Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஜதி தரும் அமுதம்

Jathi Tharum Amutham 6 1


ஜதி தரும் அமுதம்

அத்தியாயம் -6



Advertisement

Advertisement

  வைஷுவுக்கு முதல்  நாளே நடனமாடி இடுப்பு வலி, கால் வலி வந்து விட்டது.

Advertisement

இரவு உணவு கூட நேற்று உண்ணவில்லை அவள். காலையில்  அவளால் வேகமாக எழுந்து கொள்ள  முடியவில்லை,.

எப்படியோ எழுந்து  கிளம்பி கேன்டின் சென்று ஏதோ  சாப்பிட வேண்டுமே என்று பேருக்காக  உண்டு விட்டு, அவளின் வகுப்பு  அறைநோக்கி  செல்ல..

Advertisement

இவளை ஆபிஸில்  ரூம்பில் வேலை பார்க்கும் பெண் பார்த்துவிட்டு.. “உங்களை  கோஆடினேட்டர்  மேம் ரூம்புக்கு  வர  சொன்னாங்க”.. என்று கூற.

“என்னையா?” என்றவள். “எதற்கு”.. என்று  யோசித்துக்கொண்டேன். சொர்ணமுகி  ஆபிஸ் அறைக்கு வந்தவள்.

 “மேம்”  என்று கதவை தட்டி விட்டு உள்ளேவர. வைஷுவை பார்த்த  சொர்ணாமுகி முறைக்க.

“மேம் வர சொன்னீங்களா?”.

“ஊம், வா”  என்று அருகில் அழைத்து ஊங்கார சொன்னவர்.

“யார் நீ?”..  என்றாள் வைஷுவை பார்த்து.

“மேம்”  என்றவள் அவர்  எதை கேட்கிறார்  என்று தெரியாமல் முழிக்க.

“நீ பிரகாஷுக்கு  யாருண்ணு கேட்டேன்?”..

“மேம், நான்”.  என்றவள் ஏதோ சொல்ல வர.

“நீ யாரா வேணா இருந்துட்டு போ, எனக்கு ஆர்டர்  போட அவன் யாரு? நீ  என்ன சொன்ன? அவன் கிட்ட”..

அவளோ “நான் ஒன்னும் பிரகாஷ் கிட்ட சொல்லல்ல மேம்”..

“நீ ஒன்னும் சொல்லாமலயா, அந்த  பிரகாஷ் எனக்கு போன் போட்டு. உன்னை  டான்ஸ் காம்பிடேசனுக்கு  மட்டும் டான்ஸ்  சொல்லி தர சொல்லுறான்”..

“மேம் நான் எதுவும் சொல்லல்ல மேம்”.

“வாய் மூடு எனக்கு தெரியும்”  என்றவர்.. உன் ரெஸ்யும் எங்கே?.  உன்  டான்ஸ்  சர்டிவிகேட் எங்கே? உன்னை  வேலையில் சேர்த்து விட்டது யாரு?” என்று ஆயிரம் கேள்விகள் கேட்க..

“நான் கர்நாடகா  சிவராம்  கலச்சேத்துரவுல பரத நாட்டியம் முடிச்சேன், என் பேச் 2009. எண் ரோல் நம்பர் 3367 ஆன் லைன்ல செக் பண்ணிக்கோங்க.. பி. பி. எ கதக்  கேரளா ஸ்ரீ சுவாதி திருனீல் காலேஜ்ல  இரண்டு வருசம் படிச்சேன், செக்  பண்ணிக்கோங்க மேம். உங்க வாட்ஸாப் நம்பர் சொல்லுங்க மேம், என்னுடைய எல்லா  டிகிரியும் அனுப்புறேன்.. அப்பறம் 12 வயசுல 5 மணி நேரம்  தொடர்ந்து பரதநாட்டியம் ஆடி. கின்னஸ் சாதனை பண்ணியிருக்கேன்.. என் நேம் வைஷ்ணவி தேவி, செக் பண்ணிக்கோங்க, அப்பறம் வீ. பி சார் யாழினிக்கு டான்ஸ் சொல்லி கொடுக்க  மட்டும் தான் என்னை சேர்த்தாரு.. நான்  தான் எல்லாரையும் மாதிரி இருக்க ஆசபடுறேன்னு சார்கிட்டசொல்லி இங்க வந்திருக்கேன் மேம்”.. என்றாள் ஏதோ  தன்னை பற்றி கேட்டார்கள், சொல்ல வேண்டுமே என்று சொல்லி முடித்தவள்… அமைதியாகி நிற்க..

