாள்,, மிக பெரிய மண்டபம், மண்டபம் முழுவதும் பூ அலங்காரம், கல்யாணம் போல இருந்தது மேடை அலங்காரம்..
மனைவி கைபிடித்து மேடைக்கு அழைத்து வந்தவன், யாழினி பக்கத்தில் இருந்து பார்த்துக்கோ என்று மனைவி பின் சென்று நின்று கொண்டான்.. சௌசன்யா முதலில் வைஷுவுக்கு பொன்வளையல் போட்டு, நலங்கிட, அடுத்தது இந்திராதேவியும் தங்க வளையல் மருமகளுக்கு அணிவித்தார்.. அடுத்தாக சொந்தபந்தங்கள் வளையல் போட்டு முடிக்க.. கடைசியாக. யாழினியும் வீ. பியும் வைஷுவின் அருகில் வந்து நலுங்கிட்டு. வீ. பி மனைவிக்கு வைரவளையல் போட்டு அவளின் இரண்டு கையை சேர்த்து ஆட்டி, “சந்தோசமா”? என்றான்..
error: Content is protected !!