சொர்ணமுகிக்கு  முகத்தில் ஈயாடவில்லை,  என்ன சிவராம் கலச்சேத்துரவா?, அது எவ்வளவு பெரிய நடன பள்ளி? என்றே ஆச்சரிப்பட்டவள்.. பின்பு கதக் வேற?, அதுவும் கேரளாவில், என்று  இவளை எப்படி திட்டி அவமானம் படுத்தி தனக்கு கீழ் அடக்கி வைப்பது என்று யோசித்தவள்..

“ஓ…. உன்னை  வீ. பி சார் தான் வேலைக்கு சேர்த்தாரா?”..

“ஆமாம், மேம்” என்று தலையாட்ட…

“ஓ…. கத அப்படி போகுதா, இத நீ முதல்லே நீ  கிட்ட சொல்லி இருக்கலாமே,  நான் உன்னை டான்ஸ் கிளாஸுக்கு டீச்சரா அனுப்பியே  இருக்க மாட்டேனே, சும்மா  வந்துட்டு கூட நீ சம்பளம் வாங்கீங்களாம்”.. என்று ஒரு  மாதிரி குரலில் இலுத்து பேச..

“மேம் நீங்க சொல்லுறது எனக்கு புரியல?”..

“என்னடி புரியல, இது என்ன இடம் தெரியுமா, இங்கே எப்படி  பட்டவங்க வராங்க தெரியுமா?. ஆல் இன்டீயா அளவுக்கு  காம்பிடேஜனுக்கு செலக்ட் பண்ணி டான்சரை அனுப்புறோம். நான் யார் தெரியும் பரத நாட்டியத்தில் பி, எச், டி முடிச்சு இங்கே வந்து  இருக்கேன். இங்கே வர எத்தனை வருசம் போராடி வந்து இருக்கேன் தெரியுமா,  இந்தியா,  இல்ல உலக அளவில் எங்கே எந்த டான்ஸ் போட்டி நடந்தாலும், நம்ம  அகாடமி  பிள்ளைகள்  இருப்பாங்க..அதற்கு எவ்வளவு ஹார்ட்வெர்க் பண்ணணும் தெரியுமா?.. அப்பறம் இந்திரா தேவி மேம்மை  தெரியுமா?”..

“தெரியாது”  என்று வைஷு தலையை ஆட்ட.

“இந்திரா தேவி மேடம், இந்த அகாடமியோட பௌண்டர், வீ. பி சாரோட அம்மா…! .இனிமே நான் பெரிய டான்சர், கர்நாடகாவில் படிச்சேன், கேரளாவில் கிழிச்சேன்னு என்கிட்ட   வந்து  சொல்லாத”,, என்றவள்  ஒரு பேப்பரில் ஏதோ எழுதி “இந்தா நீ தான் பெரிய டான்சர் ஆச்சே, உன்னை  காம்பிடேஷனுக்கு  டான்ஸ் சொல்லிக்கொடுக்க  ரூம் அலாட் பண்ணியிருக்கேன், சாயங்காலம் 6 டூ 8  உன் கிளாஸ் நீ கிளம்பலாம்”  என்று கோபமா பேசினார்  சொர்ணமுகி..

இவளுக்கு விட்டால் போதும் என்று சொர்ணமுகி கொடுத்து பேப்பரை வாங்கிக்கொண்டு வந்தாள்.. காலை, மாலை வகுப்பை முடித்தவள்..

6 மணிக்கு  சொர்ணமுகி சொன்ன ரூம்பிற்கு வர.. மொத்தம்  பத்து பேர் இருந்தனர்..

பிரகாஷை மனதில் திட்டிக்கொண்டே இருந்தாள்.. இந்த பிரகாஷ் நல்லது  பண்றேன்னு, என்னத்த சொல்லி தொலச்சானோ, இந்த சொர்ணமுகி வச்சு செய்யுறா,  என்னை, என்று புலம்பிய படியே வந்தவள்..

சொர்ணமுகி பேசியது கோபம் வந்தாலும்,, இரண்டு வருசம் பல்லை கடித்து கொண்டு அமைதியாக  சென்று விட வேண்டும்,, என்றே தீர்மானம் பண்ணியிருந்தாள்..

இரண்டு கிளால் எடுக்கவே அவளுக்கு கால் வலி,  வந்து விட்டது.. இதில் போட்டி நடனம் வேறு என்று புலம்பியபடியே வர..

10 இளம் வயது பிள்ளைகளை பார்த்தும், அவளுக்கு அனைத்தும் மறந்து போனது,  அவர்களுடன்  அவளை அறிமுகம் செய்து கொண்டாள்.  அனைவரும் இவளை பார்த்து எழுந்து வணக்கம் சொன்னார்கள்,,

பத்து பேரில் ஆண், பெண் என்று கலந்து இருக்க..

முதலில் போட்டி எங்கே நடக்கிறது..  போட்டியின் விதி முறையை பார்த்தவள்.. என்ன மாதிரியான டான்ஸ் ஆடலாம்,   எப்படி  பாட்டு வேண்டும், அவர்களுடைய  யோசனையும், கருத்துக்களை  கேட்டவள், முதலில் பாட்டை செலக்ட் பண்ணி விட்டு.. பின்பு   பத்து  பேரையும் ஒரு ஐந்து நிமிடம் நடனம் ஆட சொன்னவள்..

அவர்களின்  நடன திறமையை  பார்த்து அவர்களுக்கு ஏற்ப இடத்தில் நிற்க வைத்து சொல்லி கொடுக்க ஆரம்பித்தாள்..

இதில் பத்து பேரையும் ஒன்றாக ஆடவைக்க வில்லை, வைஷு..

முதலில்  நான்கு பேர் ஒருநிமிடம்  நடனம்  ஆட, அடுத்தது அவர்களுடன் இன்னும் இரண்டு பேர் சேர்ந்து நடனம் ஆடுவார்கள், அந்த பாட்டிற்க்கு, அடுத்தது மூன்று பேர் வர, முதலில் ஆடியவர் ஆடிக்கோண்டு பின்னாடி சென்றுவிட, இப்படியே அனைவரும் முன்னே, பின்னே என்று வந்து, வந்து செல்லும் போது பார்ப்பதற்க்கு  அழகாக இருக்கும்.. நடனம் ஆடும் பிள்ளைகளுக்கு கூட கொஞ்சம் விட்டு, விட்டு ஆடும் போது கொஞ்சம் ஓய்வு கிடைக்கும், அடுத்து ஆடும் போது இன்னும் நன்றாக ஆடுவார்..

இப்படி அந்த பாட்டின் முழுபாட்டையும்  ஆடி முடிக்க மணி 10 க்கு மேல் ஆனது. டைம் போனதே தெரியவில்லை வைஷுவுக்கு..

நடனமாடி முடித்தவுடன்.. பிள்ளைகள்  அனைவரும் அவள் பாதம் பணிய.. அதை தடுத்தவள், “நோ டா, நல்லா பண்ணுங்க, நாளைக்கு பார்க்கலாம்”  என்று கிளம்ப..

“மேம்” என்று  ஒரு பெண் வைஷுவை கட்டி அணைத்துக்கொள்ள.. அவள் கட்டி அணைத்ததும் சிரித்தவள்,  “ஓகே ஓகே தாங்யூ”, என்றாள். அவளை விலக்கிய படியே,, சில பிள்ளைகள் அவளிடம் “மேம் சூப்பரா  டான்ஸ் சொல்லி கொடுத்தீங்க” என்று பாராட்ட,, அனைவரிடம் சிரித்தபடியே, “பத்திரமா வீட்டுக்கு போங்க”.. என்று சொல்லி  விட்டு வைஷீ கிளம்ப..

 வைஷீ சொல்லி கொடுத்து    டான்ஸ் ஆடிய  சில பிள்ளைகள்.. “வைஷு மாஸ்டர் சூப்பர்ல”, என்று ஒருவன் சொல்ல. இன்னொருத்தி ‘செம்ம டான்சர் சான்ஸே இல்ல.. எப்படி இப்படி பாஸ்ட டான்ஸை ஆட சொல்லித்தராங்க’,, என்று அனைத்து பிள்ளைகளும் இவளை பாராட்டி பேசிவிட்டு போக.

வைஷு மிகவும் சோர்வாக  நடக்க முடியாமல் நடந்து வருவதை பார்த்த, சந்திர முகி, சாரி சொர்ணமுகி. இவளை பார்த்து  சிரித்து “டான்ஸுன்னா, சும்மாவா”.. என்று சொல்லி விட்டு செல்ல..

வைஷுவோ “போடி, போ” என் நேரம் உன் கிட்டவந்து  பேச்சு வாங்கவேண்டியத  இருக்க.  எல்லாம் என் தலையெழுத்து.. என்று கேன்டீன் வர..  உணவு அனைத்தும் காலியாக இருக்க.

பால் மட்டும் இருந்தது. பாலை இரண்டு டம்புளர் குடித்தவள், பக்கத்தில் வாழைப்பழம் இருக்க, அதில் இரண்டு வாழைப்பழத்தை எடுத்து உண்டு விட்டு சென்றாள்….

அடுத்த நாள் சனிக்கிழமை யாழினிக்கு  மட்டும் தான் கிளாஸ் என்பதால் நிதானமாக  எழுந்து  குளித்து விட்டு, கேன்டீன் சென்று உண்டு விட்டு கிளாஸுக்கு   வந்தாள் வைஷு..

அந்த அறை  மிக அழகாய் இருந்தது, அறை முழுவதும் கண்ணாடி பதிக்கபட்டு இருந்தது,,  எந்த இசை வேண்டுமானலும்,  கேட்க வசதியோடு அனைத்து மியூசிக் சிஸ்டம் வசதியோட இருக்க.. அதை பார்த்துக்கொண்டே உள்ளே வந்தாள் வைஷு…

யாழினி வைஷு வருவதற்கு முன்பாகவே  வந்திருந்தாள்.. வைஷு வை பார்த்தவுடனே, ஓடி வந்தவள் வைஷுவின் பாதம் பணிய..

“வேண்டாமடா செல்லம்” என்றவள் விலக.. விலக முடியாத படி அவளின் பாதம் பணிந்திருந்தாள் யாழினி..

யாழினியை எழுப்பி  முகத்தை பார்க்க  அவ்வளவு அழகாய் இருந்தாள், பால் வண்ண நிறம், வட்ட முகம்,  சிரிக்காமலயே  இரண்டு கன்னங்களில் தன்னை போலவே அவளுக்கும் குழி விழ, பார்ப்பதற்கு. அவ்வளவு அழகாய் இருந்தாள்.. இவளே இவ்வளவு  கலராக இருந்தாள், இவளின் அப்பா அம்மா எவ்வளவு  கலராக இருப்பார் என்று எண்ணினாள்..

“ஆண்ட்டி உங்கள பார்க்க எத்தனை நாள் காத்து இருந்தேன் தெரியுமா?”.

“என்னை  உனக்கு தெரியுமாடா”..

“தெரியும் ஆண்ட்டி, நீங்க தானே கம்யாஸ்ரீயோட சித்தி”..

“ஆமாம்”  என்று வைஷு தலையாட்ட..

“கம்யாஸ்ரீக்கு சூப்பரா  டான்ஸ்  சொல்லி கொடுத்து இருக்கீங்க ஆண்ட்டி அது மாதிரி எனக்கும் சொல்லித்தரனும்”..

“ஓகே டா  உனக்கு கதக் சொல்லித்தரட்டுமா”  என்று கேட்க..

“ஓகே ஆண்ட்டி” என்று சொல்ல..

யாழினியின் உடையை பார்த்தவள். அவள் பரத நாட்டிய உடையில்  வர… “இந்த ட்ரெஸ்சில்  கதக் ஆட முடியாதுடா..,, அதுக்கு புல் சீவ் சுடி போடனும், டாப் லாங்கா இருக்கனும், அப்பதான் பார்க்க அழகா இருக்கும். இன்னைக்கு ஓகே, நாளைக்கு அது மாதிரி சுடி போட்டு வா, சரியாடாமா”.. என்றாள் வைஷு..

“ஓகே ஆண்ட்டி” என்றவள்.

வைஷு சொல்லி கொடுக்கும் நடனத்தை அப்படியே பார்த்தவுடனே  அழகாய் ஆட,,

“ரொம்ப  லேடன்ட்  உனக்கு இருக்குடா, நான் ஆடுறத பார்த்து அப்படியே  ஆடுற” என்று பாராட்ட.

யாழினியின் முகம் புன்னகையில் விரிந்தது…

அன்றைக்கு வகுப்பு  முடிந்து, இருவரும் கிளம்பினார்கள்.. யாழினி குரு என்ற முறையில் வைஷுவின் பாதம் பணிய போக..

அவளை காலில் விழாதவாறு  பிடித்து  அணைத்து கொண்டவள்,, அவளின் உச்சியில் முத்தமிட்டு.. “நல்லா வருவடா நீ” என்று வாழ்த்த..

“தாங்யூ ஆண்டி” என்றவள் பின்பு “என் நானா கூட இப்படிதான்  சொல்லுவாங்க” என்றாள்..

யாழினியிடம்  “உங்க டாடி கிட்ட வைஷு ஆண்ட்டி தாங்யூ சொன்னாங்கன்னு  சொல்லுறீயா”.

“ஓகே ஆண்ட்டி” என்றவள்..

உடனே  வீ. பி க்கு  போனில் அழைத்தாள் யாழினி. வைஷு வேண்டாம் என்று சொல்வதற்குள், போன்  செய்யவும்  இவள் அமைதியாகி விட.

போனை எடுத்தவன் “பங்காரம் என்ன பண்ணுற, உனக்கு கிளாஸ் முடிஞ்சுறுசா” என்றான் வீ. பி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!